12th Botany Lesson 3 Additional One Marks
12th Standard Bio Botany Unit 7 Lesson 3 Additional One Marks Question and Answers Tamil Medium. TN Samacheer Kalvi Guide +2 Bio-Botany Book Back Question and Answer key and also some additional questions with answer key. 12th Botany Important Questions in Tamil Medium Lesson 3. Students Guide 360.
12th Botany lesson 3 one Marks
I. பொருத்துக
- பொருத்துக
1. பெண்டாசோமி | A -2n-2 |
2. இரட்டை மானோசோமி | B -2n+1 |
3. நல்லிசோமி | C -2n-1-1 |
4. டிரைசோமி | D -2n+3 |
II. சரியான வாக்கியத்தை தெரிவு செய்க
2. ஒரு சிவப்புக்கண் பெண் டுரோசோஃபில்லாவை வெள்ளை கண் ஆண் டுரோசோப்பில்லாவுடன் கலப்பினம் செய்தால் F1 சந்ததியில் பிறக்கும் பூக்களின் பண்புகள் (PTA – 3)
அ) பெண் பூச்சிகள் வெள்ளை கண்களுடனும், ஆண் பூச்சிகள் சிவப்பு கண்களுடனும் காணப்படும்.
ஆ) ஆண் பூச்சிகள் சிவப்பு கண்களுடனும், பெண் பூச்சிகள் மஞ்சள் கண்களுடனும் காணப்படும்
இ) ஆண் மற்றும் பெண் பூச்சிகள் சிவப்பு கண்களுடன் காணப்படும்.
ஈ) ஆண் மற்றும் பெண் பூச்சிகள் வெள்ளை கண்களுடன் காணப்படும்.
விடை : இ) ஆண் மற்றும் பெண் பூச்சிகள் சிவப்பு கண்களுடன் காணப்படும்.
III. குறுக்கேற்றத்தைப் பொறுத்தவரை தொடர்பற்ற கூற்றைக் கண்டறி
3. அ) இது கேமீட்டுகள் உருவாக்கத்தின் போது இன செல்களில் நடைபெறுகிறது.
ஆ) மியாசிசின் புரோபேஸ் 1 இன் பாக்கைடீன் நிலையில் நடைபெறுகிறது.
இ) இது அவற்றிற்கிடையேயான மறு கூட்டிணைவு நிகழ் விரைவுக்கு நேர்விகிதத்தில் காணப்படும்
ஈ) இது பொதுவாக உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படுவதால் பரிணாம முக்கியத்துவம் வாய்ந்தது.
விடை : இ
IV. தன் மும்மடிய தாவரங்களைப் பொறுத்தவரை தொடர்பற்ற வாக்கியத்தை கண்டறி
4. அ) இவை தன் நான்மடியம் மற்றும் இருமடிய சிற்றினக்கலப்பு செய்வதனால் இவற்றைச் செயற்கையாக உருவாக்கலாம்.
ஆ) அவை திறனான கேமீட்டுகளை உருவாக்குவதால் மிகவும் வளமுடையது.
இ) மும்மடிய வாழை இருமடிய வாழையை விட விதைகளற்றது – பெரிய கனிகளையுடையது
ஈ) அருகம்புல் (சயனோடான் டாக்டைலான்) ஓர் இயற்கையான தன் மும்மடியமாகும்.
விடை : ஆ
V. அயல்பன்மடியம் – இதோடு தொடர்பற்ற வாக்கியத்தைக் கண்டறி
5. அ) இது ஒரு வெவ்வேறு சிற்றினங்களிலிருந்து இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அடிப்படைத் தொகுதி குரோமோசோம்களைப் பெற்ற உயிரினங்களாகும்.
ஆ) இவை அதனோடு மரபணுத் தொகையின் நான்கு (அ) ஐந்து நகல்களைக் கொண்டது. இது இருமடியம் இரட்டிப்படைதல் தூண்டப்படுதலால் ஏற்படுகிறது.
இ) இவை சிற்றினங்களிடையே கலப்புகளால் இவற்றை உருவாக்க முடியும்மேலும் கோல்ச்சிசினைப் பயன்படுத்தி குரோமோசோம் இரட்டிப்படைய செய்வதால் வளத்தன்மை தக்கவைக்கப்படுகிறது.
ஈ) இவை நெருங்கிய சிற்றினங்களுக்கிடையே மட்டுமே அயல் பன்மடியத் தாவரங்கள் உருவாக்கப்படுகிறது.
விடை: ஆ
VI. தவறாகப் பொருந்திய இணையைக் கண்டறிக
6. அ) குறுக்கேற்றம் என்ற சொல்லை உருவாக்கியவர் – T.H.மார்கன்
ஆ) மரபு வரைப்படம் என்ற கருத்தை உருவாக்கியவர் – A.H. ஸ்டர்ட்டீவண்ட்
இ) லதைரஸ் ஒடோரேட்டஸ் தாவரத்தில் காணப்படும் பிணைதல் – பேட்சன் மற்றும் பன்னட்
ஈ) பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட DNA மறுசேர்க்கை மாதிரியை உருவாக்கியவர் – ராபர்ட் கோக்
விடை: ஈ
12th Botany lesson 3 one Marks
VII. நீக்கம் தொடர்பான தவறான வாக்கியத்தை கண்டறி
7. அ) வேதிப்பொருட்கள், மருந்துகள் மற்றும் கதிரியக்கம் இவற்றால் நீக்கம் நடைபெறுகிறது.
ஆ) குரோமோசோமில் பிரிதல் நடைபெறும் இடத்தைப் பொறுத்து அது நுனி நீக்கம் மற்றும் இடைநீக்கம் எனப்படும்.
இ) பெரிய நீக்கம் பரிணாம முக்கியத்துவம் வாய்ந்தது
ஈ) நீக்கம் டுரோசோபில்லா மற்றும் மக்காச்சோளத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
விடை: இ
8. தவறான இணையைக் கண்டறி
அ) ஒரு குரோமோசோம் தொகுப்பில் ஒரு ஜோடி நீக்கம் – நல்லி சோமி
ஆ) ஒரு குரோமோசோம் தொகுப்பில் ஒன்று நீக்கம் – மோனோசோமி
இ) குரோமோசோம்களில் இரண்டு சேர்த்தல் – டெட்ராசோமி
ஈ) இருமய குரோமோசோம்களில் ஒரு குரோமோசோம் சேர்த்தல் – டிபிளோசோமி
விடை: ஈ
9. அ) ஒரு சென்டிரோமியர் காணப்படும் குரோமோசோம் – மோனோசென்டிரிக்
ஆ) தலைகீழ் திருப்பம் நீண்ட, சிறு கரங்களுடன் சென்டிரோமியர் இன்றி காணப்படுவது – பாராசென்டிரிக்
இ) குரோமோசோமில் நுனிப்பகுதி இல்லையென்றால் அதைக்குறிப்பிடுவது – டெலோசென்டிரிக்
ஈ) சென்டிரோமியர் உள்ளடக்கிய தலைகீழ் திருப்பம் – பெரி சென்டிரிக்
விடை: இ
VIII. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் ஒரு உறுதிப்படுத்துதல் குறிப்பும் (A) அதற்கான காரணம் (R) வும் கொடுக்கப்பட்டுள்ளன அதில் பொருத்தமான விடையை தேர்வு செய்க.
10. அ) A மற்றும் R சரியானது – R ஐ சரியாக விளக்குகிறது
ஆ) A மற்றும் R சரியானது ஆனால் Rஐ சரியாக விளக்கவில்லை
இ) A சரியானது R தவறானது
ஈ) A மற்றும் R தவறானது
11. கூற்று : அராபிடாப்சிஸ் தாவரக் குரோமோசோமின் டீலோமி TTTAGGG என்ற நியூக்ளியோடைட் தொடர் வரிசை டீலோமி அமைக்கிறது.
காரணம்: இதன் உருவாக்கத்திற்கு ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளி எனும் நொதி உதவுகிறது. (டீலோமியர்)
அ) கூற்று தவறு காரணம் சரி
ஆ) கூற்று சரி, காரணம் அதற்கு சரியான விளக்கமாகும்
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
விடை : ஆ) கூற்று சரி, காரணம் அதற்கு சரியான விளக்கமாகும்
12. உறுதிப்படுத்துதல் (A) :
பிணைதல் மற்றும் குறுக்கேற்றம் இரு நிகழ்வுகள் ஆனால் எதிர்மறை விளைவுகளை உடையவை.
காரணம் (R) :
பிணைதல் குறிப்பிட்ட மரபணுக்களை சேர்ந்தே இருக்கவும். குறுக்கேற்றம் மரபணுக்கள் கலப்ப தற்கும் காரணமாகிறது.
விடை : அ) A மற்றும் R சரியானது – R ஐ சரியாக விளக்குகிறது
13. உறுதிப்படுத்துதல் (A):
வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க சடுதி மாற்ற வேகமும் அதிகரிக்கிறது.
காரணம் (R) :
அதிக வெப்பநிலை DNA ஐ ரெஸ்டிரிக்ஷன் எண்டோ நியூக்ளியேஸ் நொதியின் செயலால் நியூக்ளியோடைடுகளைச் சிதைவடையச் செய்கிறது.