You are currently viewing 6th Tamil Guide Term 2 Lesson 3.2

6th Tamil Guide Term 2 Lesson 3.2

6th Tamil Guide Term 2 Lesson 3.2

TN 6th Standard Tamil Book Back Answers – Term 2 Lesson 3.2 கடலோடு விளையாடு Solution Guide

6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 3.2 கடலோடு விளையாடு Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide Term 2 – Lesson 3.2 கூடித் தொழில் செய் – கடலோடு விளையாடு Guide

நூல் வெளி

உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும்.

காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.

இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

I. சொல்லும் பொருளும்

  • கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி
  • மின்னல்வரி – மின்னல் கோடுகள்
  • அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “கதிர்ச்சுடர்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. கதிர்ச் + சுடர்
  2. கதிரின் + சுடர்
  3. கதிரவன் + சுடர்
  4. கதிர் + சுடர்

விடை : கதிர் + சுடர்

2. “மூச்சடக்கி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது ________

  1. மூச்சு + அடக்கி
  2. மூச் + அடக்கி
  3. மூச் + சடக்கி
  4. மூச்சை + அடக்கி

விடை : மூச்சு + அடக்கி

3. “பெருமை + வானம்” என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. பெருமைவானம்
  2. பெருவானம்
  3. பெருமானம்
  4. பேர்வானம்

விடை : பெருவானம்

4. அடிக்கும் + அலை என்பதைச் சேர்த்து எழுதக்கிடைக்கும் சொல் _______

  1. அடிக்குமலை
  2. அடிக்கும் அலை
  3. அடிக்கிலை
  4. அடியலை

விடை : அடிக்குமலை

III. பாடல் வரிகளுக்கு ஏற்ப பொருத்துக

  1. விடிவெள்ளி அ. பஞ்சுமெத்தை
  2. மணல் ஆ. ஊஞ்சல்
  3. புயல் இ. போர்வை
  4. பனிமூட்டம் ஈ. விளக்கு

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 –

IV. குறுவினா.

1. அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?

  • மீனவர்கள் அலையத் தாேழனாகவும் மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.

2. கடல் பாடலில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?

  • கடல் பாடலில் நிலவு கண்ணாடியாகவும் வானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.

V. சிறு வினா

கடல் பாட்டின் பொருளை உங்கள் சொந்த நடையில் எழுதுக

  • மீனவர்களுக்கு,  விண்மீன்களே விளக்காகவும், விரிந்த கடலே பள்ளிக்கூடமாகவும்; கடல் அலையே உற்றத் தோழனாகவும்; மேகமே குடையாகவும்; வெண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தையாகவும்; விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்தாகவும்; சீறிவரும் புயல் விளையாடும் ஊஞ்சலாகவும்; பனிமூட்டம் உடலைச் சுற்றும் போர்வையாகவும்; அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர் மேற்கூரையாகவும்; கட்டுமரம் அவர்கள் வாழும் வீடாகவும்; மின்னல் கோடுகள் அடிப்படைப் பாடமாகவும்; வலை வீசிப் பிடிக்கும் மீன்கள்  அவர்களுது செல்வமாகவும்; முழு நிலவு கண்ணாடியாகவும்; மூச்சடிக்கி செய்யும் நீச்சல் அவர்களது தவமாகவும்; தொழும் தலைவன் பெருவானமாகவும் விளங்குகின்றன.
  • இவற்றுக்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்து வாழ்கின்றனர்.

கடலோடு விளையாடு – கூடுதல் வினாக்கள்

I. பிரித்து எழுதுக

  1. வெண்மணல் = வெண்மை + மணல்
  2. உடற்போர்வை = உடல் + போர்வை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. “தாழம்பூ” _______________ திணைக்கு உரியதுவிடை : நெய்தல்
  2. மீனவர்களுக்கு கடல் அலை _______________விடை : தோழன்
  3. “கட்டுமரம்” என்பது மீனவர்களுக்கு _______________விடை : வீடு
  4. “சுடர்” தரும் பொருள் _______________விடை : ஒளி

III. பொருத்துக

  1. மேகம் அ. தோழன்
  2. கடல் ஆ. குடை
  3. நீச்சல் இ. வீடு
  4. கட்டுமரம் ஈ. விளக்கு

விடை : 1 – ஆ, 2 – அ, 3 – ஈ, 4 –

IV. குறு வினா

1. மீனவர்களுக்கு விளக்குகள் எவை?

  • மீனவர்களுக்கு விண்மீன்களே விளக்காகும்

2. மீனவர்களுக்கு மேற்கூரை எது?

  • அலை வீசும் கதிரவனின் ஒளிச்சுடர் தான் மீனவர்களுக்கு மேற்கூரையாகும்

3. மீனவர்கள் வாழும் வீடு எது?

  • கட்டுமரமே மீனவர்கள் வாழும் வீடாகும்

4. மீனவர்கள் செய்யும் குறித்துக் கூறுக

  • மூச்சடிக்கி செய்யும் நீச்சலே மீனவர்கள் செய்யும் தவமாகும்.

5. மீனவர்களுக்கு பஞ்சு மெத்தையாகவும் கூத்தாகவும் எதனைக் குறிப்பிடுகின்றனர்?

  • வெண்மையான மணலே மீனவர்கள் படுத்துறங்கும் பஞ்சு மெத்தை என்றும் விண்ணின் இடியையே கூத்தாகவும் குறிப்பிடுகின்றனர்

6. நாட்டுப்புறப்பாடல் வகைகள் சிலவற்றை எழுது

  • ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில் பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள்

7. வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?

  • காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டுவரும் நாட்டுப்புறப் பாடல்களை வாய்மொழி இலக்கியம் என்பர்

8. நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் தொகுப்பு நூலை எழுதியவர் யார்?

  • க.சக்திவேல்

9. நெய்தல் திணையின் பெரும் பொழுதுகள் யாவை?

  • கார் காலம், குளிர் காலம், முன்பனி காலம், பின்பனி காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம்

10. நெய்தல் திணையின் முதல், கருப்பொருளைக் கூறுக

நிலம்

கடலும் கடல் சார்ந்த இடம்

சிறுபொழுது

ஏற்பாடு

பெரும்பொழுது

  • கார் காலம்
  • குளிர் காலம்
  • முன்பனி காலம்
  • பின்பனி காலம்
  • இளவேனில் காலம்
  • முதுவேனில் காலம்

தெய்வம்

வருணன்

மக்கள்

பரதர், பரத்தியர்

தொழில்

மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

பூ

தாழம்பூ

Leave a Reply