You are currently viewing 8th Tamil Guide Unit 3.3

8th Tamil Guide Unit 3.3

8th Tamil Guide Unit 3.3

8th Standard Tamil Samacheer Kalvi Guide 3rd Lesson Unit 3.3 Book Back and additional Questions and answers. Class 8 Lesson 3 இயல் 3.3 தமிழர் மருந்தும் Book Back answers. 8th Tamil Full Answers. Eight Tamil TN Text Book Download Here8th Tamil Guide Lesson 3 Question and Answers. 8th Tamil Guide Lesson 3 Question and Answers, 8th Standard Tamil guide Unit 3 Book Back and additional Question and answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answers Notes, 8th Tamil book Answers. 

8th Tamil Guide Unit 3.1

 

8th Tamil Unit 3.3. தமிழர் மருத்துவம்

8th Tamil Guide 3.3. தமிழர் மருத்துவம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு _____ பயன்படுத்தினர். 

  1. தாவரங்களை
  2. விலங்குகளை
  3. உலோகங்களை
  4. மருந்துகளை

விடை : தாவரங்களை

2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.

  1. மருந்தின்
  2. உடற்பயிற்சியின்
  3. உணவின்
  4. வாழ்வின்

விடை : உணவின்

3. உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.

  1. தலைவலி
  2. காய்ச்சல்
  3. புற்றுநோய்
  4. இரத்தக்கொதிப்பு

விடை : இரத்தக்கொதிப்பு

4. சமையலறையில் செலவிடும் நேரம் _____ செலவிடும் நேரமாகும்.

  1. சுவைக்காக
  2. சிக்கனத்திற்காக
  3. நல்வாழ்வுக்காக
  4. உணவுக்காக

விடை : நல்வாழ்வுக்காக

II. குறு வினா

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

  • தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும்
  • நோயைத் தீர்க்க முயன்றிருப்பான். தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான்.
  • இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.

2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

  • 45 நிமிடத்தில் 3கி.மீ. நடைப்பயணம்
  • 15 நிமிடம் யோக, தியானம், மூச்சுப்பயிற்சி
  • 7 மணி நேர தூக்கம்
  • 3லிட்டர் தண்ணீர் அருந்துதல்

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

  • மூலிகை, தாவர இலை, உலோகங்கள், பாஷானங்கள், தாதுப்பொருள்கள் ஆகியன தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுகின்றனவாகும்

III. சிறு வினா

1. நோய்கள் பெருகக் காரணம் என்ன?

  • மனிதன் இயற்கையை விட்டு விலகி வந்ததுதான் முதன்மைக் காரணம்.
  • மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் இவை மூன்றும் குறிப்பிடத்தக்க காரணங்கள்
  • தன் உணவுக்காக வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், நிலத்தை உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் நச்சுப்படுத்தலாம் என்ற அலட்சியமான எண்ணம், மன அழுத்தம், எது கேளிக்கை? எது குதூகலம்? எது படிப்பு? எது சிந்தனை? என்ற புரிதல் இல்லாமை ஆகியவற்றைக் கூடுதல் காரணங்களாகச் சொல்லலாம்
  • நம்முடைய வாழ்வியலைச் செம்மைப்படுத்துவதற்காக நாம் அறிவியல் அறிவை, மேம்பட்ட அறிவை வளர்த்தோம். ஆனால் நுண்ணறிவைத் தொலைத்து விட்டோம்.
  • இயற்கையோடு இயைந்து வாழலாம் என்கிற அறிவை நாம் மறந்து விட்டோம். இதுவே இன்றைக்கு பல நோய்கள் பெருக மிக முக்கிய காரணம் ஆகும்.

8th Tamil Guide Lesson 3 Question and Answers

தெரிந்து தெளிவோம்

நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளுள் சில 
  • சித்த மருத்துவம்
  • ஆயுர்வேத மருத்துவம்
  • யுனானி மருத்துவம்
  • அலோபதி மருத்துவம்
    8th Tamil Guide Lesson 3 Question and Answers TN Students Guide

2. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

  • நோய் வந்த பின்பு மருத்துவமனைக்குச் செல்வதை விட வருமுன் காக்கும் வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
  • சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும். விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.
  • எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
  • இரவுத்தூக்கம் மிகவும் இன்றியமையாதது.
  • உரிய நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்; அதிகாலையில் விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது.

IV. நெடு வினா

தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

  • வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே என்றனர் சித்தர்கள்.
  • வேர், தழையால் குணம் அடையாதபோது சில நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாக நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
  • அந்தக் காலத்தில் எப்படி மூலிகைகளை மருந்தாகப் பார்த்தார்களோ அப்படியே தாதுப் பொருட்களையும், உலோகத்தையும் பார்த்தார்கள்.
  • அவற்றை மருந்துகளாக மாற்றும் வல்லமை சித்தமருத்துவத்தில் இருந்திருக்கிறது.
  • ஒரு மருந்தை எடுத்துக்கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்கவிளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை. அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
  • ஒரு கவளம் சோற்றை உடல் எப்படி எடுத்துக்கொள்கிறதோ, அப்படியேதான் சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும், சூரணத்தையும் உடல் எடுத்துக்கொள்ளும்.
  • அதனால் உணவு எப்படிப் பக்க விளைவுகளைத் தருவதில்லையோ அதே போலச் சித்த மருந்துகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
  • தமிழர் மருத்துவத்தின் சிறப்பு என்னவென்றால் தனித்துவமான பார்வை இதன் முதல் சிறப்பு
  • இரண்டாவது, சூழலுக்கு இசைந்த மருத்துவம் இது. இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ சுற்றுச்சூழலைச் சிதைக்காது.
  • மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான
  • சிகிச்சையை மட்டும் சொல்லாமல், நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.
  • அதாவது “நோய் நாடி நோய் முதல் நாடி” என்ற திருக்குறளின் படி நோயை மட்டுமின்றி, அதன் காரணிகளையும் கண்டறிந்து ஒருவரை நோயில்லாத மனிதராக்கிறது.

தமிழர் மருத்துவம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ் மக்கள் ____________  அருமருந்தென அறிந்தவர்கள்
விடை : அருந்தும் உணவே
2. சித்தமருத்துவம் என்பது ____________, ____________  சுருங்கியது.
விடை : மரபுவழி மருத்துவமாகவும், நாட்டு மருத்துவமாகவும்
3. மருந்து என்பதே ____________ இருக்கிறது.
விடை : உணவின் நீட்சியாக
4. நிலங்களை ____________ , ____________  நச்சுப்படுத்துகிறது.
விடை : உரங்களும், பூச்சிக்கொலிகளும்
5. தினமும் ____________ லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
விடை : மூன்று

II. பிரித்தெழுதுக

  1. மருந்தென = மருந்து + என
  2. உடற்கூறுகள் = உடல் + கூறுகள்
  3. தங்களுக்கென = தங்களுக்கு + என
  4. வந்துள்ளோம் = வந்து + உள்ளோம்
  5. பழந்தமிழர் = பழமை + தமிழர்
  6. கண்டறிந்து = கண்டு + அறிந்து

III. குறு வினா

1. தமிழ்மக்கள் எவற்றில் சிறந்து விளங்கினர்?

  • தமிழ்மக்கள் உடற்கூறுகள் பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.

2. மனிதன் தொடக்க காலத்தில எவற்றை மருந்தாகப் பயன்படுத்தி இருப்பான்?

  • வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தி இருப்பான்

3. எவை மனிதனை நலமாக வாழவைக்கும்?

  • சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் மனிதனை நலமாக வாழவைக்கும்.

IV. சிறு வினா

1. தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறாக ஆகும் போது எவ்வாறு விரிந்திருக்கிறது.

  • தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறாக ஆகும்போது
  • நாட்டு வைத்தியமாகவும்
  • பாட்டி வைத்தியமாகவும்
  • மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும்
  • உணவு சார்ந்த மருத்துவமாகவும்
  • பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

2. நடை முறையில் உள்ள மருத்துவ முறைகள் சிலவற்றை கூறு

  • சித்த மருத்துவம்
  • ஆயுர்வேத மருத்துவம்
  • யுனானி மருத்துவம்
  • அலோபதி மருத்துவம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. அருந்தும் உணவே ……………………. அறிந்தவர்கள் நம் தமிழ் மக்கள்.
2. ‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு எனக் கூறும் நூல் ……………….. கூறியவர் ……………….
3. தமிழர்கள் பின்பற்றிய மருத்துவமுறை ……………. சார்ந்த மருத்துவமுறை.

Answer:

1. அருமருந்தென
2. திருக்குறள், திருவள்ளுவர்
3. மரபு

குறுவினாக்கள் :

1.சித்த மருத்துவதில் தாவரங்களின்றி மருந்தாகப் பயன்படுத்தப்பட்டவை எவை?

  • சித்த மருத்துவத்தில் வேர், தழை ஆகியவற்றை மருந்துகளாகப் பயன்படுத்தினர். அவை மட்டும் அல்லாமல் உலோகங்களையும் பாஷாணங்களையும் சித்த மருந்துகளாகப் பயன்படுத்தினார்கள். தாதுப் பொருட்களையும் உலோகத்தையும் மருந்துகளாக மாற்றும் வல்லமை பெற்றது சித்த மருத்துவம்.

2.எல்லோருடைய உடல்நலனுக்கும் உடல் அமைப்பிற்கும் ஒரே வகையான மருந்து ஏற்றதாக இருக்குமா?

  • (i) ஒரே அளவு எடை கொண்ட பலர் வெவ்வேறு இடங்களில் இருக்கும்போது அவர்களுக்கு ஒரே வகையான மருந்து கொடுக்க முடியாது.
  • (ii) வாழ்வியல், சமூகச் சிக்கல், எண்ணப்போக்கு, உணவுமுறை, மரபுவழி என்பன ஒவ்வொருக்கும் வேறுபடும். அதனால் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் மருந்துகள் அளிக்க வேண்டும்.

3.தமிழர் மருத்துவத்தின் சிறப்பு யாது?

  • (i) தமிழர் மருத்துவம் தனித்துவமான பார்வை மற்றும் சூழலுக்கு இசைந்த மருத்துவம் ஆகும். இந்த மருத்துவத்தின் பயன்பாடோ, மூலக்கூறுகளோ, மருந்துகளோ
    சுற்றுச்சூழலைச் சிதைக்காது.
  • (ii) மிக முக்கியமான சிறப்பு என்னவென்றால், நோய்க்கான சிகிச்சையை மட்டும் சொல்லாமல் நோய் மீண்டும் வராமலிருப்பதற்கான வாழ்வியலையும் சொல்கிறது.
  • (iii) ‘நோய்நாடி நோய் முதல் நாடி’ என்ற திருக்குறளின்படி ஒருவரை நோயில்லாத மனிதராக்குகிறது.

4.உடல் நலத்துக்காக உடலுக்கு நாள்தோறும் நாம் என்ன செய்ய வேண்டும்?

  • (i) தினமும் நாற்பத்தைந்து நிமிடத்தில் மூன்று கி.மீ. நடைப்பயணம், பதினைந்து நிமிடம் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, ஏழு மணி நேர தூக்கம், மூன்று லிட்டர் தண்ணீ ர் அருந்துதல் ஆகியன அவசியம்.
  • (ii) எங்கோ விளையும் ஆப்பிளைச் சாப்பிடுவதைவிட, நமது ஊரில் விளையும் கொய்யா, இலந்தை, நாவல், பப்பாளி, நெல்லி, வாழைப்பழங்கள் ஆகியவற்றைக் காலை உணவுக்கு முன்பு சாப்பிடலாம்.

சிறுவினாக்கள்

1.பழந்தமிழர்களின் மருத்துவமுறைகளின் அடிப்படை யாது?

  • பழந்தமிழர்களின் மருத்துவ முறைகளாவன சித்த மருத்துவம், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், நாட்டு மருத்துவம் ஆகியனவாகும்.
  • இவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுதான். தமிழரது நிலம், நிறைந்த பண்பாடுகளும் தத்துவங்களும் அடங்கியது. நோய்கள் எல்லாம் பேய், பிசாசுகளால் வருகின்றன. பாவ புண்ணியத்தால் வருகின்றன என்று உலகத்தின் பல பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.
  • நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை, சுவை இவற்றைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் பண்பாட்டுக் கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபு சார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும் பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

2.தமிழர் மருத்துவமுறை பின்தங்கிப் போனதற்குக் காரணம் என்ன?

  • (i) நம்மீது நிகழ்ந்த படையெடுப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தின.
  • (ii) தமிழர் மருத்துவம் அவரவர் வாழ்வியலுடனும் தத்துவங்களுடனும் பிணைந்துதான் வந்துகொண்டிருந்தது.
  • (iii) சமண, பௌத்தர் காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.
  • (iv) பிறகு சைவம் ஓங்கியபோது சைவ சித்தாந்தத்தின் கூறுகள் கலந்தன. இறுதியில் ஆங்கிலேயர்கள் வந்தனர்.
  • (v) அவர்களுடைய நவீன அறிவியல் பார்வை நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • (vi) சித்த மருத்துவம் என்பது மரபு வழி மருத்துவமாகவும் நாட்டு மருத்துவமாகவும் சுருங்கியது.
  • (vii) இறுதியில் கிராமம் சார்ந்த மருத்துவமாக மாறிப்போனது. நவீன மருத்துவத்தில் துரிதமாகச் சில நோய்களுக்குக் கிடைத்த தீர்வுகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இக்காரணங்களால் தமிழர் மருத்துவமுறை பின்தங்கிப் போனது.

3.வாழ்வியல் நோய்களும் அவற்றைத் தீர்க்கும் தமிழ் மருத்துவம் பற்றிக் கூறுக.

  • (i) சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு நோய் முதலியவை வாழ்வியல் நோய்கள் ஆகும்.
  • (ii) இந்நோய்கள் பரவலாக பெருகியது. இவற்றைத் தீர்க்க வெறும் இரசாயன மருந்துகள் மட்டும் போதாது. கூடவே உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகா இவையும் கூட்டாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • (iii) தொடர் சிகிச்சைக்குப் பிறகு பக்கவிளைவுகள் இல்லா மருந்துகளை அளிக்கும் மரபு சார்ந்த மருத்துவ முறைகளை நவீன அறிவியல் கண்டறிந்தது.
  • (iv) அதனால் சித்த மருத்துவத்தின் தொன்மையையும் தமிழர்களின் தொன்மையையும் அறிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நாட்பட்ட நோய்களுக்கு மட்டுமல்லாமல் புதிய தொற்று நோய்களுக்கும் இம்மருத்துவமுறை பயன்படுகிறது.

4.மருத்துவத்தில் பக்கவிளைவுகள் பற்றி மருத்துவர் கூறிய கருத்துகளை எழுதுக.

  • ஒரு மருந்தை எடுத்துக் கொண்டால் அதற்கு விளைவும் இருக்கும் பக்க விளைவும் இருக்கும். ஆனால் தமிழர் மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இல்லை . அதற்குக் காரணம் மருந்து என்பதே உணவின் நீட்சியாக இருக்கிறது.
  • நம் உடல் உணவை எப்படி எடுத்துக் கொள்கிறதோ அப்படியேதான் சித்த மருத்துவத்தின் இலேகியத்தையும் சூரணத்தையும் எடுத்துக் கொள்ளும். அதனால் இம்மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லை.
  • இருந்த போதிலும் சித்த மருத்துவத்தின் மீது தற்போது நடக்கும் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் அவற்றைத் தர நிர்ணயம் செய்து யாருக்கு எந்த மருந்து, எந்த அளவு, எந்தத் துணைமருந்துடன் கொடுத்தால் பக்கவிளைவு இருக்காது என்று பட்டியலிட்டுள்ளனர் என்று மருத்துவர் பக்கவிளைவுகள் பற்றிக் கூறியுள்ளனர்.

5.உடல் எடையைப் பற்றி பாடத்தின் மூலம் நீ அறிந்தவற்றை எழுதுக.

உடல் எடை :

  • அழகுக்காக உடல் எடையைக் குறைப்பதும் மிகவும் மெலிவதும் நல்லதன்று. மரபு ரீதியாக ஒருவர் உடல் எடை அதிகமாக இருந்து, அவருக்கு எந்த நோயும் இல்லையென்றால் அவர் எடையைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எடை அதிகரிப்பால் சர்க்கரைநோய், இரத்தக் கொதிப்பு வர வாய்ப்புள்ளது என்றால் அவர் குறைத்துத்தான் ஆக வேண்டும்.
  • இன்றைக்குள்ள உணவுக் கட்டுப்பாட்டு முறைகள் நம் உடலுக்கு ஏற்றவையாக இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் கேட்டு முடிவெடுக்க வேண்டும். இணையத்தைப் பார்த்து ஒரே அடியாக எடையைக் குறைக்காமல் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
  • உணவுக்காகச் சமையலறையில் செலவிடும் நேரத்தை, நல்வாழ்விற்காகச் செலவிடும் நேரம் என நினைத்து, உணவு உண்பதில் சில ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.

Leave a Reply