12th Bio-Botany Unit 9 தாவரச் சூழ்நிலையியல் பாடம் 8. சுற்றுச்சூழல் பிரச்சனைகள்

12th Botany Unit 9 Lesson 8 Book Back Answers

12th Botany Unit 9 Lesson 8 Book Back Answers

TN 12th Bio-Botany Unit 9, 8th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 8 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8 . சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.

12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் – Book Back Answers

12th Botany Unit 9 Lesson 8 Book Back Answers

 12th Botany பாடம் 8 பகுதி-I.புத்தக வினாக்கள்

பாடம் 8 தாவரச் சூழ்நிலையியல்  சுற்றுச்சூழல் பிரச்சனைகள்  பகுதி-I.புத்தக வினாக்கள்

பகுதி-I.புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பசுமை இல்ல விளைவினை அதிக அளவிலே குறைப்பது கீழ்க்கண்டவற்றுள் எது எனக் குறிப்பிடுக. 
அ) வெப்பமண்டலக் காடுகளைக் கால்நடைக்கான மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல்
ஆ) அதிகப்படியான பொதிக்கும் தாள்களை எரித்துச் சாம்பலாக்கிப் புதைத்தலை உறுதிப்படுத்துவது
இ) மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல்
ஈ) பொதுப் போக்குவரத்தினை விடத் தனியார் போக்குவரத்தினைப் பயன்படுத்துதல் ஊக்குவித்தல்
விடை : இ) மறுவடிவமைப்பு மூலம் நில நிரப்பு அடைதல் மீத்தேன் சேமிக்க அனுமதித்தல்
2. ஆகாயத் தாமரையைப் பொறுத்தவரை கூற்று I தேங்கும் நீரில் வளர்ந்து காணப்படுகிறது மற்றும் இது நீரிலுள்ள ஆக்ஸிஜனை முற்றிலும் வெளியேற்றுகிறது. கூற்று II இது நமது நாட்டின் உள்நாட்டு தாவரமாகும்.
அ) கூற்று 1 சரியானது மற்றும் கூற்று II தவறானது.
ஆ) கூற்று I மற்றும் 11 – இரண்டு கூறுகளும் சரியானது
இ) கூற்று தவறானது மற்றும் கூற்று II சரியானது
ஈ) கூற்று மற்றும் II – இரு கூறுகளும் தவறானது
விடை : அ) கூற்று I சரியானது மற்றும் கூற்று II தவறானது.
3.தவறான இணையிணை கண்டறிக. 
அ) இடவறை – சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் காணப்படும் மற்றும் வேறெங்கும் காணப்படுவதில்லை.
ஆ) மிகு வளங்கள் – மேற்கு தொடர்ச்சிமலை
இ)வெளி வாழிடப் பேணுகை – விலங்கினப் பூங்காக்கள்
ஈ) கோயில் தோட்டங்கள் இராஜஸ்தானின் செயின்தரி குன்று
உ) இந்தியாவின் அன்னிய ஆக்கிரமிப்பு சிற்றினங்கள் – ஆகாயத் தாமரை
விடை : ஈ) கோயில் தோட்டங்கள் இராஜஸ்தானின் செயின்த்ரி குன்று
4. தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?
அ) அம்மோனியா
ஆ) மீத்தேன்
இ) நைட்ரஸ் ஆக்ஸைட்
ஈ) ஓசோன்
விடை : ஈ) ஓசோன்
5. 14% மற்றும் 6% பசுமை இல்ல வாயுக்கள் புவி வெப்பமயமாதலுக்குக் காரணமான முறையே
அ) N,O மற்றும் CO2
ஆ) CFCs மற்றும் N2O
இ) CH மற்றும் CO2
ஈ) CH4 மற்றும் CFCS
விடை : ஆ) CFCs மற்றும் N2O  
6.கீழ்கண்டவற்றில் எது அச்சுறுத்தும் சிற்றினங்கள் உண்டாவதைக் குறைக்கும் முக்கிய காரணமாகக் கருதப்படுவது?
அ) அதிகப்படியான வேட்டையாடுதல் மற்றும் அத்துமீறல்கள்
ஆ) பசுமை இல்ல விளைவு
இ) போட்டியிடுதல் மற்றும் கொன்று உண்ணுதல் அழிவு
(ஈ) வாழிட அழிவு
விடை : ஈ) வாழிட அழிவு  
7.காடுகள் அழிக்கப்படுதல் எனப்படுவது
அ) காடுகளற்ற பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
ஆ) காடுகள் அழிந்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
இ) குளங்களில் வளரும் தாவரங்கள் மற்றும் மரங்கள்
ஈ) தாவரங்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை அகற்றுதல்
விடை : ஈ) தாவரங்கள் மற்றும் ஆகியவற்றை அகற்றுதல் மரங்கள்
8.காடுகள் அழித்தல் எதை முன்னிறுத்திச் செல்வதில்லை?
அ) வேகமான ஊட்டச்சத்து சுழற்சி
ஆ)மண் அரிப்பு
இ) மாற்றியமைக்கப்பட்ட உள்ளூர் வானிலை
ஈ)இயற்கை வாழிட வானிலை நிலை அழிதல்
விடை அ) வேகமான ஊட்டச்சத்து சுழற்சி
9.ஓசோனின் தடிமனை அளவிடும் அலகு? 
அ) ஜூல்
ஆ) கிலோ
இ) டாப்சன்
ஈ) வாட்
விடை: இ) டாப்சன்
10.கர்நாடகாவின் சிர்சி என்னும் இடத்தில் சூழலைப் பாதுகாக்கும் மக்களின் இயக்கம் யாது?
அ) சிப்கோ இயக்கம்
ஆ) அமிர்தா தேவி பிஷ்வாஸ் இயக்கம்
இ) அப்பிக்கோ இயக்கம்
ஈ) மேற்கொண்ட எதுவுமில்லை
விடை இ) அப்பிக்கோ இயக்கம்
11. மரத்தீவனத்திற்காக வளர்க்கப்படுகின்ற தாவரம் எது?
அ) செஸ்பேனியா மற்றும் அக்கேசியா
ஆ) சொலானம் மற்றும் குரோட்டலேரியா
இ)கிளைட்டோரியா மற்றும் பிகோனியா
ஈ) தேக்கு மற்றும் சந்தனம்
விடை : அ) செஸ்பேனியா மற்றும் அக்கேசியா
12. ஓசோன் துளை என்றால் என்ன?
 • சில வகையான வேதிப் பொருட்கள் வளி மண்டலத்தில் வெளியிடப்படும் போது ஓசோன் படலம் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகிறது.
 • குறிப்பாக குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து’ வெளியேறும் குளோரோஃபுளோரோ கார்பன். ஏரோசால், தொழிற்சாலைகளில் அழுக்கு நீக்கும் வேதிப்பொருட்கள் போன்றவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
 • ஓசோனின் அடர்வு குறைந்த பகுதிகள் அபாய கரமான ஓசோன் துளை என அழைக்கப் படுகின்றன.

 

13. வணிக வேளாண் காடு வளர்ப்பு மூலம் வளர்க்கப் படும் தாவர எடுத்துக்காட்டுகளைத் தருக. 
 • வணிக ரீதியாக வளர்க்கப்படும் வேளாண் காடுகளில் தாவரச் சிற்றினங்களான கேசுரைனா, யூக்களிப்டஸ், மலை வேம்பு, தேக்கு, கடம்பு, ஆகியவை அடங்கும்.இவை மரம் சார்ந்த தொழிற்சாலைகளில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

 

14. கார்பன் கவரப்படுதல் மற்றும் சேகரித்தல் (CCS) என்றால் என்ன?
 • கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு என்பது வளிமண்டலத்தின் கார்பன்டை ஆக்ஸைடை உயிரித்தொழிலநுட்பம் மூலமாக கைப்பற்றி ஒரு கிலோமீட்டர் அல்லது அதற்குக் கீழான ஆழத்தில் நிலத்தடிப் பாறைகளுக்கிடையே பாதுகாப்பான முறையில் உட்செலுத்திச் சேமிக்கும் முறையாகும்.
 • இது புவி வெப்பமாதலை மட்டுப்படுத்தும் ஓர் அணுகு முறையாகும். எ.கா: தொழிற்சாலை மற்றும் மின் ஆலை களிலிருந்து வெளியேற்றப்படும் CO, ஐ கவர்தல் சேமிப்புக்கிடங்குகள்;
 • எ.கா: குறைந்து வரும் எண்ணெய் வயல்கள், எரிவாயு வயல்கள், துறைகள் உவர் நீரூற்றுகள் மற்றும் அகழ்விற்கு உகாத நிலக்கரி சுரங்கள் சேமிப்பு இடங்கள் ஆகும்.
 • கார்பன், பெருங்கடல்களில் திரவச் சேமிப்பாகவும் உலோக ஆக்ஸைடைப் பயன்படுத்தி கார்பன் டை ஆக்ஸைடை குறைத்தல் மூலம் திடமான கார்பனேட்டாக மாற்றி உலர் (or) திடச் சேமிப்பாகவும் சேமித்து வைக்கப்படுகிறது.

 

15. காலநிலையினை நிர்வகிப்பதில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?
 • காடுகள் வளிமண்டலத்தில் கார்பன் -டை ஆக்ஸைடை எடுத்து ஒளிச்சேர்க்கை செய்வதால்அதன் அளவை மட்டுப்படுத்துகிறது.
 • காடுகள் அதிகமானால் வளிமண்டல கார்பன் டை-ஆக்ஸைடை நீக்குவதன் உலகளாவிய காலநிலை மாற்றம் குறைக்கப்படும்.
 • பருவநிலை மாற்றங்களுக்கு காரணமான புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்துகிறது.
 • தொல்லுயிர் எரிவாயுவில் வெளிவரும் மூன்றில் ஒரு பங்கு கார்பன்டை ஆக்ஸைடு காடுகளால் உறிஞ்சப்படுகிறது.
 • காடுகள் சூழியல் மண்டலம் மற்றும் பல்லுயிரி (Bio-diversity) களை பாதுகாப்பதுடன் கார்பன் சுழற்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.
 • ‘வெப்பமண்டல காடுகளில் உள்ள மரங்களின் இலைகளின் வழியாக வெளியேற்றப்படும் நீராவியானது முகில் சூழ் வானத்தை உருவாக்குவதுடன், வெப்பத்தை குறைக்கவும் செய்கின்றது.
 • காடுகள் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்து காற்றின் தரத்தை உயர்த்துகிறது.
 • காட்டுத் தீயினால் காடுகளின் அழிவு (Aug sep 2019) உலகளாவிய பருவநிலை, மழைப்பொழிவு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

 

16. பன்ம பாதுகாப்பில் கோவில் காடுகள் எவ்வாறு உதவிபுரிகின்றன?
 • கோவில் காடுகள் சமூகங்களால் பாதுகாக்கப் பட்டு வளர்க்கப்பட்ட மரங்களின் தொகுப்புகளாகும் (or) தோட்டங்களாகும்.
 • சமூகத்தின் பாதுகாப்பிற்காக ஒரு குறிப்பிட்ட சமயச் சித்தாங்களைக் கொண்டிருக்கும் வலுவான மத நம்பிக்கையை கொண்டவை.
 • இவை நீர்பாசனம், தீவனம், மருத்துவத் தாவரங்கள் மற்றும் நுளர் காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதன் மூலம் ஏராளமான சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளை அண்டை பகுதிகளுக்கு வழங்கும்.
 • கோவில் காடுகள் நிலத்தடி நீரை பாதுகாத்தல் மண்ணரிப்பை தடுத்தல், மண்ணின் வளத்தை பாதுகாக்கிறது.
 • கோவில் காடுகளில் ஆயுர்வேத மருத்துவ தாவரங்கள். மேலும் அச்சுறுத்தப்படும் சிற்றினங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
 • அக்சுறுத்தலுக்குண்டான சிற்றினங்களுக்கு உறைவிடம் மற்றும் பராமரிப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கான கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும் பெற்றுத் தருகின்றன.
 • ஒவ்வொரு கிராமத்துக் கோயில் காடுகளும் ஐயனார் அல்லது அம்மன் போன்ற கிராம ஆண், பெண் தெய்வங்களின் உறைவிடமாகவே கருதப்படுகின்றன.
 • தமிழ்நாடு முழுவதும் 448 கோயில் காடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

 

17. பொதுவான நான்கு பசுமை இல்ல வாயுக்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்ற வாயு எது? இந்த வாயு தாவரத்தின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் குறிப்பிடுக.
 • கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு பசுமை இல்ல வாயுக்களில் மிக அதிகமாகக் காணப்படும் வாயு. இது மொத்த பசுமை இல்ல வாயுக்களில் 60 % ஆகும்.
 • காற்றில் CO2 அளவு உயரும்போது இது தாவரங்களின் நைட்ரஜன் உள்ளிழுக்கும் திறனை குறைக்கிறது. நைட்ரஜன் அளவு தாவரங்களில் குறையும்போது தாவரங்களின் புரத உற்பத்தி மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
 • கார்பன்டை ஆக்ஸைடு பசுமை இல்ல வாயுக்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்ற வாயு
 1. வெப்பமண்டலப்பிரதேசங்களில் உணவு உற்பத்தி குறைதல்
 2. வளிமண்டலத்தில் அதிகளவில் வெப்பக்கதிர்கள் வீசுதல், (களைகள், பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளுக்கு அதிக வெப்பம் தேவைப்படுகிறது)
 3. நோய் கடத்திகள் மற்றும் தொற்றும் தோய்கள் அதிகம் பரவுதல்,
 4. பலத்த குறாவளிக் காற்றும், கடுமையான
 5. வெள்ளப் பெருக்கமும் ஏற்படுதல், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் நீர்பாசளக் குறைபாடு
 6. பூக்கள் தோன்றும் காலங்கள் மற்றும் மகரந்தச் சேர்ப்பிகளில் மாற்றம் நிகழ்தல்.
 7. தாவரப் பரவல் பிரதேசங்களில் சிற்றினங்களில் மாற்றங்கள் காணப்படுதல்.
 8. தாவரங்கள் தொடர்ந்து அழிந்து வருதல்,

 

18. நீர் பற்றாக்குறை தீர்வை ஆலோசித்து அதன் தன்மைகளை விளக்கவும்.
மழைநீர் சேகரிப்பின் பயன்கள்:

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்

 • மழைநீர் சேகரிப்பு நீர் பற்றாக்குறைக்கு இக்காலத்தில் முக்கியமான ஒரு சிறந்த தீர்வு ஆகும்.
 • தேவையான அளவு நிலத்தடி நீர்த் தேவை மற்றும் நீர் பாதுகாப்பிற்கு ஊக்குவிக்கின்றது.
 • வறட்சியின் கடுமையை மட்டுப்படுத்துகிறது.
 • பரப்பில் வழிந்தோடுவதைத் தடுப்பதால் மணி அரிப்பு குறைக்கப்படுகிறது.
 • வெள்ள அபாயத்தைக் குறைக்கிறது.
 • நிலத்தடி நீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் மேம் படுத்தப்படுகிறது. உவர்த்தன்மையை குறைக்கின்றது.
 • நீர் சேமிப்பின் போது நிலப்பரப்பு வீணாவ தில்லை மற்றும் மக்கள் இடப்பெயர்வும் தவிர்க்கப்படுகிறது.
 • நிலத்தடி நீர் சேமிப்பு ஒரு சிறப்பான சுற்றுச்சூழல் முறையாகும் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு பகுதியாகும்.

உகந்த நிலையான நீர் சேமிப்பு யுக்தியின் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான தீர்வு – ஒரு சுற்றுச்சூழல் பிரச்சனை

 • மழைநீர் வழிந்தோடுவதை அனுமதியாது மீண்டும் பயன்படுத்தும் விதத்தில் சேகரித்து, சேமித்து வைப்பது மழைநீர் சேகரிப்பு என்படும்.
 • நதிகள் மற்றும் மாடிக்கூரைகளிலிருந்து மழைநீர் சேகரிக்கப்பட்டு ஆழ்குழிகளுக்குத் திருப்பப் பட்டுச் சேமிக்கப்படுகிறது.
 • நீர் வழிந்து ஊடுருவிப் பள்ளங்களில் படுகிறது.
 • மழைநீர் சேகரிப்பு நகரப்பகுதிகளில் சேமிக்கப்மட்டுமல்லாமல் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மேலாண்மை வழிமுறையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.
 • இது வருங்காலங்களில் ஓர் முக்கிய, சிக்கனமான மற்றும் குறைந்த செலவுடைய முறையாக அமையும்.

 

19. புதிய காடுகள் தோற்றுவித்தலில் தனி ஆய்வுகள் குறித்து விளக்குக.
 • தாவரத்தொகுப்பை மீட்டெடுக்கச் சரியான தாவரங்களை ஏற்கனவே தாவரங்கள் இல்லாத பகுதியிலும் காடு அல்லாத நிலங்களிலும் தாவரங்கள் நடவு செய்தலே காடு வளர்ப்பு ஆகும்.
 • எ.கா: அணைகளின் சரிவுகளில் உருவாக்கப்படும் இக்காடுகளால் நீர் வழிந்தோடுதல் மண் அரிப்பு மண் படிதல் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும் கார்பன், நீர் சேமிப்பையும் அளிக்கிறது.
 • ஒரு தனி மனிதன் அடர்ந்த காட்டை உருவாக் கினார். ஜாதவ் “மோலாய்” பயேங் (1963 ஆம் ஆண்டு பிறந்தவர்) என்ற சுற்றுச் சூழல் ஆர்வலர் தனி மனிதனாக ஒரு வெற்று பயன்படாத நிலத்தின் மத்தியில் தாவரங்களை நடவு செய்து காட்டை உருவாக்கினார்.
 • இந்தியாவின் வன மனிதன் என்றழைக்கப்படும் இவர் இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திராவில் அமைந்துள்ள உலகத்தின் பெரிய ஆற்றுத் தீவான மஜீலியை அடர்ந்த காடுகளாக மாற்றியதன் விளைவாகக் காண்டா மிருகங்கள், மான்கள், யானைகள், புலிகள் மற்றும் பறவைகளின் புகலிடமாக இது விளங்குகிறது. இன்று இது மத்தியத் தோட்டத்தை விடப் பெரியது.
 • ஜவஹர்லால் நேரு பலகலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுதிர்குமார் சோபோரி என்பவரால் ஜாதவ் “மோலாய்ப் பாயேங் அக்டோபர் 2013 ஆண்டு இந்திய வன மனிதன் என்று அழைக்கப்பட்டார்.
 • வன இந்திய மேலாண்மை நிறுவனத்தின ஆண்டு நிகழ்வில் இவர் கௌரவிக்கப்பட்டார்.
 • 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய குடிமகள் விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

 

தமிழ்நாடு புதிய காடு வளர்ப்புத்திட்டம் (TAPI) Tamil Nadu Afforestation project (1997 2005)

 • வனப்பகுதி வாழ் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் பாதிக்கப்பட்ட காடுகளை மீட்டெடுத்தல்,(TAP II) குறிக்கோள்கள் :
 • தமிழ்நாட்டிலுள்ள வளம்சார் கிராமங்கள், நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் காடுகளின் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் சமநிலையை மறுசீரமைத்தல்,
 • காடுகளின் மீளுருவாக்கம் மூலம் மேம்படுத்த லாவன்
 1. அங்கு வசிப்பவர்களின் வாழ்க்கைத்தரம்
 2. நீர் பாதுகாப்பு
 3. தொடர் சமூகச் செயல்பாடுகள் ஆகியவையாகும்.

 

20. மீண்டும் காடுகள் உருவாக்குவதால் ஏற்படும் விளைவுகள் யாவை? மற்றும் வேளாண் காடு வளர்ப்பிள் நன்மைகள் யாவை?
 • ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் காற்றின் தரத்தை உயர்த்துதல்,
 • கார்பன் நிலைநிறுத்துதலை அதிகரித்தல் மற்றும் வளிமண்டல கார்பன்டை ஆக்ஸைடை குறைத்தல்,
 • சிறிய வனவளப் பொருட்கள் உற்பத்தி மற்றும் மருத்துவத் தாவரங்கள் அதிகரித்தல்,
 • உயிரிபன்மம், வன உயிரிகள் மற்றும் மரபணு மூலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 • வேளாண் காடுவளர்ப்பில் மரங்கள், பயிர்கள், கால நடைகள் ஒருங்கிணைக்கப்படுவதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதோடு இயற்கை வளம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் உயிஃபன்மம் பாதுகாக்கப்படுகிறது.

வேளாண் காடுகளின் நன்மைகள்:

 • மண் பிரச்சனையை தீர்ப்பதோடு நீர் சேகரிப்பு மற்றும் மண்ணின் நிலைப்புத்தன்மையை நிலை” நிறுத்துகிறது.
 • உயிரினங்களுக்கிடையான ஊட்டச்சுழற்சியை மேம்படுத்துகிறது.
 • ஒரே சீரான OyCO, சமநிலைப்படுத்துகிறது. பலநோக்கு பயனுடைய ‘அக்கேஷியா போன்ற மரவகைகள் மரக்கூழ், தோல் பதனிடுதல்,காகிதம் போன்ற விற்காகவும் பயன்படுகிறது. நிலங்களில் தோட்டத்தாவர வளர்ப்புக்கு பயன்
 • குறைந்தளவு மழை பெய்யும் வறண்ட நிலங் களுக்கு பொருத்தமானது.

Leave a Reply