You are currently viewing 9th Tamil Unit 1 Online Test

9th Tamil Unit 1 Online Test

9th Tamil Unit 1 Online Test

9th Tamil Unit 1 free online test 2026. Use this Quiz for TET Exam Teachers & Students also all TNPSC, TRB… Cracking competitive exams becomes easy with targeted online practice. 9th std Tamil Lesson 1 Online Test to build a flawless foundation for TNPSC Group 4, TET, and TRB competitive exams. Unit 1 of the 9th-standard Tamil Samacheer Kalvi textbook is critical. It introduces core linguistic concepts like “Dravida Mozhikudumbam” (Dravidian Language Family) and vital literary texts. Taking a structured 9th Tamil Iyal 1 interactive mock test helps you master tricky interior questions and grammar rules effortlessly.

🎯 Key Benefits of This Online TestExam-Oriented Questions:

  • Features interior and creative multiple-choice questions tailored to the TNPSC syllabus.
  • Instant Evaluation: Get immediate score results and detailed answer keys to identify weak areas.
  • Complete Unit 1 Coverage: Includes core topics like Tamil Oviaim, Tamizh Vidu Thoothu, and Valarum Selvam.
  • Time Management: Simulates real exam environments with a countdown timer to improve speed.
  • Easy Access: Practice anytime on your phone or laptop with zero cost or hassle.

📚 Syllabus Covered in 9th Tamil Unit 1 (இயல் 1)

  • UraiNADAI (உரைநடை): திராவிட மொழிக்குடும்பம் (Dravidian Language Family)
  • Poetry (செய்யுள்): தமிழோவியம், தமிழ்விடு தூது
  • Grammar (இலக்கணம்): தொடர் இலக்கணம் (Sentence Structure)
  • Vocabulary (துணைப்பாடம்): வளரும் செல்வம் (Translational words and technical terms)

 

போட்டித் தேர்வு மாதிரி வினாடி-வினா (பொதுத்தமிழ் & இலக்கணம்)

1. ‘வாயில் இலக்கியம்’, ‘சந்து இலக்கியம்’ என்னும் வேறு பெயர்களால் அழைக்கப்படும் சிற்றிலக்கிய வகை எது?

A) உலா
B) தூது
C) கலம்பகம்
D) அந்தாதி

விடை: B) தூது

2. ‘தமிழ்விடு தூது’ நூலில் அமைந்துள்ள மொத்த கண்ணிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

A) 268
B) 288
C) 368
D) 168

விடை: A) 268

3. ‘தமிழ்விடு தூது’ நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் யார்?

A) சி.வை. தாமோதரம்பிள்ளை
B) உ.வே. சாமிநாதையர்
C) மறைமலையடிகள்
D) ஆறுமுக நாவலர்

விடை: B) உ.வே. சாமிநாதையர்

4. உ.வே.சா. அவர்கள் ‘தமிழ்விடு தூது’ நூலை எந்த ஆண்டு முதன்முதலில் பதிப்பித்தார்?

A) 1920
B) 1930
C) 1940
D) 1950

விடை: B) 1930

5. ‘தமிழ்விடு தூது’ எந்த இறைவனின் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தியால் பாடப்பெற்றது?

A) மதுரை சொக்கநாதர்
B) சிதம்பரம் நடராசர்
C) பழனி முருகன்
D) திருவரங்கம் அரங்கநாதர்

விடை: A) மதுரை சொக்கநாதர்

6. ‘தமிழ்விடு தூது’ எந்தப் பாவகையால் இயற்றப்பட்ட நூல் ஆகும்?

A) ஆசிரியப்பா
B) கலிவெண்பா
C) வஞ்சிப்பா
D) கலிப்பா

விடை: B) கலிவெண்பா

7. ‘திராவிடம்’ என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?

A) கால்டுவெல்
B) குமரிலபட்டர்
C) வில்லியம் ஜோன்ஸ்
D) பிரான்சிஸ் எல்லிஸ்

விடை: B) குமரிலபட்டர்

8. ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

A) ஜி.யு. போப்
B) வீரமாமுனிவர்
C) கால்டுவெல்
D) பிரான்சிஸ் எல்லிஸ்

விடை: C) கால்டுவெல்

9. கால்டுவெல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலை வெளியிட்ட ஆண்டு எது?

A) 1856
B) 1816
C) 1865
D) 1896

விடை: A) 1856

10. “இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது” என்று குறிப்பிட்ட அறிஞர் யார்?

A) சுனிதி குமார்
B) ச. அகத்தியலிங்கம்
C) ஐராவதம் மகாதேவன்
D) குமரிலபட்டர்

விடை: B) ச. அகத்தியலிங்கம்

11. இந்தியாவில் பேசப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் எத்தனை மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன?

A) மூன்று
B) நான்கு
C) ஐந்து
D) ஆறு

விடை: B) நான்கு

12. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்து, இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை எனக் கூறி, ‘தென்னிந்திய மொழிகள்’ எனப் பெயரிட்டவர் யார்?

A) பிரான்சிஸ் எல்லிஸ்
B) வில்லியம் ஜோன்ஸ்
C) பேராசியர் பாப்
D) கிரிம்

விடை: A) பிரான்சிஸ் எல்லிஸ்

13. பின்வருவனவற்றுள் ‘வடதிராவிட’ மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி எது?

A) கொடகு
B) தோடா
C) பிராகுயி
D) கூயி

விடை: C) பிராகுயி

14. தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு ஆகியவை எவ்வகை திராவிட மொழிகள் ஆகும்?

A) வடதிராவிடம்
B) நடுத்திராவிடம்
C) தென்திராவிடம்
D) கீழ் திராவிடம்

விடை: C) தென்திராவிடம்

15. உயர்திணையில் ஆண்பால், பெண்பால் பகுப்பு இருந்தாலும், வினைமுற்றில் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது?

A) தமிழ்
B) மலையாளம்
C) தெலுங்கு
D) கன்னடம்

விடை: B) மலையாளம்

 

Leave a Reply