You are currently viewing 12th Botany Lesson 3 Book Back Answers

12th Botany Lesson 3 Book Back Answers

12th Botany Lesson 3 Book Back Answers

12th Standard Botany Unit 7 Lesson 3 Book Back Question and Answers. TN Samacheer kalvi Guide TN12th Bio-Botany Tamil Medium Guide Lesson 3 Full Answer key. One Marks, 2 Marks, 3 Marks, and 5 Marks and also Additional Questions and Answers available in Students Guide 360. குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் பகுதி-1.புத்தக வினாக்கள்.

12th Botany Lesson 3 Book Back Answers குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

12th Botany Lesson 3 Book Back Answers குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் 

12th Bio Botany Lesson 3 Book Back Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ஒரு அயல் அறுபடியும் கொண்டிருப்பது

அ) ஆறு வேறுபட்ட மரபணுத் தொகையம்

ஆ) மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்

இ) மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்

ஈ) ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்

விடை இ) மூன்று வேறுபட்ட மரபணுத் தொகையத்தின் இரண்டு நகல்கள்

2. A மற்றும் B என்ற மரபணுக்கள் குரோமோசோமின் மீது 10CM தொலைவில் அமைந்துள்ளது. ஒரு மாற்றுப்பண்புகருமுட்டை AB/ab என்பதோடு ab/ab யை சோதனை கலப்பு செய்தால் மொத்த 100 வழித்தோன்றல்களில் ஒவ்வொரு வழித்தோன்றல்களிலும் எத்தனை இனங்களை எதிர்பார்க்கலாம்.

அ) 25AB, 25ab, 25Ab, 25aB

ஆ) 10AB, 10ab

இ) 45AB, 45ab

ஈ) 45AB, 45ab, 5Ab, 5aB

விடை : இ) 45AB, 45ab

3. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக

பட்டியல் I

பட்டியல் II

 அ இருமடியத்துடன் ஒரு இணை குரோமோசோம்கள் அதிகமாக காணப்படுவது

i மோனோசோமி

ஆ. இருமடியத்துடன் ஒரு குரோமோசோம்கள் அதிகமாகக் காணப்படுவது

ii டெட்ரோசோமி

இ இரு மடியத்தில் ஒரு குரோமோசோம் குறைவாக காணப்படுதல்

iii ட்ரைசோமி

ஈ இரு மடியத்தலிருந்து இரண்டு தனித்தனி குரோமோசோம் குறைவாகக் காணப்படுதல்.

iv இரட்டை மானோசோமி

அ) அ-i, ஆ-iii, இ-ii, ஈ-iv

ஆ) அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i

இ) அ-ii, ஆ-iii, இ-i, ஈ-iv

ஈ) அ-iii, ஆ-ii, இ-i, ஈ-iv

விடை: இ) அ-ii, ஆ-ili, இ-i, ஈ-iv

4. பின்வரும் எந்தக் கூற்றுகள் சரியானவை?

1) முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர் சேர்க்கை வழித்தோன்றல்கள் மட்டுமே வெளிப் படுத்துகின்றன.

2) முழுமையான பிணைப்பில் பிணைந்த மரபணுக்கள் க்கேற்றத்தை வெளிப்படுத்து கின்றன.

3) முழுமையற்ற பிணைப்பில் இரண்டு பிணைந்த மரபணுக்கள் பிரிவடையலாம்.

4) முழுமையான பிணைப்பில் குறுக்கேற்றம் நடை பெறுவதில்லை

அ) 1 மற்றும் 2

இ) 3 மற்றும் 4

ஆ) 2 மற்றும் 3

ஈ) 1 மற்றும் 4

விடை: இ) 3 மற்றும் 4

5. முப்புள்ளி சோதனைக் கலப்பின் மூலம் துல்லிய மான மரபணு வரைபடம் வரையமுடியும் ஏனெனில்
இதன் அதிகரிப்பினால்

அ) ஒற்றைக் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

ஆ) இரட்டை குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

இ) பல் குறுக்கேற்றம் சாத்தியமாகிறது

ஈ) மறுகூட்டிணைவு நிகழ்விரைவு சாத்தியமாகிறது

விடை : ஆ)இரட்டை குறுக்கேற்றம் சாத்திய மாகிறது

6. மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக, பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள்

அ) 50:50

இ) 96:4:36

ஆ) 7:1:1:7

ஈ) 1:7: 7:1

விடை : ஆ) 7:1: 1: 7

7. ஒரே குரோமோசோமில் G S LH என்ற மரபணுக்கள் அமைந்துள்ளது மறுகூட்டிணைவு விழுக்காடு L க்கும் G க்கும் இடையே 12% S க்கும் L க்கும் இடையே 50%, Hக்கும் Sக்கும் இடையே 20% எனில் மரபணுக் களின் சரியான வரிசையை எழுதுக.

அ) GHSL

இ) SGHL

ஆ) SHGL

ஈ) HSLG

விடை : இ) SGHL

8. புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு. ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு முறையே

அ) A → T, T→ A, C → G மற்றும் G→c

ஆ) A → G, C → T, C → G மற்றும் TA

இ) C → G, A → G, T A மற்றும் G → A

ஈ) G → C, A → T. T → A மற்றும் C→G

விடை : ஆ) A → G, C → T,C G மற்றும்T A

9. ஒரு செல்லில் எண்ணிக்கை 18 ஒருமடிய குரோமோசோமின் எனில், இரட்டை மற்றும் ட்ரைசோமி நிலையில் குரோமோசோம் மானோசோமிகளின் எண்ணிக்கை

அ) 35 மற்றும் 37

ஆ) 34 மற்றும் 35

இ) 37 மற்றும் 35

ஈ) 17 மற்றும் 19

விடை : அ) 35 மற்றும் 37

10. மரபுக்குறியின் AGC யானது AGA வாக மாற்றமடையும் நிகழ்வு

அ) தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்

ஆ) பொருளுணர்த்தாத சடுதிமாற்றம்

இ) கட்ட நகர்வு சடுதிமாற்றம்

ஈ) நீக்குதல் சடுதிமாற்றம்

விடை : அ) தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்

11.கூற்று காமா கதிர்கள் பொதுவாகக் கோதுமைவகைகளில் சடுதிமாற்றத்தைத் தூண்டப் பயன்படுகிறது.

காரணம் ஏனெனில் அணுவிலிருந்து வரும் எலக்ட் ரான்களை அயனியாக்க இயலாத குறைவான ஆற்றலை எடுத்துச் செல்கிறது

அ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்

ஆ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

இ) கூற்று சரி காரணம் கூற்றுக்குத் தவறான விளக்கம்

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

விடை இ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச்தவறான விளக்கம்.

12. மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09என இருந்தால்,A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?

அ) 900 cM

ஆ) 90 cM

இ) 9 cM

ஈ) 0.9 CM

விடை இ) 9 cM

13. ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாகவே காணப்படும் பொழுது,

i)நிகழ்வின் பெயர் என்ன?

ii) தகுந்த எடுத்துக்காட்டுன் கலப்பினை வரைக.

iii) புறத்தோற்ற விகிதத்தை எழுதுக.

  • இந்த நிகழ்வின் பெயர் பிணைதல் இது இனிப்பு பட்டாணி (லத்தைரஸ் ஒடோரேடஸ் ) தாவரத்தில் வில்லியம் பேட்சன் மற்றும் ரெஜினால்ட் சி-புன்னெட் ஆகியோர்களால் 1906-இல் கண்டறியப்பட்டது.

12th Botany Lesson 3 Book Back Answers STUDENTS GUIDE 360

  • ஒரே ஒத்திசைவு குரோமோசோம்களில் காணப் படும் இரு ஓங்குதன்மை அல்லீல்கள் (அ) ஒடுங்கு தன்மை அல்லீல்கள் ஒரே கேமீட் மூலம் ஒன்றாகவே மரபு வழி அடைந்தால் இணைப்பு (அ) சிஸ்வகை அமைவு எனப்படும்.
  • அரே நேரம் இதே தன்மையுடைய அல்லீல்கள் வெவ்வேறு குரோமோசோம்களில் அமைந்து வேறு பட்ட கேமீட்கள் மூலம் தனியாகவே மரபுவழி அடைந்தால் அதற்கு விலகல் (அ) டிரான்ஸ்வகை என்று பெயர்.
  • இவையிரண்டும் பிணைப்பின் இரு கூறுகள் ஆகும்.

14. PV/PV என்ற ஓங்கு மரபணு கொண்ட ஆண் டுரோசோஃபிலாவை இரண்டை ஒடுங்கு மரபணு கொண்ட பெண் டுரோசோஃபிலாவுடன் கலப்பு செய்து F, ஐ பெறுக. பின்பு F, ஆண் பழப்பூச்சியை இரட்டை ஓடுங்கு பெண் பழப்பூச்சியுடன் கலப்பு செய்க.

  1. எந்த வகையான பிணைப்பை காண முடியும்.
  2. சரியான மரபணு வகையை கலப்பினை வரைக.
  3. F2 சந்ததியின் சாத்தியமான மரபணு வகையம் என்ன?
I) முழு பிணைப்பு

15.

S.NO

கேமீட்டுகளின் வகைகள்

வழித்தோன்றல்களின்

எண்ணிக்கை

1.

ABC

349

2.

Abc

114

3.

abC

124

4.

AbC

5

5.

aBc

4

6.

aBC

116

7.

ABc

128

8.

abc

360

  1. இந்தச் சோதனைக் கலப்பின் பெயர் என்ன?
  2. மேலே கொண்டு மரபணு வரைபடத்தை எவ்வாறு கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் உருவாக்குவாய்?
  3. மரபணுக்களின் சரியான வரிசையைக் கண்டுபிடி.
  • இது 3 புள்ளி சோதனைக் கலப்பு – இதில் மூன்று புள்ளி கலப்பு 8 வேறுபட்ட 27-8 கேமிட்டுகளின் வகைகளை உருவாக்குகிறது. 3 அல்லீல்களின் அமைவிடம் அவற்றிற்கிடையேயான தூரம் – வரிசை ஆகியவற்றை மறு கூட்டிணைவு நிகழ் விரைவு மூலம் கணக்கிடலாம்.

RF = மொத்த மறு கூட்டிணைவியின் எண்ணிக்கை / மொத்த வழித்தோன்றல்களின் எண்ணிக்கை

For A & B – அடைவிடம்

RF = 114 +5+ 116 + 4×100 / 1200 = 19.9

For A & B – அமைவிடம்

RF=114 + 128 + 116 + 4 x 100 / 1200  = 40.16

For B & C – அடைவிடம்

RF= 5+128 + 124 + 4 x 100 / 1200 = 21.75

  • அனைத்து அமைவிடங்களும் பிணைப்புற்றவை அனைத்து மறுகூட்டிணைவு மதிப்புகளும் 50% க்கும் குறைவானவை.
  • AC = அமைவிடம் அதிக RF மதிப்பு.
  • இவையிரண்டும் இரட்டை குறுக்கேற்றத்தி லிருந்து பெறப்பட்ட இரட்டை மறு கூட்டிணைவு வகைகளாகும். எனவே ஒவ்வொன்றையும் ஒரு முறை அல்ல இருமுறை கணக்கிட வேண்டும் – ஏனெனில் இவை இரட்டை மறு கூட்டிணைவு வழித்தோற்றல்களைக் குறிக்கிறது. இதனைச் சரிசெய்ய
  • 114 + 125 + 116 +128 +5+ 14 + 4 = 500.
  • மொத்த எண்ணிக்கை 1200 இல் இது 500 = 41.65% (துல்லியமாக) இது இருகூறு மதிப்பு களின் கூடுதலுக்கு ஒத்திருக்கிறது, இதை மாற்றி எழுதும்போது கொண்டிருப்பதால் அதிக தொலைவில் அமைந்து உள்ளதாக கருத இயலும்.
  • ஆனால் B இரண்டுக்கும் இடையில் காணப்பட – மரபணுக்களின் வரிசை abc
  • 19.9 + 21.75 கூட்டுத் தொகை = 41.95mu இது 40.16ஐ விட அதிகம். இரண்டு குறைந்த எண்ணிக்கை கொண்ட வழித்தோன்றல்கள் (மொத்த 8ல்) கண்டறிய வேண்டும்.

16. தவறுதலாக பொருள்படும், சடுதிமாற்றம் பொருளுணர்த்தாத சடுதிமாற்றத்திற்கு இடையேயான வேறுபாடு தருக. (PTA – 5)

தவறுதலாக பொருள்படும் சடுதிமாற்றம் (அ) ஒத்திலாச் சடுதிமாற்றம்

பொருளுணர்த்தாத சடுதி மாற்றம்

ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான் அல்லது மரபுக்குறியன் வேறொரு அமினோ அமிலத்திற்கான கோடான் (அ) மரபுக்குறியன் மாறுவதால் அமினோ அமிலவரிசையில் மாற்றம் ஏற்படுகிறது.

Eg. TTA → AAT

அமினோ அமிலம் லியூசின்

ஒரு அமினோ அமிலத்திற்கான கோடான் அல்லது மரபுக்குறியன் முடிவு (அ) நிறுத்துக்குறியனாக மாற்றமடையும் சடுதிமாற்றம் தவறுதலாகப் பொருள்| படும் (அ) ஒத்திலாச் சடுதி மாற்றம் என்று பெயர்.

Eg. TTA → AAT

நிறுத்தக்குறியன் UAA

17.

  • மரபணு அமைவிடத்தில் மாறுபாடு ஏற்படுகிறது.
  • இதில் இரட்டிப்பான துண்டு – இயல்பு பகுதிக்கு அருகில் ஆனால் மரபணு வரிசை மாறிக் காணப்படுகிறது. சென்டிரோமியர் இந்தப்பகுதியில் வராததால் இது (பாராசென்டிரிக் தலைகீழ் திருப்பம்) (அ) தலைகீழ் தொடர்ந்திணைந்த இரட்டிப்பாதல் எனப்படும்

18. சட்டன் மற்றும் பொவேரி கோட்பாட்டின் சிறப்பு அம்சங்களை எழுதுக.

  • சைகோட் (அ) கருமுட்டை தொடர்ச்சியான செல் பகுப்பின் மூலம் ஒரு உயிரினத்தின் உடலம் உருவாகிறது.
  • உடல்செல்கள் – இதில் இரண்டு ஒத்த குரோமோ சோம் தொகுதிகளைக் கொண்டுள்ளது (தந்தை வழி ஒன்று மற்றொன்று தாய்வழி ஒன்று) இதற்கு ஒத்திசைவு குரோமோசோம்கள் என்று பெயர்.
  • ஒவ்வொரு குரோமோசோமும் தனித்துவமான அமைப்பு மற்றும் தனித்தன்மை உடையது.
  • ஒவ்வொரு குரோமோசோமும் மரபணுக்களால் ஆனவை.
  • கேமீட்டுகளின் உருவாக்கத்தின் போது ஒத்திசை வான குரோமோசோம்கள் தனித்தனியாக பிரிவது மரபணுக்கள் குரோமோசோம்கள் மீது காணப் படுகிறது என்ற உண்மையை உறுதிப்படுத்து கிறது.

19. குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.

குறுக்கேற்றம்:
  • ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோடிட்களுக்கிடையே இணையான துண்டுகள் பரிமாற்றப்பட்டு புதிய மரபணு சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்கு குறுக்கேற்றம் என்று பெயர். இதில் பல நிலைகளை உடையது.
  • இணை சேர்தல்
  • நான்கமை உருவாதல்
  • குறுக்கேற்றம் மற்றும் முடிவுறுதல்
i) இணை சேர்தல்
  • புரோபேஸ் 1 இன் சைகோட்டின் நிலையில் இரண்டு ஒத்திசைவு குரோமோசோம்களுக் கிடையே நெருங்கிய இணை உருவாகிறது. இது இரட்டை இணை (அ) பைவாலண்ட், இது இணைசேர்தல் (அ) சின்டெசிஸ் என்று பெயர் இணைதல் தொடங்குவதைப் பொருத்து 3 வகைப்படும்.
  • மையம் தொடங்கி இணை சேர்தல்
  • நுனி தொடங்கி இணைசேர்தல்
  • இயையிலா இணை சேர்தல்
ii) நான்கமை உருவாதல் :
  • இரட்டை இணையில் – இரண்டு ஒத்த அமைப்பு உடைய சகோதரி குரோமோட்டிட்களை உருவாக தொடங்குகிறது – இதில் நான்கு குரோமோட்டிகு களைப் பெற்றிருக்கிறது – நான்கமை நிலை என்று பெயர்.
iii) குறுக்கேற்றம்:

12th Botany Lesson 3 Book Back Answers STUDENTS GUIDE 360

குறுக்கேற்றத்தின் செயல்முறை

  • பாக்கிடீன் நிலையில் குறுக்கேற்றம் நிகழ்கிறது – ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமோடிட்டுகளுக்கிடையே இணைவுப் புள்ளிகள் (கயாஸ்மாக்கள்) – எனும் (x) வடிவ அமைப்பு உருவாகிறது. இவற்றில் குரோமோடிட்டுகள் உடைந்து துண்டுகள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
  • அண்மைக்கால ஆய்வு : மேம்படுத்தப்பட்ட இழை அமைப்பு கொண்ட இணை பிணைப்புக் கூட்டமைப்பு – இணைசேர்தல் (அ) கயாஸ்மா தோன்றலுக்கு வழி வகுக்கிறது. (விதி விலக்கு – சில ஆண் டுரோசோஃபிலாவில் இணைப் பிணைப்புக் கூட்டமைப்பு உருவாவதில்லை)
iv) முடிவுறுதல் :
  • குறுக்கேற்றத்தின் பின் கயாஸ்மாவானது குரோ மாடிட்களின் நுனிப்பகுதியை நோக்கி நகர்கிறது. இது முடிவுறுதல் எனப்படுகிறது. ஒத்திசைவு குரோமோசோம்கள் முழுமையாகப் பிரிகிறது.

20. மூலக்கூறு அடிப்படையிலான dna மறுக் கூட்டிணைவு செயல்முறையில் பங்குபெறும் படிநிலைகளைப் படத்துடன் எழுதுக.

  • அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுக்கேற் றத்தின்போது உருவாகும் dna மறு கூட்டிணைவு மாதிரி ஹாலிடேவின் கலப்பு மாதிரியாகும்.
  • 1964ல் ராபின் ஹாலிடே என்பவரால் முன் மொழியப்பட்டது.
படிநிலைகள் :
  • ஒத்திசைவு DNA மூலக்கூறுகள் அதன் இரட்டிப் படைந்த DNA பிரதிகளுடன் அருகமைந்து இணை சேர்கிறது.
  • DNAவின் ஒரு இழை எண்டோநியூக்ளியஸ் நொதி மூலம் துண்டிக்கப்படுகிறது.
  • துண்டான இழைகள் குறுக்கமைந்து ஒத்திசைந்த இழையுடன் இணைந்து ஹாலிடே சந்திப்பு உருவாகிறது.
  • இது தோன்றிய இடத்திலிருந்து இடம் பெயர்கிறது இது கிளை இடப்பெயர்வு – எனப்படுகிறது.
  • வேற்றமைந்த ஈரிழைப்பகுதி உருவாகிறது.
  • DNA இழைகள் துண்டிக்கப்படுதல் V வழியாக கிடைமட்ட மாதிரி (H வழியாக) செங்குத்தான துண்டிப்பு நிகழ்ந்தால் மறுகூட்டிணைவு கூடிய வேற்றமைந்த ஈரிழை உருவாகும். கிடைமட்டத்துண்டிப்பு – நிகழ்ந்தால் மறு கூட்டிணைவு அற்ற வேற்றமைந்த ஈரிழை உருவாகும்.

21. நிக்கோட்டியானா தாவரம் சுயப்பொருந்தாத் தன்மையை எவ்வாறு வெளிப்படுத்துகிறது? அதன் செயல்முறையை விளக்குக.

  • நிக்கோட்டியானா -தன் மலடாதல் (அ) சுயப்பொருந்தாத் தன்மைக்கு பல்கூட்டு அல்லீல்கள் காரணமாக உள்ளன.
  • தன்மலடாதல் ஒரு தாவரத்தின் மகரந்ததுகள் அதே தாவரத்தின் சூலக முடியில் முளைக்க இயலாத தன்மையினால் கருவுறுதல் நடை பெறாது.
  • ஈஸ்ட் என்பவர் பல்கூட்டு அல்லீல்களைக் கண்டறிந்தார்.
  • சுய பொருந்தாத்தன்மை பண்புகளுக்கான மரபணுக்கள் – S1, S2, S3, S4 எனக் கொள்வோம்.
  • அயல் கருவுருதல் மூலம் உருவாகும் புகையிலை தாவரங்கள் S1, S2 (அ) S2, S2 போன்ற ஒத்த பண்பு கொண்டவைகளாக இருப்பதில்லை வேறு பட்டவைகளாக காணப்படும்.
  • வேறுபட்ட S1, S2 தாவரங்களுக்கிடையே கலப்பு செய்யப்பட்டால் மகரந்தக்குழாய் இயல்பாக வளர்வதில்லை. ஆனால் S1, S2வைத் தவிர S3, s4 தாவரங்களைக் கலப்பு செய்தால் அவை வளர்கிறது செங்குத்தான துண்டிப்பு.

பெண் பெற்றோர்
(சூலகமுடி பகுதி)

ஆண் பெற்றோர் (மகரந்த மூலம்)

ஆண் பெற்றோர் (மகரந்த மூலம்)

ஆண் பெற்றோர் (மகரந்த மூலம்)

S1S2

S2S3

S3S4

S1S2

தன்மலடு

S3S2

S3S1

S3S1

S3S2

S4S1

S4S2

S2S3

S1S2

S1S3

தன்மலடு

S3S4

S1S3

S1S4

S2S3

S2S4

S2S3

S2S4

தன்மலடு

22. ஒருபால மலர்த்தாவரங்களில் பால் நிர்ணயம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது? அதில் பங்கு பெறும் மரபணுக்களை எழுதுக.

மக்காச்சோளம்:
  • ஒரு பால் மலர் தாவரம் ஆண் மற்றும் பெண் மலர்கள் ஒரே தாவரத்தில் காணப்படுகின்றன – இரு தனித்தனி மஞ்சரிகளாகக் காணப்படுகிறது.
  • நுனி மஞ்சரி – மகரந்தத்தாள்களை மட்டும் பெற்ற சிறுமலர்கள் டாசல் (அ) கதிர் குஞ்சம் எனப்படும்.
  • கோண மஞ்சரி – சூலகம் மட்டும் பெற்ற சிறு மலர்கள் கதிர். இவை இருபால் மலர்களில் மகரந்தத்தாள்வட்டம் மற்றும் சூலகம் இவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிதைதல் மூலம் ஆணாக (அ) பெண் மலர்களாகிறது.
கருவுறாத்தாவரம் – மரபணு – (ba)
  • ஒத்த பண்பிணைவு கொண்ட நிலையில் – பட்டிழை (அ) கதிர் மஞ்சரியை நீக்கி – ஆண் மலர் மட்டும் கொண்டதாக மாறுகிறது.
  • டாசல் விதைக்கான அல்லீல் (ts) ஒத்த பண் பிணைவு நிலையில் டாசலை மகரந்தம் அற்ற பெண் மலராக மாற்றுகிறது.
  • இந்த பெரும்பான்மையான சடுதி மாற்றங்கள் ஜிப்ரெலின் உற்பத்தி குறைபாட்டினால் ஏற்படுகின்றன. கதிர்களில் காணப்படும் மகரந்தத்தாள் ஒடுக்கத்திற்கு ஜிப்ரெலின்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

12th Botany Lesson 3 Book Back Answers STUDENTS GUIDE 360

23. மரபணு வரைபடம் என்றால் என்ன? இதன் பயன்களை எழுதுக. (PTA – 6) மார்ச் 2020

  • குரோமோசோம்களில் மரபணுக்கள் ஒரே சீரான நேர்கோட்டில் அமைந்துள்ளன – இது அமை விடம் எனப்படும்
  • மரபணு அமைவிடம். அருகே உள்ள மரபணுக் களுக்கு இடையேயுள்ள தொலைவு வற்றைக் குறிப்பது.
  • மரபணு வரைபடம் (பிணைப்பு வரைபடம்) இந்தக் கருத்தாக்கம் ஆல்பிரட் H.ஸ்டர்டீவண்ட் 1913இல் உருவாக்கப்பட்டது.
பயன்கள் :
  • மரபணுக்களின் வரிசை அமைவிடம் அடை யாளம் காணவும் அவற்றிற்கிடையேயான தூரம் ஆகியவற்றை அறிய முடிகிறது.
  • இரு இருபண்பு மற்றும் மூன்று பண்பு கலப்பு களின் முடிவுகளை கணிக்க பயன்படுகிறது.
  • ஒரு உயிரினத்தின் சிக்கலான மரபணு தன்மை யினை அறிய முடிகிறது.

24. மெய்யிலாமடியத்தின் வகைகளை படம் வரைக.

12th Botany Lesson 3 Book Back Answers STUDENTS GUIDE 360

25. மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது? (PTA – 1)

  • மனிதனால் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தானியம் ட்ரிட்டிகேல் அறுமய ட்ரிட்டிகேல் மக்ரோனி கோதுமை மற்றும் ரை – தாவரப் பண்பு களைக் கொண்டிருக்கும் (கோதுமையின் புரதத் தன்மையும் + ரை தாவரத்தின் அதிக அமினோ அமில லைசினையும் பெற்றுள்ளது. ட்ரிட்டிகேல் மூன்று வகைப்படும். அவை
நான்மடியம் :
  • இருமடிய கோதுமை மற்றும் ரை தாவரங்களுக்கிடையான கலப்பு செய்தல்.
அறுமடியம்:
  • நான்மடிய கோதுமை ட்ரிடிகம் டியூரம் (மக்ரோனி கோதுமை) மற்றும் ரை தாவரங்களுக்கு இடையேயான கலப்பு செய்தல்.
எண்மடியம்:
  • அறுமடிய கோதுமை ட்ரிடிகம் ஏஸ்டிவம் (தொட்டி கோதுமை) மற்றும் ரை தாவரங்களுக்கு இடையேயான கலப்பு செய்தல்.

மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

Leave a Reply