8th Tamil Guide Unit 1.2
8th Standard Tamil Samacheer kalvi guide Lessin 1 – இயல் 1.2 தமிழ்மொழி மரபு
8th Standard Tamil Guide Lesson 1. இயல் 1.2 தமிழ்மொழி மரபு Book Back and additional Question and answers. 8th Standard Samacheer Kalvi Guide, 8th Tamil Unit 1.2 Answers Notes, 8th Tamil Full Guide book Answers. 8th Tamil book back question iyal 2 Tamil mozhi marabu you can download 8th Tamil book back question and answer all subjects. 8th Study Materials.
8th Tamil Guide Unit 1.2
1.2. தமிழ்மொழி மரபு
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்கலந்த மயக்கம் உலகம் ஆதலின்இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.
-தொல். 1579
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லைமரபுவழிப் பட்ட சொல்லின் ஆன
-தொல். 1580
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்.
-தொல், 1581
தொல்காப்பியர்
I. சொல்லும் பொருளும்
- விசும்பு – வானம்
- மரபு – வழக்கம்
- மயக்கம் – கலவை
- திரிதல் – மாறுபடுதல்
- இருதிணை – உயர்திணை, அஃறிணை
- செய்யுள் – பாட்டு
- வழாஅமை – தவறாமை
- தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)
- ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால
அளபெடை
புலவர்கள் சில எழுத்துகளை அவற்றுக்கு உரிய மாத்திரை அளவைவிட நீண்டு ஒலிக்குமாறு பயன்படுத்துவது உண்டு. இப்பாடலில் இடம்பெற்றுள்ள வழாஅமை, தழாஅல் ஆகிய சொற்களில் உள்ள ழா என்னும் எழுத்தை மூன்று மாத்திரை அளவு நீட்டி ஒலிக்க வேண்டும். அதற்கு அடையாளமாகவே ‘ழா’வை அடுத்து ‘அ’ இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர். இதனைப் பற்றி உயர் வகுப்புகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
இளமைப் பெயர்கள்
நூல் வெளி
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91,92, 93) இங்குத் தரப்பட்டுள்ளன.
விலங்கு | இளமைப் பெயர்கள் |
---|---|
புலி | பறழ் |
சிங்கம் | குருளை |
யானை | கன்று |
பசு | கன்று |
கரடி | குட்டி |
ஒலி மரபு
விலங்கு | ஒலி மரபு |
---|---|
புலி | உறுமும் |
சிங்கம் | முழங்கும் |
யானை | பிளிறும் |
பசு | கதறும் |
கரடி | கத்தும் |
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பறவைகள் _________ பறந்து செல்கின்றன.
- நிலத்தில்
- விசும்பில்
- மரத்தில்
- நீரில்
விடை : விசும்பில்
2. இயற்கையைப் போற்றுதல் தமிழர் __________.
- மரபு
- பொழுது
- வரவு
- தகவு
விடை : மரபு
3. ‘இருதிணை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
- இரண்டு + திணை
- இரு + திணை
- இருவர் + திணை
- இருந்து + திணை
விடை : இரண்டு + திணை
4. ‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
- ஐம் + பால்
- ஐந்து + பால்
- ஐம்பது + பால்
- ஐ + பால்
விடை : ஐந்து + பால்
III. குறுவினா
1. உலகம் எவற்றால் ஆனது?
- நிலம்
- நீர்
- நெருப்பு
- காற்று
- வானம் ஆகிய ஐந்தால் உலகம் ஆனது
2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
- செய்யுளில் மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்
தமிழ்மொழி மரபு – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. வாழ்வுக்குரிய ஒழுங்குமுறை ___________ எனப்படும்.
விடை : ஒழுக்கம்
2. மொழிக்குரிய ஒழுங்குமுறை ___________ எனப்படும்.
விடை : மரபு
3. தொல்காப்பியத்தின் ஆசிரியர் ___________ .
விடை : தொல்காப்பியர்
4. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ___________ ஆகும்.
விடை : தொல்காப்பியம்
5. ___________, ___________ உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் நூல்
விடை : செய்யுளுக்கும், மரபுக்கும்
8th Tamil Guide Unit 1.2
II. குறுவினா
1. தொல்காப்பியம் – குறிப்பு வரைக
- தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
- தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
- இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
- ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
2. தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் யாவை? எழுத்து
- சாெல்
- பொருள்
3. தமிழின் மரபு யாது?
- உலகத்து பொருள்களை இரு திணையாகவும், ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ் மரபு ஆகும்
4. இவ்வுலக பொருள்களை எவ்வாறு கூறுதல் வேண்டும்?
- திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலக பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும்
5. எவ்வகையான சொற்களை செய்யுளில் பயன்படுத்த வேண்டும்?
- மரபான சொற்களை செய்யுளில் பயன்படுத்த வேண்டும்
- தமிழ்மொழிக்கெனச் சில மரபுகள் உள்ளன. அவை பழங்காலம் முதலே பின்பற்றப்பட்டு வருகின்றன.
6. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் கூறும் நூல் எது?
- செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப்பற்றித் தொல்காப்பியம் கூறும் நூல்
7. உயிரளபெடை என்றால் என்ன?
- செய்யுளில் ஓசை குறையும்போது அந்த ஓசையை நிறைவு செய்ய உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுக்கும். இது உயிரளபெடை எனப்படும்
நிரப்புக:
1. தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
2. நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
3. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
4. தொல்காப்பிய அதிகாரங்கள் ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
5. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க கண்டுபிடித்தது மொழி.
III. இளமை பெயர்களை பொருத்துக
1. புலி கன்று
2. சிங்கம் குட்டி
3. பசு குருளை
4. கரடி பறழ்
விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ
IV. ஒலி மரபுகளை பொருத்துக
1. புலி கதறும்
2. சிங்கம் உறுமும்
3. யானை முழங்கும்
4. பசு கத்தும்
5. கரடி பிளிறும்
விடை : 1 – ஆ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஈ
விடையளி :
1.தொல்காப்பியம் – குறிப்பு எழுதுக.
(i) தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம்.
(ii) இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
2.அளபெடை என்பது யாது?
(i) அளபெடை – நீண்டு ஒலித்தல்.
(ii) சில எழுத்துகள் அவற்றுக்கு உரிய மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்கும். அதனை அளபெடை என்பர்.
3.உயிரளபெடை என்றால் என்ன?
(i) உயிரெழுத்துகள் நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர். அளபெடுத்ததற்கு அடையாளமாக உயிர்மெய் நெடிலுக்குப் பக்கத்தில் அதன் இன எழுத்து எழுதப்படும்.
(ii) (எ.கா.) வழாஅமை ழா – ழ் + ஆ; ‘ஆ’ – இன எழுத்து ‘அ)
4.புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் இளமைப் பெயர்களை எழுதுக.
(i) புலி – பறழ்
(ii) சிங்கம் – குருளை
(iii) யானை – கன்று
(iv) பசு – கன்று
(V) கரடி – குட்டி
5.புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் ஒலிமரபினை எழுதுக.
(i) புலி – உறுமும்
(ii) சிங்கம் – முழங்கும்
(iii) யானை – பிளிறும்
(iv) பசு – கதறும்
(v) கரடி – கத்தும்