11th Tamil Guide Unit 4

11th Tamil Guide Unit 4.3

11th Tamil Guide Unit 4.3

இயல் 4.3 நற்றிணை

Book Back | Additional Question and Answers

11th Tamil Samacheer kalvi guide Lesson 4. Unit 4.3 நற்றிணை Book Back and Additional Question Answers.  இயல் 4.3 நற்றிணை. +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 4 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. 11th Tamil Guide Unit 4 Full Answer Key

11th Tamil Guide Unit 4 Book Back and Additional Question – Answers  இயல் 4.3 நற்றிணை

11th Tamil Guide Unit 4

11th Tamil Guide Unit 4.3 நற்றிணை

குறுவினா

1.கொழஞ்சோறு – புணர்ச்சிவிதி கூறுக.
கொழுஞ்சோறு – கொழுமை + சோறு – “ஈறுபோதல்” (கொழு + சோறு), “இனமிகல்” (கொழுஞ்சோறு)

கூடுதல் வினாக்கள்

2.செவிலியர் நடை தளர்ந்து நின்றது ஏன்?
தலைவியின் குழந்தைப் பருவத்தில், உணவாக ஊட்டப் பொற்கிண்ணத்தில் பால் ஏந்திச் சென்றனர் செவிலியர். “நான் உண்ணேன்” என மறுத்து முத்துப்பரல் பொற்சிலம்பு ஒலிக்க, பந்தரைச் சுற்றிச் சுற்றி ஓடினாள். அவளைப் பின்தொடர முடியாமல் செவிலியர், நடை தளர்ந்தனர்.
3.“ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே” – பொருள் தருக.
பெருகி ஓடும் நீரில் கிடக்கும் நுண்மணல் இடைவெளி விட்டு இருக்கும். அதுபோல் தலைவி தன் குடும்ப நிலைக்கேற்ப ஒரு பொழுது விட்டு இன்னொரு பொழுது உண்ணும் வன்மையைப் பெற்றிருந்தாள் என்பதாம்.

சிறுவினாக்கள்

1.“ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் : நற்றிணையில் தலைவியைக் கண்டுவந்த செவிலித்தாய், நற்றாயிடம் கூறுவதாக இவடிகள் அமைந்துள்ளன.
பொருள் : “நாம் உண்ணுமாறு கூறியதை மறுத்து விளையாட்டுக் காட்டி ஓடியவள், இல்லறம் நடத்துதற்கு உரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எவ்வாறு உணர்ந்தாளோ?” என்பது இக்கூற்றின் பொருள்.
 
விளக்கம் : மணம் முடிந்து, கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்ற செவிலித்தாய், தலைவி நடத்தும் செம்மையான இல்லற வாழ்வைக் கண்டு வியந்தாள். அதனைத் தலைவியைப் பெற்ற நற்றாயிடம் கூறும்போது, “நம் வீட்டில் உணவு ஊட்ட விடுக்கும் வேண்டுதலை மறுத்து விளையாட்டுக் காட்டியவள், கணவன் உற்ற வறுமையை வெளிக்காட்டாது, தன் வீட்டு வளமான வாழ்வை நினையாமல், ஒருபொழுது விட்டு ஒருபொழுது உண்ணும் மனவன்மையைப் பற்றுள்ளாள். இவள் இந்த அறிவையும் ஒழுக்கத்தையும் எங்குக் கற்றாளோ?” எனக் கூறிச் சொல்லி வியந்தாள்.
2.சின்னதொரு துண்டைத்
திரும்பத் திரும்பக் கட்டி
அழகு பார்க்கிறாள் செல்லமகள்!
முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொள்கிறாள்
ஒரு குட்டி நாற்காலியே வீடாகிவிடுகிறது!
துண்டைக் கட்டிக்கொண்டு தாயாகவும்
மாறிக்கொள்ள முடிகிறது அவளால்)
துண்டு ஒன்றுதான்…..
அதுவே அவளது மகிழ்ச்சியம்
என் துக்கமும்
– இப்புதுக்கவிதையில் வெளிப்படும் கருத்தை ஆராய்ந்து எழுதுக.
பெண் குழந்தை ஒன்று, துண்டு ஒன்றை எடுத்து, அதைத் திரும்பத் திரும்பத் தன்மேல் சுற்றிக் கொண்டு அழகு பார்க்கிறது. தன்னை ஒரு வளர்ந்த பெண்ணாக, தாயாகக் கருதிக்கொண்டு செயல்படுகிறது.
அதனால் பெண்மைக்குரிய நாணத்தோடு முந்தானையை இழுத்துத் தன்னைப் போர்த்திக் கொள்கிறாள், பாதுகாப்பாக; விளையாட்டுப் பருவக் குழந்தை. எனவே, சிறியதொரு நாற்காலியைத் தன் வீடாக்கிக் கொள்கிறாள்; மனத்தில் கற்பித்துக் கொள்கிறாள்.
துண்டைக் கட்டிக்கொண்டதால், அவளால் தாயாக மாற முடிகிறது. அச்செயலே அவளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், பெற்றவர் என்ன நினைத்திருப்பார்? பெண்ணைப் படிக்க வைத்து மருத்துவ ராகவோ, ஆசிரியையாகவோ, அதிகாரியாகவோ உருவாக்க நினைத்திருப்பார்.
பெற்றவர் நினைக்கும் திட்டம் அது. ஆனால், பேதைப் பருவப் பெண்குழந்தை சமுதாயத்தில், சூழலில் காணும் காட்சிகளை வைத்துக்கொண்டு, தன் எதிர்காலத்திற்குத் திட்டமிடுகிறது. அதனால் மகிழ்ச்சி கொள்கிறது. பெண்குழந்தையின் மகிழ்ச்சிச் செயல், பெற்றவருக்குத் துன்பமாக மாறுகிறது.

கூடுதல் வினாக்கள்

3.நற்றிணை – குறிப்பெழுதுக.
நற்றிணை என்பது, எட்டுத்தொகை நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது. ஒன்பது அடிகளைச் சிற்றெல்லையாகவும், பன்னிரண்டு அடிகளைப் பேரெல்லையாகவும் கொண்ட நானூறு பாடல்களின் தொகுப்பாகும். இப்பாடல்கள், இருநூற்று எழுபத்தைந்து புலவர்களால் பாடப்பட்டவையாகும்.
பாடமாக அமைந்த பாடலைப் பாடியவர், சங்ககாலத்தில் வாழ்ந்த போதனார்’ என்கிற புலவராவார். நற்றிணையைத் தொகுப்பித்தவன், பன்னாடுதந்த பாண்டியன் ‘மாறன்வழுதி’. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் ‘பெருந்தேவனார்.’
4.பாலைத்திணை – விளக்குக.
அகப்பொருள் பாடலுள் பாலைத்திணைக்குரிய உரிப்பொருள், ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமாகும்’. இது அக ஒழுக்கத்தின் நிகழ்வாகும்.
பாலைத்திணைக்குரிய முதற்பொருள்களுள் சுரமும் சுரம் சார்ந்த இடமும் நிலமாகும்.)
இந்நிலத்தின் அகஒழுக்கத்திற்குரிய பெரும்பொழுது இளவேனில், முதுவேனில், பின்பனிப் பருவங் களாகும்; சிறுபொழுது நண்பகலாகும்.
கொற்றவை (தெய்வம்), எயினர் – எயிற்றியர் (மக்கள்), வழிப்பறி செய்த பொருள் (உணவு), புறா -பருந்து (பறவை), வழிப்பறி செய்தல், நிரை கவர்தல் (தொழில்) முதலானவை கருப்பொருள்களாகும்.
இவற்றைப் பின்னணியாகக் கொண்டு, ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்னும் உரிப்பொருளை வெளிப்படுத்தும் அகப்பாடல் அமையும்.
5.மகள்நிலை உரைத்தல் – துறை விளக்குக.
திணையின் உட்பிரிவு துறை. மகள்நிலை உரைத்தல் என்பது, பாலைத்திணையின் உட்பிரிவாகும்.
தலைவனோடு உடன்போகிய (தலைவனை மணம்பு. யப் பிரிந்துபோன) விளையாட்டுப் பருவம் மாறாத மகள் நடத்தும் இல்லறச் சிறப்பைக் கண்ட செவிலித்தாய், அது குறித்து நற்றாயிடம் வியந்து கூறுவதாக அமைந்தது. இதனை மனைமருட்சி’ (மகள் நிலை உரைத்தல்) எனவும் கூறுவர்.

நெடுவினா

1.தலைவியின் இல்லறப் பாங்கினைப் பற்றிச் செவிலித்தாய் நற்றாயிடம் வியந்து கூறுவன யாவை?
விளையாட்டுப் பருவம் மாறாதவள் தலைவி. அவள் தலைவனோடு உடன்போக்கிற்கு உட்பட்டாள்.
பின்னர் வரைந்து (மணம் பொடித்து) இல்லறத்தில் ஈடுபட்டாள்.
அந்நிலையில் அவளைக் காணச் சென்ற செவிலித்தாய், தலைவியான தன் வளர்ப்புமகள் நடத்தும் குடும்பப் பாங்கைக் கண்டாள். அதனை நற்றாயிடம் வியந்து பாராட்டினாள்.
பிள்ளைப்பருவ விளையாட்டு :
“நம் வீட்டில் பொற்கிண்ணத்தில் தேன்கலந்த பாலை ஒரு கையிலேந்தி, அச்சுறுத்தி உண்ண வைப்ப தற்குப் பூச்சுற்றிய மென்மையான கோலை இன்னொரு கையிலேந்தி, ‘இதனை உண்’
என்று கூறினோம்.
அப்போது, வீட்டு முற்றத்தில் இருந்த பந்தரைச் சுற்றிச்சுற்றி ஓடி, ‘நான் உண்ணேன்’ என்று றுப்பாள். கால் சிலம்பு ஒலிக்க ஓடிய அவளைப் பின்தொடர முடியாமல், செவிலியர் களைத்துப் போவோம்.
வியப்புத் தரும் இல்லறப்பாங்கு :
இப்படி விளையாட்டுக் காட்டிய பெண்ணாகிய நம் மகள், இத்தகைய அறிவையும், ஒழுக்கத்தையும் எங்குக் கற்றாளோ என வியப்பாக உள்ளது!
தான் மணந்த கணவன் வீட்டில் வறுமையுற்ற நிலையிலும், தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான உணவினைப் பற்றி நினையாமல், ஓடும் நீரில் கிடக்கும் நுண்மணலில் இடைவெளி இருப்பதுபோல, ஒருபொழுது விட்டு ஒருபொழுது உண்ணும் மனவலிமையைப் பெற்றவளாக இருக்கிறாள்.
இது என்னே வியப்பு?” என்று, நற்றாயிடம் செவிலித்தாய் கூறினாள்.

இலக்கணக்குறிப்பு

வெண்சுவை, தீம்பால், சிறுகோல், முதுசெவிலி, சிறுவிளையாட்டு, கொடுஞ்சோறு – பண்புத் தொகைகள்
விரிகதிர், ஒழுகுநீர் – வினைத்தொகைகள்
பொற்கலம், பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
கலந்த, கொண்ட, கொடுத்த – பெயரெச்சங்கள்
ஏந்தி, பிழைப்ப, ஒழிய, ஓடி, மெலிந்து, மறுத்து – வினையெச்சங்கள்
அறிவும் ஒழுக்கமும் – எண்ணும்மை
பந்தர் – (பந்தல்) ஈற்றுப்போலி அல்லது இறுதிப்போலி அல்லது கடைப்போலி.
உள்ளாள் – முற்றெச்சம்
தத்துற்று ஓடி – வினையெச்சம்
கொழுநன்குடி (கொழுநனது குடி) – ஆறாம் வேற்றுமைத்தொகை
உண் – முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்று.
ஓக்குபு – ‘செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

உறுப்பிலக்கணம்

1. மெலிந்து – மெலி + த் (ந்) + த் + உ
மெலி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.
2. மறுத்து – மறு + த் + த் + உ
மறு – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.
3. பிழைப்ப – பிழை + ப் + ப் + அ
பிழை – பகுதி, ப் – சந்தி, ப் – எதிர்கால இடைநிலை, அ – வினையெச்ச விகுதி.
4. ஏந்தி – ஏந்து + இ
ஏந்து – பகுதி, இ – வினையெச்ச விகுதி.
5. உணர்ந்தனள் – உணர் + த் (நி) + த் + அன் + அள்
உணர் – பகுதி, த் – சந்தி ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அன் – சாரியை, அள் பெண்பால் வினைமுற்று விகுதி.
6. கொண்ட – கொள் (ண்) + ட் + அ
கொள் – பகுதிள் பண்’ ஆனது விகாரம், ட் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. சிறுகோல் )- சிறுமை + கோல்
” போதல்” (சிறு = கோல்)
2. பொற்சிலம்பு – பொன் + சிலம்பு
கணன வல்லினம் வரடறவும் ஆகும்” (பொற் = சிலம்பு)
3. கொழுஞ்சோறு – கொழுமை + சோறு
“ஈறுபோதல்” (கொழு + சோறு), “இனமிகல்” (கொழுஞ்சோறு)
4. பூந்தலை – பூ + தலை
“பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்” (பூந்தலை)
5. யாண்டுணர்ந்தனள் – யாண்டு + உணர்ந்தனள்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (யாண்ட் + உணர்ந்தனள்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (யாண்டுணர்ந்தனள்)
6. பொற்கலம் – பொன் + கலம்
“ணன வல்லினம் வரடறவும் ஆகும்’ (பொற் = கலம்)
7. தெண்ணீ ர் – தெள் + நீர்
“ணளமுன் டணவும் ஆகும் தநக்கள்” (தெள் + ணீர்)
“லள வேற்றுமையில் மெலிமேவின் னணவும் ஆகும்” (தெண்ணீர்)
8. முத்தரி – முத்து + அரி
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (முத்த் + அரி)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (முத்தரி)
9. நரைக்கூந்தல் – நரை + கூந்தல்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (நரைக்கூந்தல்)
10. உற்றென – உறு + என
“முற்றும் அற்று ஒரோவழி” (உற் + என), “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (உற்ற் + என)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (உற்றென )
11. வெண்சுவை – வெண்மை + சுவை “ஈறுபோதல்” (வெண்சுவை)

பலவுள் தெரிக

1. 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்…………….
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) ஐங்குறுநூறு
Answer:
அ) நற்றிணை

கூடுதல் வினாக்கள்

2.எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் பாடப்பட்டது……………..
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ குறுந்தொகை
ஈ) நற்றிணை
Answer:
ஈ) நற்றிணை
3.‘நற்றிணை ‘ என்னும் தொடரைப் பிரித்தால்,…………….என அமையும்.
அ) நல் + திணை
ஆ) நற் பறிணை
இ) நன்மை + திணை
ஈ) நல்ல + திணை
Answer:
இ) நன்மை + திணை!
 
4.நற்றிணையைத் தொகுப்பித்தவன் …………….
அ) பூரிக்கோ ,
ஆ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
இ) பாண்டியன் பெருவழுதி
ஈ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
Answer:
ஆ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
 
5.நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் …………….
அ) நச்சினார்க்கினியர்
ஆ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
இ) பாண்டியன் இளம்பெருவழுதி
ஈ) தொல்காப்பியர்
Answer:
ஆ) பாரதம் பாடிய பெருந்தேவனார்
 
6.மக நிலை உரைத்தல்’ என்னும் துறை,…………….எனவும் குறிப்பிடப்படும்.
அ) தலைவி ஆற்றுவித்தல்
ஆ) மகள் மறுத்து மொழிதல்
இ) செவிலி கண்டுரைத்தல்
ஈ) மனை மருட்சி
Answer:
ஈ) மனை மருட்சி
 
7.தலைவியின் இல்லறப் பாங்கை நற்றாயிடம் பாராட்டியது …………….
அ) தலைவன்
ஆ) தந்தை
இ) தோழி
ஈ) செவிலித்தாய்
Answer:
ஈ) செவிலித்தாய்
 
8.“பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையள்” எனப் போற்றப்பட்டவள் …………….
அ) செவிலித்தாய்
ஆ) நற்றாய்
இ) தலைவி
ஈ) தோழி
Answer:
இ) தலைவி
 
9.‘பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்’- இத்தொடரில் ‘தேன்’ என்பதைக் குறிக்கும் சொல்…………….
அ) கலந்த
ஆ) தீம்பால்
இ) பிரசம்
ஈ) வெண்சுவை
Answer:
இ) பிரசம்
 
10.முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்று’ – இத்தொடரில் ‘பரல்’ என்னும் பொருளுடைய சொல்…………….
அ) முத்து
ஆ) அரி
இ) சிலம்பு
ஈ) ஒலிப்ப
Answer:
ஆ) அரி
 
11.பொழுது மறுத்து உண்ணும் சிறுமது கையளே – இத்தொடரில் ‘பெருமிதம்’ என்னும் பொருளுணர்த்தும் சொல் …………….
அ) மறுத்து
ஆ) சிறுமது
இ) மதுகை
ஈ) உண்ணும்
Answer:
இ) மதுகை
 
12.கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து வரிசைப்படுத்துக.
அ) செவிலியர், பொற்கலத்தில் பால் உணவை ஏந்தி வருவர்
ஆ) செவிலியர், மகளைப் பின்தொடர முடியாமல் நடை தளர்வர்
இ) ‘இதை உண்பாயாக’ எனச் செல்லமாக அடிப்பதுபோல் வேண்டுவா
ஈ) பூச்சுற்றிய கோலைச் செவிலியர், கையில் வைத்திருப்பர்
உ) ‘நான் உண்ணேன்’ என மறுத்து மகள் அங்கும் இங்கும் ஓடுவாள்
1) அ ஆ உ ஈ இ
2) ஈ அ இ உ ஆ
3) அ ஈ இ உ ஆ
4) ஈ உ ஆ இ
Answer:
3) அ ஈ இ உ ஆ
13.அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க.
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென
அ) இனிப்பு, நன்மை
ஆ) தேன, வறுமை
இ) செல்வம், வீடு
ஈ) இனியபால், உணவு
Answer:
ஆ) தேன், வறுமை
14.சரியான விடையைத் தேர்ன செய்க. நற்றிணைப் பாடல்களின் வடிவரையறை ………………
அ) 4முதல் 8வரை
ஆ) 9முதல் 12வரை
இ) அடிவரையயைகலை
ஈ) 13முதல் 31வரை
Answer:
ஆ) முதல் 12வரை
 
15.பொருத்து
1. பிரசம் – அ. வறுமை
2. உபாளாள் – ஆ. பெருமிதம்
3. வறன் – இ. ஓச்சுதல்
4. மதுகை – ஈ. நினையாள்
– உ. தேன்
Answer:
1-உ, 2-ஈ, 3-அ, 4-ஆ
 
16.சரியான விடை தேர்க
i. நற்றிணை – 9 அடிமுதல் 12 அடிவரை
ii. குறுந்தொகை – 4 அடிமுதல் 8 அடிவரை
iii. அகநானூறு – 11 அடிமுதல் 31 அடிவரை
iv. ஐங்குறுநூறு – 3 அடிமுதல் 6 அடிவரை
அ. i ii iii சரி
ஆ. i iii iv சரி
இ. ii iii iv சரி
ஈ . i ii iv சரி
Answer:
ஈ. i ii iv சரி

Leave a Reply