7th Tamil Guide Term 3 lesson 2

7th Tamil Guide Term 3 Unit 2.4

7th Tamil Guide Term 3 Unit 2.4 | 7th Tamil Samacheer Kalvi guide Term 3, Lesson 2 Book Back Answers

7th Tamil Term 3 Unit 2.4 Book Back Answers

2.4 உண்மை ஓளி

TN 7th Tamil Term 3, Lesson 2, Unit 2.4 உண்மை ஓளி  Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Book Back Answers. Class 7 Term 1, Term 2, Term 3 Book Answers Solutions. Tamil Nadu State Board Syllabus Samacheer Kalvi 7th Tamil Book Answers Solutions Guide Download  Pdf. 7th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 7th Std Tamil Guide Pdf. Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Unit Wise Important Questions with answers, Study Material, Question Bank, Model Questions, Revision Test question Papers, Notes, and revise our understanding of the subject. Samacheer Kalvi 10th & 12th Tamil Book Solutions Guide Pdf Free Download, Tamilnadu State Board Samacheer Kalvi 7th Tamil Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

7th Tamil Samacheer Kalvi Guide Term 3, Unit 2.4 Book Back Answers

7th Tamil Guide Term 3 Unit 2.4

 1.ஜென் கதைகளில் வேறு சிலவற்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.

விடை:

மன நிறைவு ஓர் ஊரில் செல்வன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் அளவுக்கதிகமாகச் செல்வம் இருந்தது. வேலையாட்கள் நிறைய பேர் இருந்தனர். ஆனால் அவனால் மனம் நிறைவுடன்வாழ முடியவில்லை . ஒரு நாள் அந்த ஊருக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார்.
 
அவரிடம் செல்வந்தன் தனக்கு மனநிறைவுக்கு வழி சொல் வேண்டினான். துறவி மூன்று கல்லைச் செல்வந்தனைத் தூக்கத் செய்து மலை மீது அவனால் ஏறமுடியவில்லை . மிகவும் கனமாக உள்ளது ,என்னால் தூக்க முடியவில்லை என்றான். துறவி ஒருகல்லைத் தூக்கிப் போடச் சொன்னார். இதே போலவே ஒவ்வொரு முறையும் கூற ஒவ்வொரு கல்லாய் தூக்கிப் போடச் சொன்னார்.
 
இறுதியில் துறவி இப்போது பாரம் குறைந்ததா? என்றார். செல்வந்தரும் ,ஆம்! என்றார். உன்னிடம் உள்ள அளவில்லாத செல்வம்தான் பாரம். அதனை ஏழைகளுக்கு கொடுத்துவிட பாரம் குறைந்து உன்மனம் நிறைவடையும் என்றார். அவனும் அப்படியே செய்து மன நிறைவு அடைந்தேன்.

2.உண்மை ஒளி’ படக்கதையை வகுப்பறையில் நாடகமாக நடித்துக் காட்டுக.

காட்சி -1

ஜென் குரு :
குழந்தைகளே! உண்மையான ஒளி எது என்பதைப் பற்றி இன்று அறிந்து கொள்ளப் போகிறோம்.
 
மாணவர்கள் :
அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் ஐயா!
 
ஜென் குரு :
பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றே. பசி, தாகம், தூக்கம் ஆகியவை எல்லா உயிர்களுக்கும் உண்டு.
மேலும் இரவும் பகலும் மாறி மாறி வருவது போல வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா? இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது என்பதை எந்த நொடியில் நீங்கள் அறிவீர்கள்?
 
மாணவன் :
தொலைவில் நிற்கும் விலங்கு குதிரையா? கழுதையா? என்பதை அடையாளம் காணக்கூடிய நொடியில் வெளிச்சம் வந்துவிட்டதை நான் அறிவேன் ஐயா.
 
ஜென் குரு :
இல்லை. வேறு யாராவது கூறுங்கள் பார்ப்போம்.
 
மாணவன் :
தூரத்திலிருக்கும் மரம் ஆலமரமா? அரசமரமா? என்பதை அடையாளம் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்துவிட்டது என்பதை அறியலாம். சரிதானே ஐயா!
 
ஜென் குரு :
இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா? மாணவர்கள் எங்களுக்குத் தெரியவில்லை ஐயா. தாங்களே கூறி விடுங்கள்.
 
ஜென் குரு :
ஒரு மனிதரைக் காணும் போது இவர் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள்.
 
மாணவர்கள் :
இரவும் பகலும் வெறும் கால வேறுபாடுகள் தான். உண்மையான ஒளி உள்ளத்தின் உள்ளே ஏற்பட வேண்டியது என்பதை தாங்கள் புரிந்துகொண்டோம் ஐயா.
 
ஜென் குரு :
உள்ளுக்குள் ஒளி இல்லையென்றால் உச்சி வெயில் கூடக் காரிருளே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து செல்கின்றனர்.
 

காட்சி – 2

(குரு அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்படுகிறார்.)
ஜென் குரு :(மனதிற்குள்) இருட்டுவதற்குள் ஊரை அடைய வேண்டும்.
 
ஜென் குரு :
(வழியில்) ஆ! யாரது சாலையோரம் படுத்துக்கிடப்பது. (குதிரையை நிறுத்தி, கீழே இறங்கிய குரு அந்த மனிதனை எழுப்புகிறார்)
 
ஜென் குரு :
குழந்தாய்! எழுந்திரு. நீ யார்? ஏன் இங்கே படுத்திருக்கிறாய்?
(மனதிற்குள்) இவன் மயக்கம் அடைந்திருக்கிறான்.
(படுத்திருப்பவனுக்கு நீரைப் பருகத் தருகிறார் குரு.)
 
ஜென் குரு :
குழந்தாய்! எழுந்திரு . இந்த நீரைக் கொஞ்சம் குடி.
(மயக்கமடைந்தவன் எழுந்து உட்காருகிறான்.)
 
வழிப்போக்கன் :
பசியால் மயங்கி விழுந்து விட்டேன். ஐயா. நான் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டும்.
 
ஜென் குரு :
அப்படியா! சரி என்னிடம் குதிரையிருக்கிறது. நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். (குரு , அவனைத் தன் குதிரையின் மீது உட்கார வைக்கிறார்.)
 
ஜென் குரு :
மெதுவாக ஏறுப்பா! பார்த்து உட்கார். (குதிரையில் ஏறிய அவன் குதிரையை அடித்து விரட்டத் தொடங்குகிறான்.)
 
ஜென் குரு :
ஆ! என்ன இது? ஓ! இவன் திருடன் போல இருக்கிறது. என் குதிரையைத் திருடவே இப்படி நடித்திருக்கிறான். (குரு ஏமாற்றத்துடன் நடந்து ஊரை அடைகிறார்.)

காட்சி – 3

இடம் : சந்தை
 
ஜென் குரு – (மனதிற்குள்) இங்கு எப்படியாவது ஒரு குதிரையை வாங்கிக் கொண்டுதான் ஊருக்குத் திரும்ப வேண்டும்.
 
ஜென் குரு :  ஆ! அதோ அங்கு நிற்பது என்னுடைய குதிரையைப் போல் உள்ளதே
(குருவிடம் குதிரையைத் திருடியவன் அங்கு நிற்கிறான். குரு அவன் தோளைத் தொடுகிறார்)
 
ஜென் குரு : குழந்தாய்!
 
திருடன் : ஆ. நீங்களா? (குரு மெல்லச் சிரிக்கிறார்)
 
ஜென் குரு : யாரிடமும் சொல்லாதே !
 
திருடன் : எதை? ஏன்?
 
ஜென் குரு : குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது என்று யாரிடமும் சொல்லாதே.
 
திருடன் : (மனத்திற்குள்) இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.
 
ஜென் குரு : நீ நினைப்பது எனக்குப் புரிகிறது குழந்தாய்! ஆனால், நான் ஏமாந்து போனது தெரிந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால் கூட அவர்களுக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள். புரிகிறதா? குறுகிய தன்னலத்துக்காக நல்ல கோட்பாடுகளை அழித்துவிடக்கூடாது. இதை நீ தெரிந்து கொள்.

பாடநூல் மதிப்பீட்டு வினா

 1.‘உண்மை ஒளி படக்கதையைக் கதையாகச் சுருக்கி எழுதுக.

விடை:

முன்னுரை :

சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த துறவிகள் ஜென் துறவிகள். அவர்களின் சிந்தனைக் கதையே ஜென் கதைகள். அக்கதைகளுள் ஒன்று உண்மை ஒளி.’

குருவும் சீடர்களும் :

ஜென் குருவிடம் சிலர் பாடக் கற்றுக் கொண்டு இருந்தனர். ஒரு நாள் உண்மை ஒளி எது? என்பதைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். பசி, தாகம், தூக்கம் ஆகியவை அனைத்து உயிர்களுக்கும் ஒன்றே. இரவு பகல் போல இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்று குரு சொல்லிக் கொடுத்தார். பிறகு சீடர்களிடம், ”இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது” என்று எப்படி அறிவீர்கள்? என்றார்.

உண்மை ஒளி :

அதற்கு சீடன் ஒருவன், “தொலைவில் தெரிவது குதிரையா? கழுதையா? என்பதைக் காணக்கூடிய அளவு வெளிச்சம் நான் அறிவேன்” என்றான். மற்றொருவன், “தொலைவில் தெரிவது ஆலமரமா? அரசமரமா? என்பதைக் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்ததை நான் அறிவேன்” என்றான். இவை எல்லாம் தவறு என்றார் குரு. ஒரு மனிதரைக் காணும் போது என் உடன் பிறந்தவர் என்று எப்போது உணர்கிறீர்களோ, அப்போது தான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள் என்றார் குரு.

குருவை ஏமாற்றிய திருடன் :

ஒரு நாள் குரு குதிரையில் அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்பட்டுச் செல்கின்றார். சாலையோரத்தில. ஒருவன் மயங்கிக் கிடந்தான். குரு அவனிடம் தண்ணீர் கொடுத்து’ நீ யார்?’ என்று கேட்க, அவன் ‘பக்கத்து ஊர் செல்ல வேண்டும்.
 
பசியால் மயங்கி விழுந்துவிட்டேன்.’ என்றான். குரு இரக்கம் கொண்டு அவனை குதிரை மீது அமரச்செய்தார். குதிரையை அடித்து அவன் வேகமாகச் சென்று விட்டான். அவன் திருடன் என்பதையும் , தான் ஏமாற்றப்பட்டதையும் அறிந்தார்.

திருடனுக்கு அறிவுரை :

குதிரை வாங்க குரு குதிரைச் சந்தைக்குச் சென்றார். அங்கு அந்தத் திருடன் குதிரையை விற்றுக் கொண்டிருந்தார். குரு யாரிடமும் எதையும் சொல்லாதே! என்றார். அதற்கு திருடன், இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கின்றாரோ? என்று மனதில் நினைத்தான்.
 
அதற்கு குரு , நான் ஏமாந்து போனது தெரிந்தால் உண்மையில் சாலையில் மயக்கம் அடைந்து யார் கிடந்தாலும் அவருக்கு யாரும் உதவ மாட்டர்கள் என்றார். குருவின் பெருமையை நினைத்து தலைகுனிந்தான் திருடன்.

முடிவுரை :

ஒருவரை ஏமாற்றுவது மற்றவர்களுக்குச் செய்யும் உதவியைக்கூட தடுக்கும் என்பதை இக்கதை மூலம் அறியமுடிகின்றது.

Leave a Reply