12th botany unit 6 aditional3 mark questions

TN 12th Bio-Botany Unit 6 Additional 3 Marks

12th Bio-Botany Unit 6 Additional 3 Mark Questions

12th Standard Bio-Botany Unit 6 and Lesson 1 additional 3 Mark Question and answers. So we Can Update HSC +2 Samacheer kalvi Guide Tamil Medium Start Board Syllabus Botany and also some additional questions, Already we update 12th Bio-Botany Book Back Question and Answer Full Guide and also 1 Mark Additional Q&A, 2 Mark  Additional Question and answers.

12th Bio-Botany | Botany Unit 6, Lesson 1. தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் Additional Three Marks Q&A. www.studentsguide360.com All Important Notes, Guide Book Answers because Free Students Guide 360.

12th Bio-Botany | Botany தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள்

12th Bio-Botany Unit 6 Additional 3 Mark Questions

12th Bio-Botany Additional 3 Mark Question and Answers.

III. மூன்று மதிப்பெண் வினாக்கள்

1. மகரந்த நாட்களாட்டியின் முக்கியத்துவம் யாது?

  • வேறுப்பட்ட பருவங்களில் தாவரங்கள் உற்பத்தி செய்யும் மகரந்தத்தைக் குறிக்கிறது.
  • மகரந்தத்துகள் ஈளை நோய். மூச்சுழற்சி. தும்மல் காய்ச்சல். ஒவ்வாமை மூச்சுழற்சி தோன்றக் காரணமாகும் என்பதால் ஒவ்வாமை உள்ளவர் களுக்கு இந்தப் புரிதல் பயனளிக்கும்.

2. விதைத்துளை மூடி பற்றிக் கூறு?

  • சூலதுளையைச் சுற்றி, வெளிசூலக உறை செல்கள் சதைப்பற்றுடன் உள்ளன. இது விதைத் துளை மூடி எனப்படும்.
  • (எ.கா) ரிசினஸ் கம்யூனிஸ்

3. பெரிஸ்பெர்ம் (Perisperm) என்பது என்ன ?

  • விதைகளில் எஞ்சியுள்ள சூல்திசு பெரிஸ்பெர்ம் எனப்படும். (எ.கா) மிளகு, பீட்ருட் மற்ற சூல்திசுக்கள் வளர் கருவினால் உறிஞ்சப்படும்.

4. விதை ஒட்டுத்தாள் என்பது யாது? (Aril)

  • சூலகக் காம்பு (Funiculus), சதைப்பற்றுடன் வண்ண மயமான விதை ஒட்டுத்தாளாகிறது. (எ.கா) மிரிஸ்டிகா, பித்தசிலோபியம்.

5. கருவூண் திசு விளக்குக?

கருவுறுதலுக்குப் பின், கரு பகுப்டையும் முன், முதல் நிலை கருவூண் உட்கரு (Primary Endosperm Nucleus – PEN) பகுப்படைந்து கருவூண்திசுவாகும். இது ஊட்டமளிக்கும். சீரியக்கி அமைப்புத் திசு.

6. கருவூணற்ற விதைகள், கருவூண் விதைகள் வேறுபடுத்துக

கருவூண் விதைகள் (அல்புமினுடைய விதைகள்)

கருவூண் திசு விதை முளைத்தலின் போது, கருவுக்கு
உணவளிக்கிறது. (எ.கா) நெல், தென்னை. ஆமணக்கு
கருவூணற்ற விதைகள் (அல்புமினற்ற விதைகள்)
கருவூண் திசு இல்லாத விதைகள் (எ.கா) பட்டாணி, நிலக்கடலை, பீன்ஸ்.

7. அலிரோன் திசு (Aleurone Tissue) குறிப்பு வரைக?

  1. சிறப்படைந்த செல்களால் ஆனது. ஒன்று அல்லது சில அடுக்குகளால் ஆனது.
  2. தானியங்களில், கருவூண் திசுவைச் சூழ்ந்து உள்ளது.
  3. இதன் செல்களில் அலிரோன் துகள்கள் உள்ளன. இவற்றில் ஸ்பீரோசோம்கள் உள்ளன.
  4. விதை முளைக்கும் போது, இச்செல்கள் அமைமேஸ்கள், புரோட்டியேஸ் போன்ற நீராற் பகுப்பு நொதிகளைச் சுரக்கும். இந்நொதி கருவூண் திசு சேமிப்பு உணவைச் செரிக்கும்.

8. தேனீ மகரந்தம் (Bee Pollen) பற்றிக் கூறு?

  • இது ஒரு இயற்கைப்பொருள்.
  • இதில் புரதம், கார்போஹைடிரேட், தாதுப் பொருட்கள், வைட்டமின்கள் உள்ளன.
  • கூடுதல் ஊட்டப்பொருளாகிறது.
  • மாத்திரை, பாகுநீராக விற்கப்படும்
  • தடகள வீரர், பந்தயக் குதிரைகள் செயல்பாட்டை அதிகரிக்கும்.
  • தீக்காயப் புண்ணை ஆற்றும்.

9.பூந்தேன் கொள்ளையரைப் பற்றிக் கூறு?

அமோர்போபேலஸ் மலர். மலர்ப்பொருட்களை வெகுமதியாகத் தருகின்றன. முட்டையிட பாது காப்பான இடத்தை தருகின்றன. பல உயிரி னங்கள் மகரந்தத் துகள்களையும், பூந்தேனையும் உண்டு, மகரந்தச் சேர்க்கைக்கு உதவாது. இவை பூந்தேன் கொள்ளையார் ஆவர்.

10. பல்வேறு தாவரங்களில் உள்ள சில வேறுபட்ட மகரந்தச் சேர்க்கை முறைகள் எவை?

  • பொறி இயங்கு முறை (அரிஸ்டலோக்கியா)
  • விழுகுழி இயங்கு முறை (ஆரம்)
  • கவ்வி, ஏதுவாக்கி இயங்கு முறை (அஸ்கிளபியடேசி)
  • உந்து தண்டு இயங்கு முறை (பாப்பிலியோனேசி)

11. கட்டாய ஓங்குயிரி வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு தருக?

  • எ.கா. யூக்காவுக்கும், அந்துப்பூச்சிக்கும் இடையேயான உறவு ஆகும்.
  • அந்துப்பூச்சி மலரின் சூலகப் பையினை துளை யிட்டு முட்டையிடும்.
  • மகரந்தப்பந்தை, உள்ளீடற்ற சூலமுடி வழியாக தள்ளும்.
  • கருவுறுதல் நடைபெற்று விதை உருவாகும்.
  • லார்வா வளரும் விதைகளை உண்ணும். உண்ணப்படாத விதைகள் தாவரப் பெருக்கத்திற்கு உதவும்.
  • அந்துப்பூச்சி, யூக்கா மலரின்றி வாழாது. யூக்கா அந்துப்பூச்சியின்றி பாலினப் பெருக்கம் செய்யாது.

12. ஆண் கேமீட்டகத் தாவரத்திற்கும் பெண் கேமீட்டகத் தாவரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் இரண்டினை எழுதுக. (PTA – 6)

ஆண் கேமிட்டோபைட் and பெண் கேமிட்டோபைட்

ஆண் கேமிட்டோபைட்

பெண் கேமிட்டோபைட்

மகரந்தத் துகள் - இதுவே ஆண் கேமிட்டோபைட் எனப்படும் (நுண் வித்தகம்)

இது சூலினுள் காணப் படுகிறது. (பெரு வித்தகம்)

இரு கட்ட வளர்ச்சி காணப்படுகிறது. முன் மகரந்தச் சேர்க்கை - நிலை பின் மகரந்தசேர்க்கை நிலை

ஒரு கட்ட வளர்ச்சி மட்டுமே காணப்படுகிறது. பெரு வித்தக உறையினால் சூழப்பட்டுள்ளது.

மூன்று செல் - நிலையை உடையது. இதன் எல்லா படுகிறது. இதன் வளர்ச்சி செல்களும் செயல்படுகிறது

இதில் 7 செல்கள் காணப் பெருவித்தகத்தினுள் நடை பெறுகிறது.

13. திட சூலகத் தண்டினுள் எவ்வாறு மகரந்தக் குழல் நுழைகிறது? (PTA – 3)

  • இவ்வகை சூலகத்தண்டு இரு விதையிலைத் தாவரங்களில் காணப்படுகிறது.
  • சூலகத் தண்டின் மையப்பகுதியில் நீண்ட செல்கள் கற்றையாக அமைந்துள்ளன. இதற்கு ஊடு கடத்தும் திசு என்று பெயர்.
  • இந்த ஊடுகடத்து செல்களுக்கு இடையேயுள்ள செல் இடை வெளிகளின் வழியே வளர்கிறது.

14. மகரந்தச் சேர்க்கை. கருவுறுதலுக்கு முதன்மை முக்கியத்துவமானது – விவரி?

  • கருவுற்றால் தான் பழம், விதை உருவாகும்.
  • மகரந்தச் சேர்க்கையால். ஆண், பெண் இனச் செல்கள் ஒருங்கிணைக்கப்படும்.
  • அயல் மகரந்தச் சேர்க்கை மரபணு மாறுபாடுகளை கலந்து உண்டாக்கும். இதனால் சூழ்நிலைக்கேற்ற தகவமைப்பு உருவாகும். புதிய சிற்றினங்கள் உருவாகும்.

15. அயல் மகரந்தச் சேர்க்கையின் தீமைகளைப் பட்டியலிடுக?

  • புறமுகவர்கள் தேவைப்படுவதால், நடை பெறுவது நிச்சயமல்ல.
  • முகவர்களை ஈர்க்க, தாவரங்கள் தகவமைப்புக் கொண்டுள்ளது. பல நேரங்கள் சூழ்நிலை சாதக மாக இல்லாதபோது அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற இயலாது.

16. கருவூண் திசுவின் பணிகள் கூறு?

  • வளர்கருவுக்கு உணவாகிறது.
  • மூடுவிதைத் தாவரங்களில், கருவூண் திக உருவான பின். கரு மூட்டை பகுப்படையும்.
  • கருவூண் திசு, கருவின் துல்லிய வளர்ச்சியை ஒழுங்குப்படுத்தும் பணியையும் செய்கிறது.

12th Bio-Botany Additional 3 Mark Question and Answers.

17. இளநீர் எவ்வகை திசு?

  • இளநீர் அடிப்படை ஊட்ட ஊடகம்,
  • கரு, நாற்றுருக்களின் வேறுபாட்டைத் தூண்டும்.
  • இளநீர் உட்கருசார் கருவூர் திசு.
  • இதைச் சுற்றியுள்ள வெண்மைப் பகுதி செல்சுவர் உருவாக்கப்பட்ட கருவூண் திசு.

18. ஸ்பைரோபொலினின் வரையறு. அதன் பயன் யாது?

  • ஸ்போரோபொலினின் என்பது மகரந்தச்சுவர் பொருள்.
  • ஸ்போரோபொலினின் உருவாக மகரந்தத்துகளின் சைட்டோபிளாசம் மற்றும் டபீட்டம் பங்களிக்கிறது.
  • கரோட்டினாய்டிலிருந்து பெறப்படுகிறது.
  • இயற்பியல் மற்றும் உயிரிய சிதைவைத் தாங்கும் தன்மையுடையது.

பயன்கள்:

  • வீரியமிக்க அமிலம், காரம் மற்றம் நொதிகளின் செயல்களிலிருந்து பாதுகாக்கிறது.
  • தொல்லுயிர் புதைபடிவங்களில் மகரந்தத்துகள் நீண்ட காலம் பாதுகாப்பாக காணப்படுகிறது. மகரந்தப் பையிலிருந்து சூலக முடி வரையிலான மகரந்த துகள்களின் பயணத்தை இது பாதுகாப் பானதாக்குகிறது.

19.ஒத்தமுதிர்வு மற்றும் இருகால முதிர்வு வேறுபடுத்துக.

ஒத்தமுதிர்வு and இருகால முதிர்வு

ஒத்தமுதிர்வு

இருகால முதிர்வு

ஒரு மலரில் மகரந்தத் தாளும், சூலக முடி இரண்டும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி யடைகிறது.

ஒரு மலரில் மகரந்தத் தாளும், சூலக முடியும் வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சி அடைகிறது.

தன் மகரந்தச்சேர்க்கை நடைபெற சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது.

எ.கா. மிராபலிஸ் ஜலாபா மற்றும் கேத்தராந்தஸ் ரோஸியஸ்.

எ.கா.ஹீலியாந்தஸ், கிளிரோடென்ரம்.

20.சினர்ஜிட்கள் என்றால் என்ன?

  • தாவரத்தின் கருப்பையின் முட்டை செல்லைச் சுற்றி அதன் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
  • சினர்ஜிட்கள் வேதியீர்ப்புப் பொருள்களை சுரக்கின்றது.
  • எனவே மகரந்தக்குழாயை ஈர்க்க உதவுகின்றன.
  • சினர்ஜிட்களில் உள்ள நூலிழை சாதனம் சூழ்திசு விலுள்ள ஊட்டம் கருப்பைக்கு உறிஞ்சிக் கடத்து வதற்கு உதவுகிறது.
  • மகரந்தக்குழாய் முட்டையை நோக்கிச்செல்வதற்கு வழிகாட்டுகிறது.

21. தொல்லுயிர் புதைபடிவங்களில் மகரந்தத்துக்கள் நீண்ட காலம் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் யாது?

  • தொல்லுயிர் புதைபடிவங்களில் மகரந்தத்துக்கள் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்க காரணம், மகரந்தத்துக்களின் சுவர்பொருளான ஸ்போரோ பொலினின் ஆகும்.
  • ஸ்போரோபொலின் உருவாக மகரந்தத்துகளின் சைட்டோபிளாச மற்றும் டபீட்டம் பங்களிக்கிறது.
  • இது கரோட்டினாய்டிலிருந்து பெறப்படுகிறது. இயற்பியல் மற்றும் உயிரிய சிதைவைத் தாங்கும் தன்மையுடையது. அதிக வெப்பத்தை தாங்கும் தன்மை, வீரியமிக்க அமிலம், காரம் மற்றும் நொதிகளின் செயல்களி லிருந்தும் பாதுகாக்கிறது.
  • தொல்லுயிர் புதை படிவுகளில் மகரந்தத்துக்கள் நீண்ட காலம் பாதுகாப்பாக காணப்படுகிறது.
  • மகரந்தப்பையிலிருந்து சூலகமூடி வரையிலான மகரந்தத்துக்களின் பயணத்தை பாதுகாப்பான தாக்குகிறது.

22. ஒட்டுமுறை என்பது கலப்புயிரியை உருவாக்கும் முறையே தவிர, பயிர்பெருக்க முறையல்ல. இந்தக் கூற்றை நீ ஏற்றுக் கொள்கிறாயா? (PTA – 4)

  • ஆம், இதனை உடல பயிர்பெருக்க முறையின் கீழ் கற்ற போதிலும், இது உண்மையில் பயிர் பெருக்க முறையல்ல.
  • இதில் தரையுடன் தொடர்புடைய தாவரத்திற்கு வேர்கட்டை (stock) என்றும், ஒட்டுதலுக்கு பயன்படும் இலை, தண்டுடைய தாவரத்திற்கு ஒட்டுத்தண்டு (scion) எனவும் அறியப்படுகிறது. இதனால் கலப்புயிரி தாவரம் பெறப்படுகிறதே தவிர தாவரங்களின் எண்ணிக்கை பெருக்க மடைவதில்லை.

Leave a Reply