12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 5 Marks

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 5 Marks

TN 12th Bio-Botany Unit 9, 8th lesson Additional 5 Marks, 8th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 8 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8 . சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.

12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 8. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் – Additional 5 Marks

 12th Botany Unit 9 Lesson 8 Additional 3 Marks

12th Botany Pure Science Guide 8th Lesson Additional 5 Marks

1.புவி வெப்பமாதலால் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள் பற்றி எழுதுக. 
புவி வெப்பமாதலால் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள்:
  • வெப்பமண்டலப் பிரதேசங்களில் உணவு உற்பத்தி குறைகிறது.
  • வளி மண்டலத்தில் அதிக அளவில் வெப்பக் கதிர்கள் (heat waves) வீசுதல், (களைகள், பூச்சிகள் மற்றும் பூஞ்சைகளுக்கு அதிக வெப்பம் தேவைப்படுகிறது )
  • நோய் கடத்திகள் மற்றும் தொற்று நோய்கள் அதிகம் பரவுதல்.
  • பலத்த சூறாவளிக்காற்றும், கடுமையான வெள்ளப் பெருக்கும் ஏற்படுதல்.
  • தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் நீர்பாசனக் குறைபாடு
  • பூக்கள் தோன்றுதல் காலங்கள் மற்றும் மகரந்த சேர்ப்பிகளில் மாற்றங்கள் நிகழ்தல்.
  • தாவரப் பரவல் பிரதேசங்களின் சிற்றினங்களில் மாற்றங்கள் காணப்படுதல்,
  • தாவரங்கள் அழிந்து வருதல்.

2.காடழிப்பின் விளைவுகள் பற்றி எழுதுக.

  • காட்டு மரக்கடைகளை எரிப்பதால் சேகரிக்கப்பட்ட கார்பன் வெளிவிடுவதோடு இது கார்பன் சேகரிப்புக்கு எதிர் விளைவைத் தருகிறது.
  • மரங்களும் தாவரங்களும் மண் துகள்களைப் பிணைக்க உதவுகின்றன. காடுகளை அகற்றுவது மண் அரிப்பினை அதிகரிப்பதோடு மண் வளத்தையும் குறைக்கிறது. காடழிப்பு வறண்ட பகுதிகளில் பாலைவனங்களை உருவாக்க வழிவகுக்கின்றது.
  • நீரின் ஓட்டம் மண் அரிப்பை அதிகரிப்பதோடு திடீர் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. இவை ஈரப்பதம் மற்றும் ஈரத்தன்மையைக் குறைக்கிறது.
  • உள்ளூர் மழையளவு மாற்றத்தின் காரணமாகப் பல பகுதிகளின் வறண்ட நிலைக்கு வழி வகுக்கிறது. இது எதிர்காலக் காலநிலையைத் தூண்டுவதோடு சூழல்மண்டலத்தின் நீர் சுழற்சியையும் மாற்றி அமைக்கிறது.
  • உயிரினங்களின் வாழிடம் பாதிக்கப் படுவதாலும் ஊட்டச்சுழற்சித் தகர்வு ஏற்படுவதாலும் குறிப்பிடத்தக்க அளவில் உயிர்ப்பன்மம் குறைகிறது.
  • கிராமப்புற மற்றும் காடுகளில் வாழ்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
  • மூன்றில் ஒரு பங்கு கார்பன் வெளியிடப்படுவதால் உலக வெப்பமயமாதல் அதிகரிக்கின்றன. வாழ்வாதார மூலங்களான எரிபொருள், மருத்துவ மூலிகைகள் மற்றும் இயல்சூழலில் காணப்படும். உண்ணத்தக்க கனிகள் ஆகியன இழக்கப்படும்.

3.ஆக்கிரமிப்புத் தாவரங்கள் பற்றி விரிவாக எழுதுக.

  • உள்ளூர் அல்லாத ஒரு சிற்றினம் இயற்கையாகவே சூழல் தொகுப்பில் அல்லது குறிப்பிட்ட நாட்டில் பரவி, உள்ளூர் சிற்றினங்களின் உயிரியல் மற்றும் வாழ்நிலையில குறுக்கீடு செய்வது மற்றும் சூழ்த்தொகுப்பிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதாகும்.
  • காற்று, வான் அல்லது கடல் வழியாகத் துறைமுகங்கள் மூலம் பல ஆக்கிரமிப்பு இனங்கள் தற்செயலாக அறிமுகமாகியவை என நிலைநிறுத்தப்பட்டது.
  • சில ஆராய்ச்சி நிறுவனங்கள் காட்டு இயலவகைகளின் மரபணுவளக்கூறுகளை (germplasm) இறக்குமதி செய்யும்போதும் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  • வழக்கமாக ஆக்கிரமிப்புத் தாவரங்களின் உண்ணத் தகுந்த பழங்கள் பறவைகளின் மூலம் பரப்பப்படுகின்றன.
  • ஆக்கிரமிப்புத் தாவரங்கள் வேகமாக வளரக்கூடியதாகவும், எளிதில் தகவமைத்துக் கொள்வதாகவும் உள்ளது.
  • இவைகள் இலைமட்குத்தரத்தை மாற்றுவதன் மூலம் மண்ணின் சமூக அமைப்பை மாற்றி மண்ணிலுள்ள உயிரினங்கள். மண் விலங்குகள் மற்றும் சூழல்மண்டல செயல்பாடுகளைப் பாதிக்கிறது.
  • இவை மண்ணில் சிதைத்தலின் மீது எதிர்மறை விளைவை ஏற்படுத்தி அருகிலுள்ள உள்ளூர் சிற்றினங்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது.

4.IUCN சிவப்புப்பட்டியல் (செம்பட்டியல்) வகைபாடு தருக

  • இப்பட்டியலின் பிரிவுகள் தாவர மற்றும் விலங்கின வளங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களின் விகிதம் மற்றும் பாதுகாப்பு முன்னுரிமைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய நமக்கு உதவுகிறது

Leave a Reply