You are currently viewing 4th Social Science Guide Term 3 Lesson 2

4th Social Science Guide Term 3 Lesson 2

4th Social Science Guide Term 3 Lesson 2

TN Board 4th Social Science Solutions Term 3 Unit 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

4th Standard Social Science Guide Term 3 Lesson 2 சென்னை மாகாணத்தின் வரலாறு Book Back Question and answers Tamil Medium. 4th All Subject Book Back Answers. TN 4th std Tamil, English, Maths, Science, Social Science Tamil Medium and English Medium. Class 1 to 12 Book Back Question and Answers.

4th Social Science Guide சென்னை மாகாணத்தின் வரலாறு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.

மதராஸ் மாகாணம் ___________ இல் உருவாக்கப்பட்டது.

அ) 1800

ஆ) 1801

இ 1802

ஈ) 1803

விடை:ஆ) 1801

Question 2.

மதராஸ் மாநிலம் அதிகாரப்பூர்வமாக ___________ இல் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

அ) 1947

ஆ) 1953

இ 1956

ஈ) 1969

விடை:ஈ) 1969

Question 3.

மாமல்லபுரம் _____________ வம்சத்தினரால் உருவாக்கப்பட்டது.

அ) நாயக்கர்

ஆ) பல்லவ

இ சோழ

ஈ) ஆங்கிலேய

விடை:ஆ) பல்லவ

Question 4.

“தென்னிந்தியாவின் ஸ்பா” என்று அழைக்கப்படுவது எது?

அ) போடிநாயக்கனூர்

ஆ) ஒகேனக்கல்

இ குற்றாலம்

ஈ) செஞ்சிக் கோட்டை

விடை:குற்றாலம்

Question 5.

எட்டு அடுக்கிலான மிகச் சிறிய அளவிலுள்ள மனோரா கோட்டையைக் கட்டியவர் ___________ ஆவார்.

அ) சரபோஜி மன்னர்

ஆ) சின்ன பொம்மி நாயக்கர்

இ திம்மா ரெட்டி நாயக்கர்

ஈ) திருமலை நாயக்கர்

விடை:அ) சரபோஜி மன்னர்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.

மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் மதராஸ் நகரம் ஆகும்.விடை:சரி

Question 2.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர், பழங்கால சோழர்களின் கிராமமாகும்.விடை:தவறு

Question 3.

திருமலை நாயக்கர் அரண்மனை திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.

விடை:சரி

Question 4.

கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.

விடை:சரி

Question 5.

கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரிய கோயில் எனவும் அறியப்படுகிறது.விடை:தவறு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

  1. காவலூர் – கிழக்கின் டிராய்
  2. செஞ்சிக் கோட்டை – ஊட்டி
  3. போடிநாயக்கனூர் – வைணு பாப்பு ஆய்வகம்
  4. முத்து நகரம் – ஏலக்காய் நகரம்
  5. ஜான் சல்லிவன் – தூத்துக்குடி

விடை:

  1. காவலூர் – வைணு பாப்பு ஆய்வகம்
  2. செஞ்சிக் கோட்டை – கிழக்கின் டிராய்
  3. போடிநாயக்கனூர் – ஏலக்காய் நகரம்.
  4. முத்து நகரம் – தூத்துக்குடி
  5. ஜான் சல்லிவன் – ஊட்டி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. செஞ்சிக் கோட்டையின் முக்கியத்துவத்தைக் கூறுக.

விடை:

  • செஞ்சிக் கோட்டையானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று குன்றுகள் சூழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

2. திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய அம்சங்கள் யாவை?

விடை:

  • திருமலை நாயக்கர் அரண்மனை திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டடக்கலைகளின் ஒருமித்த கலவையாக இருப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

3. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை:

  • மேட்டூர் அணை, ஒகேனக்கல் அருவி, ஏர்காடு:

4. கல்லணை – குறிப்பு வரைக.

விடை:

  • கல்லணை தென்னிந்தியாவில் காவிரியாற்றின் குறுக்கே கி.பி. பொ.ஆ.) 2 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் கரிகாலனால் கட்டப்பட்டது.

5. மலைக் கோட்டை – குறிப்பு வரைக.

விடை:

  • 83 மீட்டர் உயரமுள்ள பழமையான ஒரு பாறையின் மீது மலைக்கோட்டை கோயில் கட்டப்பட்டுள்ளது. அக்கோட்டையின் உள்ளே இரண்டு இந்து கோயில்கள் உள்ளன.

6. தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை:

  • மெரினா கடற்கரை, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் மற்றும் மகாபலிபுரம்.

V. கூடுதல் வினா.

1. மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் எது?

விடை:

  • தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மதராஸ் நகரம், அன்றைய மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாகும்.

2. உத்திரமேரூர் எங்கு அமைந்துள்ளது?

விடை:

  • உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

3. அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் யாவை?

விடை:

  • இன்றைய விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் ஆகும்.

4. “சைலம்” என்றால் என்ன?

விடை:

  • “சைலம்” என்றால் மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும்.

5. தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலைவாழிடம் எது?

விடை:

  • தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலை வாழிடம் ஊட்டி ஆகும்.

Leave a Reply