You are currently viewing 12th Botany Lesson 2 Additional 5 marks

12th Botany Lesson 2 Additional 5 marks

12th Botany Lesson 2 Additional 5 marks Tamil Medium

12th Botany Unit 7 Lesson 2 Additional 5 mark Question with answers in Tamil Medium. Tamil Nadu Samacheer kalvi guide Book Back and additional question and answer. Student Guide 360. HSC Second-year பாரம்பரிய மரபியல்.  TN 12th Botany Unit 7 Book Back Full Answer key. 12th Standard Bio Botany Lesson 2 Unit 7 Additional 5 Mark Question and Answer key in Tamil Medium.

பாரம்பரிய மரபியல் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Bio Botany Unit 7 Lesson 2 Additional 5 marks

12th Botany Lesson 2 Additional 5 marks

1. பல் பண்புக்கூறு (Pleotropy) மற்றும் பல் காரணியப் பாரம்பரியம் வேறுபடுத்துக.

பல்பண்புக் கூறு

பல்காரணியப் பாரம்பரியம்

  • ஒரு மரபணு பல பண்புகளை ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி உயிரினத்தின் புறத்தோற்றப் பண்புகளைத் தீர்மானிக்கிறது.

    எ.கா. பட்டாணியின் ஊதா மலர்கள், பழுப்பு விதைகள் இலை அச்சுகளில் அடர் புள்ளிகள் கொண்ட பண்புகளை உடைய தாவரத்தை, வெள்ளை மலர்கள், வெளிறிய நிறமுடைய விதைகள், புள்ளிகளற்ற விதைகள் கொண்ட தாவரத்துடன் கலப்புறச் செய்த போது இம்மூன்று பண்புகளும் ஒற்றை மரபணுவில் கட்டுப்படுத்தப் படுவதை மெண்டல் கண்டறிந்தார்.

  • ஓர் உயிரினத்தின் பல மரபணுக்கள் ஒன்று சேர்ந்து ஒரு பண்பைத் தீர்மானிப்பது பல் மரபணு பாரம்பரியம் எனப்படும். கோதுமையின் விதை யுறை நிறம் 4 ஓங்குதன்மை மரபணுக்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

  • 4 - R மரபணுக்கள் மிகுந்த அடர்சிவப்பு நிறம்

  • 3 - R மரபணுக்கள் மிதமான அடர்சிவப்பு நிறம்

  • 2 - R மரபணுக்கள் சிவப்பு நிறம்

  • 1-R மரபணு சிவப்பு நிறம் -4

  • ஒடுங்கு மரபணுக்கள் வெள்ளை நிறம்

    பிற எடுத்துக்கட்டுகள் மனிதன் உயரம் மனிதனின் நிறம் போன்றவை.

2. ஒரு பண்புக் கலப்பு – பரிமாற்ற கலப்பு வேறுபடுத்துக.

ஒரு பண்புக் கலப்பு

பரிமாற்ற கலப்பு

ஒரு புறத்தன்மை (அ) இரு புறத்தன்மையுடையது.

இது இருபுறத் தன்மையுடையது. முதல் கலப்பில்

பெண் X ஆண் எனக் கருதப்படுபவை அடுத்த கலப்பில் மாறிக் காணப்படுவதாகும்.

ஒரு பண்பு கலப்பு பாரம்பரியத்தை விளக்குகிறது.

ஒன்று (அ) அதற்கும் மேற்பட்டப் பண்புகளின் பாரம்பரியத்தை அறிய இயல்கிறது.

இதில் உட்கரு சார் சைட்டோபிளாசம் சார் மற்றும் பால் குரோமோசோம் ஆட்டோசோம் சார் பாரம்பரியத்தையும் வேறுபடுத்த இயலாது.

இதனால் உட்கருசார் மற்றும் சைட்டோபிளாசம் சார், பால் குரோமோசோம் மற்றும் ஆட்டோசோம் சார் பாரம்பரியங்களை வேறுபடுத்தி அரிய இயலும்.

3. ஒரு பண்புக் கலப்பு & இரு பண்புக் கலப்பு ஒப்புமை செய்க.

ஒரு பண்புக் கலப்பு

இருபண்புக் கலப்பு

1. ஒரு பண்பில் வேறுபடும் இது தூய கால் வழி பெற்றோரிடம் செய்யப்படும் கலப்பு.

இரு எதிரிடைப் பண்புகளைப் பெற்ற தூய கால் வழி பெற்றோரிடையே செய்யப்படும் கலப்பு

2. இதன் புறத்தோற்ற விகிதம் 3:1

இதன் புறத்தோற்ற விகிதம் 9:3:3:1

3. இதன் மரபணுவாக்க விகிதம் 1:2:1

இதன் மரபணுவாக்க விகிதம் 1:2:1:2:4:2:1:2:1

4. எ.கா TTx tt

RRYYX rryy

4. மெண்டலின் ஒருபண்புக் கலப்பை விவரி.

  • ஒற்றை பண்பில் வேறுபடும் இது தூய கால்வழி பெற்றோரிடம் செய்யப்படும் கலப்பின் பாரம்பரியமாகும்.
  • முதல் மகவுச்சந்ததியின் தற்கலப்பில் உருவான இரண்டாம் மகவுச்சந்ததி 1064 தாவரங்களில் 787 – நெட்டை 277 குட்டை தாவரங்களைக் கொண்டு 3:1 விகிதம் காணப்பட்டது.

12th Bio Botany Unit 7 Lesson 2 Additional 5 marks

 

5. மெண்டலின் இருபண்புக் கலப்பை விவரி.

  • இரண்டு ஜோடி எதிரிடைப் பண்புகளுக்கிடையே செய்யப்படும் கலப்பு இருபண்புக் கலப்பு
ஓங்கிய பண்பு
  • உருண்டை வடிவ விதை (R)
  • மஞ்சள் நிற விதையிலை (Y)
ஒடுங்கிய பண்பு
  • சுருங்கிய வடிவம் விதை (r)
  • பச்சை நிற விதையிலை (y)

12th Bio Botany Unit 7 Lesson 2 Additional 5 marks

6. மூன்று பண்பு கலப்பை விவரி.

  • மூன்று எதிரிடை பண்புகளுக்கான மரபணு இணைகளைக் கொண்ட இது தூய கால் வழி தாவரங்களுக்கிடையே செய்யப்படும் கலப்பு

12th Botany Lesson 2 Additional 5 marks

7. முழுமையற்ற ஓங்குதன்மை என்றால் என்ன? எ.கா தருக. (PTA -1) (அல்லது) அந்திமந்தாரையின் மலரின் நிறத்திற்கான மரபணு இடைச்செயல் யாது?

  • சிவப்பு மலர்களையுடைய அந்திமந்தாரை (மிராபிலிஸ் ஜலாபா) தாவரத்தை வெள்ளை மலர் களை உடைய தூய தாவரத்துடன் கலப்பு செய்த போது F1 சந்ததியில் இளம் சிவப்பு மலர்கள் பெற்ற கலப்புயிரி தாவரம் உருவானது. இது இரு பெற்றோர்களிலிருந்தும் வேறுபட்டிருந்தது. இடைப்பட்ட பாரம்பரியமான இளஞ்சிவப்பு நிறம் தோன்றியது.
  • எனவே யாதொரு ஓங்கு அல்லீல்லும் பிரிதொரு
  • ஓங்கு அல்லீலைக் கட்டுப்படுத்தவில்லை. இருவகை அல்லீல்களும் கூட்டாகச் செயல்பட்டு இடைப்பட்ட நிறமான இளஞ்சிவப்பு நிறத்தை வெளிப்படுத்துகிறது.
  • இவ்வகை அல்லீல்களுக்கிடையேயான இடை யீட்டுச் செயலுக்கு முழுமையற்ற ஓங்குதன்மை என்று பெயர்.
  • முதல் மகவுச்சந்ததி F1 தாவரங்களை உட்கலப்பு செய்தால் இரண்டாம் மகவுச்சந்ததியில் F2 புறத்தோற்ற மற்றும் மரபணுவாக்க விகிதங்கள் முறையே
  • Fz புறத்தோற்ற விகிதம்

12th Bio Botany Unit 7 Lesson 2 Additional 5 marks

8. மரபியலில் பல்வேறு துணைப்பிரிவுகள் யாவை?

  • W பேட்சன் (1906 இல் ஜெனிடிக்ஸ் (மரபியல்) என்ற சொல்லை உருவாக்கினார். அதன் பிரிவு களாவன
1. ஊடுகடத்தல் மரபியல் (அ) பாரம்பரிய மரபியல்:
  • இதில் மரபணுக்கள் எவ்வாறு பெற்றோர்களிடம் இருந்து சந்ததிகளுக்குக் கடத்தப்படுகின்றன. பிரிவாகும். என்பதை விளக்கும்
2. மூலக்கூறு மரபியல்:
  • மரபணுக்கள் புற அமைப்பு மற்றும் உயிர்ச் செயல் களை எவ்வாறு மூலக்கூறு நிலையில் மேற் கொள்கிறது என்பதை விளக்கும் பிரிவாகும்.
3. உயிரித்தொகை மரபியல் :
  • தனி உயிரிகளின் தொகுப்பில் தனிப்பட்ட பண்புக்கூறு எவ்வாறு குறிப்பிட்ட மரபணுக் களால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை விளக்கும் பிரிவு.

9. மனிதனில் காணப்படும் பிளியோஃடிராபி மரபியல் பிறழ்ச்சிகள் யாவை?

  • அதீதமான உயரம்
  • மெல்லிய கை விரல்கள் கால் விரல்கள் கண்ணின் லென்சின் இடப்பெயர்ச்சி
  • இதயநோய் (மகாதமனி – வீங்கி – வெடித்தல்) போன்றவை.

10. மறைத்தலின் இரு வகைகள் யாவை?

  1. ஓங்கு மறைத்தல் : எ.கா. கோடை பூசணியின் கனி
  2. நிறம் ஓடுங்கு மறைத்தல் : எ.கா. ஆன்டிரைனம் சிற்றின மலரின் நிறம்
ஓங்கு மறைத்தல் வரையறை:
  • அல்லீல்லாது மரபணுக்களுக்கிடையே நடைபெறும் மரபணுக்களின் கூட்டு செயல் – இரு மரபணுக்கள் ஒரு மரபணு ஓங்கு தன்மையுடன் மற்றொரு மரபணுவின் வெளிப்பாட்டை மறைக்கிறது.
ஓடுங்கு பண்பு மறைத்தல் :
  • ஒரு மரபணுவின் ஒடுங்கு அல்லீல் ஒத்த காரணி நிலையில் மற்றொரு மரபணுவின் ஒரு ஓங்கு அல்லீலின் வெளிப்பாட்டை மறைக்கிறது.

11. ஓங்கு மரபணு மறைத்தலை விவரி. PTA – 4

ஓங்கு மரபணு மறைத்தல் 12: 3:1

  • இவ்வகை இடைச்செயலை, சின்னட் என்பவர் வெள்ளரி (குக்கர்பிட்டாபெப்போ) செடியில் கண்டாராய்ந்தார். குக்கர் பிட்டாபெப்போவில் பொதுவாக வெள்ளை, மஞ்சள், பச்சை என்ற மூன்று நிறக்கனிகள் உள்ளன. W என்ற ஓங்கு மரபணு வெள்ளை நிறக்கனிகள் தோன்றக் காரணமாக உள்ளது. Y என்ற ஓங்கு மரபணு மஞ்சள் நிறக் கனிகளை உருவாக்கும். இரண்டு மரபணுக்களும் ஒடுங்கு நிலையில் இருந்தால்
    பச்சை நிறக்கனிகள் தோன்றுகின்றன. ஓங்கு ஜீன் Y யின் விளைவை W என்ற ஓங்கு மரபணு மறைக்கிறது. W என்ற ஓங்கு ஜீன் மறைக்கும் மரபணுவாக இருப்பதால், இதற்கு ஓங்கு மரபணு மறைத்தல் என்று பெயர்.

  • தூய இன வெள்ளைக்கனிகள் கொண்ட தாவரம், இரட்டை ஒடுங்கு மரபணு கொண்ட பச்சை கனிகள் உடைய தாவரத்தோடு கலவி செய்யும் போது, சந்ததியில் தோன்றிய கலப்புயிரிகள் அனைத்தும் வெள்ளைக் கனியுடையவை F1 கலப்புயிரி தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்திய போது வெள்ளை, மஞ்சள் மற்றும் பச்சை கனியுடைய தாவரங்கள் முறையே 12: 3:1 என்ற விகிதத்தில் தோன்றின.

12. ஒடுங்கு மரபணு மறைத்தலை விவரி.

ஓடுங்கு மரபணு மறைத்தல் 9: 3:1

  • சொர்கம் (சோளம்) தாவரத்தில் ஓங்கு மரபணு (P) ஊதா நிறத்திற்கு காரணமாக உள்ளது. இது பழுப்பு நிறத்தின் (q) மீது ஓங்கு பண்பாக உள்ளது.
  • P மற்றும் Q ஆகிய இரண்டு ஓங்கு மரபணுக்களும் கலப்பற்ற நிலையிலோ கலப்புற்ற நிலையிலோ ஒன்றாக கொண்டு வரப்படும் போது, ஊதா நிறம் சிவப்பு நிறமாக மாறும்.

  • ஊதா நிறம் (Ppqq) மற்றும் பழுப்பு நிறம் (pPQQ) கொண்ட தாவரங்களின் கலவியில் F1 கலப்புயிரிகள் சிவப்பு நிறமுடையவையாக காணப்படுகின்றன. F1 கலப்புயிரிகளை தன் கலப்பு செய்யும் போது மூன்று வித புறத்தோற்றங்களும் 9: 3: 4 என்ற விகிதத்தில் தோன்றும் (9 சிவப்பு 3 ஊதா 4 பழுப்பு) ஆகவே இந்த எடுத்துக்காட்டில் “p” ஜீன் மற்ற நிற மரபணுக்களுக்கு மறைக்கும் காரணியாக உள்ளது. சொர்கம் தாவரம் pp ஆக இருந்தால் மற்ற ஜீனாக்கங்கள் இருந்தாலும், பழுப்பு நிறம் கொண்டுள்ளது. நிற மரபணுக்களின் வெளிப்பாடு pp இருந்தால் மறைக்கப்படுகிறது.

13. இரட்டிப்பு மரபணுக்களுடன் கூட்டு விளைவு வினை விவரி.

  • இரு மரபணு அல்லீல்களும் ஒத்த காரணி ஒடுங்கு அல்லீல்களைக் கொண்டிருப்பதால் இவ்விரண்டும் ஒரே விதமான புறத்தோற்றத்தை F சந்ததியில் உருவாக்குவதால் மெண்டலின் 9: 3:3:1 என்ற விகிதம் 9 : 7 ஆக மாறுகிறது. மரபணுவாக்கம் – aaBB, aaBb, Aabb, Aabb and aabb ஆகியவை ஒரே புறத்தோற்றத்தை உருவாக்குகின்றன. ஓங்கு அல்லீல்கள் சேர்ந்து
நிகரொத்த இரட்டை ஓடுங்கு மரபணு மறைத்தல் :
  • இவ்வகை பாரம்பரியம், நிரப்பு மரபணு இடைச்செயல் எனவும் அழைக்கப்படும். பேட்சன் மற்றும் பன்னட் ஆகிய அறிஞர்கள் லத்தைரஸ் ஓடரேட்டஸ் (இனிப்பு பட்டாணி) பெற்றோர் Ccpp × ccPP → CcPp கலப்
Fதற்கருவுருதல் Ccpp × CcPP

F2

CP

Cp

cp

cP

CP

ССРР ஊதா

CCPp ஊதா

CcPP ஊதா

CcPp ஊதா

Cp

ССРp ஊதா

Ccpp வெள்ளை

ccPp ஊதா

Ccpp ஊதா

cp

CcPP ஊதா

CcPp ஊதா

ccPp வெள்ளை

ccPp வெள்ளை

cP

CcPp ஊதா

Ccpp வெள்ளை

ccPp வெள்ளை

ccpp வெள்ளை

  • தாவரத்தில் கண்டார்கள். மலரின் நிறத்தின் பாரம்பரியம் ஆய்வு செய்யப்பட்டது.
  • இரு தூய வெள்ளை மலருடைய இனிப்பு பட்டாணித் தாவரங்களை கலவி செய்யும்போது F1 கலப்புயிரிகள் அனைத்தும் ஊதா மலர்கள் கொண்டிருந்தன. F1 கலப்புயிரிகளை தன் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்திய போது F2 சந்ததியில் ஊதா மற்றும் வெள்ளை நிற மலர்கள் கொண்ட தாவரங்கள் முறையே 9:7 என்ற விகிதத்தில் தோன்றின.
விளக்கம் :
  • இங்கு C மற்றும் P என்னும் இரண்டு ஓங்கு மரபணுக்கள் இடைச்செயல் புரிந்து ஊதா நிறத்தை உண்டாக்கும். இவற்றில் ஏதாவது ஒரு மரபணு ஒடுங்கு நிலையில் இருந்தால், நிறம் உண்டாவதில்லை. எனவே, இரண்டு மரபணுக்களும் ஒடுங்கு நிலையில் நிறம் உண்டாவதை தடை செய்வதால் இது நிகரொத்த இரட்டை ஒடுங்கு மரபணு மறைத்தல் என அழைக்கப்படும்.
F2 புறத்தோற்ற விகிதம்

ஊதா

வெள்ளை

9

:

7

14. சொர்கம் வல்கர் தாவரத்தின் ஆண் மலட்டுத் தன்மைக்கு காரணமான பாரம்பரியம் பற்றி விரிவாக எழுதுக.

  • எ.கா. முத்துச்சோளத்தில் (சொர்கம் வல்கர்) ஆண் மலட்டுத்தன்மை காணப்படுகிறது.
  • முத்துச்சோளத்தில் ஆண் மலட்டுத்தன்மைக்கு மைட்டோகாண்டிரியா பாரம்பரியம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
  • தாயின் வழியாகப் பண்பு பாரம்பரியமடைகிறது. இதற்கு காரணம் மரபணு மைட்டோகாண்ட்ரியங்களில் DNA காணப்படுவதே ஆகும்.
  • இரண்டு வகைப்படும். ஒன்று இயல்பான சைட்டோபிளாசம் பெற்ற (N) வளமான ஆண் தாவரம், மற்றொன்று இயல்பற்ற சைட்டோ பிளாசம் பெற்ற (S) மலட்டு ஆண் தாவரம். அந்திமந்தாரை தாவரத்தைப் போல் மேற்குறிப்பிட்ட பாரம்பரியத்திலும் பரிமாற்றக்கலப்பு மாறுபாட்டை வெளிப்படுத்துகிறது.
  • தற்காலத்தில் ஆண் மலட்டுத்தன்மைக்கான சைட்டோபிளாச மரபுவழிப் பல தாவரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
  • ஆண் மலட்டுத்தன்மை உட்கரு மற்றும் சைட்டோபிளாச மரபணுக்களின் செயல்பாடாக தீர்மானிக்கப் படுகிறது.
  • இரண்டு வகை சைட்டோபிளாசங்கள் காணப்படுகின்றன. அவை N (இயல்பு) S (மலட்டு) ஆகும்.
  • இதனுடன் வளத்தன்ைைய மீட்டெடுக்கும்
  • (Rf) மரபணுக்களும் உட்கருவில் காணப்படுகின்றன. உட்கரு அமைந்த மரபணு இருந்தபோதிலும் தனக்கென தனியாக அமைந்த பண்பு எதையும். வெளிப்படுத்தவில்லை.
  • Rf மரபணுக்கள் வளத்தன்மையை மீட்டெடுக்கும் தன்மை கொண்டது.
  • ஆனால் மலட்டு சைட்டோபிளாசம் (S) எப்போதும் ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணமாக உள்ளது.
  • இயல்பு (N) மற்றும் மலட்டும் (S) சைட்டோபிளாச முறையே frf மற்றும் RiRf என்ற மரபணு ஆக்கத்தை உட்கருவில் பெற்ற தாவரங்கள் வளமான மகரந்தத்தை உற்பத்தி செய்தாலும்.
  • மலட்டு (s) சைட்டோபிளாச வலையை, rfrf என்ற மரபணு ஆக்கத்துடன் பெற்ற தாவரம் ஆண் மலட்டு தாவரங்களாகவே உள்ளது.

Leave a Reply