12th Revision Test Model Question Paper 2021- 2022

12tn Tamil Model Revision Test Question Paper 2021-22

12tn Tamil Model Revision Test Question Paper 2021-22

12tn Tamil Model Revision Test Question Paper 2021-22. TN 12th Standard Revision Test Model Question papers download PDF. 12th Samacheer kalvi Guide. 12th All Subject Unit Test All-District Question papers. 12ஆம் வகுப்பு பொதுத் தமிழ் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத பாடத்திட்டம்). 12th Revision Test Syllabus.

12th All Subject Revision Test Model Question Paper 2021-22.

12th COMPUTER SCIENCE Revision Test Model Question Paper 2021- 2022

12tn Tamil Model Revision Test Question Paper 2021-22

திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2021

  • Time: 15 நிமிடங்கள் + 3 மணி நேரம்
  • Marks: 90

அறிவுரை :

1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதை சரிபார்த்துக் குறையிருப்பின் அறைக் கண்கானிப்பாளரிடம் தெரிவிக்கவும்.

2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்

குறிப்பு :

விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்

பகுதி-1             (14X1=14)

அ. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ஆ. கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைக் குறியீட்டுடன் சேர்த்து எழுதுக.

1. எந்த வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது தன்னேர் இலாத தமிழ்?

அ) காவியதர்சம்

ஆ) தொல்காப்பியம்

இ) தண்டியலங்காரம்

ஈ) இலக்கண விளக்கம்

2.வா.உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்

அ) பரலி சு நெல்லையப்பர்

ஆ) பாரதியார்

இ) வ.உ.சிதம்பரனார்

ஈ) பாரதிதாசனார்

3. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல்

அ) தண்டியலங்காரம்

ஆ) தொல்காப்பியம்

இ) நன்னூல்

ஈ) மாறனலங்காரம்

4. “இன்று” என்ற கவிதை குறும்படத்தை வெளியிட்டவர் யார்

அ) ஐயப்ப மாதவன்

ஆ) நக்கீரர்

இ) கி.ராஜநாராயணன்

ஈ) திசு நடராஜன்

5. நான் என்பது வேறொருவன் என்னும் நூலின் ஆசிரியர்

அ) ஜலாலுதீன் ரூமி

ஆ) ஐயப்ப மாதவன்

இ) தி.சு.நடராஜன்

ஈ) சிற்பி பாலசுப்பிரமணியம்

6. தமிழில் திணைப்பாகுபாடு எதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது

அ)பொருட் குறிப்பு

ஆ)சொற் குறிப்பு

இ)தொடர் குறிப்பு

ஈ)எழுத்து குறிப்பு

7. “தாகங்கொண்ட மீனொன்று” என்ற கவிதைத் தொகுப்பை மொழிபெயர்த்தவர் யார்?

அ)என்.சத்தியமூர்த்தி

ஆ)ஜலாலுதீன் ரூமி

இ)திசு நடராஜன்

ஈ)ஐயப்ப மாதவன்

8. தமிழர் திருமறை என்று அழைக்கப்படும் நூல் எது?

அ) திருக்குறள்

ஆ) தொல்காப்பியம்

இ) கம்னம்

ஈ)புறநானூறு

9. கம்பராமாயணத்திற்கு கம்பர் சூட்டிய பெயர் என்ன?

ஆ) இராமவதாரம்

இ)அயோத்தியா காண்டம்

ஈ) இராமாயணம்

அ) கம்பராமாயணம்

10.பூமணி என்ற கரிசல் எழுத்தாளரின் இயற்பெயர் என்ன?

அ) பூ.மாணிக்கவாசகர்

ஆ) பூமணி

இ) பூ.மணிகண்டன்

ஈ) எதுவும் இல்லை

17. அஞ்ஞாடி என்னும் புதினத்துக்காக 2014ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?

அ) ஐயப்ப மாதவன்

ஆ) பூ மாணிக்கவாசகர்

இ) தி.சு.நடராஜன்

ஈ) ஜலாலுதீன் ரூமி

12. நரம்புகள் வீணை மாட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்பமாதவன் குறிப்பிடுவது

அ)சூரிய ஒளிக்கதிர்

ஆ)மழை மேகங்கள்

இ)மழைத்துளிகள்

ஈ)நீர்நிW.kalesay

13. தமிழ்நாட்டில் எந்த ஊரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது

அ) கன்னியாகுமரி

ஆ) சென்னை

இ) வேலூர்

ஈ)திருப்பத்தூர்

14. திருக்குறள் எந்த நூல்களில் ஒன்று

அ) பதினெண்கீழ்க்கணக்கு

ஆ)பதினெண்மேற்கணக்கு

இ)பத்துப்பாட்டு

ஈ) எட்டுத்தொகை

பகுதி-2

(இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை அளிக்கவும்)       12X2=24

பிரிவு -1

எவையேனும் மூன்றுக்கு மட்டும் விடை தருக

15. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக

16. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது விளக்கம் தருக.

17. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்.

18. நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது ?

பிரிவு 2

எவையேனும் இரண்டுக்கு விடை தருக

19. விடியல் வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடர்

20. புக்கில், தன்மனை சிறுகுறிப்பு வரைக

21. ஒலிப்பின்னல் என்றால் என்ன

எவையேனும் 7க்கு விடை தருக

24.கலைச்சொல் தருக :

1) Platform         2) Metro Train

25. மயங்கொலி சொற்களை தொடரில் அமைத்து எழுதுக. கலை களை கழை

பிரிவு 3

22. சொற்றொடரில் அமைத்து எழுதுக: அச்சாணி இல்லாத தேர் போல

23. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழ் அறிஞரின் கண்டுபிடிக்கவும்

முன்னெழுத்து அரசன் ; பின் எழுத்து தமிழ் மாதம்

26.பொருத்தமான வேற்றுமை உருபுகளை சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக : குமரன் வீடு பார்த்தேன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்

27. இலக்கணக்குறிப்பு தருக : மாதவம், இலாத

28. பகுபத உறுப்பிலக்கணம் தருக : சாய்ப்பான்

29. எழுதும் போது ஏற்படும் பிழைகள் யாவை?

30.தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

பகுதி 3

(6 வரிகளுக்கு மிகாமல் விடையளிக்கவும்)     7×4=28
பிரிவு 1

எவையேனும் 2க்கு விடை தருக.

31. சினம் தரும் கேட்டினை கூறுக.

32. “ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்” – இடம் சுட்டி பொருள் விளக்குக.

33. குகனோடு ஐவராகி வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டுக.

34.சடாயுவை தையாக ஏற்று ராமன் ஆற்றிய கடமையை எழுதுக.

பிரிவு 2

எவையேனும் 2க்கு விடை தருக

35. சங்கப் பாடல்களில் ஒலி கோலங்கள் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக.

36. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக்குடும்பம் விளக்கம் தருக.

37. தமிழில் உள்ள சில தொகை மொழிகளை எழுதுக.

38. தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?

பிரிவு 3

எவையேனும் 3க்கு விடை தருக

39. வருபவர் எவராயினும் நன்றி செலுத்து -இடம் சுட்டி பொருள் விளக்குக.

40.பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றனுக்கு கவிதை எழுதுக : இயற்கை (அல்லது) நாடு

41.உங்கள் கனவு ஆசிரியர் குறித்து கட்டுரை எழுதுக.

42. தமிழாக்கம் தருக :

  1. If you want people to understand you, speak their language.
  2. Learning is a treasure that will follow its owner everywhere.
  3. A new language is a new life.
  4. The limits of my language are the limits of my world.

43. இலக்கிய நயம் பாராட்டுக :

வெட்டியடிக்குது மின்னல் – கடல்

வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;

கொட்டி யிடிக்குது மேகம் -கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று

சட்டச்சட டட்டா – என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்

எட்டுத்திசையும் இடிய- மழை

எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா!

பகுதி 4

(இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக) (3×7=18 )

44. அ) சினத்தை காத்தால் வாழ்க்கை மேம்படும் இக்கூற்றை முப்பால் வழி விளக்குக

(அல்லது)

ஆ) தமிழின்சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூ எழுதுக. வனவற்றை தொகுத்து

45. அ)கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.

(அல்லது)

ஆ) புயல் தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்து கிடக்கும் மின் இணைப்புகளை சரிசெய்ய கோரி உங்கள் ஊர் மின்வாரிய பொறியாளர் கடிதம் எழுதுக.

46. அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று சமூகப் பற்று ஆகியவற்றை விவரிக்க.

(அல்லது)

ஆ) உரிமைத்தாகம் கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்று இணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.

பகுதி 5

47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் எழுது.

அ). துன்பு உளது எனத் தொடங்கும் கம்பராமாயணம் பாடலை எழுதுக.

ஆ). நன்று என்று முடியும் திருக்குறளை எழுதுக.

 

12tn Tamil Model Revision Test Question Paper 2021-22

Leave a Reply