You are currently viewing 6th Tamil Guide Term 3 Lesson 2.1

6th Tamil Guide Term 3 Lesson 2.1

6th Tamil Guide Term 3 Lesson 2.1

TN 6th Standard Tamil Guide Book Back Answers Term 3 Lesson 2.1 பராபரக்கண்ணி

6th Tamil Guide. 6th Std Tamil Term 3 Lesson 2.1 பராபரக்கண்ணி Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide Term 3 – Lesson 2.1 எல்லாரும் இன்புற – பராபரக்கண்ணி Book in Answers

பராபரக்கண்ணி பாடலை எழுதியவர் தாயுமானவர்.

திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.

இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது.

இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர்.

இப்பாடல்கள் ‘பராபரக் கண்ணி’ என்னும் தலைப்பில் உள்ளன.

கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை.

I. சொல்லும் பாெருளும்

  • தண்டருள் – குளிர்ந்த கருணை
  • கூர் – மிகுதி
  • செம்மையருக்கு – சான்றோருக்கு
  • ஏவல் – தாெண்டு
  • பராபரமே – மேலான பொருள்
  • பணி – தொண்டு
  • எய்தும் –  கிடைக்கும்
  • எல்லாரும் – எல்லா மக்களும்
  • அல்லாமல் – அதைத்தவிர

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. “தம் + உயிர்” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. தம்முயிர்
  2. தமதுயிர்
  3. தம்உயிர்
  4. தம்முஉயிர்

விடை : தம்முயிர்

2. “இன்புற்று + இருக்கை” என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________-

  1. இன்புற்றிருக்கை
  2. இன்புறுறிருக்கை
  3. இன்புற்றுஇருக்கை
  4. இன்புறுஇருக்கை

விடை : இன்புற்றிருக்கை

3. “தானென்று” என்பதனைச் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. தானெ + என்று
  2. தான் + என்று
  3. தா + னென்று
  4. தான் + னென்று

விடை : தான் + என்று

4. “சோம்பல்” என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் ______________

  1. அழிவு
  2. துன்பம்
  3. சுறுசுறுப்பு
  4. சோகம்

விடை : சுறுசுறுப்பு

III. நயம் அறிக

பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.

மோனைச் சொற்கள் :-

  • ம்உயிர்போல் – ண்டருள்
  • செம்மையருக்கு – செய்வேன்
  • ன்புற்று – ருக்க
  • ல்லாமல் – றியேன்

எதுகைச் சொற்கள் :-

  • ம்உயிர்போல – செம்மையருக்கு
  • செய்யஎனை – எய்தும்
  • ன்பர்பணி – இன்பநிலை
  • ல்லாரும் – அல்லாமல்

IV குறுவினா

1. யாருக்குத் தாெண்டு செய்ய வேண்டும்?

  • அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும்.

2. இன்பநிலை எப்போது வந்து சேரும்?

  • அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும்.

V. சிறுவினா

பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?

  • அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தாெண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தாெண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும் இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.

பராபரக்கண்ணி – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்பக

  1. பராபரமே என்பதற்கு _______________ என்று பொருள்விடை : மேலான பொருள்
  2. எல்லாரும் _______________ வாழ வேண்டும்.விடை : இன்பமாக
  3. பராபரக்கண்ணி _______________ என்னும் நூலில் உள்ளதுவிடை : தாயுமானவர் பாடல்கள்
  4. _______________ எனப் போற்றப்படுவது பராபரக்கண்ணிவிடை : தமிழ் மொழி உபநிடதம்
  5. “கூர்” என்பதனைக் குறிக்கும் மற்றொரு சொல் _______________விடை : மிகுதி

II. பிரித்து எழுதுக

  1. எவ்வுயிரும் = எ + உயிரும்
  2. இன்பநிலை = இன்பம் + நிலை
  3. இன்புற்ற = இன்பம் +உற்ற
  4. வேறொன்று = வேறு + ஒன்று
  5. வந்தெய்தும் = வந்து + எய்தும்
  6. ஆளாக்கி = ஆள் + ஆக்கி

III. பொருள் அறிக

  1. ஏவல் = தொண்டு
  2. பணி = தொண்டு
  3. எய்தும் = கிடைக்கும்

IV. எதிர்ச்சொல் எழுதுக

  1. இன்பம் x துன்பம்
  2. வந்து x சென்று
  3. நினைக்க x மறக்க

V. வினாக்கள்

1. தாயுமானவர் எதையும் நினைக்க மாட்டேன் என்று எதை கூறுகிறார்?

  • எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன் என்று தாயுமானவர் வேண்டுகிறார்.

2. தாயுமானவர் பற்றி குறிப்பு எழுதுக

  • பராபரக்கண்ணி என்னும் நூலை எழுதியவர் தாயுமானவர்
  • திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்காராகப் பணி புரிந்தவர்.

3. அற இலக்கியங்கள் எவற்றை உள்ளடக்கியவையாகும்?

  • அற இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை.

4. அற இலக்கியங்கள் விளக்குபவை யாவை?

  • அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை.

5. எது சிறந்த வாழ்வு?

  • நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த வாழ்வு.

Leave a Reply