8th Tamil Samacheer kalvi guide Unit 8

8th Tamil Guide Unit 8.1

8th Tamil Guide Unit 8.1

8th Samacheer kalvi guide Unit 8.1 Book Back Answers.

8th Standard Tamil 8th Lesson Book Back and additional Questions and answers. 8th Tamil TN Samacheer kalvi guide. 8th Tamil இயல் 8.1 ஒன்றே குலம் Book Back Answers. 8th Tamil All Units Boon Back answers. We Update 8th Tamil Guide Book Answers used for TET, TNPSC, SI, TRB, TN 8th Students can use this material.

8th Tamil guide unit 8

8th Tamil Guide Unit 8.1. ஒன்றே குலம்

I. சொல்லும் பொருளும்

  • நமன் – எமன்
  • நாணாமே – கூசாமல்
  • சித்தம் – உள்ளம்
  • உய்ம்மின் – ஈடேறுங்கள்
  • நம்பர் – அடியார்
  • ஈயில் – வழங்கினால்
  • படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் _____ க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

  1. புலன்
  2. அறனை
  3. நமனை
  4. பலனை
விடை : நமனை

2. ஒன்றே _____ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும்.

  1. குலம்
  2. குளம்
  3. குணம்
  4. குடம்
விடை : குலம்

3. ‘நமனில்லை‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. நம் + இல்லை
  2. நமது + இல்லை
  3. நமன் + நில்லை
  4. நமன் + இல்லை
விடை : நமன் + இல்லை

4. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

  1. நம்பரங்கு
  2. நம்மார்க்கு
  3. நம்பர்க்கங்கு
  4. நம்பங்கு
விடை : நம்பர்க்கங்கு

III. குறு வினா

1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

  • மனிதர் அனைவரும் ஒரே இனம்.
  • உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே என்பதை மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை

2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?

  • மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர்
  • மனிதர் அனைவரும் ஒரே இனம்.
  • இறைவன் ஒருவனே என்பதை ஏற்றல்
  • அடியவர்களாகிய மக்களுக்குக் காணிக்கை கொடுத்தல்
  • ஆகியவற்றை செய்ய வேண்டும்

IV. சிறு வினா

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

  • படங்கள் அமைந்த கோயிலில் இருக்கக்கூடிய இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால், அப்பொருள் நடமாடும் கோயில் ஆகிய உடம்பை உடைய அடியார்களுக்கு சேராது
  • ஆகையால் அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கு கொடுப்பதை போன்றதாகும்.

ஒன்றே குலம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  • 1. நாயன்மார்கள் ________________  விடை : அறுபத்து மூன்று
  • 2. மக்கள் அனைவரும் ஒரே ________________   விடை : இனத்தினர்
  • 3. நமன் என்ற சொல்லிற்கு ________________ என்று பொருள்   விடை : எமன்
  • 4. ஒன்றே குலம் ஒருவனே ________________  விடை : தேவன்
  • 5. உலகமக்கள் அனைவரையும் ________________ கருதி அன்புகாட்ட வேண்டும்.  விடை : உடன் பிறந்தவராகக்

II. “ஒன்றே குலம்” பாடலில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக

மோனைச் சொற்கள்:-

  • ன்றே – ருவேன
  • ன்றே – மனில்லை
  • நின்றே – நிலைபெற
  • டமாடக் – கவற்கு
  • டமாடக் – ம்பர்க்கு

எதுகைச் சொற்கள்:

  • ன்றே – நன்றே
  • சென்றே – நின்றே
  • மாடக் – நமாடக்
  • கோயில் – ஈயில்

III. சிறு வினா

1. எதனை பாராட்டுவது தவறானது?

  • மனிதர்களிடையே பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது தவறானது.

2. எவ்வாறு அன்பு காட்ட வேண்டும்?

  • உலகமக்கள் அனைவரையும் உடன் பிறந்தாராகக் கருதி அன்புகாட்ட வேண்டும்.

3. எது இறைத் தொண்டாகும்?

  • பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப்போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும். அதுவே இறைத் தொண்டாகும்.

4. நடமாடும் கோயில் என்று திருமூலர் யாரைக் கூறுகிறார்?

  • நடமாடும் கோயில் என்று திருமூலர் அடியார்களாகிய மக்களை கூறுகிறார்

IV. குறு வினா

1. திருமூலர் பற்றிய குறிப்பு வரைக

  • திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்
  • பதினெண் சித்தர்களில் ஒருவர்
  • திருமந்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்

2. திருமந்திரம் குறிப்பு வரைக

  • திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர்
  • 3000 பாடல்களைக் கொண்ட நூல் இது
  • பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை நூல்

கூடுதல் வினாக்கள்

நீரப்புக :

1. மனிதர்களிடையே பிறப்பால் ………………… பாராட்டுவது தவறானது.
2. திருமந்திரத்தை இயற்றியவர் ……………….
3. திருமந்திரம் …………………. என்றும் அழைக்கப்படும்.
4. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ………………..
5. நமன் என்னும் சொல்லின் பொருள் …………….
6. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் ………………….. சேரும்.

Answer:

1. உயர்வுதாழ்வு
2. திருமூலர்
3. தமிழ் மூவாயிரம்
4. திருமந்திரம்
5. எமன்
6. இறைவனுக்குச்

விடையளி :

 1.திருமூலர் குறிப்பு எழுதுக.

  • திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்.
  • இவர் திருமந்திரத்தை இயற்றியுள்ளார்.

2.திருமந்திரம் – நூல் குறிப்பு எழுதுக.

  • திருமந்திரம் நூலை இயற்றியவர் திருமூலர்.
  • இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. எனவே, தமிழ் மூவாயிரம் எனப்படுகிறது.
  • இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

பாடல்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. – திருமூலர்

சொல்லும் பொருளும்

1. நமன் – எமன்
2. சித்தம் – உள்ள ம்
3. நம்பர் – அடியார்
4. படமாடக் கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்
5. நாணாமே – கூசாமல்
6. உய்ம்மின் – ஈடேறுங்கள்
7. ஈயில் – வழங்கினால்

பாடலின் பொருள்

  • மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.
  • படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

நூற்குறிப்பு

  • திருமந்திரம் என்ற நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர். இது பன்னிரு திருமறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. திருமந்திரம் என்னும் நூலிலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

ஆசிரியர் குறிப்பு

  • அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் A சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர். இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.

Leave a Reply