You are currently viewing 9th Tamil Guide Unit 9.5

9th Tamil Guide Unit 9.5

9th Tamil Guide Unit 9.5

9th Tamil 9th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 9.5 அணியிலக்கணம். Ninth Standard Tamil 9th Lesson Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 9 – Full Guide – Click Here

9th Tamil Samacheer Kalviuide Guide 8th Lesson – Unit 9.5 அணியிலக்கணம்

9.5. அணியிலக்கணம்

I. பலவுள் தெரிக

1. கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?

  1. சொல் பின்வரு நிலையணி
  2. பொருள் பின்வரு நிலையணி
  3. சொற்பொருள் பின்வரு நிலையணி
  4. வஞ்சப் புழச்சி அணி

விடை : பொருள் பின்வரு நிலையணி

II. குறு வினா

1. நினைத்தேன், கவித்தேன், படைத்தேன், சுவைத்தேன் இத்தொடரில் அமைந்துள் உருவகத்தைக் கண்டறிக

இத்தொடரில் அமைந்துள்ள உருவகம் ‘கவித்தேன்’ என்பது . கவிதை, தேனாக உருவாகம் செய்யப்பட்டுள்ளது.

III. சிறு வினா

1. உருவக அணியை சான்றுடன் எழுதுக

இலக்கணம்:-
உவமையின் தன்மையைப் பொருள் மீது ஏற்றிக் கூறுவது உருவக அணி ஆகும்.
சான்று:-
“இன்சொல் விளைமா ஈதலே வித்தாக”
விளக்கம்:-
இன்சொல் – நிலமாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இவ்வடி உருவ அணியாயிற்று.

அணியிலக்கணம் – கூடுதல் வினாக்கள்

1. சொல் பின்வருநிலையணி என்றால் என்ன? சான்று தருக.

முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருளை உணர்த்துவது சொல் பின்வருநிலையணி அணியாகும்.
சான்று:-
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இக்குறளில் “துப்பு” எனற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருளைத்
தருகிறது.

2. பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன? சான்று தருக.
செய்யுளில் முன் வந்த பொருளே பின்னர் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலை அணி ஆகும்.
சான்று:-
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை
இக்குறட்பாவில் “செல்வம்” “மாடு” இரண்டு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றது.

3. சொற்பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன? சான்று தருக.
செய்யுளில் முன் வந்த பொருளும், சொல்லும் பின்னர் பல இடங்களில் வருவது சொற்பொருள் பின் வருநிலையணி அணியாகும்.
சான்று
எல்லா விளக்கும் விளக்கல்ல் சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு
இக்குறட்பாவில் “விளக்கு” என்னும் சொல் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.

4. வஞ்சப்புகழ்ச்சி அணி என்றால் என்ன? சான்று தருக.
புகழ்வது போல் பழிப்பதும், பழிப்பது போல் புகழ்வது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்
சான்று
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழக லான்
கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர் என்று புகழப்படுவது போலத் தோன்றிலாலும் கயவர்கள் இழிநத் செயல்களையே செய்வர் என்னும் பொருளை குறிப்பால் உணர்த்துகிறது. எனவே இது புகழ்வது போல் பழிப்பது ஆகம்.

கற்பவை கற்றபின்…

I. கீழ்க்காணும் குறட்பாக்களில் அமைந்துள்ள அணி வகையை கண்டறிக

அ) ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி என்படு வார்
விடை :
சான்றாண்மை மிக்கவர் கடலுக்கு கரை என்று உருவகம் செய்த வள்ளுவர், ஊழிக் காலத்தை உருவகம் செய்யாமல் விட்டதால், இஃது ஏகதேச உருவக அணி ஆயிற்று

ஆ) பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம் நாணத் தக்கது உடைத்து
விடை :
“நாண்” என்னும் சொல் “வெட்கம்” என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.
செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்

இ) தீயவை தீய பயத்தால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
விடை :
“தீய” என்னும் சொல் “தீமை” என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.
செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தந்தால் சொற்பொருள் பின்வருநிலையணி எனப்படும்

2. உவமையணி அமைந்துள் பாடல் அடிகளை எழுதுக

“மறுவிலா தெழுந்த முழுமதி போல
முகம்மது நபிபிறந் தனேர” – சீறாப்புராணம்
“ஆறுகிடந் தன்ன அகனேடுத் தெருவிற்” – நெடுநெல்வாடை

3. கீழ்க்காணும் புதுக்கவிதையில் அமைந்த அணியினை எழுதுக
  1. விருட்சங்கள்
  2. மண்ணரசி மடக்காமலேயே
  3. பிடித்துக் கொண்டிருக்கம்
  4. பச்சைக் குடைகள்

விடை : உருவக அணி

 மொழியை ஆள்வோம் 

I. மாெழி பெயர்க்க.
A deer, a turtle, a crow and a rat were friends. One day the deer was caught in a hunter’s trap. Friends made a plan to save him. According to the plan, the deer lay motionless as if it were dead. The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter’s path to distract him. The hunter left the deer, assuming it dead, and went after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The crow picked up the turtle and quickly took it away from the hunter. From this Panchatantra story, we learn that the teamwork can achieve great results.

ஒரு மான், ஆமை, ஒரு காகம் மற்றும் எலி நண்பர்கள். ஒரு நாள் மான் ஒரு வேட்டைக்காரனின் வலையில் சிக்கியது. நண்பர்கள் அவரைக் காப்பாற்ற ஒரு திட்டத்தை உருவாக்கினர். திட்டத்தின் படி, மான் இறந்ததைப் போல அசையாமல் கிடந்தது. காகம் மானின் மீது அமர்ந்து குத்த ஆரம்பித்தது. ஆமை அவரை திசைதிருப்ப வேட்டைக்காரனின் பாதையை கடந்தது. வேட்டைக்காரன் மானை விட்டுவிட்டு, இறந்துவிட்டதாகக் கருதி, ஆமைக்குப் பின் சென்றான். இதற்கிடையில், எலி மெல்லும் மானை விடுவிக்க வலையைத் திறக்கிறது. காகம் ஆமை எடுத்து விரைவாக வேட்டைக்காரனிடமிருந்து எடுத்துச் சென்றது. இந்த பஞ்சதந்திர கதையிலிருந்து, குழுப்பணி சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதை அறிகிறோம்.

II. பொருத்தமான நிறுத்த குறியிடுக

ஆசிரியர் மாணவர்களிடம், “மாணவர்களே! கடவுளையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று” என்று கூறினார்.

பிள்ளைத் தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாப்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன.
“அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்வர்க்கு அளிக்கும் வகையில், குமரகுரபரின் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ மிகச் சிறந்தாகத் திகழ்கிறது.

III. சொற்றொடர் அமைக்க

1. செந்தமிழும் சுவையும் போல
பெரியோர்கள் மணமக்களை செந்தமிழும் சுவையும் போல வாழ வேண்டும் என வாழ்த்தினர்.

2. பசுமரத்தாணிபோல
ஒருவன் நமக்கு செய்த தீங்கு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்துவிடும்.

3. உள்ளங்கை நெல்லிக்கனி போல
இச்செய்யுளின் பொருள், உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக புலனாகிறது.

4. அத்தி பூத்தாற் போல
என் தோழியின் வருகை அத்தி பூத்தாற்போல் என்றாவது நிகழும்.

5. மழைமுகம் காணாப் பயிர் போல
வெளிநாட்டிற்கு சென்ற சோமு மழைமுகம் காணாப் பயிர் போல சோர்வாக காணப்பட்டான்.

III. பாடலில் காணும் இலக்கிய  வடிவங்களையும் அவற்றுக்குப் புகழ் பெற்றோரையும் கண்டறிந்து எழுதுக.

வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்ஓர்
சயங்கொண்டான்; விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர்கம்பன்; கோவைஉலா
அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்;
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்;
வசைபாடக் காளமேகம்;
பண்பாய பகர்சந்தம் படிக்காச
அலாதொருவர் பகர ஒணாதே

இலக்கிய வடிவம் புகழ் பெற்றோர்
வெண்பா புகழேந்தி
பரணி சயங்கொண்டான்
விருத்தம் கம்பன்
கோவை, உலா, அந்தாதி ஒட்டக்கூத்தர்
கலம்பகம் இளஞ்சூரியர், முதுசூரியர் என்னும் இரட்டையர்கள்
வசைக்கவி காளமேகம்
சந்தம் படிக்காசுப்புலவர்

மொழியோடு விளையாடு

I. எழுத்துக்களை முறைப்படுத்திச் சொற்களை கண்டுபிடிக்க
  • புன்பமொப்லமைழி – பன்மொழிப்புலமை
  • யனிநேம்தம – மனித நேயம்
  • கச்வப்ஞ்புசிழ்வ – வஞ்சப்புகழ்ச்சி
  • தைக்விதுகபு – புதுக்கவிதை
  • டுசிப்காட்ஞ்ப – காஞ்சிப்பட்டு

II. அகராதியில் காண்க

1. குரிசல்
பெருமையில் சிறந்தேன், உபகாரி, தலைவன்

2. தலையளி
முகமலர்ந்து, கூறுதல், அன்பு, அருள்

3. நயம்
நன்மை, விருப்பம், போற்றுகை, மிகுதி, பயன், நுன்மை, அருள்

4. உய்த்தல்
செலுத்துதல், நடத்துதல், நுகர்தல், அனுப்புதல், அறிவித்தல்

5. இருசு
நேர்மை, வண்டியச்சு, மூங்கில்

III. தொகைச் சொற்களை கொண்டு பத்தியை சுருக்குதல்

சேர, சாேழ, பாண்டிய அரசர்களிடம் யானைப்பலை, குதிரைப்படை, தேர்ப்படை, தரைப்படை ஆகியவை இருந்தன. அவர்கள் மா, பலா, வாழை ஆகிய கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் அவர்களின் ஆட்சிப்புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் எள்ள புலவர்கள் இவ்வரசர்களை இம்மையிலும் மறுமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.
விடை :-
மூவேந்தர்களிடம், நாற்படைகளும் இருந்தன. முக்கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். நாற்றிசைகளிலும் அவர்கள் ஆட்சி புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இருமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.

IV. வினைப்பகுதிகளை எச்சங்களாகவும் முற்றாகவும் மாற்றுக.

பூங்கொடி நேற்று பள்ளிக்குச் சென்றாள் (செல்) தன் தோழிகளைக் கண்டு (காண்) மகிழ்ச்சியுடன் உரையாடினாள் (உரை). பின்னர் வங்கிக்குப் போய் (போ) தான் கூடுதலாகச் செலுத்திய (செலுத்து) தொகையை திரும்பப் பெற்று (பெரு)க் கொண்டு (கொள்) வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு வேண்டிய (வேண்டு) பொருள்களை வாங்கி, அங்கு நின்ற (நில்) பேருந்தில் ஏறி (ஏறு) வீடு திரும்பினாள் (திரும்பு).

V. பொருத்தமான தமிழ் எண்களைக் கொண்டு நிரப்புக

தமிழிலுள்ள மொத்த எழுத்துக்கள் உசஎ
இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்ற உ பிரிவாக பிரிக்கப்படும், கஉ உயிரெழுத்து கஅ மெய்எழுத்துகள் ஆகிய ங0 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துக்கள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள் க0 வகைப்படும்.

கலைச் சாெல்லாக்கம்

  • மனிதம் = Humane
  • ஆளுமை = Personality
  • பண்பாட்டுக் கழகம் = Cultural Academy
  • கட்டிலாக் கவிதை = Free verse
  • உவமையணி = Simile
  • உருவக அணி = Metaphor

Leave a Reply