You are currently viewing 6th Tamil Guide Term 3 Lesson 2.2

6th Tamil Guide Term 3 Lesson 2.2

6th Tamil Guide Term 3 Lesson 2.2

TN 6th Standard Tamil Guide – Book Back Answers Term 3 Lesson 2.2 நீங்கள் நல்லவர் Solution

6th Tamil Guide. 6th Std Tamil Term 3 Lesson 2.2 நீங்கள் நல்லவர் Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide 2nd Term Lesson 2.2 எல்லாரும் இன்புற – நீங்கள் நல்லவர்

கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர்,

புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.

இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

I. சொல்லும் பாெருளும்

  • சுயம் – தனித்தன்மை
  • உள்ளீடுகள் – உள்ளே இருப்பவை

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரிசு பெறும்போது நம் மனநிலை ……………… ஆக இருக்கும்

  1. கவலை
  2. துன்பம்
  3. மகிழ்ச்சி
  4. சோர்வு

விடை : மகிழ்ச்சி

2. வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.

  1. பேச
  2. சிரிக்க
  3. நடக்க
  4. உழைக்க

விடை : உழைக்க

III. குறுவினா

1. பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?

  • பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க் கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் செல்லாது. கொடுப்பது பழத்தின் இயல், பெறுவது வேரின் இயல்பு

2. உழைக்கும் போது என்னவாக ஆகிறோம்?

  • உழைக்கும் போது புல்லாங்குழலாக மாறுகிறோம்

IV. சிறுவினா

நீங்கள் நல்லவர் என்னும் இப்பாடல் விளக்கும் கருத்துகளைத் தாெகுத்து எழுதுக.

  • வாழ்க்கை பின் திரும்பிச் செல்லாது. நேற்றுடன் ஒத்து போகாது. கொடுப்பவரின் பரிசுடன் அவருக்கு சமமாக எழுதுங்கள்
  • சிறகுகளின் மீது எழுவது போல, உழைக்கும் போது நீங்கள் புல்லாங்குழலாகி விடுங்கள். அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை ஓர் இசையாக மாற்றி விடுகிறது. உங்களுக்குள் இருக்கும் நன்மையை பற்றித்தான் நான் பேசமுடியம்
  • தீமையைப் பற்றி பேச முடியாது. உங்கள் சுயத்துடன் நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும்போது நீங்கள் நல்லவர்.
  • என்னைப்போல் இரு. பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க் கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் செல்லாது. கொடுப்பது பழத்தின் இயல், பெறுவது வேரின் இயல்பு
  • உங்கள் பேச்சின் போது நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. உறுதியாகக் கால்பதித்து உங்கள் குறிக்கோளை நோக்கி நடக்கையில் நீங்கள் நல்லவர்.

கூடுதல் வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. உழைக்கும் மனிதர்கள் என்னவாக மாறிவிடுகிறார்கள் எனக் கவிஞர் கலீல் கிப்ரான் கூறுகிறார்?

  1. வேர்
  2. பழம்
  3. புல்லாங்குழல்
  4. இசை

விடை : புல்லாங்குழல்

2. எடுத்த செயலில் தாேற்றாலும் ……………. கைவிடக் கூடாது.

  1. சோர்வு
  2. தளர்வு
  3. துன்பம்
  4. முயற்சி

விடை : முயற்சி

3. தாேல்வி வந்தாலும் ………………… இழக்கக் கூடாது

  1. சோர்வு
  2. காேபம்
  3. கவலை
  4. தன்னம்பிக்கை

விடை : தன்னம்பிக்கை

4. காெடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது …………….. இயல்பு

  1. வேரின்
  2. மனிதனின்
  3. பறவையின்
  4. கிளையின்

விடை : வேரின்

5. பாெருந்தாத இணையைத் தேர்ந்தெடு

  1. உழைப்பு – கவிதை
  2. காெடுப்பது – பழம்
  3. இதயம் – இசை
  4. பெறுவது – வேர்

விடை : உழைப்பு – கவிதை

6. பாராட்டும் பாேது பாராட்டப்படுபவரின் மனநிலை ………………….

  1. மகிழ்ச்சி
  2. துன்பம்
  3. சோர்வு
  4. கவலை

விடை : மகிழ்ச்சி

7. பன்முக ஆற்றல் என்பது …………………..

  1. முக ஒப்பனை பெய்யும் திறன்
  2. பாடல் பாடும் திறன்
  3. பல முகங்கள் காெண்டவர்
  4. பல திறன்களைக் காெண்டவர்

விடை : பல திறன்களைக் காெண்டவர்

8. ‘நீங்கள் நல்லவர்’ எனும் கலீல் கிப்ரானின் பாடலைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தவர் …………………..

  1. கண்ணதாசன்
  2. வைரமுத்து
  3. புவியரசு
  4. அழ. வள்ளியப்பா

விடை: புவியரசு

9. சுயம் என்பதன் பாெருள் ……………….

  1. வாழ்க்கை
  2. தனித்தன்மை
  3. இசை
  4. செழிப்பு

விடை : தனித்தன்மை

10. கலீல் கிப்ரான் அவர்கள் ………………. நாட்டைச் சார்ந்தவர்

  1. லெபனான்
  2. ஸ்பெயின்
  3. இஸ்ரேல்
  4. அரபுநாடு

விடை : லெபனான்  

II. எதிர்ச்சாெல் எழுதுக

  1. நன்மை x தீமை
  2. நல்லவர் x கெட்டவர்
  3. எழுவது x விழுவது
  4. காெடுப்பது x பெறுவது

III. வினாக்கள்

1. கலீல் கிப்ரான் பெற்றுள்ள பன்முக ஆற்றல் யாவை?

  • கவிஞர்
  • புதின ஆசிரியர்
  • கட்டுரையாசிரியர்
  • ஓவியர்

2. நீங்கள் நல்லவர் பாடப்பகுதி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

  • நீங்கள் நல்லவர் பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

3. மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துவது எது?

  • மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துவது இலக்கியங்கள் ஆகும்.

4. இலக்கியங்கள் மனித வாழ்விற்கு என்ன செய்கின்றன?

  • இலக்கியங்கள் மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன.

5.  கவிஞர்கள் எதனை கூறியுள்ளனர்?

  • கவிஞர்கள் வாழ்வின் பொருளை உணர்த்தும் உயர்ந்த சிந்தனைகளைக் கூறியுள்ளனர்.

Leave a Reply