9th Tamil Guide Unit 2.1

9th Tamil Guide Unit 2.2

9th Tamil Guide Unit 2.2

9th Tamil 2nd Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 2.2 பட்டமரம் Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 2 – Full Guide – Click Here

9th Tamil Guide Unit 2.1

9th Tamil Samacheer Kalviuide Guide 2nd Lesson – Unit 2.1 பட்டமரம்

 9th Standard Tamil Guide Unit 2 | 2.2. பட்ட மரம்

I. சொல்லும் பொருளும்
  • குந்த – உட்கார
  • கந்தம் – மணம்
  • மிசை – மேல்
  • விசனம் – கவலை
  • எழில் – அழகு
  • துயர் – துன்பம்
II. இலக்கணக்குறிப்பு
  • வெந்து – வினையெச்சம்
  • வெம்பி – வினையெச்சம்
  • எய்தி – வினையெச்சம்
  • மூடுபனி – வினைத்தொகை
  • ஆடுகிளை – வினைத்தொகை
  • வெறுங்கனவு – பண்புத்தொகை

III. பகுபத உறுப்பிலக்கம்

1. விரித்த = விரி + த் + த் +அ
விரி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரச்ச விகுதி
2. குமைந்தனை = குமை + த்(ந்) + த் +அன் +ஐ
குமை – பகுதி
த் – சந்தி
த்-ந் ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

IV. பலவுள் தெரிக.

1. “மிசை” – என்பதன் எதிர்ச்சொல் என்ன ?
  1. கீழே
  2. மேலே
  3. இசை
  4. வசை
விடை : கீழே

V. சிறு வினா

பட்டமரத்தின் வருத்தங்கள் யாவை?
  • அமர நிழல் கொடுத்தேன்.
  • நறுமண மலர் கொடுத்தேன்
  • பறவைகள் என் மீது அமர்ந்து பாடல் புனையும்.
  • என் கிளை மீது ஏறி சிறுவர்கள் குதிரை விளையாடுவார்கள்.
  • இவையெல்லாம் போய் இன்று பட்டமரமாய் போய்விட்டேன் என்று பட்டமரம் வருந்தியது.

பட்ட மரம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. ___________ பாரதியாரின் வழித்தோன்றல் ஆவார்
விடை : தமிழ் ஒளி
2. பாரதிதாசனின் மாணவராக விளங்கியவர்  ___________
விடை : தமிழ் ஒளி
3. பட்டமரம் கவிதை இடம் பெறும் நூல்  ___________
விடை : தமிழ் ஒளியின் கவிதைகள்
4. நம் முன்னோரின் வாழ்க்கை ___________ இயைந்தது.
விடை : இயற்கையோடு
5. மரம் என்பது ___________ மிகவும் இன்றியமையாதது.
விடை : மனித வாழ்வில்

II. குறு வினா

1. நம் முன்னோரின் வாழ்க்கை எதனோடு இயைந்தது?
நம் முன்னோரின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது.
2. நம் முன்னோர்கள் எவற்றையெல்லாம் போற்றி காத்தனர்?
நம் முன்னோர்கள் மரம், செடி, கொடிகளையும் பாேற்றிக் காத்தனர்.
3. எது மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாதது?
மரம் என்பது மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாதது.
4. பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூல் எது?
பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூல் “தமிழ் ஒளியின் கவிதைகள்”
5. பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூலின் ஆசிரியர் யார்?
பட்ட மரம் என்ற தலைப்பில் அமைந்த கவிதை இடம் பெறும் நூலின் ஆசிரியர் “தமிழ் ஒளி (விஜயரங்கம்)”
6. மரம் எதைப்போல் எய்தி உழன்றது?
காலமாகிய பயுல் தாக்கம்போது அழுது கை நீட்டிக் கதறும் மனிதன் போல மரம் உழன்றது.
7. மரங்கள் இல்லை என்றால் நமக்கு எவை கிடைக்காமல் போய்விடும்?
மரங்கள் இல்லை என்றால் நமக்கு உயிர்வளி கிடைக்காமல் போய்விடும்.

III. குறு வினா

கவிஞர் தமிழ் ஒளி – குறிப்பு வரைக
  • கவிஞர் தமிழ் ஒளி இயற்பெயர் விஜயரங்கம்
  • வாழ்ந்த காலம் : 1924–1965
  • இவர் புதுவையில் பிறந்தவர்.
  • பாரதியாரின் வழித்தோன்றலகாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளஙகியவர்.
  • மக்களுகககாகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
  • நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.

Leave a Reply