You are currently viewing 4th Social Science Guide Term 3 Lesson 3

4th Social Science Guide Term 3 Lesson 3

4th Social Science Guide Term 3 Lesson 3

TN Board 4th Social Science Solutions Term 3 Unit 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

4th Standard Social Science Guide Term 3 Lesson 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Book Back Question and answers English Medium. 4th All Subject Book Back Answers. TN 4th std Tamil, English, Maths, Science, Social Science Tamil Medium and English Medium. Class 1 to 12 Book Back Question and Answers.

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.

____________ இந்திய சட்டத்திற்கு எதிரானது.

அ) பள்ளியில் குழந்தைகள் படித்தல்.

ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

இ பள்ளி செயல்காடுகளில் குழந்தைகள் பங்கேற்றல்.

ஈ) குழந்தைகள் தரமான உணவைப் பெறுதல்.

விடை:ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

Question 2.

போலியோ சொட்டு மருந்து _____________ களுக்கு வழங்கப்படுகின்றன.

அ) ஆண்

ஆ) பெண்

இ குழந்தை

ஈ) மூத்த குடிமக்கள்

விடை:குழந்தை

Question 3.

ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பை ___________ என்பர்.

அ) கதைப் புத்தகம்

ஆ) விதிமுறைப் புத்தகம்

இ அரசியலமைப்பு

ஈ) பாடநூல்

விடை:அரசியலமைப்பு

Question 4.

பின்வருவனவற்றில் எது குழந்தைகளின் உரிமை இல்லை ?

அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்

ஆ) கல்வி பெறுதல்

இ போதுமான உணவைப் பெறுதல்

ஈ) ஆரோக்கியமாக வாழ்தல்

விடை:அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.

போலியோ சொட்டு மருந்தைப் பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை ஆகும்.விடை:சரி

Question 2.

அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான . உரிமைகள் உள்ளன.

விடை:தவறு

Question 3.

6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வேலை செய்ய வேண்டும்.விடை:தவறு

Question 4.

குழந்தைகளைத் துன்புறுத்துவது தவறானது.விடை:சரி

Question 5.

குழந்தைகள் தவறான தொடுதலை அறிந்திருக்க வேண்டும்.விடை:சரி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

  1. சிறார் உதவி மைய எண் – ஒரு நாட்டின் உறுப்பினர்
  2. தடுப்பூசிகள் – சுகாதாரம்
  3. வாஷ் (Wash) – சட்டவிரோதமானது
  4. குடிமகன் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
  5. குழந்தைத் தொழிலாளர் – 1098

விடை:

  1. சிறார் உதவி மைய எண் – 1098
  2. தடுப்பூசிகள் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
  3. வாஷ் (Wash) – சுகாதாரம்
  4. குடிமகன் – ஒரு நாட்டின் உறுப்பினர்
  5. குழந்தைத் தொழிலாளர் – சட்டவிரோதமானது

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

1. உங்கள் உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் யாவை?

விடை:

  • உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் உதடுகள், மார்பு மற்றும் கால்களுக்கு இடையில் ஆகிய பகுதிகள் ஆகும்.

2. குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ள பல்வேறு உரிமைகள் யாவை?

விடை:

  1. உயிர்வாழ்வதற்கான உரிமை.
  2. வளர்ச்சிக்கான உரிமை
  3. பாதுகாப்பு உரிமை
  4. பங்கேற்பதற்கான உரிமை

3. உயிர்வாழ்வதற்கான உரிமை – குறிப்பு வரைக.

விடை:

  • இது ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதாகும். வாஷ் (Wash) திட்டமும் இதன் ஒரு பகுதியாகும்.

4. பங்கேற்பதற்கான உங்கள் உரிமையை எப்போதாவது நீங்கள் பயன்படுத்திருக்கறீர்களா? விவரிக்க.

விடை:

  • ஆம். எங்கள் வீட்டை புதுபிக்கும் பொழுது எவ்வாறெல்லாம் வண்ணம் பூச வேண்டும் என்று என் தந்தையுடன் விவாதித்து உள்ளேன்.

5. உரிமைகள் முக்கியமானவை. ஏன்?

விடை:

  • நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காவும் உருவாக்கப்பட்டதே உரிமைகள் ஆகும். எனவே உரிமைகள் முக்கியமானவை ஆகும்.

V. கூடுதல் வினா :

1. குடிமகன் என்பது யார்?

விடை:

  • குடிமகன் என்பது ஒரு நாட்டின் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் ஆவார்.

2. அரசியலமைப்பு என்றால் என்ன?

விடை:

  • ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு அரசியலமைப்பு எனப்படும்.

3. வாஷ் (Wash) பற்றி எழுதுக.

விடை:

  • வாஷ் (Wash) என்பது நீர், சுகாதாரம், மற்றும் தூய்மையைக் குறிக்கும்.

4. இலவசக் கல்வியை வழங்குவது யாருடைய கடமையாகும்?

விடை:

  • இலவசக் கல்வியை வழங்குவது அரசின் கடமையாகும்.

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் InText Questions and Answers

பக்கம்-132 செயல்பாடு

சிந்தித்து எழுதுக.

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டால், நீ என்ன செய்வாய்?

  1. ___________________
  2. ___________________
  3. ___________________

விடை:

  1. கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவேன்.
  2. அரசின் இலவச கல்வியைப் பற்றி கூறுவேன்.
  3. கற்றலின் இனிமையை கூறுவேன்.

பக்கம்-134 செயல்பாடு

உங்கள் வீட்டின் அருகில், பள்ளிக்குச் செல்லாத ஒரு குழந்தையை அடையாளம் காணவும். இக்கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யவும்.

  1. குழந்தையின் பெயர் : ________________
  2. குழந்தையின் வயது : ________________
  3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
  4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: ________________
  5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்? : _________________

விடை:

  1. குழந்தையின் பெயர் : மாலா
  2. குழந்தையின் வயது : 7
  3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
  4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: வறுமை
  5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்?

அரசின் இலவச கல்வி திட்டத்தை பற்றி கூறி பள்ளிக்குச் செல்லுமாறு கூறுவேன்.

குறிப்பு :

இந்தக் கணக்கெடுப்பு பெற்றோர்களுக்கும் அக்குழந்தைக்குமானது. : அந்த வகுப்பு குழந்தைகள் இருவர் கொண்ட குழுக்களாக, ஒரு குடும்பம் அல்லது குழந்தையைப் பேட்டி காணவும்.. ஒவ்வொரு நிலைபாட்டிற்கும் தீர்வுகள் குறித்து ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.

Leave a Reply