12th Botany Unit 9 Answers

 12th Botany Unit 9 Lesson 6 Additional 3 Marks

 12th Botany Unit 9 Lesson 6 Additional 3 Marks

TN 12th Bio-Botany Unit 9, 6th lesson Additional 3 Marks Question and answers. Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 6 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 6 . தாவரச் சூழ்நிலையியல் சூழ்நிலையியல் கோட்பாடுகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 6 Book Back Answers.

12th Bio-Botany Unit 9 | Lesson 6. தாவரச் சூழ்நிலையியல் சூழ்நிலையியல் கோட்பாடுகள் – Additional 3 Marks

 12th Botany Unit 9 Lesson 6 additional 3 Marks

VI. மூன்று மதிப்பெண் வினாக்கள்

1. குத்துயரத்திற்கும் மர எல்லைகோடுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? (அ) மர எல்லை கோடு என்றால் என்ன?

  • மர எல்லைக்கோடு என்பது கற்பனையாகமலையின் மேல் வரையப்பட்ட கோடு (அ) இது மலையின் மரங்கள் அமைந்துள்ள குத்து உயரத்தை குறிக்கிறது.
  • மரங்கள் பொதுவாக 3000 முதல் 4000 m குத்துயரம் வரை வளரும்.

 

2. ரைட்டிடோம் (Rhytidome) எவ்வாறு தாவரங்களை காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்கிறது?

  • தாவரங்களில் காணப்படும் தீக்கு எதிராக உடற் கட்டமைவு இதுவாகும்.
  • இது குறுக்கு வளர்ச்சியின் முடிவாகத் தோன்றியசூபரினால் ஆன பெரிடெர்ம், புறணி, ஃபுளோயம்திசுக்களான பல அடுக்குகளை கொண்டது.
  • இப்பண்பு தீ, நீர் இழப்பு, பூச்சிகளின் தாக்குதல், நுண்ணுயிர் தொற்று ஆகியவற்றிலிருந்து தாவரங் களின் தண்டுகளைப் பாதுகாக்கின்றன.

 

3.சூழ்நிலையியலின் எந்த பிரிவு இயற்கை வளங் களை குறிப்பாக சூழல் அமைப்புகளை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் உதவுகிறது? (அ) பயன்பாட்டு சூழ்நிலையியல் என்றால் என்ன? (அ) சூழல் தொழில்நுட்பம் என்றால் என்ன? (அ) சூழல மேலாண்மை என்றால் என்ன?

  • பயன்பாட்டு சூழ்நிலையியல் (அ) சூழல் தொழில நுட்பம் இயற்கை வளங்களை நிர்வகிக கவும், குறிப்பாக சூழல்அமைப்புகள், காடு வன உயிரி ஆகியவற்றின் நிர்வகிக்க பாதுகாக்க உதவுகிறது.
  • சூழல் மேலாண்மை என்பது உயிரிபன்மப்பாது காப்பு சூழல் மறுசீரமைப்பு, புவி வாழிட வாழ் வாதார மேலாண்மை ஆக்கிரமிப்பு இனங்களின் மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மேலாண்மை, இயற்கை நிலத்தோற்றத்தை திட்ட மிடல், சூழலின் தாக்கம், வடிவமைப்பு ஆகிய வற்றை எதிர்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உட்படுத்துவது சூழல் மேலாண்மை

 

4.சூழ்நிலைக் காரணிகள் என்றால் என்ன? (அ) சூழுல் காரணிகள் என்றால் என்ன? 

  • பல்வேறு உயிரினங்களும் சூழலோடு ஒருங்கி ணைந்துள்ளன.
  • சூழல் என்பது (சுற்றுப்புறம் ) இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியியல் ஆகிய கூறுகளை உள்ளடக்கியது.
  • உயிரினத்தைச் சுற்றியுள்ள ஒரு கூறானது உயிரினத்தின் வாழ்க்கையைப் பாதிக்கும் போது அது ஒரு காரணியாகிறது.
5.தாவரங்களை பாதிக்கும் சூழல்காரணிகள் யாவை?

  • காலநிலைக் காரணிகள் : சூரியஒளி, மழைப் பொழிவு கார்பன்டைஆக்ஸைடு மற்றும் நீராவி.
  • உயிரி காரணிகள் : பறவைகள், பூச்சிகள், மனிதன், மேயும் விலங்குகள், கொறித்துண்ணிகள், தாவர நோய்க்கிருமிகள், தொற்றுத்தாவரங்கள்.
  • நிலப்பரப்பியல் காரணிகள் மண்சரிவமைவு. மண்நீர், மண்ணின் இயற்பியல் அமைப்பு மண்கனிமங்கள், மண்வளி.

 

6.ஒளியினால் பசுத்தாவரங்களுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?

  • ஒளியால் பசுந்தாவரங்களில் ஏற்படும் செயல்கள் ஒளிச்சேர்க்கை, இலைத்துளை திறத்தல் மற்றும் மூடுதல் அசைவுகள், விதை முளைத்தல், மலர்தல், கிழங்கு உருவாக்கம், ஒடுதண்டு உருவாக்கம், தண்டு மற்றும் இலை உருவாக்கம்

 

7.சமுதாய சூழ்நிலையிலிருந்து சிற்றின சூழ்நிலையியலை வேறுபடுத்துக. 

சிற்றினச் சூழ்நிலையியல் 
  • ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்த தாவரங்களின் தொகுப்பு (Population) பற்றிய இயலுக்கு சிற்றினச் சூழ்நிலையியல் என்று பெயர்.
சமுதாய சூழ்நிலையியல்
  • ஒன்றுக்கு மேற்பட்ட சிற்றினங்கள் ஒரு குழுமமாக கூடி வாழ்வதனைப் (Several populations) பற்றிய இயலுக்கு சமுதாய சூழ்நிலையியல் என்று பெயர்.

 

8. சாகுபடிக்கு ஏற்ற மண் எது? (அ) பசலைமணி ஏன் சாகுபடிக்கு சிறந்தது? 

  • பசலைமண் சாகுபடிக்கு ஏற்ற மண் வகையாகும். இது 70% மணல் மற்றும் 30% களிமண் (அ) வண்டல் மண் (அ) இரண்டும் கலந்தது ஆகும்.
  • இந்த மண் 1) நன்கு நீர்தேக்குதல், 2) மெதுவாக வடிகால் பண்பை உறுதி செய்தல். 3) மண்ணில் துகள்களிடையே இடைவெளி உடன்
  • நல்ல காற்றோட்டம் முதலியவை இருப்பதால் தாவர வேர்கள் நன்கு மண்ணில் ஊடுருவி வளர முடிகிறது.

 

9. மண்ணின் நெடுக்கு வெட்டு விவரம் (Soil Profile) என்றால் என்ன?

  • மண் வெவ்வேறு அடுக்குற்ற மண்டலங்களாக, பல்வேறு ஆழத்தில் பரவியுள்ளது.
  • இவை இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பண்புகளின் அடிப்படையில் வேறு படுகின்றன.
  • தொடர்ச்சியான ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப் பட்ட மண்ணின் பகுதியே மண்ணின் நெடுக்கு வெட்டு விவரம் எனப்படும்.

 

10. வெவ்வேறு குத்துயரங்களில் தாவரங்கள் மாறுபட்டு தனித்துவ மண்டலத்தை உருவாக்குகின்றன ஏன்?

  • கடல் மட்டத்திலிருந்து காணப்படும் உயரமே குத்துயரம் எனப்படுகிறது.
  • அதிகக் குத்துயரத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது.
  • வெப்பநிலை மற்றும் காற்றின் அழுத்தம் குறைந்தும் ஈரப்பதம் மற்றும் ஒளியின் தீவிரம் அதிகரித்தும் காணப்படுகின்றன.
  • இதனால் வெவ்வேறு குத்துயரங்களில் தாவரங்கள் மாறுபட்டு தனித்துவ மண்டலத்தை உருவாக்குகின்றன.

 

11.பூமத்திய ரேகை பகுதியிலிருந்து துருவங்களை நோக்கி வெவ்வேறு வகையான தாவரக்கூட்டங்கள். காணப்படுகின்றன ? ஏன்?

  • விரிவகலம் (Latitudes) எனப்படுவது
  • பூமத்தியரேகை பகுதியிலிருந்து காணப்படுகின்ற தூரம். பூமத்திய ரேகை பகுதியில் வெப்பநிலையானது அதிகமாகவும் துருவங்களை நோக்கிப் படிப்படி யாக குறைந்தும் காணப்படுகின்றன. எனவே வெவ்வேறு வகையான தாவரக்கூட்டம் காணப் படுகிறது.

 

12. இயற்கை நில அமைவு என்றால் என்ன? அதன் காரணிகள் யாவை?

  • புவியின் மேற்பரப்பு வடிவம் மற்றும் அம்சங்களை ஆய்வது இயற்கை நில அமைவு ஆகும்.

காரணிகள் :
1) விரிவகலம் மற்றும் குத்துயரம்
2) மலைகளின் நோக்கு திசைகள்
3) மலையின் செங்குத்தான பகுதி,

13. ஸ்பானிய மாஸ், டில்லான்ஷியா ஆகியன ஒக் மற்றும் பைன் மரப்பட்டைகளின் மேலே வளர் கின்றன. மேலே கூறிய எடுத்துக்காட்டில் எந்த வகையான இடைச்செயல் காணப்படுகின்றது? 
  • நேர்மறை இடைச்செயலான உடன் உண்ணும் நிலை காணப்படுகின்றது.
  • இங்கு இரு வேறு சிற்றினங்களுக்கு இடை யிலான இடைச்செயல்களால் ஒன்று பயன் அடைகிறது.
  • இதில் பயன் அடைகின்ற சிற்றினமானது சுமன் செல் எனவும் மற்ற சிற்றினமானது ஓம்புயிரி எனவும் அழைக்கப்படும்.

 

14. வெலாமன் என்றால் என்ன? 

  • உயர்நிலை தொற்றுத் தாவரங்கள் (ஆர்கிட்கள்) வளிமண்டலத்திலிருந்து ஊட்டச்சத்துக்கள், நீர் ஆகியவற்றை உறிஞ்சும் வேர்களில் காணப்படும் வெலாமன் எனும் சிறப்பு வகை திசுக்கள் மூலம் பெறுகின்றன.

 

15.முன்னோடி கூட்டுறவு என்றால் என்ன? 

  • இரண்டு வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே யான இடைச்செயல்களில் இரண்டும் பயன டைகிறது.
  • ஆனால் ஒன்றை ஒன்று சார்ந்திராத உறவு முறை கொண்ட நிகழ்வாகும்.
  • (எ.கா) மணவாழ் பாக்டீரியங்கள் / பூஞ்சைகள் மற்றும் தாவரங்களுக்கிடையேயான கூட்டுறவு.

 

16. முழு ஒட்டுண்ணிகள் என்றால் என்ன? 

  • ஒரு உயிரினமானது தனது உணவிற்காக ஒம்புயிரி தாவரத்தினை முழுவதுமாக சார்ந்திருந்தால் அது முழு ஒட்டுண்ணி என அழைக்கப்படுகிறது. (எ.கா) கஸ்குட்டா.

 

17. ட்ரைக்கோடெர்மா (பூஞ்சை) அஸ்பர்ஜில்லஸ் பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்கிறது. ஏன்? அமன்சாலிஸம் என்றால் என்ன?

  • இங்கு இரண்டு உயிரிகளுக்கிடையே நிகழும் இடைச்செயல்களில் ஒரு உயிரி ஒடுக்கப் பட்டாலும் மற்றொரு உயிரி எந்த பயனையும் அடைவதில்லை (அ) பாதிக்கப்படுவதில்லை.
  • இடைத்தடை வேதிப்பொருட்கள் என்ற சில வேதிப்பொருட்களைச் சுரப்பது மூலம் இந்த ஒடுக்கப்படுதல் நிகழ்கிறது.
  • இந்த நிகழ்ச்சி அமன்சாலிஸம் (அ) நுண்ணுயிரி எதிர்ப்பு எனவும் அழைக்கப்படுகின்றன.

 

18. ஃபில்லியம் ஃப்ராண்டோஸம், காராசியஸ் மோரோஸஸ் எந்த வகையான இடைச்செயல்களை கொண்டுள்ளது? (அ) பாவனை செயல் என்றால் என்ன?

  • சிற்றினங்களுக்கிடையேயான இடைச்செயல்கள் (அ) இணைப்பரிணாமக்குழு இயக்கவியலின் பாவனை செயல்களை கொண்டுள்ளது.
  • ஒரு உயிரி தனது அமைப்பு, வடிவம், தோற்றம் நடத்தை ஆகியவற்றை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழும் வாய்ப்பை பெருக்கவும் தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் நிகழ்த்தப்படும் ஒரு செயலாகும்.

 

19. கைரமோன் என்றால் என்ன ? 

  • ஃபிரிஸ் ரேஃபே சிற்றினக் கம்பளிப்புழு வெளி யிடும் கைரமோன் என்ற சேர்மம் காட்டுவகை முள்ளங்கியின் வாயிலாக காப்புத்தன்மை அதன் சந்ததிகளுக்குக் கடத்துகிறது.

 

20. அக்கேஷியா மற்றும் அக்கேஷியா எறும்பு இவற்றில் காணப்படும் இடைச்செயல் யாது? இது எதை உணர்த்துகிறது?

  • எறும்புகள் சில நேரங்களில் மா, லிட்சி, ஜாமுன் அக்கேஷியா போன்ற சில தங்கு மிடமாக கொள்கின்றன.
  • இந்த எறும்புகள் தாவரங்களை காக்கும் காப்பாள ராகவும் இதற்கு பதிலாக தாவரங்கள் எறும்பு களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தையும் அளிக்கின்றன.
  • இது மிர்மிகோஃபில்லி எனப்படும்.

 

21. ஹைக்ரோபைட்கள் என்றால் என்ன? 

  • ஈர்த்தன்மையுடைய சூழல் மற்றும் நிழல் உள்ள இடங்களில் வளரும் தாவரங்கள். (எ.கா) ஹேபினேரியா (ஆர்கிட்கள்), மாஸ்கள் (பிரையோஃபைட்கள்) முதலியன.

 

22. உவர் சதுப்புநிலக்காடுகள் எவ்வாறு இயற்கை அழிவிலிருந்து பாதுகாக்கிறது?

  • உவர் சதுப்பு நிலக்காடுகள் கடற்கரை பகுதிகளில் தங்களின் வேர்களால் கடலகரைகள், மண் அரித்தலை தடுக்கிறது.
  • தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் (நாகப் பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்) இவ்வகை காடுகள் திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் மட்டும் காணப்படுகிறது.
  • இங்கு மட்டுமே கஜா புயலால் குறைந்த அளவு சேதமே ஏற்பட்டது. இதற்கு அலையாத்தி காடு களே (உவர் சதுப்புநிலக்காடுகளே) காரணம்.

 

23. வறட்சி நிலையை தவிர்க்கும் (அ) சமாளிக்கும் (அ) குறுகிய காலம் வாழும் ஒரு பருவத்தாவரங்கள் என்றால் என்ன?

  • இத்தாவரங்கள் மிகக்குறைந்த குறுகிய காலத்தில் தன் வாழ்க்கை சுழற்சியினை முடித்துக் கொள்கின்றன.
  • இவை உண்மையான வறண்ட நிலத்தாவரங்கள் இல்லை.
  • (எ.கா) ஆர்ஜிமோன், மொல்லுகோ, ட்ரிபுலஸ் மற்றும் டெஃப்ரோசியா.

 

24. கடலின் மிக ஆழமான பகுதியின் சக்தி எங்கிருந்து பெறப்படுகின்றது?

  • கடலின் ஆழமான பகுதி (>500 m) மிகவும் இருட்டாகவும் அங்கு காணப்படும் உயிரினங்கள் சூரிய ஒளியை பயன்படுத்தாததாகவும் காணப் படுகின்றனது.
  • எனவே ஆழமான பகுதியில் வேதிவினையின் மூலம் உயிர்கள் உணவை தயாரிக்கின்றன.

 

25. சூழ்நிலையியலில் நான்கு முக்கிய தினங்களை குறிப்பிடு.

  1. மார்ச் 21 -உலக வன தினம்
  2. ஏப்ரல் 22 – புவி தினம்’
  3. மே 22 – உலக உயிரி பன்ம தினம்
  4. ஜூன் 07 – உலக சுற்றுச்சூழல் தினம்

 

26. பில்லோடு என்றால் என்ன? 

  • சிலவற்றில் இலைக்காம்பானது சதைப்பற்றுள்ள இலை போன்று உருமாற்றம் அடைந்துள்ளது. இது காம்பிலை (அ) பில்லோடு (அ) அல்கேஷியா மெலனோசைலான் என அழைக்கப்படுகிறது.

 

27. கிளாடோடு வரையறு

  • வேறு சில தாவரங்களில் ஒன்று அல்லது இரண்டு கணுவிடைப்பகுதிகள் சதைப்பற்றுடன் பசுமையாக மாறுபாடு அடைந்துள்ளது இதற்கு கிளாடோடு (அஸ்பராகஸ்) என்று அழைக்கப் படுகிறது.

 

28. ஃபில்லோகிளாட் என்றால் என்ன?(அ) இலைத் தொழில் தண்டு

  • சில வறண்ட நிலத் தாவரங்களின் தண்டின் அனைத்து கணுவிடைப் பகுதிகளும் சதைப் பற்றுள்ள இலை வடிவ அமைப்பாக மாற்ற மடைந்துள்ளன. இவை இலைத் தொழில் தண்டு (ஃபில்லோகிளாட்) (ஒப்பன்ஷியா) என அழைக்கப்படுகின்றன.

 

29. சுவாசிக்கும் வேர்கள் என்றால் என்ன? எ.கா. தருக 

  • புவிஈர்ப்பு விசைக்கு எதிராக இவற்றில் தோன்றும் சில சிறப்பு வகை வேர்கள் நிமட்டோஃபோர்கள் எனப்படுகின்றன. அதில் அமைந்துள்ளன நிமத்தோடுகள் கொண்ட தாவரம் அதற்குத் தேவையான அளவு காற்றோட்டத்தைக் கொண்டுள்ளது இதற்கு சுவாசிக்கும் வேர்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா. அவிசென்னியா

Leave a Reply