11th Tamil Guide Unit 8.4
இயல் 8.4 மனோன்மணீயம்
Book Back | Additional Question and Answers
11th Standard Tamil Samacheer Kalvi Guide 8th Lesson. Unit 8.4 Book Back And Additional Question and answers. இயல் 8.4 மனோன்மணீயம். +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 8 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacheer Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. 11th Tamil Guide Unit 8 Full Answer Key.
11th Tamil Guide Unit 8 Book Back and Additional Question – Answers இயல் 8.4 மனோன்மணீயம்
11th Tamil Guide Unit 8
இயல் 8.4 மனோன்மணீயம்
பலவுள் தெரிக
1.“யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்” – இது எவர் மொழி?
அ) வாய்க்கால்
ஆ) நாங்கூழ்
இ) நடராசன்
ஈ) புல்
Answer:
இ) நடராசன்
2.தமிழில் முதல் பா வடிவ நாடகநூல் ………………….
அ) து பரகசிய வழி
ஆ) மனோன்மணீயம்
இ) நூல்தொகை விளக்கம்
ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
Answer:
ஆ) மனோன்மணீயம்
கூடுதல் வினாக்கள்
3.காப்பிய இலக்கணம் முழுவதுமாய் நிரம்பிய நாடக நூல்………………….
அ) இரணியன்
ஆ) நளதமயந்தி
இ) மணிமேகலை
ஈ) மனோன்மணீயம்
Answer:
ஈ) மனோன்மணீயம்
4.மனோன்மணீயத்திற்கு மூல நூலாக அமைந்தது………………….
அ) இரகசியவழி
ஆ) மணிமேகலை
இ) இருண்டவீடு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
அ) இரகசியவழி
5.பேராசிரியர் சுந்தரனார் பிறந்த ஊர் ………………….
அ) திருநெல்வேலி
ஆ) மார்த்தாண்டம்
இ) ஆலப்புழை
ஈ) கன்னியாகுமரி
Answer:
இ) ஆலப்புழை
6.தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்………………….
அ) சிலப்பதிகாரம்
ஆ) மனோன்மணீயம்
இ) மணிமேகலை
ஈ) பாண்டியன் பரிசு
Answer:
ஆ) மனோன்மணீயம்
7.சென்னைப் பல்கலைக்கழகம், பேராசிரியர் சுந்தரனாருக்கு வழங்கிய பட்டம்………………….
அ) ராவ்பகதூர்
ஆ) திவான் பகதூர்
இ) கலைமாமணி
ஈ) நாடகச்செம்மல்
Answer:
அ) ராவ்பகதூர்
8.சுந்தரனார் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்………………….
அ) திருச்சி
ஆ) மதுரை
இ) புதுக்கோட்டை
ஈ) திருநெல்வேலி
Answer:
ஈ) திருநெல்வேலி
9.“சிறார் நீர் பிழைப்பதற்கு ஏகுமின்’ – யார் கூறியது?
அ) சிறுபுல்
ஆ) வாய்க்கால்
இ) நடராசன்
ஈ) நாங்கூழப் புழு
Answer:
அ) சிறுபுல்
10.“விழுப்புகழ் வேண்டலை உன்தொழில் நடத்துதி” – யாரிடம் கூறப்பட்டது.
அ) புல்லிடம்
ஆ) வாய்க்காலிடம்
இ) நாங்கூழ்ப் புழுவிடம்
ஈ) மேகத்திடம்
Answer:
இ) நாங்கூழ்ப் புழுவிடம்
11.என்பெலாம் கரைக்கும் நல் இன்பம் திளைப்பதற்குக் காரணம் ………………….
அ) வாய்க்காலின் செயல்
ஆ) புல்லின் பரிவான செயல்
இ) நடராசனின் செயல்
ஈ) காங்கூழ்ப்புழுவின் செயல்
Answer:
ஆ) புல்லின் பரிவான செயல்
12.விசித்திரமான தொழில் செய்வது………………….
அ) அலைகடல்
ஆ) மலை
இ) வாய்க்கால்
ஈ) புல்
Answer:
இ) வாய்க்கால்
13.“யாரே உன்னைப்போல் அனுதினம் உழைப்போர்” – அனுதினம் உழைப்பதாகக் குறிப்பிடப்பட்டது………………….
அ) வாய்க்கால்
ஆ) நாங்கூழ்ப்புழு
இ) புல்
ஈ) நடராசன்
Answer:
அ) வாய்க்கால்
14.மனோன்மணீயத்தில் உள்ள கிளைக்கதை………………….
அ) புல்லின் பரிவு
ஆ) வாய்க்காலின் விசித்திரம்
இ) சிவகாமியின் சரிதம்
ஈ) நாங்கூழ்ப் புழு செயல்
Answer:
இ) சிவகாமியின் சரிதம்
15.தூசிடைச் சங்கும் தோட்டியும் கொடுத்தே” – இத்தொடரில் துறட்டி’ என்னும் பொருளுடைய சொல்………………….
அ) தூசு
ஆ) சிக்கும்
இ) தோட்டி
ஈ) கொடுத்து
Answer:
இ) தோட்டி
16.சரியான விடையைப் பொருத்துக.
அ. வீழருவி – 1. உவமைத்தொகை
ஆ. குகைமுகம் – 2. பண்புத்தொகை
இ. பேரழகு – 3. வினைத்தொகை
ஈ) புல்புழு – 4. எண்ணும்மை
– 5. உம்மைத்தொகை
1. அ – 2, ஆ – 4, இ – 5, ஈ – 3
2. அ – 4, ஆ – 3, இ – 2, ஈ – 1
3. அ – 5, ஆ – 2, இ – 1, ஈ – 4
4. அ – 3, ஆ – 1, இ – 2, ஈ – 5
Answer:
4. அ – 3, ஆ – 1, இ – 2, ஈ – 5
குறுவினா
1.“ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள” – இவ்வடி, எதனைக் குறிப்பிடுகிறது?
எம்மண்ணையும் நன்மண்ணாக்கும் நாங்கூழ்ப் புழுவின் செயல்பாடுகளை, இவ்வடி குறிப்பிடுகிறது.
சிறுவினா
2.இயற்கையுடன் உரையாடல் ஒன்றைக் கற்பனையாகப் பத்து வரிகளில் எழுதுக.
எத்தனை வகை விலங்குகள்! எத்தனை வகை பறவைகள்! எத்தனை வகை பூச்சிகள்! அனைத்தையும் சமமாகவே கவனித்து ஆதரவு தருகிறது! ஓரறிவு உயிர்வகையுள் சேர்த்திருந்தாலும், பல்வேறு உயிரினங்களுக்கும் அன்போடு நிழல் தருகிறது !
உணவாக இலைகளையும் காய்களையும் பழங்களையும் தருகிறது; தாவர வகைகள் பூக்கும் காலத்தில் தேனையும், இனிய மணத்தையும் தருகின்றது! தாவரங்கள் காய்த்துக் கனிந்தபின், பறவைகளும் விலங்கினங்களும் பசித்தபோது உண்ண உதவுகின்றன! தேடி வருபவர் பசி போக்குகின்றன.
உலகில் அனைத்து உயிர்களையும் சமமாகக் கருதிப் போற்றும் இயற்கையே! உன் பயன் கருதாக் கொடைப்பண்பை யார் பெறுவார்?
2.வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?
சிறு வாய்க்கால், நமக்கு உணவு நல்கும் வயலுக்கு உபயோகப்படுகிறது; அலை கடலை மலையாகவும், மலையை அலைகடலாகவும் மாற்றிட நடக்கிறது; கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண் துகளாக்கிச் சிறு மணலாக்குகிறது. மேலும், தன் வலிமைக்குள் அடங்கிய புல், புழு அனைத்தையும் கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு வழங்குகிறது.)
மலையில் பொழிந்த மழையானபின், அருவியாய் இறங்கி, குகைமுகம் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, பொங்கி எழுந்து, சுனையாய்க் கிடந்து, ஊற்றாய்ப் பரந்து ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட களைக் கூறி, மேலும் இயன்றதைக் கொண்டுவருவதாக உறுதி கூறுகிறது.
நீக்கம் இல்லா அன்பும், ஊக்கமும் உறுதியும் கொண்டு அனுதினமும் அழைக்கிறது என்று, வாய்க்காலின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
3.“நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும்
உன்னைப்போல் உளவேல் பினைப்பேறு என்னை?”- யார், யாரிடம், எப்போது கூறியது?
வாய்க்காலின் விசித்திரச் செயலை வியந்து பார்த்துக் கொண்டிருந்த நடராசன், இறுதியாக அந்த வாய்க்காலையும் அதன் செயலையும் பாராட்டும்வகையில் உன்னைப்போல் தினமும் உழைப்பவர்
யார்?
நீக்க முடியாத அன்பு, ஊக்கம், உழைப்பில் உறுதி எக்கு இருப்பதுபோல் பெற்றால், அதற்குமேல் பெறவேண்டிய பேறு வேறு உளதோ?” எனக் கூறினான்.
4.‘மனோன்மணீயம்’ – குறிப்பெழுதுக.
தமிழின் முதல் செய்யுள் வடிவ நாடக நூல் மனோன்மணீயம்.
தமிழ்மொழியில் நாடக நூல் இல்லாக் குறைபோக்கப் பெ. சுந்தரனார், ஆங்கிலத்தில் ‘லிட்டன் பிரபு எழுதிய ‘இரகசிய வழி’ (The Senret Way) என்னும் நூலைத் தழுவித் தமிழில் இயற்றினார்.
தமிழ்நாட்டு வரலாறு, பண்பாடு கதைக்களம் அமைத்து எழுதப்பட்ட இந்த நாடக நூலில், ஐந்து அங்கங்களும் இருபது கலங்களும் உள்ளன.
நூலின் தொடக்கத்தி இறை வாழ்த்துடன் தமிழ்த்தாய் வாழ்த்தும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் ‘சிவகாமியின் சாரம்’ என்னும் கிளைக்கதையும் உள்ளது.
5.பேராசிரியர் சுந்தரனார் குறித்து நீ அறிவன யாவை?
திருவிதாங்கூரின் ஆலப்புழையில், ‘மனோன்மணீயம்’ சுந்தரனார் 1855இல் பிறந்தார்.
திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு, ராவ்பகதூர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசு, திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை, இவர் பெயரில் நிறுவிப் பெருமை சேர்த்துள்ளது.
6.மனோன்மணீயத்தின் சிறப்புகளை எழுதுக?
மனோன்மணீயம், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது. மொழிப்பற்று, நாட்டுப்பற்று, வீர உணர்வுகளை ஊட்டக்கூடியது.
தமிழன்னையின் நல்லணிகளுள் நாடகத்துறை சார்ந்த நூல்கள் இல்லை என்னும் குறைதீர்க்க உருவானது. நாடக நூலாயினும், காப்பிய இலக்கணத்தை முழுமையாகப் பெற்றுள்ளது.
இயற்கையோடு இயைந்து, தோய்ந்து, இணையற்ற இன்ப வாழ்வு நடத்தியவர் தமிழர் என்பதைத் தெளிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இவை மனோன்மணீயத்தின் தனிச் சிறப்புகளாகும்.
நெடுவினா
1.நடராசன் தனிமொழிகளிலிருந்து நீங்கள் அறியும் கருத்துகளை எழுதுக.
இலக்கே தூண்டுகோல் :
தான் ஏற்ற செயலை முடிக்க, அதிகாலையில் ஊர்ப்புறத்தில் தனித்திருக்கும்போது, எச்செயலையும் முடிப்பதற்கு ஓர் இலக்குத் தேவை என்பதை, நடராசன் உணர்கிறான். அது, உயிர்க்குத் தூண்டுகோலாக உள்ளதையும் உணர்த்துகிறான்.
புல்லின் செயல்பாடு :
சிறுபுல்லும், பூங்கொத்தை உயர்த்தித் தேனை உணவாக அளித்து, தன் மலரைக் காயாக்குவதனையும், தன் இனம் தழைத்து வளர வேறிடம் செல்லும்வகையில் முள் துரட்டியைக் கொடுத்து, ‘நாம் அனைவரும் ஒரே இடத்தில் தழைத்து வாழ முடியாது. ஆகவே வேறிடம் செல்க’ என அறிவுரை கூறுபதுபோல் செயல்படுவதையும் சிந்திக்கிறான்.
அத்துடன், அப்புல்லின் ஆற்றல், அன்பு, முயற்சி முதலானவற்றைப் பார்த்துப் பார்த்தும் கண்களில் நீர் கசிய நிற்கிறான். நடராசன் அப்போது கூறும் மொழிகளைக் கேட்கும்போது, நாமும் சிந்திக்க முடிகிறது.
நடராசன் கண்ட வாய்க்கால் :
நாம் நீரோடும் வாய்க்காலைச் சாதாரணமாகக் கண்டிருப்போம். நடராசன் காணும் காட்சி வேறாக உள்ளது. வாய்க்கால், மலையைக் கடலாகவும், கடலை மலையாகவும் மாறிய நடப்பதாகக் கூறுகிறான். வாய்க்கால், தான் பட்டபாட்டை எல்லாம் காலத்தச்சனிடம் கூறுவதுபோல் காண்கிறான். அப்போதுதான் நமக்கும் அத்தகைய எண்ண ஓட்டம் உருவாகிறது.
வாய்க்கால் ஓடிஓடி நிரந்தரமாக உழைப்பதைக் கண்டு, அதற்கு ஓய்வு கொடுக்கத் தடுப்பதும், சலசலத்தபோது, அழாது செல்லுமாறு கூறி விடுத்து, “உன்னைப்போல் அனுதினமும் உழைப்பவர் யார்? உன்னைப்போல் நீக்க முடியாத அன்பும் ஊக்கமும் உறுதியும் இருக்குமானால், வேறு என்ன பெருமை உண்டாக முடியும்?” எனக் கூறுகிறபோது, நமக்கும் உள்ளத்தில் அந்த உணர்வு தைக்கிறது.
புழு உணர்த்தும் செய்தி :
புல்லின் செயலையும், வாய்க்காலின் பெரும் நாட்டையும் கொண்டு அறிவூட்டிய நடராசன், அடுத்து நாங்கூழ்ப் புழுவைக் காண்கிறான். அற்பப்புழு எனக் கருதக்கூடாது என்பதை, அவன் வாய்மொழி நமக்கு உணர்த்துகிறது.
உலகில் உயர்தொழில் செய்யும் வாவர்களின் நண்பனாக நாங்கூழ்ப் புழு செயல்படுவதை விவரிக்கிறான். எம் மண்ணையும் நன் மண்ணரத்து எறும்பு, புழு, பூச்சிகள் தரும் தொல்லைகளைப் பொருட்படுத்தாமல், தன் செயலில் கண்ணுங்கருத்துமா உள்ள நிலையைத் தெளிவுபட விரித்து உரைக்கிறான்.
நடராசன் தனிமொழி தரும் விளக்கம் :
தான் செய்யும் பணிக்குப் பாராட்டை எதிர்பார்க்காமல் நாங்கூழ்ப் புழு ஒளிந்து கொள்வதாகக் கூறுவது பாராட்டுக்குரிய சொல், ஆறறிவு படைத்த மனிதன் கற்க வேண்டிய அரிய பாடங்கள் இயற்கையில் பொதிந்து கிடப்பதை, நடரசன் தனிமொழி விளக்குகிறது.
வாழ்நரளில் வரையும், எதனையும் மதித்து வாழ வேண்டும் என்பதை, இயற்கையின் செயல்பாடுகள் கற்பிப்பதைத் தெளிவாக அறிய, நடராசன் தனிமொழி துணைபுரிகிறது.
இலக்கணக்குறிப்பு
- கடிநகர், சாலத்தகும் – உரிச்சொற்றொடர்கள்
- உருட்டி, கடந்து, சிக்கி, கலந்து – வினையெச்சங்கள்
- பின்னிய, முனைந்த, சென்ற – பெயரெச்சங்கள்
- இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
- பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- தேன்துளி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- ஆசிலா, ஓவா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
- ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று
- பார்த்துப்பார்த்து, நில்நில், உழுதுழுது – அடுக்குத்தொடர்கள்
- வாய்க்கால் (கால்வாய்) – (முன்பின் தொக்க) இலக்கணப்போலி
- செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
- நெறுநெறு – இரட்டைக்கிளவி
- மண்கல், புல்புழு, இராப்பகல், மலையலை, குகைமுகம் – உம்மைத்தொகைகள்
- காலத்தச்சன் – உருவகம்
- ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
- புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை
- தங்குதல் – தொழிற்பெயர்
- விடுத்தனை – முன்னிலை ஒருமை வினைமுற்று
- ஏகுவன் – தன்மை ஒருமை வினைமுற்று
உறுப்பிலக்கணம்
1. முளைத்த – முளை + த் + த் + அ
முளை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.
2. ஏகுமின் – ஏகு + மின்
ஏகு – பகுதி, மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி.
3. விடுத்தனை – விடு + த் + த் + அன் + ஐ
விடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அன் – சாரியை, ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
4. சென்ற – செல் (ன்) + ற் + அ
செல் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.
5. ஏகுவான் – ஏகு + வ் + ஆன்
ஏகு – பகுதி, வ் – எதிர்கால இடைநிலை, ஆன் – ஏவல் ஒருமை வினைமுற்று விகுதி.
6. உயர்த்தி – உயர் + த் + த் + இ
உயர் – பகுதி, த் – சந்தி, த் – இறந்த கால இடைநிலை, இ – வினையெச்ச விகுதி.
7. அழைத்து – அழை + த் + த் + உ
அழை – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.
8. காண்போர் – காண் + ப் ஒர்
காண் – பகுதி, ப் – எதி தல இடைநிலை, ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.
9. பார்த்து – பார் + த் + உ
பார் – பகுதி, த் சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.
10. திளைப்பர் – திளை + ப் + ப் + அர்
திளை – பகுத், ப் – சந்தி, ப் – இறந்தகால இடைநிலை, அர் – பலர்பால் வினைமுற்று விகுதி.
11. உருட்டி உருட்டு + இ
உருட்டு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.
12. அடைந்து – அடை + த் (ந்) + த் + உ
அடை – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.
13. உழைப்போர் – உழை + ப் + ப் + ஓர்
உழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.
14. ஈர்த்து – ஈர் + த் + த் + உ
ஈர் – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.
15. எடுத்த – எடு + த் + த் + அ
எடு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.
புணர்ச்சி விதிகள்
1. காலத்தச்சன் – காலம் + தச்சன்
“மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும் ஆகும்” (கால + தச்சன்)
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (காலத்தச்சன்)
2. உழுதுழுது – உழுது + உழுது
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (உழுத் + உழுது)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உழுதுழுது)
3. பேரழகு – பெருமை + அழகு
“ஈறுபோதல்” (பெரு + அழகு), “ஆதிநீடல்” (பேரு + அழகு)
“முற்றும் அற்று” (பேர் + அழகு)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பேரழகு)
4. நல்லூண் – நன்மை + ஊண்
“ஈறுபோதல்” (நன் + ஊண்), “முன்நின்ற மெய் திரிதல்” (நல் + ஊண்)
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஊண்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லூண்)
5. அடியொன்று – அடி + ஒன்று
“இ ஈ ஐ வழி யவ்வும்” (அடி + ய் + ஒன்று)
“உயிர்வரின்….. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அடியொன்று )
6. குதித்தெழுந்து – குதித்து + எழுந்து
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (குதித்த் – எழுத்து)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (குதிதமதழுந்து )
7. மண்ணாயினும் – மண் + ஆயினும்
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் பண + ண் + ஆயினும்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்” (பண்ணாயினும்)
8. தூசிடை – தூசு + இடை
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்’ (தூச் + இடை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தூசிடை)
9. மலையலை – மலை + அலை
“இ ஈ ஐ வழி யவ்வும்” மலை+ ய் + அலை)
“உடல்மேல் உயிர்வந்து ஏறுவது இயல்பே” (மலையலை )
Related