You are currently viewing 6th Tamil Guide Term 1 Lesson 2.2

6th Tamil Guide Term 1 Lesson 2.2

6th Tamil Guide Term 1 Lesson 2.2

TN 6th Standard Tamil Book Back Answers Term 1 Lesson 2.2 காணி நிலம்

6th Tamil Guide. 6th Std Tamil Term 1 Lesson 2.2 காணி நிலம் Book Back Question and answers download pdf. 6th all subject book back question and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide Term 1 Lesson 1.1

6th Tamil Guide Term 1 – Lesson 2.2 இயற்கை – காணி நிலம்

  • இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.
  • அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.
  • எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.
  • தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.
  • அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.
  • மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.
  • நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.
  • பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார்.
  • பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  1. காணி – நில அளவைக் குறிக்கும் சொல்
  2. மாடங்கள் – மாளிகையின் அடுக்குகள்
  3. சித்தம் – உள்ளம் .

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “கிணறு” என்பதைக் குறிக்கும் சொல் __________________

  1. ஏரி
  2. கேணி
  3. குளம்
  4. ஆறு

விடை : கேணி

2. “சித்தம்” என்பதன் பொருள் _____________________

  1. உள்ளம்
  2. மணம்
  3. குணம்
  4. வனம்

விடை : உள்ளம்

3. “மாடங்கள்” என்பதன் பொருள் மாளிகையின் _________________

  1. அடுக்குகள்
  2. கூரை
  3. சாளரம்
  4. வாயில்

விடை : அடுக்குகள்

4. “நன்மாடங்கள்” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________

  1. நன் + மாடங்கள்
  2. நற் + மாடங்கள்
  3. நன்மை + மாடங்கள்
  4. நல் + மாடங்கள்

விடை : நன்மை + மாடங்கள்

5. “நிலத்தினிடையே” என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் ___________________

  1. நிலம் + இடையே
  2. நிலத்தின் + இடையே
  3. நிலத்து + இடையே
  4. நிலத் + திடையே

விடை : நிலத்தின் + இடையே

6. “முத்து + சுடர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. முத்துசுடர்
  2. முச்சுடர்
  3. முத்துடர்
  4. முத்துச்சுடர்

விடை : முத்துச்சுடர்

7. “நிலா + ஒளி” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______

  1. நிலாஒளி
  2. நிலஒளி
  3. நிலாவொளி
  4. நிலவுஒளி

விடை : நிலாவொளி

III. பொருத்துக.

  1. முத்துச்சுடர்போல – அ. தென்றல்
  2. தூய நிறத்தில் – ஆ. நிலாஒளி
  3. சித்தம் மகிழ்ந்திட – இ. மாடங்கள்

விடை : 1 – , 2 – , 3 –

IV. நயம் அறிக.

1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

  • முத்து – முன்பு
  • பத்து – பக்கத்திலே
  • அங்கு – அந்த
  • நிறத்தினதாய் – நிலத்திடையே

2. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை ச் சொற்களை எடுத்து எழுதுக.

  • காணி – கேணி
  • தென்றல் – நன்றாய்
  • பன்னிரண்டு – தென்னைமரம்
  • பத்து – சித்தம்

V. குறுவினா

1. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?

  • காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.
  • அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும்.
  • நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.
  • இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.
  • காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று பாரதியார் வேண்டுகிறார்

2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக.

  • பாரதியார் ஒர் இயற்கை கவிஞர் ஆவார். அவருடைய பாடல்களில் அதிகம் இயற்கை வர்ணனைகளே இடம் பெற்றிருக்கும்
  • “நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
  • காக்கை குருவி எங்கள் கூட்டம்”…
  • என்று பல பாடல்களை பாடி இருப்பதன் மூலம் அவரது இயற்கை வெளிப்பாடு தெரிகிறிது.
  • எந்தவொரு கவிஞனும் இயற்கையோடு ஒன்றிருக்காவிடில் கவிதையை இயற்ற முடியாது. அந்த அளவிற்கு இயற்கை, கவிஞனுக்கு கவிதைகளை அள்ளித் தெளிக்கிறது. அப்படி இருக்கும்போது பாரதிக்கு இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பமானது புதிதல்ல்.
  • பாரதியார் தன் வாழ்வை இயற்கையோடே அமைத்து கொண்டார். அவர் தன் பார்வையில் பட்ட அனைத்துப் பொருட்களையும் இயற்கையாகவே கண்ணுற்றார். அது மட்டுமல்லாமல் அவர் பாடாத இயற்கை பொருட்களே இல்லை.
  • இயற்கையோடே வாழவும் கற்றுக் கொண்டார். வாழ்ந்தும் காட்டியவர் அவர் இயற்றிய காணிநிலம் பாடலில் கூட, காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும்.
  • அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும்.
  • இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவெளி வீச வேண்டும்.
  • காதுக்கு இனிய குரலின் குரேலாசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும் என்று போல பாரதியார் பாடியுள்ளார்.
  • இவற்றையெல்லாம் பார்க்கும்போது பாரதியார் இயற்கையின் மீது பராசக்தியிடம் கொண்டுள்ள விருப்பம் வெளியிடப்படுகிறது.

காணி நிலம் கூடுதல் வினாக்கள்

I. சேர்த்து எழுதுதல்

  1. இளமை + தென்றல் – இளந்தென்றல்
  2. பத்து + இரண்டு – பன்னிரண்டு

II. கோடிட்ட இடங்களை நிரப்புதல்

  1. பாரதியாரின் இயற்பெயர் ________________விடை : சுப்பிரமணியன்
  2. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் ________________விடை : பாரதியார்.
  3. பாரதியார் ________________, ________________, ________________ நூல்களை இயற்றி உள்ளார்.விடை : பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு

III. பொருத்துக

  1. தூண் – அ. முத்துச்சுடர்
  2. மாடம் – ஆ. அழகு
  3. நிலா ஒளி – . தூயநிறம்

விடை : 1 – , 2 – , 3 –

Leave a Reply