You are currently viewing 8th Tamil Guide Unit 3.1

8th Tamil Guide Unit 3.1

8th Tamil Guide Unit 3.1

8th Standard Tamil Samacheer Kalvi Guide 3rd Lesson Unit 3.1 Book Back and additional Questions and answers. Class 8 Lesson 3 இயல் 3.1 நோயும் மருந்தும் Book Back answers. 8th Tamil Full Answers. Eight Tamil TN Text Book Download Here8th Tamil Guide Lesson 3 Question and Answers. 8th Tamil Guide Lesson 3 Question and Answers, 8th Standard Tamil guide Unit 3 Book Back and additional Question and answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answers Notes, 8th Tamil book Answers. 

8th Tamil Guide Unit 3.1

 

3.1. நோயும் மருந்தும்

தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின்
ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும்
யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா
நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய் (பா.113)
*பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு உரிய திரியோக இருந்துஇவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே*

பாடலின் பொருள்

    ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மைபற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

    அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்வொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

👉சொல்லும் பொருளும்

  • தீர்வன – நீங்குபவை
  • திறத்தன – தன்மையுடையன
  • உவசமம் – அடங்கி இருத்தல்
  • கூற்றவா – பிரிவுகளாக
  • நிழல்இகழும் – ஒளிபொருந்திய
  • பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
  • பேர்தற்கு – அகற்றுவதற்கு
  • பிணி – துன்பம்
  • திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
  • ஓர்தல் – நல்லறிவு
  • தெளிவு – நற்காட்சி
  • பிறவார் – பிறக்கமாட்டார்

நூல் வெளி

நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

சரியானதை தேர்ந்தெடுத்து எழுதுக

1. உடல் நலம் என்பது _______ இல்லாமல்  வாழ்தல்  ஆகும்.

  1. அணி
  2. பணி
  3. பிணி
  4. மணி
விடை : பிணி

2. நீலகேசி  கூறும் நோயின்  வகைகள் ______.

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து
விடை : மூன்று

3. ‘இவையுண்டார் ‘ என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது _______.

  1. இ + யுண்டொர்
  2. இவ் + உண்டொர்
  3. இவை  + உண்டார்
  4. இவை  + யுண்டொர்
விடை : இவை  + உண்டார்

4. தாம் + இனி என்பதை்சேர்த்து எழுத கி்டக்கும் சொல் _______.

  1. தாம் இனி
  2. தாம்மினி
  3. தாமினி
  4. தாமனி
விடை : தாமினி

III. குறு வினா

1. நோயின் மூன்று வகைகள் யாவை?

  • மருந்தினால் நீங்கும் நோய்
  • எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை
  • வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.

2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?

  • நல்லறிவு, நற்காட்சி, நல்லாெழுக்கம் என்பவையே பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?

IV. சிறு வினா

நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?

  • ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக.
  • மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
  • எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
  • வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
  • அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.
  • இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.
  • இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

நோயும் மருந்தும் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மக்களின் உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தருவன _______________
விடை : நோய்கள்
2. உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் _______________ என்றே நம் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டனர்.
விடை : நோய்கள்
3. நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை விளக்குபவை _______________
விடை : இலக்கியங்கள்
4. நோயை தீர்க்கும் மருந்துகள் _______________
விடை : மூன்று
5. நீலகேசி _______________ ஒன்று
விடை : ஐஞ்சிறு காப்பியங்களுள்

II. பிரித்து எழுதுக

  1. போலாதும் =  போல் + ஆதும்
  2. உய்ப்பனவும் = உய்ப்பன + உம்
  3. கூற்றவா = கூற்று + அவா
  4. ஐம்பெருங்காப்பியம் = ஐந்து + பெருமை + காப்பியம்
  5. அரும்பிணி = அருமை + பிணி
  6. தெளிவோடு = தெளிவு + ஓடு
  7. பிணியுள் = பிணி + உள்
  8. இன்பமுற்றே =  இன்பம் + உற்றே

III. குறுவினா

1. அகற்றுவதற்கு அரியவை எவை?

  • அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.

2. பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் மருந்துகள் எத்தனை?

பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று.

  • நல்லறிவு
  • நற்காட்சி
  • நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.

3. எதனை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்?

  • பிறவித் துன்பங்களை நீக்கும் மருந்துகளாகிய நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகிய மூன்றினையும் ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

4. நோய்கள் எவற்றிற்கெல்லாம் துன்பம் தருவன?

  • நோய்கள் மக்களின் உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தருவன

5. நம் முன்னோர்கள் எதனை நோய்கள் என குறிப்பிடப்பட்டனர்? 

  • உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்றே நம் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டனர்.

6. ஐஞ்சிறுகாப்பியங்கள் யாவை?

  • சூளாமணி
  • நீலகேசி
  • உதயண குமார காவியம்
  • யேசாதர காவியம்
  • நாககுமார காவியம்

 

நிரப்புக :

1. மக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் துன்பம் தருவன ……………………
2. உள்ளத்தில் தோன்றும் ………………….. ஏற்படும் துன்பங்களையும் நோய்கள் என்று நம் முன்னோர் கூறினர்.
3. உள்ள நோயை நீக்குபவை ……………………..
4. ‘தீர்வனவும் தீராத் திறத்தனவும்’ என்ற பாடலடி இடம்பெறும் நூல் ………………. சருக்கம் …………………..
5. நீலகேசி …………………….. ஒன்று.
6. சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் …………….
7. நீலகேசியில் உள்ள சருக்கங்கள் …………………..

Answer:

1. நோய்கள்
2. தீய எண்ணங்களால்
3. அறக்கருத்துகள்
4. நீலகேசி, தருவுரைச் சருக்கம்
5. ஐஞ்சிறுகாப்பியங்களுள்
6. நீலகேசி
7. பத்து

விடையளி :

1.நீலகேசி – குறிப்பு எழுதுக.

Answer:
(i) நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
(ii) இந்நூல் சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
(iii) கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது.
(iv) சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை .

நூல் வெளி

நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று. இந்நூல் சமண சமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது. கடவுள் வாழ்த்து நீங்கலாகப் பத்துச் சருக்கங்களைக் கொண்டது. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை . நீலகேசிக் காப்பியத்தின் தருவுரைச் சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்

ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒரு வகை. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

Leave a Reply