You are currently viewing 8th Tamil Guide Unit 2.6

8th Tamil Guide Unit 2.6

8th Tamil Guide Unit 2.6

8th Standard Tamil Samacheer Kalvi Guide 2nd Lesson Book Answers

8th Standard Tamil Guide Lesson 2. இயல் 2.6 திருக்குறள் Book Back and additional Question and answers. 8th Standard Samacheer Kalvi Guide, 8th Tamil Unit 2.6  Answers Notes, 8th Tamil Full Guide book Answers. 8th Tamil book back question iyal 2 you can download 8th Tamil book back question and answer all subjects. 8th Study Materials. 8th Tamil Answers Notes, 8th Tamil book Answers. 

8th Tamil Samacheer Kalvi Guide Unit 2

2.6. திருக்குறள்

8th Tamil Guide Lesson 2 Question and Answers TN STUDENTS GUIDE

 I. சரியானதை தேர்ந்தெடுத்து எழுதுக.

1. புகழாலும் பழியாலும் அறியப்படுவது _____.

  1. அடக்கமுடைமை
  2. நாணுடைமை
  3. நடுவு நிலைமை
  4. பொருளுடைமை

விடை : நடுவு நிலைமை

2. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _____.

  1. வலிமையற்றவர்
  2. கல்லாதவர்
  3. ஒழுக்கமற்றவர்
  4. அன்பில்லாதவர்

விடை : கல்லாதவர்

3.‘வல்லுருவம்’ என்னும் சொல்லை  பிரித்து எழுதக் கிடப்பது _____.

  1. வல் + உருவம்
  2. வன்மை  + உருவம்
  3. வல்ல + உருவம்
  4. வல்லு + உருவம்

விடை : வன்மை  + உருவம்

4. நெடுமை + தேர் என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் _____.

  1. நெடுதேர்
  2. நெடுத்தேர்
  3. நெடுந்தேர்
  4. நெடுமைதேர்

விடை : நெடுந்தேர்

5. ‘வருமுன்னர்’ எனத்  தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.

  1. எடுத்துக்காட்டு உவமை அணி
  2. தற்குறிப்பேற்று  அணி
  3. உவமை  அணி
  4. உருவக அணி

விடை : உவமை  அணி

II. குறுவினா

1. சான்றோர்க்கு அழகாவது எது?

  • துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

2. பழியின்றி வாழும் வழியாக, திருக்குறள் கூறுவது யாது?

  • தலைவன் முதலில் தன் குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன் பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

3. ‘புலித் தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

  • மனத்தை அடக்கும் வல்லமை இல்லதாவர் மேற்கொண்ட தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.

III. திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரெ ன்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.

  • தக்கார் தகவிலர் என்பது அவரவர்
  • எச்சத்தால் காணப் படும்

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.

  • தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
  • இடங்கண்ட பின்அல் லது

IV. கோடிட்ட  இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் _____________
புலியின்தோல் _____________ மேய்ந் தற்று.

விடை : பெற்றம், போர்த்த
2. விலங்கொடு _____________ அனையர் _____________
கற்றாரோடு ஏனை யவர்
விடை : மக்கள், இலங்குநூல்

V. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.

விடை :-
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்

VI. படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

8th Tamil Guide Lesson 2 Question and Answers TN STUDENTS GUIDE

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

 
8th Tamil Guide Lesson 2 Question and Answers
கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

திருக்குறள் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. திருவள்ளுவர் _______________ ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
விடை : இரண்டாயிரம்
2. பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் _______________ .
விடை : திருக்குறள்
3. திருக்குறள் _______________ பகுப்புக் கொண்டது.
விடை : முப்பால்
4. _______________ என்று அழைக்கப்படுவர் திருவள்ளுவர்.
விடை : முதற்பாவலர்
5. நடுவுநிலைமையுடன் செயல்படுவதே _______________ அழகாகும்.
விடை : சான்றோர்க்கு

II. சிறு வினா

1. திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் யாவை?

  • பெருநாவலர்
  • முதற்பாவலர்
  • நாயனார்

2. திருக்குறளின் முப்பால் பகுப்பகள் எவை?

  • அறம், பொருள், இன்பம்

3. அறத்துபால் கொண்ட இயல்கள் எத்தனை?

  • பாயிரவியல்
  • இல்லறவியல்
  • துறவறவியல்
  • ஊழியல்

4. பொருட்பால் இயல்களை கூறு?

  • அரசியல்
  • அமைச்சியல்
  • ஒழிபியல்

5. இன்பத்துப்பாலின் இரு இயல்கள் எவை?

  • களவியல்
  • கற்பியல்

6. பொருத்தமான இடத்தை அறியாமல் எதனை கூடாது என வள்ளுவர் கூறுகிறார்?

  • பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும், தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.

7. கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது எதற்கு இணையானது?

  • கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

8. கல்லாதவர் எதைப் போன்றவர்?

  • கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர்.

9. எவரால் எந்தப் பயனும் இல்லை என வள்ளுவர் கூறுகிறார்?

  • கல்லாதவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை.

10. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து – என்ற பாடலில் உள்ள அணியினை கூறு

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

– இப்பாடலில் உள்ள அணி பிறிது மொழிதல் அணி ஆகும்.

விளக்கம்

அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாக செயல்பட முடியும் என்பதே புலவர் கூற விரும்பிய கருத்து. ஆனால் அதனைக் கூறாமல் பெரியதோர் கடலில் ஓடாது.கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓடாது என உவமையா வேறொன்றைக் கூறியுள்ளார்.இவ்வாறு உவமையை மட்டும் கூறிப் பொருளினைப் பெற வைப்பதனால் பிறிது மொழிதல் அணி ஆகும்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

  • 1. திருவள்ளுவர் …………………. ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
  • 2. திருக்குறளில் உள்ள முப்பால் ………………….
  • 3. அறத்துப்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
  • 4. பொருட்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
  • 5. இன்பத்துப்பால் ……………….. இயல்களைக் கொண்டது.
  • 6. நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே ………………… அழகாகும்.
  • 7. புலித்தோல் போர்த்திய பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது மனத்தை அடக்க இயலாதவரின் வலிய ………………….
  • 8. வளைவுடன் இருப்பினும் ………………. கொம்பு இனிமையைத் தரும்.
  • 9. நேராக இருந்தாலும் ……………… கொடியதாக இருக்கும்.
  • 10. அவரவர் தமக்குரிய இடங்களிலேயே ……………….. செயல்பட முடியும்.

Answer:

1. இரண்டாயிரம்
2. அறம், பொருள், இன்பம்
3. நான்கு
4. மூன்று
5. இரண்டு
6. சான்றோர்க்கு
7. தவக்கோலம்
8. யாழின்
9. அம்பு
10. சிறப்பாகச்

விடையளி

1.புகழாலும் பழியாலும் அறியப்படுவதாகத் திருக்குறள் கூறுவது யாது?

  • நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.

2.பசுத்தோல் போர்த்திய புலி – விளக்குக.

  • மனத்தை அடக்கி ஆளும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலமானது, புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்தது போன்றது.

3.அம்பு, யாழின் கொம்பு – இவற்றால் அறியப்படுவது யாது?

(i) அம்பு நேராக இருந்தாலும் கொடியதாக இருக்கும். யாழின் கொம்பு வளைவுடன் இருந்தாலும் இனிமையைத் தரும்.
(ii) அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல் வகையில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

4.கல்லாதவர் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?

  • கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை .

5.விலங்கொடு மக்கள் அனையர் – விளக்குக.

  • கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

6.யாருடைய வாழ்க்கை , நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போர் போல அழியும்?

  • பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும்.

7.செயலைத் தொடங்குதல் பற்றிக் குறள் கூறுவது யாது?

  • பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; 30 இகழவும் கூடாது.

8.தேர், கப்பல் மூலம் வள்ளுவர் கூறும் கருத்து யாது?

(i) வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேரினால் கடலில் ஓட இயலாது.
(ii) கடலில் ஓடும் கப்பலினால் தரையில் ஓட இயலாது.
(iii) அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.
நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல்; ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

நடுவுநிலைமை

1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.*

  • தெளிவுரை : நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.

2. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.

  • தெளிவுரை : தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும். அதுபோல நடுவு நிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

அணி : உவமை அணி.

கூடா ஒழுக்கம்

3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

  • தெளிவுரை : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
  • அணி : இல்பொருள் உவமை அணி.

4. கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.*

  • தெளிவுரை : நேராக இருந்தாலும் அம்பு கொடியதாக இருக்கிறது. வளைவுடன் இருப்பினும் யாழின் கொம்பு இனிமையைத் தருகிறது. அதுபோல மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் செயல் வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கல்லாமை

5. உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.

  • தெளிவுரை : கல்லாதவர் பயனில்லாத களர்நிலம் போன்றவர். அவர் உயிரோடு இருக்கிறார் என்பதைத் தவிர அவரால் வேறு எந்தப் பயனும் இல்லை .

6. விலங்கொடு மக்களை அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.*

  • தெளிவுரை : கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.

குற்றங்கடிதல்

7. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

  • தெளிவுரை : பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்து விடும்.
  • அணி : உவமை அணி.

8. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு.*

  • தெளிவுரை : தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.

இடனறிதல்

9. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

  • தெளிவுரை : பொருத்தமான இடத்தை அறியாமல் எந்தச் செயலையும் தொடங்கவும் கூடாது; இகழவும் கூடாது.

10. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.

  • தெளிவுரை : வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரிய தேர் கடலில் ஓட இயலாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது. அவரவர்
  • தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும்.
  • அணி : பிறிது மொழிதல் அணி.

Leave a Reply