12th Botany Unit 9 Lesson 8 Additional 5 Marks

12th Botany Unit 9 Lesson 8 Additional 5 Marks

TN 12th Bio-Botany Unit 9, 8th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 8 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8 . சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.

12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் – Book Back Answers

 

12th Botany Unit 9 Lesson 8 Book Back Answers

XVI. ஐந்து மதிப்பெண் வினாக்கள்
1.புவி வெப்பமடைதல் வரையறு. புவி வெப்பமடைதலுக்கான காரணங்கள் யாவை?
பசுமை இல்ல
1.புவிவெப்பமடைதல்

  • பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது புவியின் சராசரி வெப்பநிலையும் (உயர்கின்றது. அதிகபட்சம் 4000 வருடங்கள்) இது புவிவெப்பமடைதல் என அழைக்கப் படுகின்றது.

2.புவிவெப்பமடைதலுக்கான காரணம்:

  • பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உணவுப் பொருட்களின் உற்பத்தி நார் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் தேவையும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. இதுவே புவிவெப்பமடை தலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

3.பசுமை இல்ல வாயுக்கள்:

  • பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பால் வெபநிலை அதிகரிப்பதோடு, பருவநிலை மாற்றம், பெரும் சூழல் மண்டலங்கள் மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. வெப்பத்தினால் பெருமளவில் பாதிக்கப்படுவது பவளப்பாறைகள் அதிகம் நிறைந்த சூழல் மண்டலங்களாகும்.
  • எ.கா: பவளப் பாறைகள் வெளிர்தல் தமிழ் நாட்டில் மன்னார் வளைகுடா பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

4.பசுமை இல்ல விளைவை உண்டாக்கும் மனிதச் செயல்பாடுகள் :

  • தொல்லுயிர் படிம எரிபொருட்களை எரிக்கும் போது CO2 மற்றும் CH4 அதிகம் வெளிப் படுதல்.
  • வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற வற்றின் செயலமுறைகளில் மாற்றங்களை உண்டாக்குதல்.
  • குளிர்சாதனப் பெட்டி, காற்று குளிர்விப்பான்கள் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து குளோரோஃபுளோரோ கார்பன் (CFC) வெளியேறுதல்.
  • வேளாண் நிலங்களில் பயன்படுத்தப்படும் உரங்களில் இருந்து N2O வெளிப்படுதல்.தானியங்கி வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை.

2.பசுமை இல்ல வாயுக்களை வெளிவிடும் இயற்கை மற்றும் மனித இனம் மூலம் பற்றி எழுதுக. CO2 (கார்பன்-டை- ஆக்ஸைடு)

  • நிலக்கரியைச் சார்ந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில் தொல்லுயிர் படிம எரிப்பொருட்கள் எரிக்கப்படும் போது,
  • தானியங்கி வாகனங்கள், வணிக ஊர்திகள், வானூர்திகள் போன்றவற்றின் எரிப்பொருட்கள் எரிக்கப்படுவதால் புவி வெப்பமடைதல் அதிக ளவில் ஏற்படுகிறது.
  • வேளாண் நிலங்களில் அறுவடையின்போது எஞ்சி நிற்கும் அடிக்கட்டைப் பயிர்களை எரிப்பதாலும் COz வெளியேற்றப்படுகின்றது. கரிமப்பொருட்கள், எரிமலைகள், மித வெப்பக்கடல்கள் மற்றும் வீழ்படிவங்கள் மூலம் இயற்கை யாக உருவாதல்.

மீத்தேன் :

  • மீத்தேன், CO2-வைக் காட்டிலும் 20 மடங்கு வெப்பத்தை வளிமண்டலத்தில் கூட்டுகிறது.
  • நெல் பயிரிடல், கால்நடை வளர்ப்பு, நீர்நிலை களில் வாழும் பாக்டீரியங்கள் மற்றும் தொல்லுயிர் படிம எரிபொருட்களின் உற்பத்தி, கடல், ஈரத் தன்மையற்ற நிலம், காட்டுத்தீ வாயிலாக மீத்தேன் உருவாகிறது.

N2O (நைட்ரஸ் ஆக்ஸைட்) :

  • இயற்கையில் பெருங்கடல்களிலிருந்தும். மழைக்காடுகளிலிருந்தும் NO உருவாகிறது.
  • நைலான். நைட்ரிக் அமில உற்பத்தி, வேளாண் உரங்களைப் பயன்படுத்துதல், வினைவேக மாற்றிகள் பொருத்தப்பட்ட மகிழுந்துகளைப் பயன்படுத்துதல் மற்றும் கரிமப்பொருட்களை எரித்தல் போன்றவற்றின் மூலம் N2O செயற்கை யாக உருவாகிறது.

3.புவி வெப்பமாதலால் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள் யாவை? (அல்லது) புவிவெப்ப மாதலால் தாவரங்களில் மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் யாவை? புவி வெப்பமாதலால் தாவரங்களில் ஏற்படும்

விளைவுகள் : 
  1. வெப்பமண்டலப் பிரதேசங்களில் உணவு உற்பத்தி குறைதல்,
  2. வளிமண்டலத்தில் அதிகளவில் வெப்பக்கதிர்கள் (heat waves) வீசுதல் (களைகள், பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளுக்கு அதிக வெப்பம் தேவைப்படுகிறது.)
  3. நோய் கடத்திகள் மற்றும் தொற்றுநோய்கள் அதிகம் பரவுதல்.
  4. பலத்த சூறாவளிக்காற்றும், கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்படுதல்.
  5. தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் நீர்ப்பாசனக் குறைபாடு.
  6. பூக்கள் தோன்றும் காலங்கள் மற்றும் மகரந்தச் சேர்ப்பிகளில் மாற்றங்கள் நிகழ்தல்.
  7. தாவரப் பரவல் பிரதேசங்களின் சிற்றினங்களில் மாற்றங்கள் காணப்படுதல்.
  8. தாவரங்கள் அழிந்து வருதல்.

4.சில தாவரங்களின் இருப்பு அல்லது இல்லாமை எங்கு நிலவும் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்தில் காணப்படும்? இது எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

தாவர சுட்டிக்காட்டிகள்:
  • சில தாவரங்களின் இருப்பு அல்லது இல்லாமை அங்கு நிலவும் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்தில் காணப்படும். தனித்தாவர சிற்றினமோ அல்லது தாவரத் தொகுப்போ சூழல் நிலைகளைக் கண்டு அளவிட உதவுகின்றன. அவை உயிரிச்சுட்டிக்காட்டிகள் அல்லது தாவர சுட்டிக்காட்டிகள் எனப்படும், உதாரணமாக,

தாவரங்கள்

  1. லைக்கன்கள், ஃபைகஸ், பீனுஸ், ரோஜா.
  2. பெட்டுனியா, க்ரைசாந்திமம்.
  3. க்ளேடியோலஸ்
  4. ரொபீனியா சூடோஅகேசியா

குறிகாட்டுவது 

 

  1. (சல்ஃபர்-டை-ஆக்ஸைடு சுட்டிக்காட்டிகள்
  2. நைட்ரேட் குறிகாட்டி சுட்டிக்காட்டி
  3. ஃப்ளூரைட் மாசுபாடு சுட்டிக்காட்டி
  4. கன உலோகத் தூய்மைக்கேட்டை சுட்டிக்காட்டும்.

5.ஒசோன் அடுக்கு குறைந்து வரும் நிலையில் U-V கதிரியக்கம் சூரியனிலிருந்து பூமியை வந்தடைந்து சேதங்களை உயிரிகளில் ஏற்படுத்துகிறது. ஒசோன் குறைதலின் விளைவுகள் எவை என்று கூறு.

  1. கண்ணில் புரை உண்டாதல், தோல் புற்றுநோய் அதிகளவில் தோன்றுதல், மனிதனின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துவிடுதல்.
  2. இளமைக்காலங்களிலேயே விலங்கினங்கள் மடிந்து போதல்.
  3. சடுதி மாற்றங்கள் அடிக்கடி ஏற்படுதல்,
  4. ஒளிச்சேர்க்கை வேதிப்பொருட்கள் பாதிக்கப் பட்டு அதன் மூலம் தாவரங்களின் ஒளிச்சேர்க்கை தடைப்படுகிறது. ஒளிச்சேர்க்கை அளவு குறைந்து வரும் வேளையில் உணவு உற்பத்தி குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும். மேலும் வளிமண்டலத்தில் CO2 அளவு அதிகரித்துப் புவி வெப்பமடையும்.
  5. வெப்பநிலை அதிகரிக்கும் போது வானிலை, மழைப்பொழிவு போன்ற காலநிலையில் மாற்றம் ஏற்படும். இதன் விளைவால் வெள்ளப்பெருக்கு. வறட்சி, கடல்மட்டம் உயர்தல் போன்றவை ஏற்படும். சூழல் மண்டலங்கள் நடுநிலைத் தன்மை இழந்து தாவரங்களும், விலங்குகளும் பாதிப்பிற்குள்ளாகும்.
6. ஓசோன் பற்றி ஒரு கட்டுரை வரைக.

  1. ஓசோன் அடுக்கு புவியின் மீவெளிமண்டல அடுக்கின் (stratosphere) ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இது சூரியனிடமிருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களைப் பெருமளவில் கவர்ந்து கொள்கிறது. இதனால் இவ்வடுக்கினை ஓசோன் கவசம் (Ozone Shield) என்றும் அழைக்கலாம். இவ்வடுக்கப் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்திப் புவியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாக்கும் அடுக்காக விளங்குகிறது.
  2. வளிமண்டலத்தின் மேற்பகுதியில் இரண்டு அடுக்குகள் காணப்படுகின்றன. அவையாவன அடிவளி மண்டலம் (troposphere) (கீழ்டுக்கு) மற்றும் மீவளிமண்டலம் (stratosphere) (மேலடுக்கு) அடிவளி மண்டலப் பகுதியில் காணக்கூடிய ஓசோன் படலம் பயனற்றதாகும். (bad one) அதே சமயம் மேலடுக்கில் காணப் படும் ஓசோன படலம் நனிமைத்தரும் அடுக்காகும். (good ozone). ஓசோன் அடுக்கின் தடிமண் டாப்ஸன் அலகுகளால் (Dobson Units) அளவிடப்படுகின்றன. இதன் மூலம் புவிப் பரப்பிலிருந்து வளிமண்டலத்தின் வெளிப்பகுதி வரையிலும் காற்றில் கலந்துள்ள ஓசோன் படலத்தை அளவிட முடியும்.
  3. சில வகையான வேதிப் பொருட்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் போது ஓசோன் படலம் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகிறது. குறிப்பாக, குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து வெளியேறும் குளோரோஃ புளோரோ கார்பன், ஏரோசால், தொழிற்சாலை களில் அழுக்கு நீக்கம் வேதிப் பொருட்கள் போன்றவை இத்தகைய பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. ஓசோன் அடுக்கின் அடர்வு வெகுவாகக் குறைந்து காணப்படும் பகுதிகள் அபாயகரமான பகுதியாகக் கண்டறியப்பட்டு அப்பகுதியை ஒசோன் துளை (Ozone hole) என அழைக்கப்படுகின்றன.
  4. செப்டம்பர் 16 – உலக ஓசோன் தினம், UV B உயிர் மூலக்கூறுகளையும், உயிர்ச் செல்களையும் அழிக்கின்றன. (தோல் மூப்படைதல்). UV கதிரி யக்கம் தோலின் நிறமாற்றம், தோல் கருகுதல் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவற்றைத் தூண்டவும் காரணமாகிறது.
  5. 1970 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் மனிதன் வாயிலாக வெளியிடப்படும் குளோரோஃபுளோரோ கார்பன் (CFC) ஒசோன் மூலக்கூறுகளை அதிகளவில் சிதைத்து வளிமண்டலத்தின் ஒசோன் அளவை வெகுவாகக் குறைத்துவிடுவது கண்டறியப்பட்டது.
  6. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட வியன்னா கூட்டத்தில் ஆக்கப்பூர்வமான ஒழுங்கு நடைமுறைகள் ஒப்பந்தம் (உடன்படிக்கைகள்) வகுக்கப்பட்டது. பிற்காலத்தில் இந்தச் செயல் முறைகள் அனைத்தும் சர்வதேச அளவிலான மான்ட்ரியில் ஒப்பத்தம் (உடன்படிக்கை) (Montreal Protocol) என அழைக்கப்பட்டது.
  7. தூய்மை மேம்பாடு செயல்திட்டம் (Clean Development Mechanism – CDM) க்யோட்டோ ஒப்பந்தம் / உடன்படிக்கை (Kyoto Protocol) (2007) எனவும் இதனை வரையறுக் கலாம்.
7.புதிய காடு வளர்ப்பின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள் அடைவுகள் (அல்லது) சாதனைகள் யாவை?
புதிய காடு வளர்ப்பின் நோக்கங்கள்:

  • காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், அதிக மரங்களை நடவு செய்தல், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் காற்றின் தரத்தை உயர்த்துதல்,
  • வளங்குன்றிய காடுகளைப் புனரமைப்பதனால் கார்பன் நிலைநிறுத்துதலை அதிகரித்தல் மற்றும் வளிமண்டலக் கார்பன்-டை-ஆக்ஸைடை குறைத்தல்
  • மூங்கில் தோட்டங்களை வளர்த்தல்.
  • சிறிய வனவளப் பொருட்கள் உற்பத்தி மற்றும் A மருத்துவத் தாவரங்களை நடவு செய்தல்.
  • உள்ளூர் சிறு செடி / புதர்ச் செடிகளை மீளுரு வாக்குதல். நீர்மட்டம் அல்லது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், மண்ணில் நைட்ரஜன் வழிந்தோடுதலையும், குடிநீரில் நைட்ரஜன் கலப்பதையும் குறைத்தல், அதன் காரணமாக நைட்ரஜன் மாசற்ற தூய நீர் உருவாதல்.
  • இயற்கையின் துணை கொண்டு செயற்கை மீளுருவாக்கம் சாத்தியமாகிறது.

குறிக்கோள் அடைவுகள் / சாதனைகள் 

  • சிதைவுற்ற காடுகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
  • சமூகச் சொத்துக்களான மேல்நிலை தொட்டிகள். ஆழ்துளை கிணறுகள், கை பம்புகள், சமுதாயக் கூடங்கள், நூலகங்கள் முதலியன நிறுவப்பட்டு உள்ளது.
  • சுற்றுச்சூழ்நிலையியல் மற்றும் சூழலியல் நிலைப்புத் தன்மை பராமரிக்கப்பட்டுள்ளது. உயிரிபன்மம், வன உயிரிகள் மற்றும் மரபணு மூலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. காடு மேலாண்மையில் சமூக ஈடுபாடு குறிப்பாகப் பெண்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.

8.உயிரிப்பன்மப் பாதுகாப்பு இயக்கம் என்றால் என்ன?

பாதுகாப்பு இயக்கம் :

  • ஒரு சமூக நிலையிலான பங்களிப்பு நமது சுற்றுச்சூழலின் பேணுகை மற்றும் பாதுகாப்பிற்கு உதவுகிறது.
  • பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நம்முடைய சுற்றுச்சூழல் ஒரு பொதுவான பொக்கிஷமாகும். ஒவ்வொரு தனி நபரும் இது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் உள்ளூர் சூழலைப் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும்.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காகப் பல மக்கள் இயக்கங்களை இந்திய வரலாறு கண்டிருக்கிறது.

சிப்கோ இயக்கம் :

  • 1972ஆம் ஆண்டு இமயமலை பகுதியிலுள்ள பழங்குடி பெண்கள் காடுகள் சுரண்டம் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 1974 – ஆம் ஆண்டு சாமோலி மாவட்டத்திலுள்ள மண்டல் கிராமத்தில் சுந்தர்லால் பகுகுனா என்பவரால் இது சிப்கோ இயக்கம் என மாற்றப்பட்டது.
  • ஒரு விளையாட்டுப் பொருள் தயாரிப்பு நிறுவனம் மரங்களை வெட்டுவதற்கு எதிராக மரங்களை ஒன்றாகக் கட்டித்தழுவி மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

முக்கிய அம்சங்கள் :

  • இந்த இயக்கம் அரசியல் சார்பற்றது.
  • இது காந்தியச் சிந்தனைகள் அடிப்படையிலான தன்னார்வ இயக்கமாகும். சிப்கோ இயக்கத்தின் பிரதான நோக்கங்களான உணவு, தீவனம், எரிபொருள், நார் மற்றும் உரம் ஆகிய ஐந்து முழக்கங்கள் (Five F’s Food, Fodder, Fuel, Fibre and Fertilizer) மூலம் தங்கள் அடிப்படை தேவைகளுக்கான தன்னிறைவை ஏற்படுத்துவதாகும்.

அப்பிக்கோ இயக்கம்

  • இமயமலையிலுள்ள உத்தரகாண்டில் புகழ்பெற்ற சிப்கோ இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு உத்தரக் கர்நாடகாவின் கிராமவாசிகள் தங்களுடைய காடுகளைக் காப்பற்றுவதற்காக இதே போன்ற இயக்கத்தினைத் தொடங்கினார்கள்,
  • இந்த இயக்கம் கர்நாடகாவில் சிர்சிக்கு அருகிலுள்ள குப்பிகட்டே என்ற ஒரு சிறிய கிராமத்தில் பாண்டுரங்க ஹெக்டேவினால் தொடங்கப்பட்டது.
  • இந்த இயக்கம் மரங்களை வெட்டுதல், ஒற்றைச் சிற்றின் வளர்ப்பு வனக்கொள்கை, காடு அழிப்பு ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கியது.

9.இடவரைமையங்கள் மற்றும் இடவரை தாவரங்கள் பற்றி எழுதுக. 

  1. ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மட்டும் காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இடவரை சிற்றினங்கள் எனப்படுகின்றன.
  2. இதற்குத் தனிமைப்படுத்தல், சிற்றினங்களுக்கு இடையேயான இடைச்செயல்கள், விதை பரவுதலில் சிக்கல்கள், ஒரு குறிப்பிட்ட இடம் தள விசேடத்துவம் மற்றும் பல சுற்றுச்சூழல் மற்றும் சூழ்நிலையியல் பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களாக இருக்கலாம்.
  3. மூன்று பெரிய இடவரை மையங்கள் மற்றும் 27 நுண்ணிய இடவரை மையங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இடவரைத் தாவர இனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
  4. இந்திய இமயமலை. தீபகற்ப இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பரவிக் காணப்படுகின்றன.
  5. ஃபோயேஸி, ஏப்பியேஸி, ஆஸ்ட்ரேஸி மற்றும் ஆர்க்கிடேஸி குடும்பத்தைச் சார்ந்த சிறு செடிகளே அதிகச் சதவீதத்தில் காணப்படும் இடவரை தாவரங்களாகும்.

 

இடவரைத் தாவரங்கள்

  • பக்காரியா குற்றாலன்சிஸ்
  • அகஸ்தியமலைய்யா பாசிஃப்ளோரா
  • ஹார்ட்விக்கியா பைனேட்டா
  • பென்டிக்கியா கொண்டப்பனா
  • நெப்பந்தஸ் காசியானா

வளரியல்பு

  • மரம்
  • மரம்
  • மரம்
  • மரம்
  • வன்கொடி

இடவரை மையம்

  • மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதி
  • தீபகற்ப இந்தியா
  • தீபகற்பம் மற்றும் வட இந்தியா பகுதி
  • தமிழ்நாடு மற்றும் கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள்
  • காசி மலைகள் மற்றும் மேகாலயா.

10. புவிவெப்பமாதலை குறைக்க இரண்டு கார்பன் சேமிப்பு முறைகளை பற்றி எழுதுக.

  • கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு என்பது வளிமண்டலத்தின் கார்பன்-டை-ஆக்ஸைடை உயிரிதொழில்நுட்பம் மூலமாகக் கைப்பற்றி ஒரு கிலோமீட்டர் அல்லது அதற்குக் கீழான ஆழத்தில் உள்ள நிலத்தடிப் பாறைகளுக் கிடையே உட்செலுத்திச் சேமிக்கும் முறையாகும்.
  • புவிவெப்பமாதலை மட்டுப்படுத்தும் ஓர் அணுகு முறையாகும்.
  • நிலைத்த சேமிப்பிற்காகப் பல பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பெருங்கடல்களில், திரவச் சேமிப்பாகவும். உலோக ஆக்ஸைடைப் பயன்படுத்திக் கார்பன்-டை -ஆக்ஸைடை குறைத்தல் மூலம் திடமான கார்பனேட்டாக மாற்றி உலர் அல்லது திடச் சேமிப்பாகவும் சேமித்து வைக்கப்படுகிறது. இது புவியியல் சேகரிப்பு என்றும் அறியப்படுகிறது.

கார்பன் சேகரிப்பு :

  • கார்பன் சேகரிப்பு என்பது வளிமண்டலக் கரியமிலவாயுவைக் குறைக்கும் நோக்கில் வளிக் கார்பனைப் பிரித்தெடுத்துச் சேமிக்கும் ஒரு செயல்முறையாகும்.
  • தாவரங்களிலும், கடலிலும் இயற்கையாகவே கார்பன் சேகரிப்பு நிகழ்கிறது. வன மற்றும் மண் பாதுகாப்பு செயல்முறைகள் கார்பன் சேகரிப்பை அதிகரிப்பதன் மூலம் நிலக்கார்பன் சேகரிப்பு மற்றும் சேமிப்பைப் பொதுவாக நிறைவடையச் செய்கின்றன.
  • எடுத்துக்காட்டாக நுண் பாசிகளின் சிற்றினங் களான குளோரெல்லா, செனிடெஸ்மஸ்,க்ரூக்காக்கஸ் மற்றும் கிளாமிடோமோனாஸ் உலகமெங்கும் கரியமில வாயுவின் கார்பனைச் சேகரிப்பதற்கு உதவிப்புரிகின்றன.
  • கடற்பெரும்பாசிகள், கடற்புற்கள் மற்றும் சதுப்புநிலக் காடுகளும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த அதிகத் திறன் பெற்றுள்ளன.
11. கார்பன் வழித்தடம் என்றால் என்ன? கார்பன் வழித்தடத்தை எவ்வாறு குறைக்கலாம்?
கார்பன் வழித்தடம்:

  • மனிதனின் ஒவ்வொரு செயலும் நம் காலடிச் சுவடு போல் ஓர் தடத்தினைத் தோற்று விக்கின்றன. விவசாயம், தொழிற் சாலைகள், காடழிப்பு, கழிவுநீக்கம், தொல்படிவ எரி பொருளை எரித்தல் போன்ற மானுட நடவடிக்கைகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பசுமை இல்ல வாயுப்பொருட்களை மொத்தமாக உருவாக்குதல் “கார்பன் வழித்தடம்’ எனப்படுகிறது.
  • கார்பன் வழித்தடத்தினைக் குறைக்கக் கீழ்க்காணும் முறைகளைப் பின்பற்றலாம். உள் நாட்டில் விளையும் கனிகள் மற்றும் உற்பத்தி யாகும் பொருட்களை உண்ணுதல்.
  • மின்னணு சாதனங்களின் பயன்பாட்டைக் குறைத்தல்,
  • பயணங்களைக் குறைத்தல்.
  • துரித மற்றும் பாதுகாக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, பெட்டியிலிடப்பட்ட உணவுப் பொருட் களைத் தவிர்த்தல்.
  • தோட்டங்களை உருவாக்குதல்.
  • இறைச்சி மற்றும் கடல் உணவுகள் உட்கொள் வதைக் குறைத்தல், கோழி வளர்ப்பு கால்நடை வளர்ப்பைவிடக் குறைந்த அளவு வளர் இடத் தினையும், ஊட்டப்பொருட்கள் தேவை மற்றும் குறைவான மாசுபாட்டினை ஏற்படுத்துகிறது.
  • மடிக்கணினி பயன்பாட்டினைக் குறைத்தல், (8 மணி நேரப் பயன்பாடு 2 கி.கிராம் அளவு கரியமில வாயுவினை ஒரு வருடத்தில் வெளி யிடுகிறது)
  • துணிகளைக் கொடிகளில் உலர்த்துதல் ஆகியவற்றின் மூலம் குறைக்கலாம். (எடுத்துக் காட்டாக ‘கிவி’ போன்ற இறக்குமதி செய்யப் பட்ட பழங்களை வாங்கினால், அது மறை முகமாகக் கார்பன் வழித்தடத்தை ஊக்குவித்த லாகும்.

12. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் இதனால் சமூகத்திற்கு ஏற்படும் பயன்கள் பற்றி எழுதுக. 

  1. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்பது சுற்றுச்சூழல் மேலாண்மையின் ஒரு உபாயமாகும்.
  2. சூழல் மண்டலம் மற்றும் உயிரியல் சமுதாயங்கள் மீது ஏற்படுத்தப்படும் தாக்கத்தை வெகுவாகக் குறைக்கவும், இயற்கை வளங்களை உகந்த அளவு பயன்படுத்தவும், கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்க உதவி புரிகிறது.
  3. வருங்கால நிதிசார் வளர்ச்சித் திட்டங்கள். அணைக்கட்டுகள், நெடுஞ்சாலைத் திட்டங்கள், முன்மொழியப்பட்ட வளர்ச்சித் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகளை முன்னரே கணிக்கப் பயன்படுகிறது.
  4. பிராந்தியச் சூழ்நிலைகளுக்கேற்றவாறு சுற்றுச் சூழல் தாக்கத்தினைக் குறைக்கவும், உறுதி யான சுற்றுச்சூழல் சீரழிவினைத் தவிர்க்கவும். கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கும் இயற்கை ஆதாரங்களை உகந்த அளவு பயன்படுத்தவும் வழிவகுக்கின்றது.

சமூகத்திற்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டினால் ஏற்படும் பயன்கள்

  • ஓர் ஆரோக்கியமான சுற்றுச்சூழல்
  • உயிரிப்பன்மத் குப்பினைப் பராமரித்தல்
  • குறைந்தளவு வளங்களின் பயன்பாடு
  • குறைந்த அளவு வாயு வெளியேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சேதம், ஆகிய பயன்கள் ஏற்படு கின்றன.

13.உயிரிப்பன்மத் தாக்க மதிப்பீடு என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

  • உயிரிப்பன்மத் தாக்க மதிப்பீடு வளர்ச்சி, திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலுக்கும், முடிவுகளுக்கும் உதவும் ஒரு கருவியாகும். இது வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதியளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

2. உயிரிப்பன்மத் தாக்க மதிப்பீட்டு பயன்கள்:

  • நிலமாற்றம் மற்றும் பயன்பாட்டு காப்பதிலும்
  • நிலத் துண்டாக்குதல் மற்றும் தனிமைப்படுத்து தலும்
  • வளங்கள் பிரித்தெடுத்தல்
  • புகை வெளியேற்றம், கழிவுகள், வேதி பொருட்கள், புற உள்ளீடு செய்யவும்
  • மரபு மாற்றப்பட்ட சிற்றினங்கள், அந்நிய மற்றும் ஆக்கிரமிப்பு சிற்றினங்களை அறிமுகப் படுத்துதல்
  • இடவரை மற்றும் அச்சுறுத்தலுக்குட்படும் தாவர மற்றும் விலங்கினங்களின் மீது ஏற்படும் தாக்கம் ஆகியவற்றிற்கு உதவுகின்றன.
14.புவியியல்சார் தகவல அமைப்புகள் என்றால் என்ன? அவற்றின் முக்கியத்துவம் யாது? 
  1. புவிப்பரப்பின் மீதுள்ள அமைப்பு சார்ந்த தகவல்களை (GIS) படம்பிடிக்க, சேமிக்க, சோதிக்க மற்றும் காட்சிப்படுத்த உதவும் தகவல்சார் கணினிசார் ஓர் அமைப்பாகும். மேலும் புவிசார்ந்த தகவல், புவி மற்றும் வான்சார் தகவல்கள் அளிக்கவும், திறம்படக் கையாள் வதற்கும், பகுத்தறிதலுக்கும், நிர்வகிக்கவும் உதவுகிறது.
  2. பூமிப்பரப்பின் மீதுள்ள ஒரு பொருளின் நிலையை நிர்ணயிக்க உதவும் செயற்கைக்கோள் வழிகாட்டும் ஓர் அமைப்பாகும்.
  3. புவியின் மீதுள்ள ஓர் அமைவிடத்தை மக்கள் துல்லியமாகக் கண்டுணரப் பயன்படும் சம இடைவெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பூமியின் மீது சுற்றிவரும் நட்சத்திரக் கூட்டம் போன்ற 30 செயற்கைக்கோள்கள் ஒருங்கமைந்த கூட்டமைப்பாகும்.
புவியியல்சார் தகவல் அமைப்புகளின் முக்கியத்துவம் :

  • சூழல் தாக்க மதிப்பீடு,
  • இயற்கை சீற்றம் மேலாண்மை, நிலச்சரிவு அபாயங்கள் வரையறுக்க,
  • நிலப்பரப்பு மற்றும் பயன்பாடு தீர்மானிக்க, வெள்ள அபாயப் பாதிப்புகளை மதிப்பிட,
  • இயற்கை வளங்களை மேலாண்மை செய்ய,
  • மண் வரைபடம் உருவாக்க,
  • ஈரநில வரைபடத் தயாரிப்பு.
  • நீர்பாசன மேலாண்மை மற்றும் எரிமலை அபாயங்களை கண்டறிய,
  • அச்சுறுத்தலுக்குட்பட்ட மற்றும் இடவரை சிற்றினங்கள் மேலும் தாவரக் கூட்டங்களின் வரைபடம் தயாரிக்கவும் பயன்படுகிறது.

15.தொலை உணரி என்றால் என்ன? அதன் சிறப்புப் பயன்கள் யாவை? 

தொலை உணரி

  1. தொலை உணரி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் இயற்பியப் பண்புகளை கண்டுபிடிக்கவும் மற்றும் கண்காணிக்கவும் உதவும் ஒரு செயல்முறையாகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து கதிரியக்க உமிழ்வு மறுப்பிரதிபலித்தலைத் தொலைவிலிருந்து குறிப்பிட்ட இடத்தை அளவிட உதவுகிறது. ஒரு தனி மரம் முதல் பெரிய தாவரத்தொகுப்பு மற்றும் வன உயிரிகளைப் பாதுகாக்கின்ற செயல் முறைகளின் சரியான படக்குறிப்பு மற்றும் தகவல்கள் மூலம் கண்டறிதல் கருவியாகும்.

சிறப்பு பயன்கள்

  1. விரும்பத்தக்க சூழலை நிர்ணயிக்கவும், நோய் பரவுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் முதலியவற்றை அறிய உதவுகிறது.
  2. வனத்தீ மற்றும் சிற்றினப் பரவலை வரைபடமாக்கப் பயன்படுகிறது. கடலடிமட்டம் மற்றும் அவற்றின் வளங்களையும் படமிடப் பயன்படுகிறது.
செயற்கைக்கோள்களின் பயன்பாடுகள்
செயற்கைக்கோள்களின் பெயர்

5.SCATSAT -I
6.INSAT – 3DR
7.CARTOSAT – 2
8.GSAT – 6A
9.CARTOSAT – 2 (நூறாவது செயற்கைக்கோள்)

ஏவப்பட்ட ஆண்டு
5.செப்டம்பர் 2016
6.செப்டம்பர் 2016
7.சனவரி 2018
8.மார்ச் 2018
9.சனவரி 2018
பயன்பாடு
5.காலநிலை முன்னறிவிப்பு, புயல் கணிப்பு மற்றும் இந்தியாவில் கணிப்பு சேவை
6.இயற்கைச்சீற்ற மேலாண்மை
7.புவி உற்றுநோக்கல்
8.தகவல் தொடர்பு
9.எல்லைப் பாதுகாப்பை கண்காணிக்க

Leave a Reply