You are currently viewing 8th Tamil Guide Unit 4.3

8th Tamil Guide Unit 4.3

8th Tamil Guide Unit 4.3

8th Standard Tamil Tamil Samacheer kalvi guide 4th Lesson Unit 4.3 பல்துறைக் கல்வி Book Back and Additional Question answers. 8th Tamil TNPSC, TET Notes. 8th Tamil All Lesson Guide. 8th TN Text Books Download PDF. Tamil Nadu State Board Syllabus 8th standard Lesson 4 Full Guide book back and additional question & answer. 8th Tamil Guide Lesson 4 Book Back Question and Answers, 8th Standard Tamil guide Unit 4 Book Back and additional Question and answers. 8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answer key Notes, 8th Tamil book Answers. 8th Tamil Lesson 1 to 9 Full Answer Key.
8th Tamil Guide Unit 4

4.3. பல்துறைக் கல்வி

தெரிந்து தெளிவோம்

கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்.

– விஜயலட்சுமி பண்டிட் 
ஐ. நா. அவையின் முதல் பெண் தலைவர்

தெரிந்து தெளிவோம்

ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்

-குலோத்துங்கன்

நூல் வெளி

திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்; சிறந்த மேடைப் பேச்சாளர்; தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர். இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
 

    இவரது இளமை விருந்து என்னும் நூலிலிருந்து சிலபகுதிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

8th Tamil Guide Unit 4 Book Back Question and Answers

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது _____.

  1. விளக்கு
  2. கல்வி
  3. விளையாட்டு
  4. பாட்டு

விடை : கல்வி

2. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.

  1. இளமை
  2. முதுமை
  3. நேர்மை
  4. வாய்மை

விடை : இளமை

3. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.

  1. வீட்டில்
  2. நாட்டில்
  3. பள்ளியில்
  4. தொழிலில்

விடை : தொழிலில்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கலப்பில் _______________ உண்டென்பது இயற்கை நுட்பம்.
விடை : வளர்ச்சி
2. புற உலக ஆராய்ச்சிக்கு _______________ கொழுகொம்பு போன்றது.
விடை : அறிவியல்
3. வாழ்விற்குரிய இன்பத்துறைகளில் தலையாயது _______________ இன்பம் ஆகும்.
விடை : காவிய

பொருத்துக.

  1. இயற்கை ஓவியம் – சிந்தாமணி
  2. இயற்கை தவம் – பெரியபுராணம்
  3. இயற்கைப் பரிணாமம் – பத்துப்பாட்டு
  4. இயற்கை அன்பு – கம்பராமாயணம்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறுவினா

1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?

  • இன்றைய கல்வி குறிப்பிட்ட பாடங்களை நெட்டுற (மனப்பாடம்) செய்து தேர்வில் தேறி, பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்கு ஒரு கருவியாக கொள்ளப்பட்டு வருகிறது.
  • நாளடைவில் அக்கல்விக்கும், வாழ்விற்கும் தொடர்பு இல்லாமல் போகிறது என்று திரு.வி.க. கூறுகிறார்

2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

  • தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது?

3. திரு. வி. க. சங்கப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.

  • இளங்கோவடிகள்
  • திருத்தக்கத்தேவர்
  • திருஞானசம்பந்தர்
  • ஆண்டாள்
  • சேக்கிழார்
  • கம்பர்
  • பரஞ்சோதி

சிறு வினா

1. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவனவற்றை எழுதுக.

  • கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுட்பம்.
  • தமிழை வளர்க்கும் முறையிலும், அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பி.
  • ஆகவே, தமிழ் மொழியில் அறிவுக் கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் என்னும் புதுப்பாட்டு பாடுமாறு சகோதரர்களை கேட்டுக் கொள்கிறேன்.
  • கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார்.

2. அறிவியல் கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?

  • உலக வாழ்விற்கு மிக மிக இன்றியமையாதது ’அறிவியல்’
  • உடற்கூறு, உடலோம்பு முறை, பூதபௌதிகம், மின்சாரம், நம்மைச் சூழ்ந்துள்ள செடி, கொடி, பறவை, விலங்கு முதலியவற்றை பற்றிய அறிவும், கோள் இயக்கம், கணிதம், அகத்திணை முதலிய அறிவும் நமக்கு வேண்டும்.
  • இந்நாளில் அத்தகைய அறிவு தேவை. புற உலகு ஆராய்சிக்கு அறிவியல் கொழுகொம்பு போன்றது.
  • நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி, இந்நாளில் உறுதி பெறலரிது.
  • இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.
  • ஆகவே, அறிவியல் என்றும் அறிவுக்கலை இளைஞர்கள் உலகில் பரவ வேண்டும் என்று திரு.வி.க. கூறுகிறார்

நெடு வினா

காப்பியக் கல்வி குறித்துத் திரு. வி. க. கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

  • வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று. அதுவே முதன்மையானது என்றும் கூறலாம்.
  • நாம் தமிழர்கள். நாம் பாட்டு இன்பத்தை நுகர வேண்டும். அதற்காகத் தமிழ் இலக்கியங்களுக்கு இடையே செல்ல வேண்டும். தமிழ் இலக்கியங்கள் பலப்பல
  • இருக்கின்றைன.
  • இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்ப வாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத தவம் சிந்தாமணி, இயற்கைப்
  • பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரியபுராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்
  • இத்தமிழக் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்திலும் வரும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.
  • இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள். தமிழ் இன்பத்தில் சிறந்த இன்பம் இவ்வுலகில் உண்டோ? தமிழ்க் காவியஙகளை படியுங்கள். இன்பம் நுகருங்கள் என்று திரு.வி.க. காப்பியக் கல்வி பற்றி கூறுகிறார்.

பல்துறைக் கல்வி – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  • 1. கேடில் விழுச்செல்வம் _______________
    விடை : கல்வி
  • 2. இளமையில் கல் என்பது _______________
    விடை : முதுமொழி
  • 3. _______________ நீக்கி அறிவை விளக்குவது கல்வி.
    விடை : அறியாமையை
  • 4. _______________ முதலியனவும் கல்வியின் பாற்பட்டனவே
    விடை : தொழிற்கல்வி
  • 5. கல்வி என்பது _______________ தேடும் வழிமுறை அன்று.
    விடை : வருவாய்
  • 6. தாய்மொழி வாயிலாக _______________ வேண்டும்.
    விடை : கல்வி பயிலுதல்

II. குறுவினா

1. எதற்கு அடிப்படையாய் விளங்குவது கல்வி ஆகும்?

  • மனிதன் விலங்கிலிருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் விளங்குவது கல்வி ஆகும்.

2. கல்வி எவற்றில் பெரும்பங்கு வகிக்கிறது?

  • மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வதிலும் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது.

3. விஜயலட்சுமி பண்டிட் கல்வி பற்றி கூறிய கருத்து யாது?

  • கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அல்ல. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும், மனித ஆன்மாவுக்கு பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்

4. இயற்கை இன்ப வாழ்வு நிலைகள் எவை?

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

  • 1. அறிவே ………………… என்பது ஆன்றோர் கூற்று.
  • 2. ஒரு மனிதனை வாழ்வில் உயரச் செய்பவை ……………………
  • 3. கேடில் விழுச்செல்வம் ………………..
  • 4. அறியாமையை நீக்கி அறிவை வளர்ப்பது ……………… எனப்படும்.
  • 5. ……………… மட்டும் கல்வி ஆகாது.
  • 6. கல்வி என்பது …………………… தேடும் வழிமுறையன்று.
  • 7. ஒவ்வொருவரும் அவரவர் ……………… வாயிலாகக் கல்வி பெறுவதே சிறப்பு.
  • 8. வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் ………………. ஒன்று.
  • 9. இயற்கை ஓவியம் ……………………
  • 10. இயற்கை இன்பக்கலம் …………………….
  • 11. இயற்கை வாழ்வில்லம் ……………….
  • 12. இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் ……………………
  • 13. இயற்கைத் தவம் …………………
  • 14. இயற்கைப் பரிணாமம் …………………..
  • 15. இயற்கை அன்பு ………………..

Answer:

  • 1. ஆற்றல்
  • 2. அறிவும் உழைப்பும்.
  • 3. கல்வி
  • 4. கல்வி
  • 5. ஏட்டுக்கல்வி
  • 6. வருவாய்
  • 7. தாய்மொழி
  • 8. காவிய இன்பமும்
  • 9. பத்துப்பாட்டு
  • 10. கலித்தொகை
  • 11. திருக்குறள்
  • 12. சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
  • 13. சிந்தாமணி
  • 14. கம்பராமாயணம்
  • 15. பெரியபுராணம்

விடையளி :

1.நாடகக்கல்வி பற்றி திரு.வி.க.வின் கருத்து யாது?

  • நாடகக்கல்வி வாழ்விற்கு வேண்டா என்று யான் கூறேன். இடைக்காலத்தில் நாடகக் கலையால் தீமை விளைந்தபோது அதைச் சிலர் அழிக்க முயன்றதுண்டு. இப்போதைய நாடகம் நன்னிலையில்லை என்பதை ஈண்டு விளக்க வேண்டுவதில்லை. நாடகத்துக்கு நல்வழியில் புத்துயிர் வழங்க வேண்டும். நாடகத்தை நல்வழிப்படுத்தி மாணாக்கரை அதன்கண் தலைப்படுமாறு செய்யத் தமிழ்ப் பெரியோர் முயல்வாராக.

2.திரு.வி.க. – சிறுகுறிப்பு வரைக.

  • திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்; சிறந்த மேடைப் பேச்சாளர்; தமிழ்த்தென்றல் என்றும் அழைக்கப்படுகிறார்.
  • இவர், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

3.எது கல்வியாகாது என்று திரு.வி.க. கூறுகிறார்?

  • இந்நாளில் ஏட்டுக் கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவி வருகிறது. ஏட்டுக் கல்வி மட்டும் கல்வி ஆகாது.
  • இந்நாளில் கல்வியென்பது பொருளற்றுக் கிடக்கிறது.
  • குறிப்பிட்ட பாடங்களை நெட்டுருச் செய்து, தேர்வில் தேறிப் பட்டம் பெற்று, ஒரு தொழிலில் நுழைவதற்குக் கல்வி ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
  • நாளடைவில் அக்கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போகிறது. இது கல்வியாகாது என்று திரு.வி.க. கூறுகிறார்.

4.இசைக்கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன யாவை?

  • இன்றைய சூழலில் இசைப்பயிற்சியும் இன்றியமையாதது. இசை பாட இயற்கை சிலருக்குத் துணை செய்யும்; சிலருக்கு துணை செய்வதில்லை. அத்துணை பெறாதார் இசை இன்பத்தையாதல் நுகரப் பயில்வாராக.
  • பழைய தமிழர் இசைத்துறையின் நிலை கண்டவர் என்று ஈண்டு இறுமாந்து கூறுகிறேன்.
  • தமிழ் யாழையும் குழலையும் என்னென்று சொல்வது? அந்த ழகரங்களை நினைக்கும் போதே அமிழ்தூறுகிறது. கொடிய காட்டு வேழங்களையும் பாணர் தம் யாழ் மயக்குறச் செய்யுமாம்.
  • அந்த யாழ் எங்கே? இனி இசைப் புலவர்தொகை நாட்டிற் பெருகப் பெருக நாடு பல வழியிலும் ஒழுங்கு பெறுதல் ஒருதலை. ஆகவே அத்துறை மீதும் மாணவர் கருத்துச் செலுத்த வேண்டும்
  • இன்றைய சூழலில் இசைப்பயிற்சியும் இன்றியமையாதது. இசை பாட இயற்கை சிலருக்குத் துணை செய்யும்; சிலருக்கு துணை செய்வதில்லை. அத்துணை பெறாதார் இசை இன்பத்தையாதல் நுகரப் பயில்வாராக.
  • பழைய தமிழர் இசைத்துறையின் நிலை கண்டவர் என்று ஈண்டு இறுமாந்து கூறுகிறேன்.
  • தமிழ் யாழையும் குழலையும் என்னென்று சொல்வது? அந்த ழகரங்களை நினைக்கும் போதே அமிழ்தூறுகிறது. கொடிய காட்டு வேழங்களையும் பாணர் தம் யாழ் மயக்குறச் செய்யுமாம்.
  • அந்த யாழ் எங்கே? இனி இசைப் புலவர்தொகை நாட்டிற் பெருகப் பெருக நாடு பல வழியிலும் ஒழுங்கு பெறுதல் ஒருதலை. ஆகவே அத்துறை மீதும் மாணவர் கருத்துச் செலுத்த வேண்டும்

5.திரு.வி.க. இயற்றிய நூல்கள் யாவை?

  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை
  • தமிழ்ச்சோலை
  • பொதுமை வேட்டல்
  • முருகன் அல்லது அழகு
  • இளமை விருந்து.

Leave a Reply