You are currently viewing 10th Social Science Guide Civics Unit 4

10th Social Science Guide Civics Unit 4

10th Social Science – Civics Guide Unit 4 Book Answer

Unit 4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

10th Social Science – Civics Tamil Medium Book Back & Additional Question – Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide Civics – Samacheer Kalvi Tamil Medium Full Guide. SSLC CIVICS Unit 4 Answers. 10th Social Science Civics  4th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide Unit 4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science – CIVICS Unit 4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை Book Back & Additional Question – Answers

10th Social Science Guide Civics Unit 4

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?

அ) பாதுகாப்பு அமைச்சர்
ஆ) பிரதம அமைச்சர்
இ) வெளிவிவகாரங்கள் அமைச்சர்
ஈ) உள்துறை அமைச்சர்

விடை: இ வெளிவிவகாரங்கள் அமைச்சர்

2.எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?

அ) இந்தியா மற்றும் நேபாளம்
ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இ) இந்தியா மற்றும் சீனா
ஈ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

விடை: இ இந்தியா மற்றும் சீனா

3.இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?

அ) சட்டப்பிரிவு 50
ஆ) சட்டப்பிரிவு 51
இ) சட்டப்பிரிவு 52
ஈ) சட்டப்பிரிவு 53

விடை: ஆ) சட்டப்பிரிவு 51

4.இன ஒதுக்கல் கொள்கை என்பது

அ) ஒரு சர்வதேச சங்கம்
ஆ) இராஜதந்திரம்
இ) ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை
ஈ) மேற்கூறியவைகளில் எதுவுமில்லை

விடை: இ ஒரு இனப் பாகுபாட்டுக் கொள்கை

5.1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.

அ) வியாபாரம் மற்றும் வணிகம்
ஆ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
இ) கலாச்சார பரிமாற்றங்கள்
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

விடை: ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

6.நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?

அ) உலக ஒத்துழைப்பு
ஆ) உலக அமைதி
இ) இனச் சமத்துவம்
ஈ) காலனித்துவம்

விடை: ஈ) காலனித்துவம்

7.கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?

அ) யூகோஸ்லோவியா
ஆ) இந்தோனேசியா
இ) எகிப்து
ஈ) பாகிஸ்தான்

விடை: ஈ) பாகிஸ்தான்

8.பொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி.

அ) சமூக நலம்
ஆ) சுகாதாரம்
இ) ராஜதந்திரம்
ஈ) உள்நாட்டு விவகாரங்கள்

விடை: இ ராஜதந்திரம்

9.அணிசேராமை என்பதன் பொருள்…………

அ) நடுநிலைமை வகிப்பது
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
இ) இராணுவமயமின்மை
ஈ) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை

விடை: ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

10.இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது ……………

அ) ஆற்றல் பாதுகாப்பு
ஆ) நீர் பாதுகாப்பு
இ) தொற்றுநோய்கள்
ஈ) இவை அனைத்தும்

விடை: ஈ) இவை அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் ………….

விடை:பொக்ரான்

2.தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ……………… உருவாக்குவதற்கான வழிமுறையாக செயல்படுகிறது.

விடை:உள் முதலீட்டை

3.…………. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

விடை:இராஜதந்திரம்

4.இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை ………..

விடை:அணி சேராக் கொள்கை

5.நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் …………….. நடைமுறைப்படுத்துவதாகும்.

விடை:படைவலிமைக் குறைப்பை

III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1.பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
i) பஞ்சசீலம்
ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை
iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை

அ) (i), (iii), (iv), (ii)
ஆ) (i), (ii), (iii), (iv)
இ) (i), (ii), (iv), (iii)
ஈ) (i), (iii), (ii), (iv)

விடை: அ) (i), (iii), (iv), (ii)

2.பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?
i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.
iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
v) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.

அ) (1) மற்றும் (ii)
ஆ) (iii) மற்றும் (iv)
இ) (ii) மட்டும்
ஈ) (iv) மட்டும்

விடை: இ (ii) மட்டும்

 3.கீழ்க்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா தவறா என எழுதுக.

அ) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது.
ஆ) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.
இ) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

விடை: அ) சரி, ஆ) தவறு, இ சரி

4.கூற்று : 1971இல் இந்தோ – சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத்யூனியனுடன் இணைந்தது.
காரணம் : இது 1962இன் பேரழிவுகரமான சீன போருக்கு பின் தொடங்கியது.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை: இ கூற்று சரி, காரணம் தவறு.

5.கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ளது.
காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

விடை: ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

6.இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்க வேண்டி இருந்தது.

அ) கடுமையான வறுமை
ஆ) எழுத்தறிவின்மை
இ) குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை: ஈ) மேற்கூறிய அனைத்தும்

IV. பொருத்துக.

  • 1. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது – 1955
  • 2. தென் கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் பாலம் – 1954
  • 3. பஞ்சசீலம் – மாலத்தீவு
  • 4. ஆப்பிரிக்க – ஆசிய மாநாடு – வெளியுறவுக் கொள்கை
  • 5. உலக அமைதி – மியான்மர்
விடை :- 1-இ, 2-உ, 3-ஆ, 4-அ, 5-ஈ

10th Social Science Guide Civics Unit 4

V. சுருக்கமாக விடையளிக்கவும்.

 1.வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?

  • வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும்.

 2.இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.

  • இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துக்கள் :
  • முதலில் பயன்படுத்துவதில்லை .
  • குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத்திறன்.
  • அணு ஆயுதத்தை போர்த்தாக்குதலுக்கு பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.

3.வேறுபடுத்துக:உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை.

உள்நாட்டுக் கொள்கை
  • 1. உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.
  • 2. இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.
 வெளிநாட்டுக் கொள்கை
  • 1. வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு பிற நாடுகளுடன் கொண்டுள்ள விவகாரங்கள் தொடர்பானதாகும்.
  • 2. வணிகம், அரச தந்திரம், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, உளவுத் துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகிய வகைகளைக் கொண்டதாகும்.

4.பஞ்சசீல கொள்கைகளில் நான்கினைப் பட்டியலிடுக.

பஞ்சசீலம் :

  • ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையும் பரஸ்பரம் மதித்தல்.
  • பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை .
  • பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.
  • பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.
  • அமைதியாக சேர்ந்திருத்தல்.

5.இந்தியா அணிசேரா கொள்கையை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

  • நாட்டின் முதல் பிரதமரான நேரு, அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.
  • எனவே பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

6.சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.

சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் :

  • ஆப்கானிஸ்தான்
  • வங்காளதேசம்
  • பூடான், இந்தியா
  • நேபாளம்
  • மாலத்தீவு
  • பாகிஸ்தான்
  • இலங்கை

7.அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?

  • அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் :
  • இந்தியாவின் ஜவகர்லால் நேரு, யூகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா ஆகியோராவர்.

8.வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.

  • உடன்படிக்கைகள் மற்றும் நிர்வாக ஒப்பந்தங்கள்
  • தூதுவர்களை நியமித்தல்
  • வெளிநாட்டு உதவி
  • சர்வதேச வணிகம் மற்றும்
  • ஆயுதப்படைகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

1.அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.

அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961:

  • அணி சேரா இயக்கம் என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும்.
  • அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்ளது.
  • பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்தார்.

அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்:

  • ஜவஹர்லால் நேரு – இந்தியா
  • டிட்டோ – யூகோஸ்லோவியா
  • நாசர் – எகிப்து
  • சுகர்னோ – இந்தோனேசியா
  • குலாமே நிக்ரூமா – கானா

2.வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை?

  • வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் :
  • நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு.
  • நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை.
  • இயற்கை வளங்கள்
  • பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
  • அரசியில் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு
  • அமைதிக்கான அவசியம், ஆயுதக் குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத்தடை
  • இராணுவ வலிமை
  • சர்வதேச சூழ்நிலை
  • தேசிய நலனைப் பேணுதல்
  • உலக அமைதியை எய்துதல்
  • ஆயுதக் குறைப்பு
  • பிறநாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
  • அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத் தீர்த்தல்
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்

3.அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவு கொள்கையின் ஏதேனும் இரு கொள்கைகளை விவரி.

  • இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகள் :
  • தேசிய நலனைப் பேணுதல்.
  • உலக அமைதியை எய்துதல்.
  • ஆயுதக் குறைப்பு.
  • பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்.
  • அமைதியான வழிகளில் பிரச்சினைகளைத் தீர்த்தல்.
  • அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு.
  • சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்.
  • காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு.

10th Social Science Guide Civics Unit 4

Additional Questions and Answers ( TNPSC, TN TET, TRB )

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.……………… ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டது.

அ) 1953
ஆ) 1986
இ) 1954
ஈ) 1964

விடை: ஆ) 1986

2.………………. இந்தோனேசியாவில் நடைபெற்ற மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அ) வெளியுறவு கொள்கை
ஆ) பஞ்சசீலக் கொள்கை
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவும் இல்லை

விடை: ஆ) பஞ்சசீலக் கொள்கை

3.………………. அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகளை எதிர்த்தார்.

அ) V. கிருஷ்ண மேனன்
ஆ) நாகா
இ) ஜவகர்லால் நேரு
ஈ) சுகர்னோ

விடை: இ ஜவகர்லால் நேரு

4.அணிசேரா இயக்கமானது ……………… உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

அ) 120
ஆ) 105
இ) 98
ஈ) 110

விடை: அ) 120

5.சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் ………….. இல் அமைக்கப்பட்டுள்ளது.

அ) புதுடெல்லி
ஆ) மஹாராஷ்டிரா
இ) ராஜஸ்தான்
ஈ) எதுவுமில்லை

விடை: அ) புதுடெல்லி

6.……… ஐ.நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

அ) அணிசேரா இயக்கம்
ஆ) உள்நாட்டு கொள்கை
இ) வெளியுறவு கொள்கை
ஈ) சார்க் இயக்கம்

விடை: அ) அணிசேரா இயக்கம்

7.இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் ……………… பாலமாக உள்ள து.

அ) ஸ்ரீலங்கா
ஆ) மாலத்தீவு
இ) மியான்மர்
ஈ) எதுவுமில்லை

விடை: இ மியான்மர்

8.………………. அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

அ) இந்தியா – பசிபிக்
ஆ) இந்திய – அமெரிக்க
இ) அ) மற்றும் ஆ) இரண்டும்
ஈ) ஆசியா

விடை: ஆ) இந்திய – அமெரிக்க

9.ஆப்பிரிக்க ஆசிய மாநாடு நடைபெற்ற ஆண்டு ……………..

அ) 1965
ஆ) 1975
இ) 1955
ஈ) 1995

விடை: இ 1955

10.…………… உலகளவில் முடிவெடுக்கும் மற்றும் நிர்வாகத்தில் ஒரு முக்கிய குரலாக உள்ளது.

ஆ) இலங்கை
ஆ) நேபாள்
இ) பூடான்
ஈ) இந்தியா

விடை: இந்தியா

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.……………. நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது.

விடை:வெளியுறவுக் கொள்கை

2.……………… என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.

விடை:அணிசேராமை

3.அணிசேராமை இயக்கமானது …………….. பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்ளது.

விடை:120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளையும்

4.……………… என்பது நடுநிலையாக இருப்பது என்பது பொருள் அல்ல.

விடை:அணிசேராமை

5.இரண்டாவது அணு சோதனை ……………… உள்ள பொக்ரான் என்னும் இடத்தில் நடைபெற்றது.

விடை:ராஜஸ்தானில்

6.சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ………….. நாடுகளுக்கு கூட்டுத்தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகும்.

விடை:தெற்காசிய

7.சார்க் செயற்கைக்கோளை ……………… மற்றும் …………….. செலுத்தியது.

விடை:செய்தித் தொடர்பு, வானிலை ஆய்விற்காக

8.வரலாறு மற்றும் கலாச்சார ஒற்றுமைத் தன்மைகளை கொண்ட ………………. என்ற கருத்து இந்தியாவின் வெளியுறவு கொள்கையாக இருக்கிறது.

விடை:அண்டைநாடு

9.…………….. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

விடை:இராஜதந்திரம்

10.…………….. என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை ஆகும்.

விடை:வெளியுறவுக் கொள்கை

11.……………… வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.

விடை:இந்தியா

12.ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளிகளைக் கொண்டது ………………. ஆகும்.

விடை:பன்மைகோட்பாடு

13.………………….. காரணமாக பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகிறது.

விடை:பொருளாதார முன்னேற்றம்

14.………………. நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.

விடை:ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையில்

15.……………… எதிரான நமது பொதுவான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க பலமாகும்.

விடை:தீவிரவாதத்திற்கு

பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

1.i) நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 1950 – 1960களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறிக்கோளாக இருந்தது.
ii) இது V. கிருஷ்ண மேனன் வழிகாட்டுதலின்படி அமைந்திருந்தது.
iii) அணிசேராமை இயக்கம் 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகள் மற்றும் 10 சர்வதேச நிறுவனங்களை கொண்டுள்ளது.
iv) நேரு ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார்.

அ) i), ii) சரி
ஆ) i), iv) சரி
இ) iii), iv) சரி
ஈ) எல்லாம் சரி

விடை: இ iii), iv) சரி

10th Social Science Guide Civics Unit 4

சுருக்கமான விடையளிக்கவும்.

1.சார்க் குறிப்பு வரைக.

  • சார்க் என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவி அரசியல் அமைப்பாகும்.
  • சார்க் நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத் தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகியனவாகும்.

2.இராஜதந்திரம் – வரையறு.

  • ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

3.உலகப் பாதுகாப்பு இந்தியாவில் எவற்றில் பிரதிப்பலிக்கிறது?

  • இராணுவ நவீனமயமாக்கல்
  • கடல்சார் பாதுகாப்பு
  • அணுசக்தி

4.வெளியுறவு அமைச்சகம் என்றால் என்ன?

  • வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரவை இந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகிறது.
  • 1986ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுப் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.

5.அணிசேரா இயக்கம் பற்றி ஜவகர்லால் நேரு கூறியது யாது?

  • “பரந்த அளிவில் அணிசேராமை என்பது இராணுவக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது அல்ல.
  • அதாவது பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவைப் பராமரித்தல்”.

6.உள்நாட்டுக் கொள்கை வரையறு.

உள்நாட்டுக் கொள்கை :
  • உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாகக் கொண்டுள்ள கொள்கையாகும்.
  • இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது.

விரிவாக விடையளிக்கவும்.

1.பஞ்சசீலம் – விவரி.

  • (சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது)
  • இந்தியா (பிரதமர் – ஜவகர்லால் நேரு) மற்றும் சீனா (பிரதமர் – சூ-யென்-லாய்) ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்கைகள் (பஞ்சசீலம்), 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் கையெழுத்தானது.
  • இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
  • இந்தக் கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க – ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

2.தற்கால சூழலில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வழிகாட்டும் சக்தியாக இந்தியா எவ்வாறு மாற்றமடைந்துள்ளது?

பொருளாதார வளர்ச்சி :

  • தற்போது இந்தியாவின் அரசியல் நகர்வுகளில் தவிர்க்கவியலாத பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன.
  • பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகின்றன.
  • விரைவான, சமமான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் முதன்மைக் குறிக்கோளாக உள்ளது.
  • நாடு சர்வதேச பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
  • இதனை அடைவதற்குத் தேவையானவை பொருளாதார வளர்ச்சி, சந்தை, மூலதனம், தொழில்நுட்பம், மரபுப்பிணைப்பு, பணியாளர்திறன், நியாயமான உலகளாவிய நிர்வாகம் மற்றும் ஒரு நிலையான நியாயமான வளர்ச்சிக்கு உகந்த சூழல் ஆகியனவாகும்.

வழிகாட்டும் சக்தியாக இந்தியா:

  • ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் ஆகியவற்றால் உறுப்புநாடாக இந்தியா இருப்பதும் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாக இருப்பதும் அதன் நிலைக்கு ஒரு சான்றாகும்.
  • ஐ.நா சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது.
  • இந்தியா தற்போது தனது அதிகரித்துவரும் நலனை உலகின் பல பகுதிகளில் ஆழப்பதித்து வருகிறது.

Leave a Reply