12th Bio-Botany Unit 8 உயிரி தொழில்நுட்பவியல் பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு

 12th Bio Botany Unit 8 Lesson 5 Book Back Answers

 12th Bio Botany Unit 8 Lesson 5 Book Back Answers | 12th Bio-Botany Samacheer kalvi guide Tamil Mesium

12th Botany  பாடம் 5. தாவரத் திசு வளர்ப்பு

TN 12th Bio-Botany Unit 8, 5th lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் – Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.

12th Bio-Botany Unit 8 | Lesson 5. தாவரத் திசு வளர்ப்பு Samacheer kalvi guide

 12th Bio Botany Unit 8 Lesson 5 Book Back Answers

 12th Bio Botany Unit 8 Lesson 5 Book Back Answers

பகுதி-I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. முழுஆக்குத்திறன் என்பது 
அ) மரபணு ஒத்த தாவரங்களை உருவாக்கும் திறன்
ஆ) எந்த தாவர செல் / பிரிகூறிலிருந்து ஒரு முழு தாவரத்தை உருவாக்கும் திறன்
இ) கலப்பின புரோட்டோபிளாஸ்ட்களை உருவாக்கும் திறன்
ஈ) நோயற்றத் தாவரங்களில் இருந்து வளமான தாவரங்களை மீளப்பெறுதல்
விடை : ஆ) எந்த தாவர செல் / பிரிகூறிலிருந்து ஒரு முழு தாவரத்தை உருவாக்கும் திறன்
2. நுண்பெருக்கம் இதை உள்ளடக்கியது
அ) நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல்
ஆ) சிறிய பிரிகூறுகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல்
இ) நுண்வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல்
ஈ)நுண் மற்றும் பெரு வித்துக்களைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழி அற்ற முறையில் பெருக்கமடையச் செய்தல்
விடை : ஆ) சிறிய பிரிகூறுகளைப் பயன்படுத்தி தாவரங்களில் உடல் வழிப்பெருக்கமடையச் செய்தல்
 
3. கீழ்கண்டவற்றை பொருத்துக.

பகுதி - அ

பகுதி -ஆ

 1.முழுஆக்குத்திறன்
2.வேறுபாடிழத்தல்
3.பிரிகூறு
4.வேறுபாடுறுதல் 

 A.முதிர்ந்த செல் மீண்டும் ஆக்குத்திசுவாக மாறுதல்
B.செல்களின் உயிரி வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்கள்
C.முழுத்தாவரமாக வளரக்கூடிய உயிருள்ள செல்களின் பண்பு
D. வளர்ப்பு ஊடகத்திற்கு தேர்ந்தெடுத்த தாவரத் திசுவை மாற்றுதல்

       1  2 3 4
அ) C  A D B
ஆ)A  C D B
இ) B  A D C
ஈ)  D  B C A
விடை : 1-B,2-B,3-D,4-C
 
4.தன்னழுத்தக்)கலனைப் பயன்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்கு நிமிடங்கள் மற்றும் வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது
அ)10 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 125°C
ஆ)15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121°C
இ) 15 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 125°C
ஈ)10 முதல் 20 நிமிடங்கள் மற்றும் 121°C
விடை : ஆ) 15 முதல் 30 நிமிடங்கள் மற்றும் 121°C
5. பின்வருவனவற்றில் சரியான கூற்று எது ? 
அ) அகார் கடற்பாசியில் இருந்து பிரித்தெடுக்க படுவதில்லை
ஆ) கேலஸ் வேறுபாடுறுதலை மேற்கொண்டு உடல் கருக்களை உற்பத்தி செய்கிறது
இ)மெர்குரிக் புரோமைடைப் பயன்படுத்தி பிரிகூறுகளை புறப்புரப்பு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது
ஈ) வளாப்பு ஊடகத்தின் PH 5.0 முதல் 6.0
விடை : ஆ) கேலஸ் வேறுபாடுறுதலை மேற்கொண்டு உடல்கருக்களை உற்பத்தி செய்கிறது
6. பின்வரும் கூற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும் 
அ)இதய அடைப்பிற்கு பயன்படுத்தப்படும் ஊட்ட  பானம் டிஜிடாலிஸ் பர்பியூரியாவிலிருந்து கிடைக்கிறது.
ஆ) மூட்டு வலியை குணப்படுத்த பயன்படுத்தப் படும் மருந்து காப்சிகம் அனுவத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது
இ) மலேரியா எதிர்ப்பு மருந்து சின்கோனா அபிசினாலிஸ் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது
ஈ) புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது. கேதராந்தஸ் ரோசியஸ் தாவரத்தில் காணப்படவில்லை
விடை : ஈ) புற்றுநோய் எதிர்ப்பு பண்பானது கேதராந்தஸ ரோசியஸ் தவரத்தில் காணப்படவில்லை
7. வைரஸ் அற்ற தாவரங்கள் இல் இருந்து உருவாக்கப்படுகின்றன
அ) உறுப்பு வளர்ப்பு
ஆ) ஆக்குத்திசு வளர்ப்பு இ) புரோட்டோபிளாச வளர்ப்பு
இ) S.V. மார்ச் 2020
ஈ) செல் வளர்ப்பு
விடை: ஆ) ஆக்குத்திசு வளர்ப்பு
8. பெருமளவில் உயிரி நேர்மை இழப்பைத் தடுப்பது
அ) உயிரிகாப்புரிமம்
ஆ) உயிரி அறநெறி
இ) உயிரி பாதுகாப்பு
ஈ) உயிரி எரிபொருள்
விடை : இ) உயிரி பாதுகாப்பு
9. குளிர்பாதுகாப்பு என்பது தாவர செல்கள், திசுக்கள் மற்றும் உறுப்புக்களை பாதுகாக்கும் செயல்முறை களுக்கு
அ) ஈதரைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்ப நிலைக்கு உட்படுத்துவது
ஆ) திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக உயர் வெப்பநிலைக்கு உட்படுத்துவது
இ) திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்பநிலையான -196°Cக்கு உட்
ஈ) திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்பநிலைக்கு உட்படுத்துவது
விடை : இ) திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி மிக குறைந்த வெப்பநிலையான -196°Cக்கு உட் படுத்துவது
10.தாவர திசு வளர்ப்பில் திடப்படுத்தும் காரணியாகப் பயன்படுத்தப்படுவது
அ) நிக்கோட்டினிக் அமிலம்
ஆ) கோபால்ட்டஸ் குளோரைடு
இ) EDTA
ஈ) அகார்
விடை : ஈ) அகார்
11. கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையின் பெயர் என்ன? அதன் 4 வகைகள் யாவை?
  • உறுப்பு வளர்ப்பு
  • ஆக்குத்திசு வளர்ப்பு
  • புரோட்டோபிளாசம் வளர்ப்பு
  • செல் மிதவை வளர்ப்பு
12. வளர்ப்பு செயல்முறையின் போது, வளர்ப்பு ஊடகத்தில் நுண்ணுயிர்களின் வளர்ச்சியினை நீர் எவ்வாறு தவிர்ப்பாய்? நுண்ணுயிர்களை நீக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமுறைகள் யாவை?
நுண்ணுயிரி நீக்கம் என்பது வளர்ப்பு ஊடகத்தி லிருந்து, நுண்ணுயிரிகளான பாக்டீரியாக் களையும், பூஞ்சைகளையும் நீக்கும் தொழில் நுட்பமாகும். இது மூன்று வகைப்படும். அவை
i. நுண்ணுயிர் நீக்கப்பட்ட நிலையைப் பராமரித்தல் : ஆய்வக செயற்கை வளர்ப்பில் நுண்ணுயிர் நீக்கம் பல நிலைகளில் நடைபெறுகிறது.
  • அவை. கண்ணாடிக் கலன்கள், இடுக்கி, கத்தி, னைத்து உபகரணங்கள் ஆகியவை தன்னழுத்தக் கலனில் 15 psi (121°C வெப்பநிலை) அழுத்தத்தில், 15-30 நிமிடங்களுக்கு உட்படுத்தப்படுகிறது அல்லது 70% ஆல்கஹாலில் நனைக்கப்பட்டு இதைத் தொடர்ந்து வெப்பமூட்டலும் குளிர் வித்தலும் முறையில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது.
ii.வளர்ப்பு அறை நுண்ணுயிர் நீக்கம் செய்தல். 
  • தரை மற்றும் சுவர்களைச் சோப்பு கொண்டு 2% சோடியம் ஹைப்போகுளோரைட் அல்லது 95% எத்தனால் கொண்டு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது. பிறகு 15 நிமிடங்கள் புறஊதா கதிர் வீச்சிற்கு உட்படுத்தப்படுகிறது.
iii.ஊட்ட ஊடகத்தை நுண்ணுயிர் நீக்கம் செய்தல்: 
  • வளர்ப்பு ஊடகம் கொண்டுள்ள கண்ணாடிக் கலனை ஈரம் உறிஞ்சாத பருத்தி (அ) பிளாஸ்டிக் கொண்டு மூடி, தன்னழுத்தக் கலனில் 15psi (121°C) ல் 15-30 நிமிடங்களுக்கு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது. தாவரச்சாறு, வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஹார்மோன்கள் ஆகியவை 0.2um துளைவிட்ட முடைய மில்லிபோர் வடிகட்டி வழியாகச் செலுத்தப்பட்டு நுண்ணுயிர் நீக்கம் செய்யப் படுகின்றன. நுண்ணுயிர் நீக்கிய சீரடுக்கு காற்று பாய்வு அறையில் நுண்ணுயிர் நீக்கிய வளர்ப்பு ஊடகத்தில் வைக்கப்படுகிறது.
iv. பிரிகூறுக்கு நுண்ணுயிர் நீக்கம்: 
  • திசு வளர்ப்பிற்கு பயன்படும் பொருட்களை ஓடும் நீரில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது பின் 0.1% மெர்குரி குளோரைடு, 70% ஆல்கஹால் போன்றவை பயன்படுத்தி நுண்ணுயிர் அற்ற நிலையில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது.
13.செல் வளர்ப்பு நிலையில் உள்ள பல்வேறு படிநிலைகளை எழுதுக.
வரையறை: 
  • சில தனிச் செல்களையோ (அ) செல் தொகுப்பை யோ நீர்ம ஊடகத்தில் ஆய்வுக் கூட சோதனை முறையில் வளர்க்கும் முறை –செல் மிதவை வளர்ப்பு எனப்படுவது.
படி நிலைகள் :
1. கேலஸின் பகுதி நீர்ம ஊடகத்திற்கு மாற்றப்படுகிறது
2. சுழற்சி கலக்கி (Agitator) பயன்படுத்தி கிளர்வூட்டப்படுகிறது.
3.கேலஸ் திசுவிலிருந்து செல்கள் தனிமைப்படுத்தப்படுகிறது.
4. செல் மிதவை வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்களின் உற்பத்தி :
  • ஆல்கலாய்டுகள், ஃபிளேவினாய்டுகள், டெர்பினாய்டுகள், ஃபீனால் கூட்டுப்பொருள்கள், மறு கூட்டிணைவுப் புரதங்கள் போன்ற பொருள் களை உருவாக்கலாம்.
  • தாவரங்களின் வளர்சிதை மாற்றப் பொருட்களின் உபபொருளாகவும் உருவாக்கப்படுகின்றன.
  • இரண்டாம் நிலை வளர்ச்சிதைப் பொருள்கள் வேதிப் பொருளாகவும், வளர்ச்சிக்குத் தேவைப்படாமலும் உள்ளன
  • வணிக உற்பத்திக்கான உயிரிகலன்களைப் பயன்படுத்தி உற்பத்தி செயல்முறைகளைத் தானியங்கி முறையில் அளவிடலாம்.
  • செல் மிதவை வளர்ப்பின் மூலம் மேற்கொள் வதற்கு சில உத்திகளான உயிரிசார் நிலை மாற்றம், வளர்சிதை மாற்றப் பொருள் தூண்டல் மற்றும் முடக்க வளர்ப்பு போன்றவை பயன் படுத்தப்படுகின்றன.
14. “கருவுறு” பற்றி நீ அறிவது என்ன? 
  • கேலஸ் திசுவிலிருந்து நேரடியாக உருவான கருக்களுக்கு உடல்கருக்கள் (அ) கருவுருக்கள் என்று பெயர்.
  • இவை ஆய்வுக்கூட சோதனை முறை – வளர்ப்பு செல்களிலிருந்து முன்கருசெல்களாகி பின்னர் கருவுருக்களாக வேறுபாடடைகின்றன.
  • பின்னர் திறன் மிக்க நாற்றுருக்களை வழங்கி வன்மையாக்குதலுக்கு பின் முழுத் தாவரங்களாகின்றன.

பயன்கள் 

  • செயற்கை விதைகள் உற்பத்தி செய்ய பயன்படுகிறது
  • எ.கா : அல்லியம் சட்டைவம், ஹார்டியம் வல்கேர், ஓரைசா சட்டைவா, சியா மெய்ஸ்.
15.தாவரங்களில் செய்யப்பட்டுள்ள நுண்பெருக்கத்திற்கு எடுத்துக்காட்டு தருக. 
  • நுண்பெருக்கம் பல தாவரங்களில் மேற்கொள்ளப் பட்டது
  • அன்னாசி
  • வாழை
  • ஸ்ட்ராபெர்ரி
  • உருளைக்கிழங்கு

 

16. தாவர திசு வளர்ப்பில் அடங்கியுள்ள அடிப்படைக் கொள்கைகளை விளக்குக.

1.முழு ஆக்குத்திறன் 
மரபியல் திறன்களைக் கொண்டுள்ள உயிருள்ள தாவரச் செல்களை ஊட்ட(கரைசல்) ஊடகத்தில் வளர்க்கும் போது அது முழுத் தாவரமாக வளர்ச்சியடையும் பண்பு.
2. வேறுபாடுதல்
செல்களில் உயிரிய, வேதிய மற்றும் அமைப்பிய மாற்றங்களை ஏற்படுத்தி அவற்றைச் சிறப்பான அமைப்பு மற்றும் பணியினை மேற்கொள்ளச் செய்தல்
3. மறு வேறுபாடுறுதல் 
  • வேறுபாடுற்ற ஒரு செல் —–> மேலும் வேறு பாடுற்று மற்றொரு செல்லாக மாற்றமடைதல்
  • ஊட்டச்சத்து ஊடகத்தில் கேலஸ் திசு—->முழுத் தாவரமாதல்

4.வேறுபாடிழத்தல்

முதிர்ச்சியடைந்த செல்கள்—-> மீண்டும் ஆக்குத் திசுவாக மாறி கேலஸ்—> போன்ற திசுவை உருவாக்கும் நிகழ்ச்சி
(அவ்வாறு உயிருள்ள தாவர செல்களின் திசுக் களின் வேறுபாடுறுதலும், வேறுபாடிழத்தலும் உள்ளார்ந்து ஒரு சேரக் காணப்பட்டால் அவை முழுஆக்குத் திறன் பெற்றுள்ளதாகக் கருதப் படும்)
17. வளர்ப்பு தொழில்நுட்பத்தை, பயன்படுத்தப்படும் பொருட்களின் அடிப்படையில் எவ்வாறு வகை படுத்துவாய்? அதனை விளக்குக. 
பிரிகூறு அடிப்படையில் தாவரத்தில் வளர்ப்பின் வகைகளாவன
1)உறுப்பு வளர்ப்பு 1.
வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்தல்
  1. கருக்கள்
  2. தாவரத்தின் பிற உறுப்புகள்
  3. மகரந்தப்பை
  4. சூலகப்பை
  5. தண்டு
2. ஆக்குத்திசு வளர்ப்பு 
வளர்ஊடகத்தில் ஆக்குத்திசுவை வளர்த்தல்
3. புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு
(செல்சுவரற்ற, ஆனால் செல்சவ்வு (அ) பிளாஸ்மா சவ்வினால் சூழப்பட்ட செல் அமைப் பாகும்) புரோட்டாபிளாஸ்ட்டை பயன்படுத்தி ஒற்றைச் செல்லிருந்து முழுத் தாவரத்தை மீளுருவாக்கம் செய்து இரு புரோட்டோபிளாஸ்டுகளை இணைத்து (உடலக் கலப்பினம்) உடல கலப்பின செல்களை உருவாக்க இயலும்.
4. செல் மிதவை வளர்ப்பு
 
கேலஸிலிருந்து செல்கள் தனிமைப்படுத்தப் பட்டு திரவ ஊடகத்தில் செலீமிதவை வளர்ப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாம் நிலை வளர்சிதை பொருட்கள் உற்பத்தி செல் மிதவை வளர்ப்பின் மூலமாக இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் சில உத்திகள் (உயிரிசார் நிலை மாற்றம், வளர்சிதை மாற்றப் பொருள் தூண்டல மற்றும் முடக்க வளர்ப்பு முறை) பயன்படுத்தப்பட்டு உருவாக்கப் படுகின்றன.
18.உறைகுளிர் பாதுகாப்பு பற்றி விளக்குக. உறை குளிர் பாதுகாப்பு இதை மேற்கொள்ளப்படும் தாவரப் பகுதிகள் 
இதன் பகுதிகளாவன 
  • புரோட்டோபிளாஸ்ட்கள், செல்கள் & திசுக்கள்
  • செல் நுண்ணுறுப்புகள் & உறுப்புகள்
  • செல்லுக்கு வெளியே உள்ள பொருட்கள் & நொதிகள் போன்றவை. தீவிர குறைந்த வெப்பநிலையில் குளிர வைத்துப் பதப்படுத்துதல் ஆகும்.
  • இது -196°C திரவ நைட்ரஜனை பயன்படுத்தி குளிர வைத்து பதப்படுத்துலால் உறை குளிர் பாதுகாப்பு என்று அழைக்கப்டுகிறது
  • உறை குளிர் பாதுகாப்பு செயல்முறைக்கு முன்பாக உறை குளிர் பாதுகாப்பு செயல் பாதுகாப்பான்கள் டை மெத்தில் சல்ஃபாக்சைடு. கிளிசரால் (அ) சுக்ரோஸ் ஆகியன சேர்க்கப் படுகின்றன.
  • இவை தீவிர குளிர் விளைவுகளிலிருந்து செல்கள் (அ) திசுக்களைப் பாதுகாக்கின்றன
  • தீவிர குறைந்த வெப்பநிலையில் – ஏதேனும் ஒரு நொதியின் செயல்பாடு (அ) வேதிய செயல் பாடுகள் முழுவதும் நின்று பொருட்கள் உறக்க நிலையில் பதப்படுத்துகின்றன
  • பரிசோதனைப் பணிக்காக தேவைப்படும் போது. மீண்டும் மெதுவாக அறை வெப்பநிலைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

 

19. மரபணுவளக்கூறு பாதுகாப்பு பற்றி நீர் அறிவது என்ன? அவற்றை விவரி. 

வரையற
பயிர் பெருக்க நோக்கத்திற்காக, உயிருள்ள நிலையில் உள்ள உயர்ந்த மேம்பட்ட தாவரங்களிலிருந்து பெறப்பட்ட தாவரப் பொருட் களான மகரந்தம். விதைகள் (அ) திசுக்கள் போன்றவற்றைப் மகரந்த விதை வங்கிகளில் அவற்றின் உயிர்ப்புத் தன்மை கெடாமல் பாதுகாத்தல் மரபணுக்கள் கூறு பாதுகாப்பு ஆகும். எ.கா: விதை வங்கி, DNA வங்கி
பயன்கள் :
  • உயிர்ப்பு தன்மை மற்றும வளத்தன்மை பாது காக்கப்பட்டு பிறகு கலப்பினமாக்கம் மற்றும் பயிர் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
  • DNA வங்கி, விதை வங்கி மூலம் சிறந்த ரக A தாவரங்களின் உயர்ந்த மேம்பட்ட பண்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
  • உயிர் பன்ம பேணலுக்கும். உணவுப் பாதுகாப் பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
20. செயற்கை விதை தயாரிப்பிற்கான நெறிமுறையை எழுதுக
செயற்கை விதைகள் : 
  • தாவரத்தின் எந்த ஒரு செல் பகுதியிலிருந்து பெறப்பட்ட தனிச் செல்களை பெறலாம்.
  • ஆய்வுக்கூட சோதனை வளர்ப்பு கருவுருக்களைக் கொண்டு சில உயிர்தொழில்நுட்ப முறையில் செய்யப்பட்ட இயற்கை விதைகளைப் போன்ற செயற்கை விதைகள்.
நெறிமுறைகள் :
  • இந்த செல்கள் பகுப்படைந்து அடர்த்தியான சைட்டோபிளாசத்தையும், பெரிய உட்கருவையும் தரச மணிகளையும், புரதங்களையும், எண்ணெய் களையும் கொண்டு உள்ளது.
  • செயற்கை விதைகள் மற்றும் அகரோஸ் மற்றும் ஆல்ஜினேட் போன்ற மந்தமான பொருட்கள் கருக்களின் மீது பூசப்படுகின்றன.

Leave a Reply