12th bio botany unit 7 book back answers

12th Botany Unit 7 Book Back Answers

12th Bio-Botany Unit 7 Book Back Answers

12th Standard Bio-Botany Unit 7 Lesson 2 Bool Back Question and Answers Tamil Medium.  +2 Samacheer kalvi guide Tamil Medium Bio Botany Unit 7 Full Guide. Student Guide 360 already update Bio Botany Unit 1 Lesson 1 Book Back and Addition question and answers. HSC 12th Botany Important or Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks with Answers. 12th Bio-Botany unit 6, Lesson 1. தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் Additional Five Marks Q&A. www.studentsguide360.com All Important Notes, Guide Book Answers because Free Students Guide 360. We help poor students because Education is More Power full to the students And we love Teaching.

12th Bio-Botany | Botany பாரம்பரிய மரபியல் Book Back Question and answers

12th Bio Botany பாரம்பரிய மரபியல் Unit 7 Lesso 2

Book Back One Mark Question and Answers.

1. மரபுசாராப் பாரம்பரியம் வரிசையில் காணப்படும் மரபணுக்களைக் கொண்டது

அ) மைட்டோகாண்ட்ரியா மற்றும் பசுங்கணிகங்கள் ஆ) எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும்

மைட்டோகாண்ட்ரியா

இ) ரிபோசோம்கள் மற்றும் பசுங்கணிகம்

ஈ) லைசோசோம்கள் மற்றும் ரிபோசோம்கள்

விடை : அ) மைட்டோகாண்ட்டிரியா மற்றும் பசுங்கணிகங்கள்

2. AaBb மரபணு வகையம் கொண்ட பட்டாணித் கண்டறிய, இதனுடன் கலப்புற செய்ய வேண்டிய தாவர மரபணு வகையமானது தாவரத்தின் பல்வேறு வகையான கேமீட்களை

அ) aaBB

இ) AABB

ஆ) AaBB

ஈ) aabb

விடை : ஈ) aabb

3. மரபணு வகையம் AABbCCயைக் கொண்ட தாவரம் எத்தனை வகையான கேமீட்களைஉருவாக்கும்?

அ) மூன்று

இ) ஒன்பது

ஆ) நான்கு

ஈ) இரண்டு

விடை : ஈ) இரண்டு7

4. பின்வருவனவற்றுள் எது பல்கூட்டு திற்கு உதாரணமாகும்?

அ) மிராபிலஸ் ஜலாபா மலரின் நிறம்

ஆ) ஆண் தேனீ உற்பத்தி

இ) தோட்டப் பட்டாணியின் விதைக்கனியின் வடிவம்

ஈ) மனிதர்களின் தோல் நிறம்

விடை : ஈ) மனிதர்களின் தோல் நிறம்

5. தோட்டப் பட்டாணியில் மெண்டல் மேற்கொண்ட ஆய்வில், உருண்டை வடிவ விதை (RR), சுருங்கிய விதைகள் (rr)க்கு ஓங்கியும், மஞ்சள்விதையிலை யானது (YY) பசுமையான விதையிலைக்கு (yy) ஓங்கியும் காணப்படின் இரண்டாம் தலைமுறை Fzயில் எதிர்பார்க்கப்படும் RRYY × rryy புறத் தோற்றம் யாது?

அ) உருண்டை விதைவுடன் பச்சை விதையிலைகள் மட்டும்

ஆ) சுருங்கிய விதைகளுடன் மஞ்சள் விதையிலைகள் மட்டும்

இ) சுருங்கிய விதைகளுடன் பச்சை விதையிலைகள் மட்டும்

ஈ) உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதை யிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடியமஞ்சள் விதையிலைகளைக் கொண்டிருக்கும்

விடை : ஈ) உருண்டை விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலை மற்றும் சுருங்கிய விதைகளுடன் கூடிய மஞ்சள் விதையிலைகளைக் கொண்டு இருக்கும்

6. சோதனைக் கலப்பு உள்ளடக்கியது

அ) இரு மரபணுவாக்கங்கள் ஒடுங்கிய பண்புடன் கலப்புறுதல்

ஆ) F1 கலப்பினங்களிடையே நடைபெறும் கலப்பு

இ) F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகை யம் கொண்டவைகளின் கலப்பு

ஈ) இரு மரபணுவாக்க வகையங்களுடன் ஓங்கு பண்பு கலப்பு

விடை: இ) F1 கலப்புயிரியுடன் இரு ஒடுங்கு மரபணுவகையம் கொண்டவைகளின் கலப்பு

7. பட்டாணித் தாவரத்தில் மஞ்சள் நிற விதைகள், பச்சை நிற விதைகளுக்கு ஓங்குத்தன்மையுடனும், கலப்புயிரி மஞ்சள் நிற விதைத்தாவரம் பச்சை நிற விதை கொண்ட தாவரத்துடன் கலப்பு மேற் கொள்ளும் பட்சத்தில் மஞ்சள் மற்றும் பச்சை நிற விதைகள் கொண்ட தாவரங்கள் முதலாம் சந்ததி யில் (Fz) எவ்விகிதத்தில் கிடைக்கப்பெறும்?

அ) 9:1

ஆ) 1:3

இ) 3:1

ஈ) 50:50

விடை : ஈ) 50:50

8. ஒரு தாவரத்தில் மரபணுவாக்க விகிதம் ஓங்கு பண்புடைய புறத்தோற்றத்தினைத் தோற்றுவிக்கு மேயானால் அது

அ) பிற்கலப்பு

இ) இருபண்புக் கலப்பு

ஆ) சோதனைக்கலப்பு

ஈ) சந்ததி வழித்தொடர் ஆய்வு

விடை : ஆ) சோதனைக்கலப்பு

9. இருபண்புக் கலப்பை பொறுத்தமட்டில் கீழ்க்காணும் சரியான கூற்றைத் தேர்ந்தெடு

அ) ஒரே குரோமோசோமில் இறுக்கமாக பிணைப்புற்றுக் காணப்படும் மரபணுக்களினால் தோன்றும் ஒரு சில இணைப்புகள்

ஆ) ஒரே குரோமோசோமில் இறுக்கமாக பிணைப் புற்றுக் காணப்படும் மரபணுக்களினால் தோன்றும் அதிகமான பிணைப்புகள்

இ) ஒரே குரோமோசோமில் அதிக தொலைவிலுள்ள மரபணுக்களால் தோன்றும் வெகுசில மறு இணைப்புகள் ருக்கும் மரபணுக்கள் இறுக்கமாக பிணைப்புற்றி ருக்கும் மரபணுக்களை போன்றே மறு இணைவு கொண்டிருப்பது

ஈ) ஒரே குரோமோசோமில் தளர்வாக பிணைப்புற்றி

விடை : அ) ஒரே குரோமோசோமில் இறுக்கமாக பிணைப்புற்றுக் காணப்படும் மரபணுக்களினால் தோன்றும் ஒரு சில இணைப்புகள

10. மெண்டலின் காலத்தில் எந்தச் சோதனையில் F1 சந்ததியின் இரு பெற்றோரின் பண்புகளையும் வெளிப்படுத்தும்?

அ) முழுமைபெறா ஓங்குத்தன்மை

ஆ) ஓங்கு வழி

இ) ஒரு மரபணுவின் பாரம்பரியம்

ஈ) இணை ஓங்குத்தன்மை

விடை : ஈ) இணைஒங்குத்தன்மை

11. வெள்ளரியின் கனி நிறம் இதற்கு உதாரணமாகும்?

அ) ஒடுங்கிய மறைத்தல்

ஆ) ஓங்கிய மறைத்தல்

இ) நிரப்பு மரபணுக்கள்

ஈ) தடை ஏற்படுத்தும் மரபணுக்கள்

விடை : ஆ) ஓங்கிய மறைத்தல்

12. பாரம்பரிய பட்டாணித் தாவரச் சோதனைகளில் மெண்டல் எதைப் பயன்படுத்தவில்லை?

அ) மலரின் அமைவிடம்

ஆ) விதையின் நிறம்

இ) கனியின் நீளம்

ஈ) விதையின் வடிவம்

விடை : இ) கனியின் நீளம்

13. இரு பண்புக்கலப்பு 9:3:3:1 இடைப்பட்ட AaBbAabb என்று மாறுபாடடைந்த ஓங்கிய மறைத்தல் விளைவானது

அ) இரு அமைவிடத்திலுள்ள ஒரு அல்லீல் மற்றொரு அல்லீலை விட ஓங்குதன்மை கொண்டதாக உள்ளது.

ஆ) இரு வேறுபட்ட அமைவிடத்தில் இரு அல்லீல்களின் இடையேயான இடைச்செயல்கள்

இ) ஒரே அமைவிடத்தில் அமைந்துள்ள ஒரு அல்லீல் மற்றொரு அல்லீலை விட ஓங்குதன்மை உடைய தாக உள்ளது

ஈ) அல்லீல்களின் இடைச்செயல்களுக்கு இடையே ஒரே அமைவிடத்தில் நிகழ்வது

விடை : ஆ) இரு வேறுபட்ட அமைவிடத்தில் இரு அல்லீல்களின் இடையேயான இடைச்செயல்கள்

14. சோதனைக் கலப்பின் இரு பண்புக் கலப்பிலி ஈடுபடும் முதல் மகவுச்சந்ததிகளில் அதிகம் பெற்றோரிய சந்ததிகள் மறுசேர்க்கையின் மூலம்உருவாக்கப்படுவது இது எதைக் குறிக்கிறது?

அ) இரு வேறுபட்டக் குரோமோசோம்களில் காணப் படும் இரு மரபணுக்கள்

ஆ) குன்றல்பகுப்பின் போது பிரிவுறாக் குரோமோ சோம்கள்

இ) ஒரே குரோமோசோமில் காணப்படும் பிணைப்புற்ற இரு மாபணுக்கள்

ஈ) இரு பண்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக் களால் கட்டுப்படுத்தப்படுவது

விடை: இ ) ஒரே குரோமோசோமில் காணப்படும் பிணைப்புற்ற இரு மரபணுக்கள்

15. மெண்டலின் ஆய்வில் பட்டாணித் தாவரத்தின் ஏழு பண்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் எத்தனை குரோமோசோம்களில் காணப்படுகிறது?

அ) ஏழு

ஆ) ஆறு

இ) ஐந்து

ஈ) நான்கு

விடை : அ) ஏழு

16. கீழ்காண்பனவற்றுள் எது பெற்றோரிடன் காணப் படாத இணைந்த பண்புக்கூறுகள் சந்ததியில் காணப்படுவதை விளக்குகிறது.

 அ) தனித்துப் பிரிதல்விதி

ஆ) குரோமோசோம் கோட்பாடு

இ) சார்பின்றி ஒதுங்குதல் விதி

ஈ) பலமரபணுப் பாரம்பரியம்

விடை இ) சார்பின்றி ஒதுங்குதல் விதி

17. கேமீட்கள் எப்பொழுதும் கலப்புயிர்களாக இருப்பதில்லை” எனும் கூற்று

அ) ஓங்கு விதி

ஆ) சாரபின்றி ஒதுங்குதல் விதி

இ) தனித்துப் பிரிதல் விதி

ஈ) இயைபிலாக் கருவுறுதல் விதி

விடை : இ) தனித்துப் பிரிதல் விதி

18. ஒரு மரபணு மற்றொரு மரபணுக்களை மறைக்கும் செயல் ஆனால் ஒத்த அமைவிடத்தில் காணப்படாமைக்கு

அ) மறைக்கப்பட்ட

ஆ) நிரப்பி மட்டும்

இ) மறைக்கப்படும்

ஈ) இணை ஓங்கு

விடை : அ) மறைக்கப்பட்ட

19. தூயகால்வழி நெட்டைத் தாவரங்கள் தூய கால் வழி குட்டைத் தாவரத்துடன் கலப்புற்று முதலாம் மகவுச் சந்ததியில் (F]) அனைத்துத் தாவரங்களும் நெட்டையாகவே காணப்பட்டது. அதே முதல் மகவுச்சந்ததி தாவரங்களைத் தற்கலப்பு செய்யும் போது கிடைக்கும் நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்களின் விகிதம் 3:1 இது

அ) ஓங்குத்தன்மை

ஆ) பாரம்பரியமாதல்

இ) இணை ஓங்குத்தன்மை

ஈ) மரபுவழித்தன்மை

விடை : அ) ஓங்குத்தன்மை

20. ஓங்குத்தன்மை மறைத்தலின் விகிதமானது

அ)9:3:3:1

ஆ) 12:3:1

இ) 9:3:4

ஈ) 9:6:1

விடை : ஆ)12:3:1

21. மெண்டலின் கலப்பின ஆய்வுகள் மேற்கொண்ட காலத்தைத் தேர்ந்தெடு?

அ) 1856-1863

ஆ) 1850-1870

இ) 1857-1869

ஈ)  1870-1877

விடை: அ) 1856-1863

22. கீழ்க்காணும் பண்புகளுள் எவற்றை மெண்டலின் பட்டாணி ஆய்வுகளில் கருத்தில் கொள்ள வில்லை?

அ) தண்டு – நெட்டை அல்லது குட்டை

ஆ) சுரக்கும் வளரி அல்லது சுரக்க இயலாத வளரி

இ) விதை – பச்சை அல்லது மஞ்சள்

ஈ) கனி-உப்பிய அல்லது இறுக்கிய

விடை : ஆ) சுரக்கும் வளரி அல்லது சுரக்க இயலாத வளரி

12th Bio Botany பாரம்பரிய மரபியல் Unit 7 Lesso 2

Book Back Question and Answers.

23. மெண்டலின் ஏழு வேறுபட்ட பண்புகளைக் கூறுக.

பட்டாணியின் ஏழு பண்புகள்

பண்பு

மரபணு

ஓங்கு பண்புக்கூறு

ஓடுங்கு பண்புக்கூறு

தாவர உயரம்

Le

நெட்டை

 குட்டை

விதை வடிவம்

R

உருண்டை

சுருங்கிய

விதையுறை நிறம்

I

மஞ்சள்

பச்சை

மலர் நிறம்

A

ஊதா

வெள்ளை

கனி நிறம்

GP

பச்சை

மஞ்சள்

கனி

V

வீங்கிய/ உப்பிய

இறுக்கமுற்ற

மலர் அமைவிடம்

Fa

கோணம்

நுனியிலமைந்த

24. உண்மை பெருக்கம் அல்லது தூயகால்வழிப் பெருக்கம் வழி / கூறுகள் என்றால் என்ன?

  • தொடர்ந்து தற்கலப்பு செய்யும் போது (அல்லது) தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தும் போது, தொடர்ந்து ஒரே புறதோற்ற பண்புள்ள தாவரங் களை உருவாக்குவதற்கு உண்மைப் பெருக்கம் (அல்லது) தூயகால்வழிப் பெருக்கம் என்று பெயர்.
  • இவை பெற்றோர் பண்பைக் கொண்டிருப்பதால் (ஹோமோசைகஸ்) எனப்படும்.
  • இதனால் ஒத்த புற, ஜீனாக்கம் கொண்ட தாவரங் களை உருவாக்குவதால், இதற்கு தூய கால்வழிப் பெருக்கம் என்று பெயர்.

25. மெண்டலியத்தை மறு ஆய்வு செய்து கண்டறிந்த அறிவியல் அறிஞர்களின் பெயர்களை எழுதுக.

  • 1990 இல் ஹியூகோ-டி-விரிஸ் காரன்ஸ் & எரிவான்ஷெர்மாக் இவர்கள் மூவரும், மெண்டலின் ஆய்வுகளை மறுஆய்வு செய்தனர்.
  • மெண்டலின் ஆய்வுகள் 1965 இல் கண்டறியப் பட்டாலும் அது உலகம் அறிய 35 ஆண்டுகள் ஆயிற்று.

26. பிற்கலப்பு என்றால் என்ன?

  • முதல் மகவுச்சந்ததியை இரு பெற்றோர்களில் ஏதேனும் ஒரு பெற்றோருடன் கலப்பு செய்தல்.
  • முதலாவது – ஓங்கு பெற்றோருடன் கலப்புசெய்யும் போது F2 சந்ததியில் தோன்றும்.
  • மாறாக ஓடுங்கு தன்மை கொண்ட பெற்றோ ருடன் கலப்பு செய்யும் போது இரண்டு புறத் தோற்றப் பண்புகளும் 1:1 வீதத்தில் தோன்றுகிறது. இதற்குச் சோதனைக்கலப்பு என்று பெயர். ஒடுங்கு தன்மை பிற்கலப்பு, கலப்புயிரியின் மாறுபட்ட பண்பிணைவு தன்மையை அறிய உதவுகிறது.

27. மரபியல் வரையறு.

  • பண்புகள் எவ்வாறு பெற்றோர்களிடம் இருந்து சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன என்பதை விளக்கும் ஒரு பிரிவு – மரபியல் எனப்படும்.இதற்கு பாரம்பரியத்தின் அறிவியல் என்று பெயர்.

28. பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?

  • அல்லீல்கள் – மரபணுக்களின் மாற்று வடிவம் ஒரு குறிப்பிட்ட பண்பின் வேறுபட்ட புறத்தோற்ற வெளிப்பாட்டிற்குக் காரணமானவை.
  • ஒரு மரபணுவிற்கு ஒரே அமைவிடத்தில் மேற் பட்ட அல்லீல்கள் காணப்படுவது பல கூட்டு அல்லீல்கள் எனப்படும். எ.கா : மனிதனில் காணப்படும் ABO இரத்த வகைகள் (3 அல்லீல்கள் – கட்டுப்படுத்துகிறது. நடைபெறும் பாரம் பல்கூட்டு அல்லீல்கள்வழி பரியம் எனப்படும்.

29. மெண்டலின் பெருக்கச் சோதனை வெற்றிக்கான காரணங்கள் யாவை?

  • கணித மற்றும் புள்ளியல் மற்றும் நிகழ்வு விரைவு முறை அணுகு முறை
  • கையாண்ட முறைகளில் துல்லியமான புள்ளியல் நிகழ்வுகள்
  • சோதனைகள் —– கவனமாக——-திட்டமிடப்பட்டு——–அதிக மாதிரிகளும் பயன்படுத்தப்பட்ட விதம்
  • பட்டாணித் தாவரத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட எதிரிடைப் பண்புகள் – தனிப்பட்ட குரோமோ சோம்களில் உள்ள காரணிகளால் கட்டுப்படுத்தப் பட்டிருப்பது.
  • பெற்றோர்களை தூயகால்வழி பெற்றோர்கள் தேர்ந்தெடுத்த பல தலைமுறைகளில் தற்கலப்பு மேற்கொண்டதுஅனைத்துக்கும் மேல் தோட்டப்பட்டாணியைத் (Pisum sativum) தெரிவு செய்தது – அதன் சாதகமான பண்புகள்ஒரு பருவ தாவரம் பல தலைமுறைகளை ஆய்வு செய்ய இயலும்.
  • ஒற்றை மரபணுவால் கட்டுப்படுத்தப்பட எதிரிடைப் பண்புகள் தெளிவானவை. இயல்பான தற்கருவுறுதல் பெரிய மலர்களாதலால், ஆண் மலடாக்கம், மகரந்தச்சேர்க்கை மற்றும் கலப்புறுதல் எளிதானது.

30. ஒரு பண்புக்கலப்பு அடிப்படையில் ஓங்குத்தன்மை விதியை விளக்குக.

  • ஓங்குத் தன்மை விதி : பண்புகள் – காரணிகளால்
  • கட்டுப்படுத்தப்படுகிறது. எதிரிடைப் பண்பு களுக்கான இணைக் காரணிகளில் ஒன்று ஓங்கு தன்மையுடனும் மற்றொன்று ஒடுங்கு தன்மை யுடனும் காணப்படும். இதனை மெண்டலின் ஒருவகைப்பண்பு கலப்பு மூலம் விளக்கலாம்.
  • ஒரு பண்பு கலப்பு பெற்றோர் புறத்தோற்றம் – உயரம் X குட்டை

12th Standard Bio-Botany | Botany Unit 7 samacheer kalvi guide, students guide 360

  • F1 -ஐப் பொருத்தவரை வெளிப்படாத ஒடுங்கு பண்பு மறைவாயிலிருந்து F2 -வில் மீண்டும் வெளியிட்டது.
  • எதிரிடைப்பண்புகளைக் கொண்ட தூயகால் வழிப் பெற்றோர் தாவரங்களிடையே இனக் கலப்பு செய்தபோது F1 இல் ஒரு பண்பு வெளிப் பட்டது. இரண்டாம் மகவுச் சந்ததி (F2வில்) இரு பெற்றோர் பண்புகளும் வெளிபட்டது.

31. முழுமைபெறா ஓங்குத்தன்மை மற்றும் இணை ஓங்குத்தன்மையை வேறுபடுத்துக.

முழுமைபெறா ஓங்குத்தன்மை

இணை ஓங்குத்தன்மை

1. ஓங்கு அல்லீல் பிறிதொரு ஓங்கு அல்லீலைக் கட்டுப்படுத்தவில்லை - இருவகை அல்லீல்களும் கூட்டாகச் செயல்பட்டு இடைப்பட்ட நிறம் தோன்றியுள்ளது.

ஒரு உயிரியல் மாற்றுப் பண்புடைய இரு அல்லீல்களும் ஒரே சமயத்தில் பண்பை வெளிப் படுத்தும் நிகழ்விற்கு இணை ஓங்குத்தன்மை என்று பெயர்.

2. அல்லீல்கள் கலப்புற்றதாக வெளிப்பட்டது

அல்லீல்கள் கலப்புற வில்லை

3. ஹைபிரிட் -இரு அல்லீல்களுக்கும் இடைப்பட்ட வெளிப்பாட்டை கொண்டிருந்தது.

ஒவ்வொரு அல்லீல்களும் தனித்தனியாக வெளிப் படுத்திக் கொண்டன.

4. புதிய புறத்தோற்றப் பண்பு உருவானது.

புதிய புறத்தோற்றப் பண்பு உருவாகவில்லை

5. புதிய ஸ்நேப்டிராகன் மலரின் நிறம் (சிவப்பு x வெள்ளை)

மனித இரத்த வகை (ABO)

கமீலியாவின் சிவப்பு மற்றும் வெள்ளை மலர்கள் கதிர் அரிவாள் வடிவ ஹீமோகுளோபின்

32. சைட்டோபிளாச மரபுவழிப் பாரம்பரியம் என்றால் என்ன?

  • DNA தவிர்த்த சைட்டோபிளாச உறுப்புக்களான பசுங்கணிகங்கள், மைட்டோகாண்டிரியங்கள் பாரம்பரியத்தின் தாங்கிக் கடத்திகளாக செயல் படுவது சைட்டோபிளாசம் சார்ந்த பாரம்பரியம் எனப்படும்.
  • பசுங்கணிக, மைட்டோகாண்டிரியங்களில் உள்ள DNA பல மரபணுக்களைக் கொண்டுள்ளன.
  • இவை செல்பிரிதலின் போது சைட்டோபிளாசம் மூலம் கடத்தப்படுகின்றன.
  • இந்தச் சைட்டோபிளாச நுண்உள்ளுறுப்புகளி லுள்ள பிளாஸ்மோஜீன்களே (plasmogenes) இப் பாரம்பரியம் நடைபெற காரணமாக உள்ளது.
  • உட்கரு சம்பந்தப்படாததால் இது உட்கரு சாரா பாரம்பரியம் எனவும் கருதப்படுகிறது. எ.கா 4 மணித்தாவரத்தின் இலைகளில் காணப் படும் இரு வகை வேறுபட்ட நிறங்கள் அடர் பச்சை & வெளிர் பச்சை.

33. ஓங்கு மறைத்தலை எடுத்துக்காட்டுடன் விவரி. வரையறை : (PTA – 4) (மார்ச் 2020)

  • ஓர் இலக்கிலுள்ள ஒரு மரபணுவின் இரு அல்லீல் களுடன் இடைச்செல்கள் ஏற்பட்டு மரபுப் பண்புகள் வெளிப்படுவது தடுக்கப்படுவதற்கு அல்லது மறைக்கப்படுவதற்கு மறைத்தல் பாரம் பரியம் என்று பெயர்.
  • மறைக்கும் மரபணு ஓங்கு தன்மையுடையதாய் இருப்பதால் இது ஓங்கு தன்மை மறைத்தல் பாரம்பரியம் என்று பெயர்.
  • ஓங்கிய மரபணு ஒடுக்கும் மரபணு எனவும் மற்றது மறைக்கப்பட்ட மரபணு எனவும் வழங்கப்படுகிறது.
  • எ.கா பூசணிகளின் நிறம்:
  • W – அல்லீல் – வெள்ளை நிறம் W -அல்லீல் பச்சை நிறம்
  • G-அல்லீல் – மஞ்சள் நிறம் g – அல்லீல் பச்சை நிறம்.

12th Standard Bio-Botany | Botany Unit 7 students guide 360 samacheer kalvi guide

12th Botany Unit 7 Lesso 2. பாரம்பரிய மரபியல் Book Back One Mark Question and Answers.

 

34. பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

வரையறை:

  • ஒரு உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிக்கும் முறைக்கு பல் மரபணு பாரம்பரியம் எனப்படும்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் ஒரு பாரம் பரியத்தை தீர்மானிக்கும் போது பல் மரபணு பாரம்பரியம் ஏற்படுகிறது.
  • H – நில்சன் ஹுல் (1909) கோதுமையின் விதை யுறைகளில் இவ்வாய்வை நிகழ்த்தி இப்பாரம் பரியத்தை விளக்கினார்.
  • சிவப்பு விதையுறை நிறம் (ஓங்கு பண்பு) தாவரத்தை வெள்ளை விதையுறை (ஒடுங்குபண்பு) தாவரத்துடன் கலப்பு செய்தார்.
  • அடர் சிவப்பு R1R2R2R2 × வெள்ளை நிறம் r1r1r2r2 இக்கலப்பில்
  • 4-R மரபணுக்கள் மிகுந்த அடர்சிவப்பு நிறம் – 1
  • 3-R மரபணுக்கள் மிதமான அடர்சிவப்பு நிறம்-4
  • 2-R மரபணுக்கள் சிவப்பு நிறம் – 6
  • 1- R மரபணுக்கள் வெளிர் அடர்சிவப்பு நிறம் – 4
  • Rஓங்கு மரபணு இல்லாமை வெள்ளை நிறம் – 1
  • இந்த சிவப்பு நிற செறிவை வரைபடமாக்கினால் ஒரு மணி வடிவ வரைபடம் – கிடைத்தது
  • பிற எடுத்துக்காட்டுகள் – மனிதனின் உயரம் & தோல் நிறம்

பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

முடிவுகள்:

நில்சன் – ஷுல் ஆய்வு முடிவுகள் :
  • பிணைதல் இல்லை.
  • விதையுறை நிறத்தை மூன்றாவது மரபணுவும் தீர்மானிக்கிறது என்பது பின்னர் கண்டறியப்பட்டது.
  • மூன்று தனித்த இணை அல்லீல்கள் – இந்த விதையுறை நிறத்தில் பங்கு கொள்கின்றன.
  • நில்சன் – ஷில் F2 சந்ததி விகிதம் 63:1

புறத்தோற்ற விகிதம்

மரபணு வகையம்

  • இதன்படி கோதுமை விதையுறையில் கலப்புப் பாரம்பரியம் தென்படவில்லை.
  • F2 சந்ததியில் அதிக அளவில் நிற வேறுபாடுகள் காணப்பட்டது. (மரபணுக்களின் தனித்தொதுங்குதல் மற்றும் மறுசேர்க்கை நடைபெறுதல் நடைபெற்றது)
  • இதில் பெற்றோர் புறத் தோற்றங்களான அடர் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் இல்லாமல் போனது.
  • மரபணுக்களில் கலப்பு இல்லை.
  • பல மரபணு இணைகளின் ஒட்டு மொத்த விளைவால் – பல்வேறு நிறச் சாயல்கள் தோன்றியது.
  • நில்சன் – ஷீல் கருதுகோளின் படி இரு அமைவிடங்களும் கூட்டாக இணைந்து கோதுமை விதையுறை நிறத்தை தோற்றுவித்தன.

பெற்றோர் புறத்தோற்றம்

 

12th Botany Unit 7 Lesson 2 Book Back Full Answer key Tamil Medium.

 

35. தொடர்ச்சியற்ற வேறுபாடுகளைத் தொடர்ச்சியான வேறுபாடுகளுடன் வேறுபடுத்துக.

வேறுபாடுகள்:
  • ஒரு சிற்றினத்திற்குள் காணப்படும் தனித்தாவரங்களில் காணப்படும் வேறுபாடுகளாகும்.
  • இது பாரம்பரியமாகக் கடத்தப்படுவதாகவோ (அ) சூழ்நிலை காரணிகளைச் சார்ந்தோ ஏற்படுகிறது.

இரு வகைப்படும்

  1. தொடர்ச்சியற்ற வேறுபாடுகள்
  2. தொடர்ச்சியான வேறுபாடுகள்

தொடர்ச்சியற்ற வேறுபாடுகள்

தொடர்ச்சியான வேறுபாடுகள்

1. பண்புசார் பாரம்பரியமாதல் எனப்படும்.

எண்ணிக்கை சார் பாரம்பரியமாதல் எனப்படும்.

2. இதில் பண்புகள் ஒன்று (அ) இரண்டு முக்கியமான மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

பண்புகள் சூழ்நிலை & மரபுக்காரணிகளின் கூட்டு விளைவுகளால் தீர்மானிக்கப்படுகிறது.

3. திசை தீர்மானிக்க இயலாது

திசை தீர்மானிக்க இயலும்.

4. இம்மரபணுக்கள் இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அல்லீல்களைக் கொண்டிருக்கும்.

பண்புகள் தரம் பிரிக்கப்பட்டு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலை வரை எவ்வித தடையும் இன்றி வெளிப்படுத்தப்படுகிறது.

5. இடைநிலை தோற்றப்பண்புகள் கிடையாது

இடைநிலை தோற்றப்பண்புகள் உள்ளன.

6. திடீர் மாற்றத்தினால் ஏற்படுவதால் எப்போதாவது மாற்றங்கள் ஏற்படும்.

சாதாரணமாக குரோமோசோம் பிரிதல் குறுக்கேற்றம், கருவுறுதல் போது ஏற்படுகிறது.

7. மரபணுத்தொகை அமைப்பை மாற்றுகிறது. எ.கா.பிரைமுலா

மரபணுத்தொகை பொதுவாக அமைப்பை மாற்றுவதில்லை. எ.கா. மனிதனின் உயரம் மற்றும் தோலின் நிறம்.மரபணுத்தொகை பொதுவாக அமைப்பை மாற்றுவதில்லை. எ.கா. மனிதனின் உயரம் மற்றும் தோலின் நிறம்.

36. ஒரு உயிரினத்தில் ஒரு தனி மரபணு பலபண்புக் கூறுகள் எவ்விதம் புறத்தோற்றத்தைப் பாதிக்கிறது? (PTA -5)

  • தனியொரு மரபணுவானது, பல பண்புகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத் தோற்றப்பண்புகளை தீர்மானிக்கிறது. இது பல்பண்புக்கூறுகள் கொண்ட மரபணு அல்லது Plelotropy என அழைக்கப்படுகிறது. இவ்வகை மரபணு படுகிறது.
  • பல்பண்புக்கூறு மரபணு எனப்பட்டாணியில் ஊதாமலர்கள், பழுப்பு விதைகள் மற்றும் இலை அச்சுக்களில் அடர் புள்ளிகள் கொண்ட பண்புகளையுடைய தாவரத்தை, வெள்ளை மலர்கள், வெளிறிய நிறமுடைய விதைகள், புள்ளிகளற்ற இலை அச்சு ஆகிய வற்றைக் கொண்ட பல பட்டாணித் தாவரங்க ளோடு கலப்புறச் செய்தபோது மூன்று பண்புகள் ஒற்றை மரபணுவால் பாரம்பரியமாவதைக் கண்டறிந்தார்.
  • பிற எ.கா : கதிர் அரிவாள் இரத்த சோகை பினைல் கீட்டோநியூரியா நோய்.

37. பசுங்கணிக மரபணு சார்ந்த பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் வெளி கொணர்க. 4 மணித் தாவரம் (அந்தி மாந்தாரையில்):

  • இரு வேறுபட்ட நிறமுடைய இலைகள் காணப்படுகின்றன.
  • இவற்றில் அடர்பச்சை நிறமுடைய (இலை) தாவரங்களை (ஆண்) வெளிறிய பச்சை நிற இலையுடைய தாவரங்களுடன் (பெண்) கலப்பு செய்த போதும் – (அ) அடர்பச்சை நிற இலையையுடைய தாவரங்கள் (பெண்) வெளிறிய பச்சை நிற இலைகளையுடைய தாவரங்கள் (ஆண்) கலப்பு செய்த போதும் மெண்டலின் மரபியல் தத்துவத்தின் படி ஒரே விதமான F1 தாவரங்கள் கிடைக்க வேண்டும். ஆனால் இப்பாரம்பரியத்தில் முதல் மகவுச் சந்ததி F1 வேறுபட்ட பண்புகளை வெளிப் படுத்தின.
  • இரு வகை கலப்பிலும் பெண் தாவரத்தின் பண்புகள் வெளிபடக் காரணம், பெண் தாவரத்தின் பசுங்கணிக மரபணு சார்ந்து இப்பாரம்பரியம் நிகழ்வதே இவ்வேறுபாட்டிற்குக் காரணம்.

Leave a Reply