You are currently viewing 11th Tamil Guide Unit 8.5

11th Tamil Guide Unit 8.5

11th Tamil Guide Unit 8.5

இயல் 8.5 செவ்வி

Book Back | Additional Question and Answers

11th Standard Tamil Samacheer Kalvi Guide 8th Lesson. Unit 8.5 Book Back And Additional Question and answers. இயல் 8.5 செவ்வி. +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 8 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/

TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. 11th Tamil Guide Unit 8 Full Answer Key

11th Tamil Guide Unit 8 Book Back and Additional Question – Answers இயல் 8.5 செவ்வி

11th Tamil Guide Unit 8 

இயல் 8.5 செவ்வி

நெடுவினா

1. நர்த்தகி நடராஜின் நேர்காணல்வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க.

வேதனையில் சாதனை :
திருநங்கையர்க்கு இருக்கும் தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிக் காட்டியவர் நர்த்தகி நடராஜ். அமெரிக்காவில் இரண்டு வார நிகழ்ச்சியை எதிர்ப்பார்த்துச் சென்றவர். ஒருநால் கெழ்ச்சியாக மாற்றப்பட்டதை அறிந்து வேதனையுற்றார். எனினும், தம் கால் சதங்கை ஒலியை அரங்கில் நிறைத்து, காண்பவரை வியக்கவைத்து, இரு மாதங்கள் தொடர்ந்து தம் ஆற்றலை வெளிப்படுத்திய நிகழ்வே, அவர்தம் ஆற்றலை விளக்கப் போதுமான சான்று.

நாட்டியத்தில் ஈடுபாடு :
பெண்மையை உணரத் தொடங்கிய குழந்தைப் பருவத்தில் திரைப்பட நடனங்கள் தன்னை ஈர்த்ததையும், ஆடத் தொடங்கியபின் நாட்டியத்தின் உட்கூறுகளை அறிய முயற்சி செய்தது, ராக தாளத்துடன் நாட்டியத்திற்கான கருத்தை அறிமுகம் செய்து கொண்டது ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

நடனத்திற்குக் கரு தேர்வு :
எதிர்கொள்ளும் பிரச்சனைக்காக மட்டுமன்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ் மரபில் தோன்றிய தான் பரதத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும், தமிழ் இலக்கியங்களால் அதன் இடத்தைத் தெரிந்து, நம் கலையை தம் நடனத்தில் கருவாக எடுத்துக்கொண்டு விழிப்புக ளர்வை ஆயுதமாகக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

உலகைக் கவரும் பரதம் :
ஜப்பானின் ஒசாகா நகரில் திருவாசக, தேவாரப் பண்களுக்குத் தாம் நிகழ்த்திய பரத அபிநயங்களைக் கண்டு கண்கலங்கி மௌனத்தோடு கரஒலி எழுப்பியுள்ளதைக் கூறி, பரதத்தை உலகின் எப்பகுதியினரும் முழுமையாக உள்வாங்கிப் புரிந்துகொள்வர் என்பதை விவரித்துள்ளார்.

நம் பண்பாட்டைத் தேடவைத்தல்
நம் பண்பாடு, வாழ்வாங்கு வாழ்ந்த மரபு சார்ந்தது. அதை எப்பண்பாட்டாலும் புறக்கணிக்க முடியாது. நார்வேயில் திருக்குறளை மையப்படுத்தி நிகழ்த்திய நிகழ்ச்சி, அம்மக்களைத் திருக்குறளைத் தேடிக் கற்கத் தூண்டியது, நம் பண்பாட்டுப் புலமை என விளக்கியுள்ளார்.

தமிழ்வழிக் தலவ பயின்று, வழக்கறிஞராக எண்ணியவர், இன்று மேடையேறிப் பல்வேறு இலக்கிய
பணியாகக் கொண்டுள்ளதைத் தெளிவுபடுத்தினார்.
சோதனை வென்று சாதனை : 
பகை கலைக்கூடம் வாயிலாகப் பலர் தம்மை அம்மா என அழைப்பதை எண்ணிக் கருணையில் நொழுவதை உணர்வதாகக் கூறியுள்ளார். நர்த்தகி நடராஜ், இன்றைய உலகில் பல உயரங்களைத் தொட்டுச் சாதனை படைத்து வருகிறார்.
திருநங்கையாகப் பிறந்து சாதித்தவர்கள்
காவல்துறை
சேலத்தில் பிறந்த பிரித்திகா யாஷினி, மிகுந்த சிரமங்களுக்கு இடையே 2011ஆம் ஆண்டு ‘கணினி’ பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர்க் காவல்துறையில் பயிற்சி பெற்றுத் தற்போது சென்னையில் காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர்’ என்னும் பெருமை கிடைத்துள்ளது.
நீதித்துறை :
ஜோயிதா மோண்டல் மாஹி என்பவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திருநங்கை. இவர் திருநங்கையரின் முன்னேற்றத்திற்காகப் பல பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர், வடக்கு தினாஜ்பூர் மாவட்டம் இஸ்லாம்பூரில் ‘லோக் அதாலத்’ நீதிபதியாக அண்மையில் நியமிக்கப்பட்டார். லோக் அதாலத் நீதிபதி பதவிக்குத் திருநங்கை ஒருவரை நியமித்தது, இந்திய நாட்டில் இதுவே முதன்முறையாகும்.
சித்த மருத்துவம் :
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவரான தாரிகாபானு, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில், அறிவியல் பாடப்பிரிவில் பயின்றார். 2017ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். சாதனை புரிவதற்குப் பாலினம் தடையில்லை என்பதை இவர்கள் திறமையின் செயல்களால் தெளிவுபெற வேண்டும்.

Leave a Reply