7th Tamil Term 1 Lesson 3 Book Back Answers

7th Tamil Term 1 Unit 3.2 Book Back Answers

7th Tamil Term 1 Unit 3.2 Book Back Answers

Tamil Nadu 7th Standard Tamil Term 1 இயல் 3.2 பாஞ்சை வளம் Book Back Answers

7th Standard Tamil Term 1 Lesson 3 Book Back Answers. 7th Standard Tamil Samacheer Kalvi Guide Term 1 – 3rd Lesson Unit 3.2 பாஞ்சை வளம் Book Back and additional question and answers download pdf. Class 7 1st Term book back answers. Class 7 Tamil Book in answers download pdf. 7th All Subject Important Study Materials7th Tamil All Lessons. Answers.

7th Tamil Term 1 Lesson 3 Book Back Answers

7th Tamil Book Back Answers Term 1 – Unit 3.2. பாஞ்சை வளம்

கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன.

அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

நம் பாடப்பகுதி “நா. வானமாமலை” தொகுத்து வெளியிட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

I. சொல்லும் பொருளும்

  • சூரன் – வீரன்
  • வாரணம் – யானை
  • பொக்கிஷம் – செல்வம்
  • பரி – குதிரை
  • சாஸ்தி – மிகுதி
  • சிங்காரம் – அழகு
  • விஸ்தாரம் – பெரும்பரப்பு
  • கமுகு – பாக்கு

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஊர்வலத்தின் முன்னால் _____ அசைந்து வந்தது.

  1. தோரணம்
  2. வானரம்
  3. வாரணம்
  4. சந்தனம்

விடை : வாரணம்

2. பாஞ்சாலங்குறிச்சியில் _____ நாயை விரட்டிடும்,

  1. முயல்
  2. நரி
  3. பரி
  4. புலி

விடை : முயல்

3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது _____.

  1. மெத்தை விரிக்கப்பட்ட வீடு
  2. படுக்கையறை உள்ள வீடு
  3. மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
  4. மாடி வீடு

விடை : மாடி வீடு

4. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. பூட்டு + கதவுகள்
  2. பூட்டும் + கதவுகள்
  3. பூட்டின் + கதவுகள்
  4. பூட்டிய + கதவுகள்

விடை : பூட்டும் + கதவுகள்

5. ‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. தோரணம் + மேடை
  2. தோரண + மேடை
  3. தோரணம் + ஒடை
  4. தோரணம் + ஓடை

விடை : தோரணம் + மேடை

6. ‘வாசல் + அலங்காரம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. வாசல்அலங்காரம்
  2. வாசலங்காரம்
  3. வாசலலங்காரம்
  4. வாசலிங்காரம்

விடை : வாசலலங்காரம்

III. பொருத்துக.

  1. பொக்கிஷம்  – அ. அழகு
  2. சாஸ்தி  – ஆ. செல்வம்
  3. விஸ்தாரம் – இ. மிகுதி
  4. சிங்காரம்  –  ஈ. பெரும் பரப்பு

விடை : 1 – , 2 – , 3 – , 4 –

IV. குறுவினா

1. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.

பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாக் கோட்டைகள் இருக்கும். அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாகக் கட்டப்பட்டிருக்கும்.

2. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல்வயல்களும்  பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

V. சிறுவினா

1. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?

பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள்தோறும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும். வீடுகள் எல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும். வீட்டுக் கதவுகள் மிகவும் நேரத்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்தாகவும் இருக்கும்.

2. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.

  • வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னை பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும்.
  • பசுவும், புலியும் நீர்நிலையின் ஒரே பக்கம் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.
  • மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. _______________ கட்டபொம்மன்விடை : குறையில்லா வீரன்
  2. கட்டபொம்மனின் நாடு ______________விடை : பாஞ்சாலங்குறிச்சி
  3. வீடுகள்தோறும் மணிகளால் அழகு செய்யப்பட்ட _____________ இருக்கும்.விடை : மேடைகள்
  4. _______________, _______________ நீர்நிலையின் ஒரே பக்கம் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.விடை : பசுவும், புலியும்
  5. பாஞ்சை என்ற அழைக்கப்படும் நாடு _______________விடை : பாஞ்சாலங்குறிச்சி

II. பிரித்து எழுதுக

  1. மதிலோடை = மதில் + ஓ
  2. முனையுள்ள = முனை + உள்ள
  3. வரந்தருவாளே = வரம் + தருவாளே
  4. வாக்கருள் = வாக்கு + அருள்
  5. வளர்ந்தேறும் = வளர்ந்து + ஏறும்

III. எதிர்ச்சொல்

  1. வீரன் x கோழை
  2. மிகுதி x குறைவு
  3. புதுமை x பழமை
  4. குறை x நிறை

IV. வினாக்கள்

1. குயில்கள் எங்கு கூவும்? மயில்கள் எதைக் கூறி விளையாடும்?

  • சோலைகளில் குயில்கள் கூவும்.
  • மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.

2. பாஞ்சாலக்குறிச்சிக்கு அழகு சேரப்பன எது?

பூஞ்சோலைகளும், சந்தன மரச்  சோலைகளும், ஆறுகளும், நெல் வயல்களும், பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலக்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

3. கரந்த பாலைக் காகம் குடிக்காதற்குக் காரணம் யாது?

மன்னம் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

4. பசு மற்றும் புலியின் செயல் யாது?

பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்ற பால் போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

5. பாஞ்சை வளம் பாடப்பகுதி எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?

பாஞ்சை வளம் பாடப்பகுதி “நா. வானமாமலை” தொகுத்து வெளியிட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

Leave a Reply