12th Botany Unit 10 Lesson 10 Additional 2 Marks

12th Botany Unit 10 Lesson 10 Additional 2 Marks

TN 12th Bio-Botany Unit 10, 10th lesson Additional 2 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.

12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 10. பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் – Additional 2 Marks Question – Answers 

பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1.புல்வகை உணவுத் தாவரங்கள் எவை? 
 1. அரிசி,
 2. கோதுமை,
 3. சோளம்
2. தானியங்களினின்று கிடைக்கும் ஊட்டசத்துக்கள் எவை?
 1. கார்போஹைடிரேட்,
 2. புரதம்,
 3. நார்கள்,
 4. வைட்டமின்கள்,
3. அளவின் அடிப்படையில் தானியங்களின் 2 வகைகள் கூறு? 
1) பெருந்தானியங்கள் (நெல், கோதுமை
2) சிறுதானியங்கள் (தினை, சோளம்)
4. மைதா – குறிப்பு வரைக?
 • பதப்படுத்தப்பட்ட, நார்ச்சத்தற்ற கோதுமை மாவு மைதா எனப்படும். பரோட்டா, ரொட்டி போன்ற அடுமனைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும்.
5. அரிசியிலிருந்து உருவாக்கப்படும் இதர பொருட்கள் யாவை? 
 • அவல், பொரி போன்றவை காலை உணவாக, சிற்றுண்டியாக பயன்படும். தவிட்டிலிருந்து பெறப்படும் தவிட்டு எண்ணை சமையலிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படும்.
6.சிறுதானியங்கள் என்றால் என்ன? அவற்றின் சிறப்பு என்ன? 
 • ஆப்பிரிக்கா, ஆசியாவில், பழங்கால மக்களால், முதலில் பயிரடப்பட்ட சிறிய விதைகள், இவை தரச புரச பசையற்ற (குளூட்டன்). குறைவான சர்க்கரை அளவுக் குறியீட்டைக் கொண்ட தானிய வகைகள்,
7.கேழ்வரகின் பயன்கள் கூறு?
 • கால்சியம் நிறைந்தது.
 • இந்திய தெற்கு மலைப்பகுதிகளில் முக்கிய உணவு.
 • கஞ்சியாகவோ, கூழாகவோ உண்ணப்படும்.
 • ராகி மால்ட் ஊட்டசத்து பானம்.
 • நொதி பான தயாரிப்பில் பயன்படும்.
8. சோளத்தின் பயன்கள் கூறு?
 • கோழி, பறவை, பன்றி, கால்நடை தீவனம்
 • நொதி, சாராய பான மூலப்பொருள்.

9.தினையின் மருத்துவ பயன்கள் கூறு?

 • இதயத்தை பலப்படுத்தும்
 • கண் பார்வை மேம்படுத்தும்
 • தினைக்கஞ்சி பாலூட்டும் அன்னையர்க்கு நல்லது.
10. வரகு மருத்துவ பயன் நிறைந்தது – விளக்கு?
 • மாவாக அரைக்கப்பட்டு களியாக்கப்படும்
 • சிறுநீர் பெருக்கி மலச்சிக்கலை குணமாக்கும்.
 • உடல் பருமனைக் குறைக்கும்.
 • இரத்தச் சர்க்கரை, இரத்த அழுத்ததைக் குறைக்கும்.
11. தென்னிந்தியாவில் தோன்றிய ஒரே பருப்பு வகை எது? பயன்கள் கூறு?
துவரை (சுஜானஸ் கஜன்) 
 • தென்னிந்தியாவின் சாம்பாரின் முக்கிய அங்கம்
 • வறுத்து, உப்பிட்ட, உப்பிடாத நொறுக்குத் தீனி
 • இளம் காய்களைச் சமைத்து உண்ணலாம்.
12. காய்கறியின் ஊட்டச் சத்துக்கள் எவை?
 • பொட்டாசியம், நார்ச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் A,E,C

13. எந்த பருப்பு வகை இந்தியாவில் தோன்றியதற்கான தொல்லியல் சான்று உள்ளது? அதன் பயன்கள் கூறு? 

பாசிப் பயறு (விக்னா ரேடியேட்டா)
 • வறுத்து, சமைத்து, முளைக்க வைத்து உண்ணலாம்.
 • காலை உணவான பொங்கலின் முக்கிய பொருள்.
 • வறுத்த, உடைத்த முழுப்பயிறு பிரபல சிற்றுண்டி..
 • இதன் மாவு தோல பராமரிப்பு ஒப்பனைப் பொருள்.
14. தமிழகத்தில் வெண்டைக்காய் விளையுமிடங்கள் கூறு?
 1. கோயம்புத்தூர்,
 2. தர்மபுரி,
 3. வேலூர்,
15. வளரும் தட்பவெப்பம் இடத்தைப் பொறுத்து பழங்களின் வகைகள் கூறு?
 • குளிர் மண்டலப் பழங்கள் (ஆப்பிள், பேரிக்காய், ஊட்டி, ஆப்பிள்)
 • வெப்ப மண்டலப் பழங்கள் (மா, பலா, வாழை)

16.இந்தியாவின் தேசியப் பழம் எது? அதன் தோற்றம் மற்றும் விளையுமிடம் எது?

மா (மாஞ்சிபெரா இண்டிகா) தோற்றம், விளையுமிடம்
 • தெற்காசியாவில் பாமா, கிழக்கிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது.
 • ஆந்திரா, கர்நாடகா, குஜராத், பீகார் அதிகம் பயிரிடப்படும் மாநிலங்கள். தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் விளைகிறது.
17. இந்தியாவின் முக்கிய மாம்பழ வகைகள் கூறு? 
 • அல்போன்ஸா,
 • பங்கனப்பள்ளி,
 • நீலம்,
 • மலகோவா
18. எந்த உணவில் அதிக எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் (antioxidants) உள்ளன? 
 • கொட்டைகளின் கடினமான ஒட்டுக்குள் உண்ணக்கூடிய பருப்பைக் கொண்ட எளிய உலர் கனிகள், கொழுப்பு, நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது, எதிர் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன.
19. வணிக முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை எதிலிருந்து தயாரிக்கப்படும்?
 1. கரும்பு,
 2. பனை
20.சர்க்கரை என்றால் என்ன? 
 • உணவு மற்றும் உற்சாகப் பானங்களில் பயன்படும். இனிப்புச் சுவையுடைய, கரையக் கூடிய கார்போஹைட்ரேட் பொதுவான பெயர்.
21. இயற்கையில் சர்க்கரை கார்போஹைட்ரேட்டுகள் எவற்றில் உள்ளது? 
 • கரும்புத் துண்டு,
 • பீட்ருட்,
 • ஆப்பிள்.
22. தற்போது பயிரிடப்படும் கரும்பு வகை எவ்வாறு உருவானது? 
 • நியூகினியாவிலுள்ள காட்டு ரகமான, சக்காரம் ஆஃபிசினாரம் மற்றும் இந்தியாவின் சக்காரம் ஸ்பான்டேனியத்துடன் பல முறை பிற்கலப்பு செய்து உருவானது தற்போதைய கரும்பு. இவ்வாறு அதன் தரம் மேம்பட்டது.
23. கள் குறிப்பு வரைக? 
 • பனையின் பதநீர், புளிக்க வைக்கப்பட்டு கள் பெறப்படுகிறது.
24. எண்ணெய்களின் 2 வகைகள் எவை? 
i)அத்தியாவசியமான எண்ணெய்கள்
நறுமணம் கொண்ட இவை, காற்றுடன் கலக்கும் போது ஆவியாகின்றன. (எ.டு) இஞ்சிலிருந்து வரும் எண்ணெய்,
ii)தாவர எண்ணெய் (நிலைத்த எண்ணெய்) இது ஆவியாவதிலலை. முழுவிதை கருவூண் திசு இதற்கு ஆதாரம்.

12th Botany Unit 10 Lesson 10 Additional 2 Marks

25.அத்தியாவசிய எண்ணெயின் ஆதாரம் என்ன? ஒரு தாவரத்தின் எந்தப் பகுதியும் மூல ஆதாரமாக இருக்கலாம்
 1. பூக்கள் – ரோஜா
 2. கனிகள் – ஆரஞ்சு
 3. தரைகீழ்த் தண்டு – இஞ்சி
26. நிலக்கடலைப் பகுப்பின் ஊட்டப்பொருள்கள் எவை? 
 1. பாஸ்பரஸ்,
 2. வைட்டமின்,
 3. தயாமின்,
 4. ரைபோபிளேவின்,
 5. நியாசின்
27. தென்னிந்தியக் கலாச்சாரத்தில் ஆரோக்கியமான எண்ணெயாக சமையலிலும், மருத்துவத் துறையிலும் குறிப்பிடப்படுவது 
 • எள் எண்ணெய் (நல்லெண்ணெய்)
28.நறுமணப் பொருட்கள் என்றால் என்ன? 
 • துணை உணவுகளாக, உணவு தயாரித்தலில் உணவுக்குச் சுவையூட்டும் நறுமணத் பொருளாக, இனிப்பு. கசப்புச் சுவையடன் உள்ளது. சமையலில் குறைந்த அளவில் சேர்க்கப் தாவரப் படும். (எ.கா) எலக்காய்.
29. சுவையூட்டிகள் யாவை?
 • கூர்மையான சுவை கொண்டவை. சமையல் முடியும் போது சேர்க்கப்படும். (எ.கா) கறி வேப்பிலை.
30. இந்தியாவின் பேரீச்சை எது?
 • டாமரிண்டஸ் என்ற அரேபியச் சொல்,இந்தியாவின் பேரீச்சை (டமர் – பேரீச்சை, இன்டஸ் இந்தியா) என்று பொருள்படும்.

31. THC – யின் இரண்டு பயன்பாடுகளை எழுதுக.

 • ஒரு சிறந்த வலி நிவாரணி
 • உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தாகவும் உள்ளது.
 • கிளாக்கோமா எனப்படும் கண்களில் ஏற்படும். அழுத்தத்திற்குச் சிகிச்சையளிக்க THC பயன் படுத்தப்படுகிறது.
32.தியொபுரொமா என்ற சொல்லின் பொருள் யாது?
 • தியொபுரொமா என்ற சொல் தியொஸ் என்றால் கடவுள், புரொமா என்றால் உணவு.
 • இது கடவுளின் உணவு என்னும் பொருள் தரும்.

Leave a Reply