You are currently viewing 9th Social Science History Guide Lesson 6

9th Social Science History Guide Lesson 6

9th Social Science History Guide Lesson 6

9th Social Science – History Lesson 6 இடைக்காலம்

9th Standard Social Science History Lesson 6 இடைக்காலம்  Book Back Answers. 9th Social Guide Unit 6 Book Back Answers Tamil Medium. 9 All Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.

9th Social Science (History) Lesson -1 Book Back Answers

9th Social Science History Guide  பாடம் 6 இடைக்காலம்

1. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. ஜப்பானின் பழமையான மதம் ஆகும்.

  1. ஷின்டோ
  2. கன்பியூசியானிசம்
  3. தாவோயிசம்
  4. அனிமிசம்

விடை : ஷின்டோ

2. என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.

  1. டய்ம்யாஸ்
  2. சோகன்
  3. பியுஜிவாரா
  4. தொகுகவா

விடைடய்ம்யாஸ்

3. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி .

  1. தாரிக்
  2. அலாரிக்
  3. சலாடின்
  4. முகமது என்னும் வெற்றியாளர்

விடை : தாரிக்

4. ஹருன்-அல் ரஷித் என்பவர் ன் திறமையான அரசர்.

  1. அப்பாசித்து வம்சம்
  2. உமையது வம்சம்
  3. சசானிய வம்சம்
  4. மங்கோலிய வம்சம்

விடை : அப்பாசித்து வம்சம்

5. நிலப்பிரபுத்துவம் மையமாகக் கொண்டது.

  1. அண்டியிருத்தலைக்ஷ
  2. அடிமைத்தனத்தை
  3. வேளாண் கொத்தடிமையை
  4. நிலத்தை

விடை : அண்டியிருத்தலை

II. சரியான கூற்றினை தேர்வு செய்க.

1. (i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.

(ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்.

(iii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன.

(iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்.

a.(i) சரி

b.(ii) சரி

c.(ii) மற்றும் (iii) சரியானவை

d.(iv) சரி

விடை : (iv) சரி

2. (i) மங்குகான் என்பவர் சீனாவின் ஆளுநர்

(ii) சீனாவில் இருந்த மங்கோலிய அரச சபை மார்க்கோபோலோவின் நன்மதிப்பைப் பெற்றது.

(iii) ‘சிகப்புத் தலைப்பாகை’ என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் ஹங் சாவோ.

(iv) மங்கோலியர்கள் சீனாவில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.

a.(i) சரி

b.(ii) சரி

c.(ii) மற்றும் (iv) சரியானவை

d.(iv) சரி

விடை : (ii) மற்றும் (iv) சரியானவை

3. (i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.

(ii) விவசாயிகளின் எழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.

(iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.

(iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.

a.(i) சரி

b.(ii) சரி

c.(iii) சரி

d.(iv) சரி

விடை : (ii) சரி

 

4. கூற்று (கூ): பெளத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்குச் சென்றது.

காரணம் (கா): சீனாவில் தொடக்காலத்தில் குடியேறிய இந்தியர்கள் பெளத்த மதத்தை பின்பற்றியவர்கள்.

  1. கூற்று சரி ; காரணம் தவறு
  2. கூற்றும் காரணமும் தவறு
  3. கூற்றும் காரணமும் சரியானவை
  4. ஈ) கூற்று தவறு ; காரணம் கூற்றுக்கு தொடர்பற்றது

விடை : கூற்று சரி ; காரணம் தவறு

5. கூற்று (கூ). ஜெருசலேமை துருக்கியர் கைப்பற்றிக் கொண்டது சிலுவைப் போருக்குக் காரணமானது.

காரணம் (கா). ஜெருசலேமிற்கு புனிதப் பயணம் மேற்கொள்ள ஐரோப்பிய கிறித்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

  1. கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
  2. கூற்றும் காரணமும் சரி
  3. கூற்றும் காரணமும் தவறு
  4. கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

விடை : கூற்று சரி ; காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

III. கோடிட்ட இடத்தை நிரப்புக.

  1. …………………………………. என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவர். விடை : அய்னஸ்
  1. …………………………………. என்பது ஜப்பானின் முன்னாள் பெயர் ஆகும். விடை : யமட்டோ
  1. …………………………………. என்பது மெதினாவின் முந்தையப் பெயர் ஆகும். விடை : மதினாட்உன்நபி
  1. வடக்குப் பகுதியில் இருந்த சீனர்களுக்கு …………………………………. என்ற பண்பாட்டில் பின் தங்கியவர்கள் அச்சுறுத்தலைக் கொடுத்தனர். விடை : மங்கோலியர்கள்
  2. உதுமானியர் மேலாண்மையை பால்கன் பகுதியில் நிறுவியவர் …………………………………. ஆவார். விடை : இரண்டாம் முகமது

IV. பொருத்துக.

1. சிகப்பு தலைப்பாகைகள்

காமகுரா

2. செல்ஜுக் துருக்கியர்கள்

இரண்டாம் முகமது

3. முதல் சோகுனேட்

அரேபிய இரவுகளின் நகரம்

4. பாக்தாத்

சூ யுவான் சங்

5. கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்படல்

மத்திய ஆசியா

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

V. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி:

1. ஜப்பானின் சோகுனேட்கள்.

அ) ஜப்பானில் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்ட டய்ம்யாஸ் குடும்பங்கள் இரண்டைக் குறிப்பிடுக.

  1. தாரா
  2. மின மோட்டா

ஆ) இப்போரில் வெற்றி பெற்றவர் யார்?

யோரிடோமோ

இ) பேரரசர் பெற்றி பெற்றவருக்கு கொடுத்த பட்டம் என்ன?

செய்தாய்சோகன் (பண்பாடற்றவர்களை அடக்கிய மாபெரும் தளபதி)

ஈ) முதல் சோகுனேட்டின் தலைநகர் எங்கே நிறுவப்பட்டது?

காமகுரா

  1. அப்பாசித்துகளின் ஆட்சி.

அ) அப்பாசித்துகள் என்போர் யார்?

நபிகள் நாயகத்தின் மாமான் அப்பாஸ் என்பவரின் வழி வந்தவர்

ஆ) அப்பாசித்து காலிஃபா சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?

நம்பிக்கையாளர்களின் தளபதி

இ) அவர்களின் புதிய தலைநகரம் எங்குள்ளது?

பாக்தான்

ஈ) யாருடைய ஆட்சியில், அப்பாசித்து பேரரசு புகழின் உச்சத்தை எட்டியது?

ஹருன்அல்ரசீத்

 

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமான விடையளி.

1. சீனப் பெருஞ்சுவர்.

  • கி.மு. (பொ.ஆ.மு) 8 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலப் பகுதியில் தங்களுக்குள்ளே போரிட்டுக் கொண்டிருந்த சீன அரசுகள், வடக்கேயிருந்து வரும் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு சுவர்களை எழுப்பிக் கொண்டன.
  • சின் அரசவம்சத்தின் காலத்தில் தனித்தனியாக இருந்த பல சுவர்கள் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக கிழக்கிலிருந்து மேற்காக சுமார் 5000 கிலோ மீட்டர் நீளமுடைய பெருஞ்சுவர் உருவானது.
  • இச்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாடோடிப் பழங்குடியினர் உள்ளே நுழைய முடியாதவாறு இச்சுவர் தடுத்தது. பின்னர் ஆட்சிபுரிந்த பல அரச வம்சத்தினர் காலத்தில் இச்சுவர் விரிவு செய்யப்பட்டு வலுவூட்டப்பட்டது.
  • தற்போது சீனப்பெருஞ்சுவரின் மொத்த நீளம் 6700 கிலோ மீட்டர் ஆகும்.

2. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அரேபியர்களின் பங்களிப்பு.

  • அராபியர்கள் அறிவியல் பூர்வமான கேள்வி ஞானம் உடையவர்களாக இருந்தனர். மருத்துவம், கணிதம் போன்ற துறைகள் தொடர்பான பலவற்றை அவர்கள் இந்தியாவிலிருந்து கற்றுக் கொண்டனர்.
  • பல அராபிய மாணவர்கள் மருத்துவக்கல்வி கற்பதற்காக தட்சசீலம் சென்றனர்.
  • தட்சசீலம் அப்போதும் பெரும் பல்கலைக்கழகமாக மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியது.
  • இந்திய அறிஞர்களும் கணிதவியலாளர்களும் அதிக எண்ணிக்கையில் பாக்தாத் சென்றனர்.
  • மருத்துவம் மற்றும் பிறதுறைகள் சார்ந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட பல இந்திய நூல்கள் அராபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டன.
  • அராபிய மருத்துவர்களும் அறுவை சிகிச்சை நிபுணர்களும், மருத்துவ, அறுவை சிகிச்சை துறையில் புகழ்பெற்று விளங்கினர்

3. சிலுவைப் போர்களின் தாக்கம்.

  • சிலுவைப் போர்கள் நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது. சிலுவைப்போரில் பங்கு பெறுவதற்காகக் கிழக்கேசென்று பல பிரபுக்கள் நீண்ட காலத்திற்கு அங்கேயே தங்க நேர்ந்தது. சிலர் திரும்பி வரவேயில்லை.
  • இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி பண்ணை அடிமைகள் பலர் நிலத்தோடு தங்களை கட்டிப் போட்டிருந்த அடிமைக்கட்டுகளை உடைத்து வெளியேறினர்.
  • கீழைநாட்டுப் பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்ததால் வியாபாரம் பெருகியது.
  • மத்திய தரைக்கடல் பகுதியில் வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாகத் தோன்றின.
  • கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையேயான வணிகத்தில் கான்ஸ்டாண்டி நோபிள் நகரம் வகித்துவந்த இடைத்தரகர் பாத்திரம் முடிவுக்கு வந்தது.
  • வலிமைவாய்ந்த நிலப்பிரபுக்கள் அழிந்துபோனது ஒருவகையில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெறுவதற்கு காரணமாயிற்று.
  • சிலுவைப் போர்களின் குறிப்பிடத்தகுந்த ஒரு விளைவு போப்பாண்டவரும் அவருடைய ஆட்சிமுறையும் தங்கள் செல்வாக்கையும் மரியாதையையும் இழக்க நேர்ந்ததாகும்.

4. இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது?

  • கடவுளின் பிரதிநிதியாகக் கருதப்படும் அரசர் நிலப்பிரபுத்துவத்தின் தலைவராகக் கருதப்பட்டார். அவர்களுக்கு அடுத்த நிலையில் கோமகன்களாகக் கருதப்பட்ட டீயூக்குகள் (Dukes) ‘கவுண்ட்’டுகள் (Counts) ‘யேல்’கள் (Earls) போன்றோர் இருந்தனர்.
  • இந்த நிலப்பிரபுக்கள், நிலப்பிரபுத்துவ அடிப்படையில் அரசரிடம் இருந்து நிலம் பெற்றுக் கொண்டு அவருக்காக போரிட சம்மதித்த வகுப்பினர் ஆவர்.
  • அரசர் நிலங்களைப் பிரித்து இவர்களுக்குக் கொடுத்தார். இவர்கள் தாங்கள் பெற்ற நிலங்களை பிப் (Fief) துண்டுகளாகப் பிரித்தனர்.
  • தங்களுக்குக் கீழிருந்த வைஸ் கவுண்ட் என்பவர்களுக்கு விநியோகம் செய்தனர். இவ்வரிசையில் இறுதி இடம் பெற்றவர்கள் நைட் (knight) எனப்படும் சிறப்புப்பணி வீரர்கள்.
  • இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு எவருக்கும் பிரித்துத்தர முடியாது. இவர்கள் அனைவருக்கும் கீழ் அடிமட்டத்தில் இருந்தவர்கள் வில்லொயன் அல்லது செர்ப் (villein or serf) என்றறியப்பட்ட பண்ணை அடிமைகள் ஆவர்.

5. இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள்அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?

  • திருச்சபையிலிருந்து விலக்கி வைப்பது
  • மதவிலக்கு செய்வது
9th Social Science History Guide Lesson 6

VII.கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி:

1. சோகுனேட்களின் கீழ் ஜப்பானின் எழுச்சி பற்றி விரிவாகக் கூறுக.

  • சோகுனேட்கள் ஆட்சியின் போது ஜப்பானின் பேரரசர் யோரிடோமோ தனது ராணுவத் தலைமையகத்தை காமகுராவில் நிறுவினர். இதனால் முதல் சோகுனேட் காமகுரா சோகுனேட் என அழைக்கப்பட்டது.
  • வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஜப்பான் தனக்கேயுரிய வழிகளில் சீனத்தைப் பின்பற்றியது.
  • பேரரசர் ஓர் அலங்காரத் தலைமையாக மட்டுமே இருந்தார். நிலப்பிரபுத்துவ ராணுவத்தன்மை கொண்ட அரசு சாமுராய் எனப்பட்ட இராணுவ வீரர்களால் நிர்வகிக்கப்பட்டது.
  • ஆசிய வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த மற்றும் ஐரோப்பாவை பயமுறுத்திய மங்கோலியரை சோகுனேட்டுகளின் தலைமையில் ஜப்பான் வெற்றி கொண்டது. இருந்தபோதிலும் இவ்வம்சத்தின் சரிவு தொடங்கியது.
  • கி.பி. (பொ.ஆ) 1338-இல் காமகுரா சோகுனேட் வீழ்ச்சியடைந்தது. சோகுனேட்டுகளில் வேறொரு பிரிவைச் சேர்ந்த ‘அஷிக்காகா’ சோகுனேட்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர்.
  • இவர்களின் ஆட்சி 235 ஆண்டுகள் நீடித்தது.
  • இக்காலகட்டம் அரசியல் குழப்பங்களும் அதிகாரப் போட்டிகளும் நிறைந்ததாய் இருந்தது. இறுதியில் மூவர் ஜப்பானை நீண்ட காலம் நடைபெற்ற உள்நாட்டுப் போர்களிலிருந்து மீட்டனர்.
  • அவர்கள் போர்புநகா என்ற பிரபு, டய்ம்யாஸ் அல்லது ஹிடயோஷி எனப்பட்ட விவசாயி, தொகுகவா இய்யாசு என்ற அக்காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பிரபு ஆகியோராவர். 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜப்பான் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • இவ்வாறு ஜப்பனா சோகுனேட்கள் காலத்தில் எழுச்சி அடைந்தது.

2. மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?

  • மங்கோலியர்கள் நாடோடிகள். ஆசிய ரஷ்யாவின் ஸ்டெப்பிஸ் மேய்ச்சல் நிலப் பகுதிகளிலிருந்து ஐரோப்பாவிற்குள் வந்தவர்கள்.
  • அவர்கள் கால்நடை மேய்ப்பர்கள், போர்த்திறன் கொண்டவர்கள ஆவர். மங்கோலியர்கள் ரஷ்யாவை 300 ஆண்டுகாலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
  • பாரசீகத்தையும் ஒட்டு மொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவை கைப்பற்றினர். சீனாவின் ஆளநராகப் குப்ளேகான் இருந்தார்.
  • சீனாவின் தொழில் நுட்ப முன்னேற்றங்களை இதர வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்புவதற்கு உதவியது.
  • பெய்ஜிங்கிலிருந்த மங்கோலியரின் அரச சபை மார்க்கோபோலோ போன்ற வெளிநாட்டவர்களிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் விவசாயிகள் தொடர்ந்து வறுமையில் வாடினர். சில மதம் சார்ந்த அமைப்புகளும் ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின.
  • முடிவில் ‘சிகப்பு தலைப்பாகைகள்’ (Red Turbans) என்ற அமைப்பின் தலைவரான சூ யுவான் சங் தலைநகர் பெய்ஜிங்கைக் கைப்பற்றி கி.பி. (பொ.ஆ.) 1369 இல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்
  • இந்த அமைப்பினரால் மங்கோலியர் ஆட்சி சீனாவில் முடிவுக்கு வந்தது.

Leave a Reply