You are currently viewing 9th Social Science History Guide Lesson 8

9th Social Science History Guide Lesson 8

9th Social Science History Guide Lesson 8

9th Social Science – History Guide Lesson 8 நவீன யுகத்தின் தொடக்கம்

9th Standard Social Science History Lesson 8 நவீன யுகத்தின் தொடக்கம் Book Back Answers. 9th Social Guide Unit 8 Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.

9th Social Science (History) Lesson -1 Book Back Answers

9th Social Science History Guide பாடம் 4. நவீன யுகத்தின் தொடக்கம்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?

  1. லியானார்டோ டாவின்சி
  2. ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க்
  3. ஏராஸ்மஸ்
  4. தாமஸ் மூர்

விடை : ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க்

2. ‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்.

  1. ரஃபேல் சான்சியோ
  2. மைக்கேல் ஆஞ்சலோ
  3. அல்புருட் டியுரர்
  4. லியானார்டோ டாவின்சி

விடை : ரஃபேல் சான்சியோ

3. வில்லியம் ஹார்வி கண்டுபிடித்தார்.

  1. சூரியனே பிரபஞ்சத்தின் மையம்
  2. பூமியே பிரபஞ்சத்தின் மையம்
  3. புவியீர்ப்பு விசை
  4. இரத்தத்தின் சுழற்சி

விடை : இரத்தத்தின் சுழற்சி

4. “தொண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்?

  1. மார்ட்டின் லூதர்
  2. ஸ்விங்லி
  3. ஜான் கால்வின்
  4. தாமஸ்மூர்

விடை : மார்ட்டின் லூதர்

5.‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர் .

  1. மார்ட்டின் லூதர்
  2. ஸ்விங்லி
  3. ஜான் கால்வின்
  4. செர்வாண்டிஸ்

விடை : ஜான் கால்வின்

6. பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

  1. மாலுமி ஹென்றி
  2. லோபோ கோன்ஸால்வ்ஸ்
  3. பார்த்தலோமியோ டயஸ்
  4. கொலம்பஸ்

விடை : மாலுமி ஹென்றி

7. பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர் .

  1. கொலம்பஸ்
  2. அமெரிகோ வெஸ்புகி
  3. ஃபெர்டினான்ட் மெகெல்லன்
  4. வாஸ்கோடகாமா

விடை : ஃபெர்டினான்ட் மெகெல்லன்

8. அமெரிக்க கண்டம் என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

  1. அமெரிகோ வெஸ்புகி
  2. கொலம்பஸ்
  3. வாஸ்கோடகாமா
  4. ஹெர்நாண்டோ கார்டஸ்

விடை : அமெரிகோ வெஸ்புகி

9. கிழக்கு இந்தியாவில் போர்ச்சுசீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக இருந்தது.

  1. மணிலா
  2. பம்பாய்
  3. பாண்டிச்சேரி
  4. கோவா

விடை : மணிலா

10. கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

  1. கரும்பு
  2. சர்க்கரைவள்ளிக்கிழங்கு
  3. அரிசி
  4. கோதுமை

விடை : சர்க்கரைவள்ளிக்கிழங்கு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

  1. கி.பி.1453ல் கான்ஸ்டாண்டிநோபிளை …………………………….. கைப்பற்றினர். விடை : உதுமானிய துருக்கியர்
  1. …………………………….. என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார் விடை : ஏராஸ்மஸ்
  2. …………………………….. சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார். விடை : மைக்கேல் ஆஞ்சலோ
  1. கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் …………………………….. ஆகும். விடை : எதிர்மத சீர்திருத்தம்
  2. வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் …………………………….., …………………………….. மற்றும் …………………………….. ஆகும் விடை : மறுமலர்ச்சி, மறுசீர்த்திருத்தம், கடல் ஆய்வுப் பயணங்கள்

III சரியான கூற்றினைக் கண்டுபிடி

  1. அ) மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர், அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்.

ஆ) ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.

இ) எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.

ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

விடை : ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

  1. அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

ஆ) குதிரைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை.

இ) நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை.

ஈ) போர்ச்சுகீசியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விடை : ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

IV. பொருத்துக.

1. நிலபிரபுத்துவம்

ஏகபோக வர்த்தகம்

2. மனிதாபிமானம்

மதத்திற்குப் புறம்பானவர் மீது விசாரணை

3. நீதி விசாரணை

ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான வர்த்தகப் பரிமாற்றம்

4. மெர்க்கண்டலிசம்

சமூக பொருளாதார அமைப்பின் படிநிலை

5. கொலம்பிய பரிமாற்றம்

மனித கெளரவம்

விடை : 1 – , 2 – , 3 – , 4 – , 5 –

V. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள எல்லா வினாக்களுக்கும் விடையளி:

1. மறுமலர்ச்சி

அ). இத்தாலிய நகர அரசுகளில் முதன்முதலில் மறுமலர்ச்சி தோன்றுவதற்கான காரணங்களைக் கூறுக.

இத்தாலிய நகர அரசுகள் 14-ம் நூற்றாண்டிலிருந்து பண்பாட்டு நடவடிக்கையின் மையங்களாக விளங்கின

ஆ) மனித நேயர்கள் சிலரையும், அவர்களது படைப்புகளையும் குறிப்பிடுக.

 

மனித நேயர்கள்

படைப்புகள்

தாத்தே

டிவைன் காமெடி

மாக்கியவெல்லி

இளவரசன்

எராஸ்மஸ்

மடமையின் புகழ்ச்சி

சர்தாமஸ்மூர்

உட்டோப்பியா

செர்வாண்டிஸ்

டான் க்விக் ஸோட்

மார்ட்டின் லூதர்

தொண்ணூற்றைந்து கொள்கைகள்

மனித நேயத்தின் தந்தை பெட்ரார்க் ஆவார்

இ) மறுமலர்ச்சி காலக் கலைக்கும் இடைக்காலக் கலைக்கும் உள்ள வேறுபாடுகளை வரிசைப்படுத்துக.

மறுமலர்ச்சி காலக் கலை

இடைக்காலக் கலை

ஓவியங்களும், சிற்பங்களும் எதார்த்த பண்புடனும், இயல்பு சார்ந்த இயற்கையான தன்மையுடன் அமைந்தவை

ஒவியங்களும், சிற்பங்களும் அமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்டவை

ஈ) மனிதநேயம் பற்றி விளக்குக.

மனிதேயத்தை தன்னுடைய படைப்புகளில் முதலில் ஏற்று உள்வாங்கிக் கொண்டு அது தொடர்பான சிந்தனைகளை வெளிப்படுதியபர் “பெட்ரார்க்” இவர் மனித நேயத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

2. மத சீர்திருத்தம்

அ). மார்ட்டின் லூதர் தேவாலயத்தை ஏன் எதிர்த்தார்?

  • திருச்சபையின் ஆடம்பர வாழ்க்கை
  • திருச்சபைப் பதவிகளை ஏலத்திற்கு விடுதல்
  • பாவமன்னிப்புச் சீட்டு விற்பனை ஆகியவற்றை எதிர்த்தார்.

ஆ) ‘நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்’ என்ற கொள்கை குறித்து எழுது.

நம்பிக்கையினால் மட்டுமே ஒருவர் ஆன்ம விடுதலையை அடைய முடியமென மார்ட்டின் லூதர் வாதிட்டார். “நம்பிக்கையினால் நியாப்படுத்துதல்என்ற கொள்கை வடிவை அவர் முன்வைத்தார்.

இ) எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் திருச்சபையை ஏன் நிறுவினார்?

இங்கிலாந்தின் அரசு எட்டாம் ஹென்றி தன் தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக மதச் சீர்த்திருத்தம் கொண்டு வந்து ஆங்கிலிக்கள் திருச்சபையை நிறுவினார்.

ஈ) இக்னேஷியஸ் லயோலாவின் பங்களிப்பு குறித்து எழுதுக.

புனித இக்னேஷிஸ் லயோலா, இவர் கிறித்தவ மத்தை பரப்புவதற்காக இயேசு சபையை நிறுவினார்.

3. புவியியல் சார் கண்டுபிடிப்புகள்.

அ) மாலுமி ஹென்றி என்பவர் யார்?

மாலுமி ஹென்றி என்பவர் போர்ச்சுக்கலைச் சார்ந்த கடலோடி இளவரசர் நீண்ட கடற்பயணங்களக்கான அடித்தளத்தை உருவாக்கினார். மாலுமிகளுக்குப் பயிற்சியளிப்பதற்காக ஒரு கடறப்பயணப் பள்ளியை நிறுவியிருந்தார்.

ஆ) புவியியல்சார் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களை வரிசைப்படுத்து.

  • நெடுந்தொலைவுக் கடற்பயணத்திற்கான ஆர்வத் துடிப்பு
  • இதுவரை பயணப்பட்டிராத கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம்.
  • மார்க்கோபோலோ, இபின்தூதா ஆகியோரின் பயணக் குறிப்புகள்.
  • இறைப் பணியாளர்களின் மதம் பரப்பும் எண்ணம்.

இ) அமெரிக்காவில் உள்ளூர் மக்களின் அழித்தொழிப்புக்கு இட்டுச் சென்றது எது?

 

ஆபத்து மிக்க நோய்களான சின்னம்மை, அம்மை, தட்டம்மை, மலேரியா, விஷக்காய்ச்சல் ஆகியவை

ஈ) முக்கோண வர்த்தகம் என்றால் என்ன?

அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண வர்த்தகம் ஆகும்.

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமான விடையளி.

1. அச்சு இயந்திரத்தின் கண்டுபடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விவரி.

  • நவீனமயமாதலை வேகப்படுதியது ஒரு கையெழுத்துப் பிரதியின் பல மறு பிரதிகள் உற்பத்தியை அச்சு இயந்திரம் சாத்தியமாக்கியது.
  • மேலும் அறிவைப் பாரந்து விரிந்ததாக ஆக்கியதோடு விமர்சன ரீதியான சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றது.
  • மனிதநேயவாதிகள் இடைக்கால் சிந்தனைகளை விமர்சன கண்ணோட்டத்துடன் பார்த்து அவற்றை தங்கள் எழுத்துகளில் நையாண்டி செய்தனர்.
  • இவைகள் அச்சடிக்கப்பட்டு புத்தகங்களாக வெளியாயின. இதனால் மறுமலர்ச்சியிலும் மார்டின் லூதர் எழுதிய தொண்ணூற்றைந்து கொள்கைகள் அச்சிடப்ட்டு பரவலாக வெளியிடப்பட்து.
  • இது மதசீர்திருத்தத்திலும் கடற்பயண பள்ளியில் கடற்பயண போக்குவரத்திற்கான அச்சிடப்பட்ட பிரதிகள் கடற்பயணனம் செய்ய பலரை பெரும் ஆர்வத்திற்குள்ளாகின.

2. மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

  • வட்டார மொழியில் எழுதுவது அறிமுகமானதால், அறிவார்ந்த ஓர்
  • அடித்தளத்தை வழங்கியது.
  • திருச்சபையின் ஊழல் விமர்சிக்கப்பட்டது.
  • மறுமலர்ச்சியினால் தூண்டிவிடப்பட்ட புத்தார்வம், புதிய நிலவழிப் பாதைகளின் கண்டுபிடிப்பிலும், உலக வரைபடத்தை மாற்றி அமைப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்திருந்தது.
  • அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் சென்றதுடன் உடற்கூறியலுக்கும் வானியல் ஆராய்ச்சிக்கும் அழைத்து சென்றது.

3. கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதர் கொண்டிருந்த மாற்றுக் கருத்துகளை விவரி.

  • சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை அவர் நிராகரித்தார்.
  • முழுமையான நம்பிக்கையினால் மட்டுமே ஒருவர் ஆன்ம விடுதலையை அடைய முடியுமென அவர் வாதிட்டார்.
  • மக்களுடைய தெய்வீகமான பற்றுறுதியினால் மட்டுமே கடவுளின் கருணை மனிதர்களுக்கு அருளப்படுமே அல்லாமல் அவர்களுடைய செயல்களினால் அல்ல. மேலும், பைபிள் அனைத்து மக்களாலும் படிக்கப்பட்டு, விவாதிக்கப்படக் கூடியதே அல்லாமல் திருச்சபையினால் மட்டுமே வாசித்து விளக்கமளிக்கக் கூடிய ஒன்றல்ல.
  • கடவுளுக்கும் ஒரு தனிநபருக்குமிடையே திருச்சபை ஓர் இணைப்புப் பாலம் என்பதையும் லூதர் நிராகரித்தார்.

4. மத எதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  • பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கம், கத்தோலிக்க திருச்சபைக்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது.
  • அந்த சவாலை எதிர்கொண்டு சந்திப்பதற்காக போப் மூன்றாம் பால் மற்றும் அவரையடுத்துப் பொறுப்புக்கு வந்தவர்கள் திருச்சபையில் எண்ணற்ற பல தீவிரமான சீர்திருத்தங்களை அறிவித்தார்கள்.
  • ஊழல்களைக் கடுமையான முறையில் கையாண்டதுடன், பதவிகளின் விற்பனையையும் தடை செய்தனர்.
  • கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியது.
  • புனித மறைநூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கமளிக்க முடியுமென்றும் அது அறிவித்தது.
  • திருச்சபைக்கு எதிரான முயற்சிகளைக் கையாளுவதற்கு மத நீதிமன்றத்திற்கு புத்துயிர் அளித்தது.
  • இயேசு சபைக்கு அதிகாரப்பூர்வமான அனுமதியையும் அது வழங்கியது.
  • கத்தோலிக்க திருச்சபைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்தம் ‘எதிர் மத சீர்திருத்தம்’ என்று அறியப்பட்டது.
  1. ‘கொலம்பியப் பரிமாற்றம்’ என்றால் என்ன?

அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே அல்லது புதிய உலகத்திற்கும் பழைய உலகத்திற்குமிடையே, தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம் பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும். இது கொலம்பியப் பறிமாற்றம் (Columbian Exchange) என்று அறியப்படுகிறது.

VII.கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி:

1. மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின – விவாதி.

  • மறுமலர்ச்சிக் காலத்தில் மனிதநேயம் தனி உரிமைக் கோட்பாடு, பகுத்தறிவு தேசியம் போன்ற புதிய சிந்தனைகள் உதயமாயிற்று.
  • இந்த சிந்தனைகளின் விளைவாக புதிய இயந்திரங்கள் மற்றம் அறிவியல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இவைகளால் சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களை தெளிவாக அச்சு பிரதியின் உதவியுடன் வெளியிட்டனர்.
  • இது அரசியலிலும் திருச்சபையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் கலையிலும், இலயக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • இந்த தாக்கம் விமர்சனத்தையும் நையாண்டியைும் முன்னெடுத்து சென்றது.
  • இதனால் செவ்வியலாளர்கள் அறிவியலுக்கு அடித்தளம் அமைத்தனர்.
  • ஊழல்கள் நிறைந்த திருச்சபைகள் இளவரசர்களை போல ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த திருச்சபை ஊழியர்கள் பற்றி கத்தோலிக்க நம்பிக்கையின் நெறிபிறழாத விசுவாத்துடன் ஆழ்ந்த அர்பணிப்புடனும் வாழந்த மார்ட்டின் லூதர் போன்ற பேராசிரியர்கள் புரட்சிகளை அடையாளப்படுத்தினர்.
  • மேலும் கடவுகளுக்கும், தனிமனிதருக்கும் இடையே திருச்சபை இணைப்பு பாலம் நிராகரித்தார்.
  • இதனால் திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் உதயமாயிற்று மேலும் பலர் திருச்சபை மற்றம் மதச் சீர்த்திருத்தங்கள் உருவாக வழிவகுத்தனர்.
  • புவிசார் கண்டுபிடிப்புகள் காலனிய ஆதிக்கத்தை உருவாக்கியதுடன் வேளாண்மை, சுங்கத் தொழிகளை உருவாக்கியது.
  • புதிய கடல்வழித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வணிகம் பொருளாதார செழுமைக்கு இட்டுச் சென்றது.
  • இவ்வாறு நவீன யுகத்தின் வருகையை மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம், புவிசார் கண்டுபிடப்புகள் நவீன யுகத்தின் வருகையை பறைசாற்றின.
  • கூடுதல் ஆய்வு தேடல் பயணங்கள் தொடரப்பட்டன.

2. புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் குறித்து ஆராய்க.

  • உலகைப் பற்றிய ஐரோப்பியப் புரிதலை புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மாற்றியமைத்தன.
  • உலக வரைபடத்தின் மீள்வரைவுக்கு அது இட்டுச் சென்றது. புதிய நிலப்பரப்புகள், புதிய கடல்வழிப்பாதைகளின் கண்டுபிடிப்புகளின் விளைவாக ஐரோப்பாவின் பொருளாதார மையம், இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தன.
  • போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளுமே குடியேற்றங்களை நிறுவின. இது அவற்றை பொருளாதாரச் செழுமைக்கு இட்டுச் சென்றது.
  • ஸ்பானியர்களின் புதிய உலகக் கண்டுபிடிப்பு, மெக்ஸிகோவையும் தென் அமெரிக்காவையும் வெற்றிகொள்வதற்கு இட்டுச் சென்றது.
  • கொலம்பஸின் கடற்பயணங்கள், ஸ்பானிய வெற்றியாளர்களால் மேற்கொண்டு கூடுதலான ஆய்வுத் தேடல் பயணங்களால்
  • தொடரப்பட்டன.
  • அவர்கள் வெற்றிகொண்ட அப்பகுதிகளின் உள்ளூர் மக்களைத்
  • தோற்கடித்து அவற்றைக் தங்களின் குடியேற்றமாக்கினர். உள்ளூர் மக்களை வெற்றி கண்ட அவர்கள், மக்களைக் குரூரமான
  • விதத்தில் கொன்றனர். கொல்லப்பட்டவர்கள்
  • போக எஞ்சியவர்களைத் தங்கம், வெள்ளிச்
  • சுரங்கங்களிலும், தோட்டங்களிலும் மிகக்
  • கடுமையான சூழ்நிலைகளின் கீழ் பணி
  • செய்யுமாறு கட்டாயப்படுத்தினர்.
  • காலனிமயமாக்குபவர்களால் ஏற்பட்ட மிக பயங்கர கொடுந் தொற்றுநோய்கள் பல உள்ளூர் மக்களை கொண்று குவித்தது
  • வேளாண்மை பொருள்களும், விலங்குளும், பயிறு வகைகளும், குதிரை, ஆடு மாடுகள், செம்பறியாடுகள் மேலும் பல வன ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன.
  • கரும்புத் தோட்டங்கள் உருவாயின. அடிமை வர்த்தக மையங்கள் உருவாயின.
  • நடைமுறை பொருளாதார அமைப்பு மெர்கண்டலிசம் உருவானது.
  • கிழக்கிந்திய கம்பெனிகள் உருவாயின. வியாபார வரத்தகத்தில் பல போட்டியார்களை வெற்றிக் கொண்டு ஏகபோகத்தை நடைமுறைப்படுத்தினர்.
  • இவ்வாறாக புவியல் சார் கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் விளைவுகளை ஏற்படுத்தின

Leave a Reply