12th Tamil Book Back Answers Unit 7.1

12th Tamil Book Back Answers Unit 7.1

12th Tamil Book Back Answers Unit 7.1

இயல்:7.1 இலக்கியத்தில் மேலாண்மை

12th Tamil Book Back Answers Unit 7.1. TN 12th Standard Tamil Guide Lesson 7, Unit 7.1 book back answers, 12th Tamil Unit 7.1 Book Back and additional Questions and answers.  HSC Second Year Tamil இயல்:7.1 இலக்கியத்தில் மேலாண்மை Full Answer key. TN 12th Tamil  Samacheer kalvi Guide. Syllabus Reduced Syllabus. 12th Tamil Unit 7 Free Online Test.
12th Tamil Book Back Answers Unit 7.1 www.studentsguide360.com

பாடநூல் வினாக்கள்

12th Tamil Book Back Answers Unit 7.1

பலவுள் தெரிக

1. ‘பலர் துஞ்சவும் தாம் துஞ்சான்’ விழித்திருந்தவரும் அவரைப் பாடியவரும்

அ) சோழன் நெடுங்கிள்ளியை – பாணர்
ஆ) சோழன் நலங்கின்னியை – கோவூர் கிழார்
இ) கணைக்கால் இரும்பொறையை – கபிலர்
ஈ) கரிகாலனை – உருத்திரங்கண்ணனார்
Answer:
ஆ) சோழன் நலங்கின்னியை – கோவூர் கிழார்

குறுவினா | 12th Tamil Book Back Answers Unit 7.1

1. பருவத்தே பயிர் செய் – நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.

Answer:
  • சரியான காலத்தில் விதைப்பது தான் பட்டம் என்பதைப் பருவம் என்பர்.
  • ‘பருவத்தே பயிர் செய்’ என்பது அனுபவச் சொல்.
  • ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும் மனிதகுலத்துக்கும் பொருந்தும்.
  • பருவத்தே செய்ய வேண்டிய செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச் செல்வது – கற்க வேண்டிய பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல் வேண்டும்.

சிறுவினா

1. வேளாண்மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.

Answer:
  1. வேளாண்மைக்குள்ளும் மேலாண்மை கூறுகள் உண்டு. சரியான பயிர், உரிய நேரத்தில் விதைத்தல் நீர் மேலாண்மை, அறுவடைக்குப் பின் பாதுகாத்தல் நல்ல விலைவரும் வரை இருப்பு வைத்தல்.
  2. ஒவ்வொரு கட்டத்திலும் விழிப்போடும், பொறுப்போடும் செயல்பட்டால் வேளாண்மை செழிக்கும்.
  3. மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை.

2. எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும் அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது அதற்குப் பின்னால் உள்ள மனித உழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக.

Answer:
  1. நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை ‘நா’ அறியாது.
  2. ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை ‘நா’ உணர்வது மட்டுமல்லாமல் உடல் புத்துணர்ச்சி பெற்று நம்மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
  3. அதாவது நம் தாய் நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத் தேவையானவற்றைத் தயார் செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.

நெடுவினா

1. நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

Answer:
நாலடியார் கூறும் நிருவாக மேலாண்மை :
  • உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பதில்லை.
  • யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
  • தெரிந்திருப்பது ஒரு வகை அறிவு என்றால் யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
இதையே நாலடியார்,
“கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தாழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு” என்று பக்குவமாகக் கூறுகிறது.
  • நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும்.
  • வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன். அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவான்
  • ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் நிதி மேலாண்மை :
  • டைமன் என்பவன் ஏதேன்ஸ் நகரில் இருந்தன். அவன் வரவு குறைந்தாலும் செலவு அதிகம் செய்தான்.
  • அவன் உதவியாளர் நிதி நிலைமையைப் பேசும் பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
  • கடன் ஒரு நேரத்தில் கழுத்தை நெறித்தது. அப்போதும் அவன் வருந்தவில்லை.
  • அவன் தான் அளித்த விருந்தை உண்பவர் உதவி செய்வார்கள் என்று பொய்க்கணக்குப் போட்டான்.
  • சேவகர்கள் நான்கு திசைகளிலும் சென்று வெறும் கையோடும் வெளிரிய முகத்தோடும் திரும்பினார்கள்.
  • டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.
ஔவையாரின் நிருவாக மேலாண்மை :
தாம் ஈட்டும் பொருளினைவிட அதிகமாகச் செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும் உணர்வையும் இழப்பார்கள். அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவார்கள். எத்துணைப் பிறப்பு பிறந்தாலும் எவ்வித மரியாதையும் கொடுக்கப்படாமல் தீயவர் போலவே நடத்தப்படுவர்.
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு”
என்ற பாடல் மூலம் ஒளவையார் நிதி நிருவாக மேலாண்மையை விளக்குகிறார்.

கூடுதல் வினாக்கள்

12th Tamil Book Back Answers Unit 7.1

பலவுள் தெரிக

1. ஒர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் அட்டவணையைத் தருவதாக அமையும் அதிகாரம்

அ) மடியின்மை
ஆ) வெஃகாமை
இ) ஊழ்
ஈ) வெகுளாமை
Answer:
அ) மடியின்மை

2.

‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான்

உலகு காக்கும் உயர் கொள்கை

கேட்டோன், எந்தை என் தெண்கிணைக் குரலே”

– என்னும் அடிகள் இடம்பெறும் நூல் ………………… பாடப்பட்ட வன் … அடிலை கடமபறும் நூல் ……………… பாடியோன

அ) புறநானூறு, கோவூர்கிழர், சோழன் நலங்கிள்ளி
ஆ) பதிற்றுப்பத்து, கபிலர், சேரன் செங்குட்டுவன்
இ) புறநானூறு, பரணர், பேகன்
ஈ) மனோன்மணியம், சுந்தரனார், ஜீவகன்
Answer:
அ) புறநானூறு, கோவூர்கிழர், சோழன் நலங்கிள்ளி

3. சீனத்தில் வழங்கும் யாங்சௌ கதை ………….. பற்றியது.

அ) இவ்வுலக வாழ்வை
ஆ) நேர மேலாண்மையை
இ) கொல்லாமையை
ஈ) சொர்க்கத்தை
Answer:
ஆ) நேர மேலாண்மையை

4. வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்

செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான் – என்று தன் நாட்டை மிகவும் செப்பமாகவும்

நுணுக்கமாகவும் ஆட்சி செய்த யாரைப் பற்றி யார் எந்நூலில் பாடியுள்ளார்?

அ) தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்
ஆ) நெடுஞ்செழியனைப், இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டத்தில்
இ) நலங்கிள்ளியைப், கோவூர்கிழார் – புறநானூற்றில்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
அ) தசரதனைப், கம்பர், கம்பராமாயணம் – பாலகாண்டத்தில்

5. ‘இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக… என்று கூறுவது

அ) மூதுரை
ஆ) ஆத்திசூடி
இ) அறநெறிச்சாரம்
ஈ) நளவெண்பா
Answer:
இ) அறநெறிச்சாரம்

6. உரோமபுரிச் சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தர்கள் என்ற குறிப்பினை உடைய நூல்

அ) கம்பராமாயணம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மதுரைக்காஞ்சி
ஈ) பட்டினப்பாலை
Answer:
ஆ) சிலப்பதிகாரம்

7. ‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்று குதிரைகள் இறக்குமதி பற்றிக் குறிப்பிடும் நூல்

அ) பரிபாடல்
ஆ) பட்டினப்பாலை
இ) பதிற்றுப்பத்து
ஈ) புறநானூறு
Answer:
ஆ) பட்டினப்பாலை

8. ‘வான் முகந்த நீர் மலைப் பொழியவும்…’ எனக் காவிரிப்பூம்பட்டினத்தில் மாரிக்காலத்து மழைமேகம் போல, கணக்கிட இயலாத பொருள்கள் பண்டசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்ததனைக் குறிப்பிடும் நூல்

அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) பட்டினப்பாலை
ஈ) அகநானூறு
Answer:
இ) பட்டினப்பாலை

9. காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்த பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்தபின் அவற்றின்மீது சுங்க அதிகாரிகள் பொறித்த சின்னம்

அ) வில்
ஆ) மீன்
இ) புலி
ஈ) சிங்கம்
Answer:
இ) புலி

10. சங்க இலக்கியங்களின் வாயிலாக மிகப் பெரிய துறைமுகமாகவும், யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் அறியப்படுவது

அ) கொற்கை
ஆ) முசிறி
இ) தொண்டி
ஈ) வஞ்சி
Answer:
ஆ) முசிறி

11. அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றிக் கூறுபவர்

அ) ஸ்ட்ரேபோ
ஆ) யுவான்சுவாங்
இ) பாகியான்
ஈ) மெகஸ்தனிஸ்
Answer:
அ) ஸ்ட்ரேபோ

12. யவனரது கப்பல்கள் பற்றிய குறிப்பு இடம்பெறும் பாடல்

அ) புறநானூற்றில் 56ஆம் பாடல்
ஆ) புறநானூற்றில் 86ஆம் பாடல்
இ) அகநானூற்றில் 56ஆம் பாடல்
ஈ) அகநானுற்றில் 86ஆம் பாடல்
Answer:
அ) புறநானூற்றில் 56ஆம் பாடல்

13. யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தியவன் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தில் குறிக்கப்படுபவன்

அ) சேரன் செங்குட்டுவன்
ஆ) உதியஞ் சேரலாதன்
இ) இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்
ஈ) இவற்றில் எவருமிலர்
Answer:
இ) இமயவரம்பன் நெடுஞ்சோலாதன்

14. ‘உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடைக்கண் முரிந்தார் பலர்’ என்ற குறட்பா உணர்த்தும் செய்தி

அ) தன்னுடைய வலிமையின் அளவை மீறிச்செயல்படுவோர் அழிவர்
ஆ) எந்தச் செயலையும் முடிக்க இயலும் என்பதை நம்ப வேண்டும்
இ) முடியாதது என்ற ஒன்று எவருக்குமே இல்லை
ஈ) தான் என்ற சர்வம் வெற்றியுடையவனாக்கும்
Answer:
அ) தன்னுடைய வலிமையின் அளவை மீறிச்செயல்படுவோர் அழிவர்

15. கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின் நல்லறிவு நாளுந் தலைப்படுவர்’ – என்று கூறும் நூல்

அ) திருக்குறள்
ஆ) நாலடியார்
இ) நன்மணிக்கடிகை
ஈ) ஏலாதி
Answer:
ஆ) நாலடியார்

16. ‘டைமன்’ பற்றிய ……………. நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கமாக அமைகிறது.

அ) வேர்ட்ஸ்வொர்த்தின்
ஆ) பெர்னாட்ஷாவின்
இ) ஷேக்ஸ்பியரின்
ஈ) டெமாஸ்தனிஸின்
Answer:
இ) ஷேக்ஸ்பியரின்
17.

“ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப்…”

– என நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் கவிஞர்

அ) கோவூர்கிழார்
ஆ) ஒளவையார்
இ) ஒக்கூர் மாசாத்தியார்
ஈ) கபிலர்
Answer:
ஆ) ஒளவையார்

18. ஹிராக்ளிடஸ் என்பவர் ……………. நாட்டவர் ஆவார்.

அ) கிரேக்க
ஆ) இத்தாலி
இ) அமெரிக்க
ஈ) ஆப்கானிய
Answer:
அ) கிரேக்க

19. ஹிராக்ளிடஸ் என்பார் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘துளிகள்’ என்னும் நூல் ……….. ஒற்றை வரிகளை உடையது.

அ) 124
ஆ) 126
இ) 154
ஈ) 224
Answer:
ஆ) 126

20. ‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ என்று எழுதியவர்

அ) ஹிராக்ளிடஸ்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) பெர்னாட்ஷா
ஈ) அரிஸ்டாட்டில்
Answer:
அ) ஹிராக்ளிடஸ்

குறுவினா

1. நேர மேலாண்மையை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

Answer:
செயல் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் ஏற்ற இடத்தையும் அறிந்து செயல்பட்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் கைகூடும் என்பதை.
“ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின் ” என்ற குறள் தெளிவுபடுத்துகிறது.

2. மடியின்மை என்னும் அதிகாரத்தின் வாயிலாக ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்கிறார்?

Answer:
“மடிஇலா மன்னவன் அய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு”
என்ற குறளில் உலகம் அனைத்தையும் அளந்த இறைவன் சோம்பல் இன்றி பாதுகாப்பது போல அரசனும் சோம்பல் இல்லாமல் தன் பெரு முயற்சியால் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்.

3. கடலைக் குறிக்கும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.

Answer:
அரலை, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, அரி, உவரி, திரை, பானல், பெருநீர், சுழி, நீராழி, புணர்ப்பு, ஆழி, ஈண்டு நீர், தென்நீர், பௌவம், முந்நீர், வரி, ஓதம், வலயம்.

4. சங்க இலக்கியங்கள் காட்டும் மிகப்பெரிய துறைமுகம் எது? யாருடைய கப்பல்கள் அங்கு இருந்தது?

Answer:
முசிறி, யவணர்களின் கப்பல்கள்.

5. பதிற்றுப்பத்து காட்டும் வணிக மேலாண்மை விளக்குக.

Answer:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக வைத்திருந்தான். பகை நாட்டுச் செல்வங்களைத் தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்று பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தின் மூலம் அறிய முடிகிறது.

6. வணிக மேலாண்மை விதி யாது?

Answer:
  • யாருடனும் போட்டி போடக்கூடாது.
  • போட்டிக்கு வருபவரை அழிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது.
  • போட்டியாளர்கள் நமக்குள் உந்து சக்தியை உற்பத்திச் செய்கிறார்கள்.

7. மனமே ஒரு வேளாண்மைக்குட்பட்ட மேலாண்மை விளக்குக.

Answer:
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைக்கட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர்…..
என்ற பாடலடிகளில் விளை நிலமாக இன்சொல்லும், விதையாக ஈதலும், வன்மையான சொல் களையாகவும் உண்மை என்ற எருவை விட்டு அன்பு நீர் பாய்ச்சி வேளாண்மை செய்ய வேண்டும் அறநெறிச்சாரம் விளக்குகிறது.

8. மேலாண்மையில் புலி – பூனை ஒப்பிடுக.

Answer:
பழமொழி :
புலியைப் பூனையைப் போல தொடர்ந்து நடத்தினால் அது பூனையாகவே ஆகிவிடும். புத்திசாலிகள் பூனைகளையும் புலியாக்குவார்கள் அவசரக்காரர்கள் புலிகளையும் எலியாக்குவார்கள் என்பதே புலி – பூனை மேலாண்மைக் கருத்தாகும்.

9. நாலடியார் கூறும் நிர்வாக மேலாண்மையை விளக்குக.

Answer:
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்…… என்கிறார் நாலடியார்.

10. வெ. இறையன்புவின் படைப்புக்களம் எதனை அடிப்படையாகக் கொண்டது?

Answer:
சிறுகதை, புதினம், தன்முன்னேற்ற நூல்,

11. நம்பிக்கை நூல். வெ. இறையன்புவின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல் ஆண்டு கூறுக.

Answer:
நூல் – வாய்க்கால் மீன்கள்
ஆண்டு – 1995

12. சங்க இலக்கியம் காட்டும் நிர்வாக மேலாண்மைக்குச் சான்றுகள் சில குறிப்பிடுக.

Answer:
அடுத்தவர் நலனுக்காக வாழ்பவரே தலைமைப்பண்பு உள்ளவர். இந்திரர்க்குரிய அமுதம் கிடைத்தாலும் தனித்து உண்ணார். அப்படித்தான் அதியன் அவ்வைக்கு நெல்லிக்கனியைத் தந்தான் என்பதை அறிய முடிகிறது.

சிறுவினா

1. சீனக்கதை வாயிலாக நேர மேலாண்மையை விளக்குக.

Answer:
  • சீனத்தில் யாங்சௌ என்ற பகுதி.
  • பல இளைஞர்கள் நீச்சல் வீரர்கள்.
  • நீச்சல் தன்னம்பிக்கை தருவதோடு எதிர்நீச்சல் போடவும் கற்றுத் தருகிறது.
  • ஒரு நாள் படகில் ஆழமான நதியில் பல இளைஞர்கள் பயணம் செய்கிறார்கள்.
  • வெள்ளம் ஏற்பட்டுப் படகு கவிழ்ந்தது.
  • அனைவரும் நதியில் விழுந்து நீச்சல் அடிக்க ஆரம்பித்தனர்.
  • ஒருவன் மட்டும் சரியாக நீந்தாமல் தத்தளித்தான்.
  • அவன் மற்ற வீரர்களைவிட சிறந்த வீரனும் கூட.
  • எல்லோரும் ஏன் பின் தங்குகிறாய்? என்று கேட்கிறார்கள். நீ சிறந்த வீரனே என்கிறார்.
  • அவன் என்னுடைய கச்சையில் ஆயிரம் பொற்காசுகள் உள்ளது. அதனால் என்னால் நீந்த முடியவில்லை என்றான்.
  • அவன் அவற்றை விடுவதற்கு மனமில்லாமல் தன் அரிய உயிரை நீத்தான்.
  • எது எந்த நேரத்தில் முக்கியம் என்று சரியான முடிவெடுப்பதில்தான் வாழ்வின் வெற்றி அடங்கி உள்ளது என்பது இக்கதை மூலம் அறிய முடிகிறது.

2. வணிக மேலாண்மையைப் பற்றி பட்டினப்பாலை கூறுவனவற்றை விளக்குக.

Answer:
(i) காவிரிப்பூம்பட்டினத்தில் மாரி காலத்து மழை மேகம் போல், கடல் வழியே வேற்று நாட்டு மரக்கலங்கள் வந்தன.
(ii) மரக்கலங்களில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தும், வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக அனுப்பவும் கணக்கிட இயலாத பொருட்கள் பண்டகசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
“வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்” – பட்டினப்பாலை 126 – 132
என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகிறது.

3. காவிரிப் பூம்பட்டினத்து துறைமுகம் பற்றிக் குறிப்பு வரைக.

Answer:
  • பல நாடுகளில் இருந்து மரக்கலங்கள் வந்தன.
  • ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்கள் முற்றத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
  • சுங்க வரி வசூலிக்கப்பட்டன.
  • வரி வசூலித்த பின் புலிச்சின்னம் பொறித்தனர்.
  • வரி ஏய்ப்பவர்களை கண்காணிக்க வலிமை மிக்கவர்கள் இருந்தனர்.

4. ஷேக்ஸ்பியரின் நாடகம் வழி ஔவையாரின் நல்வழியை ஒப்பிட்டு நிதி மேலாண்மையை விளக்குக.

Answer:
  • டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான்.
  • வரவு குறைவு செலவு அதிகம் நீடித்தது.
  • உதவியாளர் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தான்.
  • கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரித்தார்கள்.
  • அதற்கும் அவன் வருந்தவில்லை .
  • தன்னிடம் விருந்து உண்டவர்கள் உதவுவார்கள் என்று எண்ணினான். அதுவும் பொய்யானது.
  • சேவகர்கள் நான்கு திசை சென்றும் வெறும் கையோடு திரும்பினர்.
  • டைமன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான்.
  • மனித இனத்தையே வெறுக்கிறான்.
இதையே ஔவையார் ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் – போன திசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழி பிறப்புக்கும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. வரவுக்கு அதிகம் செலவு செய்து, மானம் அழிந்து மதிக்கெட்டு, எந்தத் திசை போனோம் என்று தெரியாமல் திருடனாய், தீயவனாய் வாழும் நிலை ஏற்படும் என்று ஷேக்ஸ்பியர் நாடகத்தோடு ஒப்பிடுகிறார்.

5. மேலான மேலாண்மை என்பது என்ன?

Answer:
  • மேலாண்மை என்பது வெறும் புத்தக அறிவுடன் முடிவதன்று.
  • நொடிக்கு நொடி சூழல்கள் மாறிக் கொண்டே இருப்பது.
  • ஏற்கனவே தயாரித்த அறிவுரைகளை வைத்து புதிய நெருக்கடியை நேர்கொள்ள முடியாது.
  • முன் அனுபவம் என்பது எதிர்மறை ஆகிவிட்டது.
  • அனுபவசாலிகள் செக்குமாடாகத்தான் இருப்பார்கள்.
  • நமக்குத் தேவை ஜல்லிக்கட்டுக் காளைகள்.

6. வெ. இறையன்பு குறிப்பு வரைக.

Answer:
பெயர் : வெ.இறையண்பு
பதவி : இந்தி ஆட்சிப்பணி (தமிழ்நாடு)
சிறப்பு : ஐ.ஏ.எஸ். தேர்வு தமிழில் எழுதி வெற்றிப் பெற்றவர்
நூல்கள் : வாய்க்கால் மீன்கள், ஐ.ஏ.எஸ். வெற்றிப்படிக்கட்டுகள், ஏழாவது அறிவு, உள்ளொளிப்பயணம், மூளைக்குள் சுற்றுலா
சிறப்புகள் : வாய்க்கால் மீன்கள் : 1995 – தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற நூல் மற்றும் பட்டிமன்ற நடுவர்.

கற்பவை கற்றபின்-12th Tamil Book Back Answers Unit 7.1

1. புறச்சூழல்களுக்கு ஏற்ப உங்கள் நேர மேலாண்மையைப் பயன்படுத்திக் கல்வியில் கவனம் செலுத்துவதற்கான வழிமுறைகள் குறித்துக் கலந்துரையாடுக.

Answer:
(நேசனும், வாசனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள், பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் வாசன் வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்குவான். நேசன் குறைவான மதிப்பெண்களே வாங்குவான். ஒருநாள் கல்வி பற்றி இருவரும் உரையாடுகின்றனர்)
நேசன் : வாசன் நீ எப்படியோ நல்ல மதிப்பெண் பெற்று விடுகிறாய். என்னால் அது முடியவில்லையே என்ன காரணம் கூற முடியுமா.
வாசன் : வகுப்பில் ஆசிரியர் பாடத்தை நடத்தும் போது நன்றாகப் படிப்பேன். வீட்டிற்கு வந்தபின் இரண்டு முறை படிப்பேன்.
நேசன் : வீட்டிற்கு வந்து இரண்டு முறை படிப்பாயா? எப்படி உனக்கு நேரம் கிடைக்கிறது! வாசன் : ஏன் நேரம் கிடைக்காது! மாலை 5 மணிக்கு வீடு திரும்புவேன். ஒரு தேநீர் அருந்துவேன்.
அறை மணி ஓய்வெடுப்பேன். சரியாக 6 மணிக்கு படிக்க ஆரம்பித்துவிடுவேன்.
நேசன் : அப்படியாநான் 5-6 பள்ளியிலேயே கிரிக்கெட்விளையாடுவேன். 6-8தொலைக்காட்சி பார்ப்பேன். 9 மணிக்குச் சாப்பிடுவேன். 9 – 10 க்குள் தூங்க ஆரம்பித்து விடுவேன்.
வாசன் : தயவுசெய்து நான் சொல்வதைக்கேள். இனிமேல் என்னைப் பின்பற்று. என் அறிவுரைகளைக் கேள்.
நேசன் : சரி அப்படியே செய்கிறேன் சொல்.
வாசன் : காலை 5 மணிக்குள் எழுந்திரு.
முகம் கழுவி, பல் துலக்கி, 5.15க்குள் புத்தகத்தைக் கையில் எடு.
1.30 மணி நேரம் தொடர்ந்து படி.
7.30 க்குள் குளி, பள்ளிக்குத் தயாராகு.
8 மணிக்குச் சாப்பாடு
8.30 மணிக்குப் பள்ளி
5 – 6 மணிக்கு வீடு திரும்பு
6 – 8 வரை தொலைக்காட்சி, விளையாட்டுகளைத் தவிர்த்துப் படி. நிச்சயம் முன்னேற்றம் கிட்டும்.
நேசன் : நன்றி நண்பா, நிச்சயம் உன் பேச்சைக் கேட்பேன், வெற்றி பெறுவேன்.

Leave a Reply