12th Tamil Important questions

12th Tamil Revision Test Important Questions

112th Tamil Revision Test Important Questions.

12th Tamil Revision Test Important Questions. TN 12th Tamil Important Revision Test Questions. TN Government Announces First and Second Revision Test Time Table and Syllabus. 12th Tamil Important 2 Marks, 4 Marks, 6 Marks. 1st Revision Testy Held on January Click Here to Check 1st Revision Test Time Table and Syllabus. also TN GOV Released the 2nd Revision Time table and syllabus. இப்பகுதியில் நாம் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் முக்கிய குறுவினா, சிறுவினா மற்றும் நெடுவினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 12th Samacheer Kalvi Full Guide. HSC SECOND YEAR Tamil 1st Revision Important Questions. Unit 1-8 Free Online Test.

12th Tamil Important questions

12th Tamil Revision Test Important Questions

12th Tamil Important 2 Marks

 • 1. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
 • 2. நிலையாமை குறித்து சபரி உரைக்கும் கருத்து யாது?
 • 3. ‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ விளக்கம் தருக.
 • 4. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக
 • 5.புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக
 • 6. ஏதேனும் ஒன்றுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக. அ) விளங்கி  ஆ) பொலிந்தான்
 • 7. வல்லின மெய்கள் இட்டும், நீக்கியும் எழுதுக அ) இரட்டைக்கிளவி சொற்களை சேர்த்து எழுத வேண்டும். ஆ) சொல்லுக்கானப் பொருளை நினைவில் கொள்ளுதல் சிறந்தப் பயிற்சியாகும்.
 • 8. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக. தலை, தளை, தழை
 • 9.உவமைத் தொடரைச் சொற்றொடரில் அமைக்க. உள்ளங்கை நெல்லிக்கனி போல
 • 10.கலைச்சொல்லாக்கம் தருக.  — subscription — Bibiliography
 • 11.மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.  — – கலை, களை, கழை
 • 12.பிழை நீக்கி எழுதுக.  — அ)ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது. — ஆ)அனைத்து பள்ளியிலும் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
 • 13.வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. ( என்னுடைய நம்பிக்கை முழவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சனைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர் கொண்டுத் தீர்ப்பார்கள். )
 • 14.அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?
 • 15.தாய்வழிக்குடும்பம், தந்தைவழிக்குடும்பம் என்பது யாது?
 • 16. கலை முழுமை என்றால் என்ன ?
 • 17. வசனம். கவிதை வேறுபாடு தருக.
 • 18. அக்காலத்துக் கல்விமுறையில் மனைப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?
 • 19. காற்புள்ளியிடாமல் எழுதுவதால் ஏற்படும் பொருள் யக்கத்திற்குச் சான்று கூறுக.
 • 20. புணர்ச்சி விதி கூறுக : அருங்கானம்
 • 21. ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முக்கத்தொடர் வாயிலாக வெற்றை வலியுறுத்து
 • 22, ‘படாஅம் கத்த கெடாஅ நல்லிசைக் கடாசு யானைக் சுலிமான் பேச் இச்சங்கக் கவிதையின் களில் ஓசை நாயிக்க பொற்களையும் அவற்றிறமன இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுது.
 • 23. உறுப்பிலக்கணம் தருக. கலங்கி
 • 24. உறுப்பிலக்கணம் தருக உயள்ந்தோர்
 • 25. கூதிர் பாசரை என்றால் என்ன?
 • 26. புதுப்பெயல் – புனர்ச்சி விதி தடுக
 • 23. உத்தம சோழனின் புதின நூல்கள் யாவை?
 • 24. நகரம் பட்டை திட்டிய வெள்ளை வைரமாகிறது. விளக்குக.
 • 25. நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?
 • 26 கலிவிழா, ஒலிவிழா விளக்கம் தருக.
 • 27. அக்காலத்துக் கல்வி முறையில் மனணப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
 • 28. கிணற்றுத்தவளை போல, அச்சாணி இல்லாத தேர் போல உவமைத் தொடர்களை சொற்றொடரில் அமைத்து எழுதுக.
 • 29. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக. விலை, விளை, விழை
 • 30. திருவளர்ச் செல்வன், திருவளர்செல்வன் – இவற்றில் சரியான தொடர் எது?. அதற்கான இலக்கண விதி யாது?.
 • 31. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. i) ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு,  ii) அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
 • 32. ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?.
 • 33. சொல்லை பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க. அ) கோவில் ஆ) தலைமை
 • 34. ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக  அ) பூம்பாவாய் ஆ) ஒருமையுடன்
 • 35. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக.  அ) உயர்ந்தோர் ஆ)பேசுவார்
 • 36. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.  அ. புள்ளைக்கு உடம்பு சரியில்லை முணு நாளா சிரமப்படுது  ஆ. நிலத்தை கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும்.

 

12th Tamil Important 4 Marks

 • 1. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
 • 2. சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக.
 • 3. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவர் ஆன நிகழ்வுகளை சுட்டி காட்டுக.
 • 4. பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக.
 • 5. தமிழாக்கம் தருக

I) A new language ‘is new life.

II) Leaming is a treasure that will follow its owner everywhere.

III) Art is long and life is short.

IV) Haste makes waste.

 • 6. ‘செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
 • செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்’
 • இத்தொடர் வெளிப்படுத்தும் காட்சிநயத்தை விளக்குக.
 • 7. நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்”
 • இக்கவிதையின் அடி “தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே எனும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதை விளக்குக.
 • 8. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் விளக்கி எழுதுக.
 • 9. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் சூழலில் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் குடும்பத்திற்குச் செய்யும் உதவி யாது?
 • 10. “வருபவர் எவராயினும் நன்றி செறுத்து” – இடஞ்சுட்இப் பொருள் விளக்கு.
 • 11. வெண்பாவின் இலக்கணம் கூறி அதன் வகைகளைக் குறிப்பிடுக.
 • 12. சொற்பொருள் பின்வரு நிலையணியைச் சான்றுடன் விளக்குக.
 • 13. “ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்” இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
 • 14. சடாயுவைத் தந்தையாக ஏற்று இராமன் ஆற்றிய கடமையை எழுதுக.
 • 15. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
 • 16. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?.
 • 17. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
 • 18. மையாடல் விளக்குக.
 • 19. பொருள் வேற்றுமை அணியை விளக்குக?
 • 20. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 • பண்பும் பயனும் அது
 • இக்குறட்பாவில் பயின்றுவரும் அணியை விளக்குக.
 • 21. தழிழாக்கம் தருக.

I) A new language is a new life 

II) Knowledge of language is the doorway to wisdom

III) The Limits of my language are the limits of my world.

IV) Learning is treasure that will follow its owner every were

 • 22. யானைக்கும் அடி சறுக்கும்
 • 23. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்திக் காட்டுக.
 • 24. பா நயம் பாராட்டுக

வெட்டியடிக்குது மின்னல் – கடல்
வீரத்திரை கொண்டு விண்ணையிடிக்குது
கொட்டி பிடிக்குது மேகம் –கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா . என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா.

12th Tamil Important 6 Marks

 • 1. உரிமைத்தாகம் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்று இணையாமல் இருந்திருந்தால்…. கதையை தொடர்ந்து எழுதி முடிக்க.
 • 2. விதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளைச் சான்று காட்டி விளக்குக.
 • 3. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக.
 • 4. ரதியின் கடிதம் வாயிலாக நீவிர் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று குறித்து விவரிக்க
 • 5. பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் போல் நும் நண்பருக்குக் கொரோனா விழிப்புணர்வு குறித்துக் கடிதம் எழுதுக.
 • 6. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
 • 7. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்து எழுதுக.
 • 8. செய்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
 • 9. கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க.
 • 10. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்து மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது எவ்வாறு? விளக்குக.
 • 11. “கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன” உங்கள் கருத்தை விவரிக்க

 

Leave a Reply