10th History Unit 9 Book Back Answers

10th Social Science History Unit 9 Book Back Answers

10th Social Science Samacheer kalvi guide – Unit 9 Book Back Question – Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide History Unit 9 Answers Tamil Medium. SSLC Social Science 9th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide 9. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science Unit 9. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் – Book Back Question – Answers

 I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

அ) T.M. நாயர்
ஆ) P. ரங்கையா
இ) G. சுப்பிரமணியம்
ஈ) G.A. நடேசன்

விடை: ஆ) P. ரங்கையா

2.இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

அ) மெரினா
ஆ) மைலாப்பூர்
இ) புனித ஜார்ஜ் கோட்டை
ஈ) ஆயிரம் விளக்கு

விடை: ஈ) ஆயிரம் விளக்கு

3.“அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்?

அ) அன்னிபெசன்ட்
ஆ) M. வீரராகவாச்சாரி
இ) B.P. வாடியா
ஈ) G.S. அருண்டேல்

விடை: அ) அன்னிபெசன்ட்

4.கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

அ) S. சத்தியமூர்த்தி
ஆ) கஸ்தூரிரங்கர்
இ) P. சுப்பராயன்
ஈ) பெரியார் ஈவெ.ரா

விடை: அ) S. சத்தியமூர்த்தி

5.சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

அ) K. காமராஜ்
ஆ) C. இராஜாஜி
இ) K. சந்தானம்
ஈ) T. பிரகாசம்

விடை: ஈ) T. பிரகாசம்

6.இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது?

அ) ஈரோடு
ஆ) சென்னை
இ) சேலம்
ஈ) மதுரை

விடை: இ சேலம்

10th History Unit 9 Book Back Answers

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி ………….- ஆவார்.

விடை:T. முத்துச்சாமி

2.………………. எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.

விடை:பாரத மாதா சங்கம்

3.சென்னையில் தொழிற்சங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ………………… ஆவார்.

விடை:B.P. வாடியா

4.சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் …………..

விடை:C. இராஜாஜி

5.……………… முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

விடை:யாகுப் ஹசன்

6.1932 ஜனவரி 26இல் ……………… புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றினார்.

விடை:ஆரியா (எ) பாஷ்யம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

1.i) சென்னைவாசிகள் சங்கம் 1852இல் நிறுவப்பட்டது.
ii) தமிழில் வெளிவந்த தேசியப் பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.
iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.
iv) V.S சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (iii) மட்டும் சரி
இ) (iv) சரி
ஈ) அனைத்தும் சரி

விடை: அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி

2.i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.
ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் இராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.
iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.
iv) தமிழ்நாட்டில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

அ) (i) மற்றும் (ii) ஆகியவை சரி
ஆ) (i) மற்றும் (iii) ஆகியவை சரி
இ) (ii) மட்டும் சரி
ஈ) (i), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி

விடை: இ (ii) மட்டும் சரி

IV. பொருத்துக.

  1. சென்னைவாசிகள் சங்கம் – இந்தி எதிர்ப்புப் போராட்டம்
  2. ஈ.வெ.ரா – நீல் சிலையை அகற்றுதல்
  3. S.N. சோமையாஜுலு – உப்பு சத்தியாகிரகம்
  4. வேதாரண்யம் – சித்திரவதை ஆணையம்
  5. தாளமுத்து – வைக்கம் வீரர்
விடை 1-ஈ, 2-உ, 3-ஆ, 4-இ, 5-அ

10th History Unit 9 Book Back Answers

V. சுருக்கமான விடையளிக்கவும்.

1.மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பை பட்டியலிடுக.

  • தொடக்ககால தேசியவாதிகள் அரசமைப்பு வழிமுறைகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.
  • அறைக்கூட்டங்கள் நடத்துவதும் பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடுவதும் அவர்களின் செயல்பாடுகளாக இருந்தன.

2.திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.

  • திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் வ.உ.சி. சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றார்.
  • தலைவர்கள் இருவரும் அரச துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர். தொடக்கத்தில் வ.உ.சிக்கு கொடுமையான வகையில் இரண்டு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன.
  • மக்கள் செல்வாக்கு பெற்ற இவ்விரு தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதில் திருநெல்வேலியில் கலகம் வெடித்தது. காவல்நிலைய, நீதிமன்ற, நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
  • காவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு நபர்கள் கொல்லப்பட்டனர்.

3.இந்தியாவின் விடுதலைப் பேராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?

  • 1916இல் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கிய அவர் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்.
  • அன்னி பெசன்ட் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது இந்தியா ஒரு தேசம் எனும் இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதினார்.
  • நியூ இந்தியா, காமன் வீல் எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

1.தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.

சுதேசி இயக்கம் :

  • வங்கப் பிரிவினை (1905) சுதேசி இயக்கத்திற்கு இட்டுச் சென்று விடுதலைப் போராட்டத்தின் போக்கை மாற்றியமைத்தது.
  • வ.உ. சிதம்பரனார். V. சர்க்கரையார், சுப்பிரமணிய பாரதி, சுரேந்திரநாத் ஆரியா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறந்த தலைவர்களாவர்.
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.
  • மக்களைத் திரட்டுவதற்கு முதன்முதலாக தமிழ் பயன்படுத்தப்பட்டது.
  • மக்களின் நாட்டுப்பற்று உணர்வுகளைத் தட்டி எழுப்பியதில் சுப்பிரமணிய பாரதியின் தேசபக்திப் பாடல்கள் மிக முக்கியமானவையாகும்.
  • சுதேசி கருத்துக்களைப் பரப்புரை செய்ய பல இதழ்கள் தோன்றின.
  • சுதேசமித்திரன், இந்தியா ஆகிய இரண்டும் முக்கிய இதழ்களாகும்.
  • சுதேசி இயக்கத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி:

  • சுதேசியைச் செயல்படுத்துவதில் மேற்கொள்ளப்பட்ட துணிகரமான நடவடிக்கைகளில் ஒன்று யாதெனில் தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் தொடங்கப்பட்ட சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் ஆகும்.
  • இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.

2.தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்:

  • பிராமணரல்லாதோர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தங்களை ஒரு அரசியல் அமைப்பாக அணிதிரட்டிக் கொண்டனர்.
  • 1912இல் சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப் பெற்றது.
  • அதன் செயலராக (. நடேசனார் செயலூக்கமிக்க வகையில் பங்காற்றினார்.
  • 1916 ஜீன் மாதத்தில் அவர் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கா ‘திராவிடர் சங்க தங்கும் விடுதி’யை நிறுவினர்.
  • 1916 நவம்பர் 20இல் P. தியாகராயர், டாக்டர் T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் – சுமார் முப்பது பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் கூடினர்.
  • பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.

3.சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்:

  • காந்தியடிகள் முன்வைத்த கோரிக்கைகளை வைஸ்ராய் ஏற்றுக் கொள்ளாததைத் தொடர்ந்து அவர் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
  • ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் ஒன்றினை ஏற்பாடு செய்து தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றார்.
  • 1930 ஏப்ரல் 13இல் திருச்சிராப்பள்ளியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யத்தைச் சென்றடைந்தது.
  • இவ்வணிவகுப்புக்கென்றே “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” எனும் சிறப்புப்பாடலை நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் புனைந்திருந்தார்.
  • காவல்துறையின் கொடூரமான நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அணிவகுத்துச் சென்ற சத்தியாகிரகிகளுக்கு பயணித்த பாதையெங்கும் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • வேதாரண்யம் சென்றடைந்த பின்னர் இராஜாஜியின் தலைமையில் 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர்.
  • T.S.S. ராஜன் திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம், C. சாமிநாதர் மற்றும் K. சந்தானம் ஆகியோர் வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற ஏனைய முக்கியத் தலைவர்களாவர்.

தமிழக மாவட்டங்களில் பரவலான போராட்டங்கள்:

  • T. பிரகாசம், K. நாகேஸ்வர ராவ் ஆகியோர் தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர்.
  • இராமேஸ்வரத்தில் உப்பு சத்தியாகிரம் மேற்கொள்ள முயன்ற தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • உப்புச்சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி ருக்மணி லட்சுமிபதியாவார்.
  • 1932 ஜனவரி 26இல், பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம் புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.

திருப்பூர் குமரனின் வீரமரணம்:

  • 1932 ஜனவரி 11இல் திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் நாட்டுப்பற்றுமிகுந்த பாடல்களைப் பாடிச் சென்ற ஊர்வலத்தினர் காவல்துறையினரால் இரக்கமின்றி அடித்து உதைக்கப்பட்டனர்.

10th Social Science – History Unit 9 Question answers

10th Social Science – History

Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )

 

Leave a Reply