You are currently viewing 6th Social Science History Guide Term 2 Lesson 3

6th Social Science History Guide Term 2 Lesson 3

6th Social Science History Guide Term 2 Lesson 3

6th Standard Social Science Term 2 Solution Guide Term 2 Lesson 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

6th Standard Social Science Term 2 History Lesson 3 குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை Book Back Question and answers Tamil Medium download pdf. 6th All Subject Text Books download pdf. 6th Social Science Term 1 Guide. 6th All Subject Book Back Answers. 6th Social Science Samacheer kalvi guide.

6th Social Science Guide Tamil Medium Term 2 Lesson 3  குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

  1. அங்கம்
  2. மகதம்
  3. கோசலம்
  4. வஜ்ஜி

விடை : மகதம்

2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

  1. அஜாதசத்ரு
  2. பிந்து சாரா
  3. பத்மநாப நந்தா
  4. பிரிகத்ரதா

விடை : பிந்து சாரா

3. கீழ்க்காண்பவற்றில் எது மெளரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

  1. அர்த் சாஸ்திரம்
  2. இண்டிகா
  3. முத்ராராட்க்ஷம்
  4. இவையனைத்தும்

விடை : இவையனைத்தும்

4. சந்திரகுப்த மெளரியர் அரியணையைத் துறந்து _________என்னும் சமணத் துறவியோடு சரவணபெகோலாவுக்குச் சென்றார்.

  1. பத்ரபாகு
  2. ஸ்துலபாகு
  3. பார்ஸவநாதா
  4. ரிஷாநாதா

விடை : பத்ரபாகு

5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் __________

  1. டாலமி
  2. கெளடில்யர்
  3. ஜெர்சக்ஸ்
  4. மெகஸ்தனிஸ்

விடை : மெகஸ்தனிஸ்

6. மெளரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  1. சந்திர குப்த மொரியர்
  2. அசோகர்
  3. பிரிகத்ரதா
  4. பிந்துசாரர்

விடை : பிரிகத்ரதா

II. கூற்றைக் காரணத்துடன் ஒப்பிடுக. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. கூற்று : அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.

காரணம் : தர்மத்தின் கொள்கையின்படி, அவர் ஆட்சி புரிந்தார்.

  1. கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
  2. கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
  3. கூற்று சரி; ஆனால் காரணம் தவறு
  4. கூற்று தவறு; ஆனால் காரணம் சரி

விடை : கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.

2. கூற்று 1 : ஒட்டு மொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மெளரியர் ஆவார்.

கூற்று 2 : மெளரியரின் நிர்வாகம் பற்றிய செய்திககள அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.

  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1,2 ஆகிய இரண்டும்
  4. 1ம் இல்லை 2ம் இல்லை

விடை : 2 மட்டும்

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.

1. மகத்தின் முதல் அரசர் சந்திரகுப்தர் மெளரியர்

2. ராஜகிரிகம் மகத்தின் தலைநகராய் இருந்தது.

  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 மற்றும் 2
  4. 1 ம் இல்லை 2ம் இல்லை

விடை : 2 மட்டும்

4. கீழ்க்காண்பனவற்கைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.

  1. நந்தா – சிசுநாகா – ஹரியங்கா – மெளரியா
  2. நந்தா – சிசுநாகா – மெளரியா – ஹரியங்கா
  3. ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா
  4. சிசுநாகா – மெளரியா – நந்தா – ஹரியங்கா

விடை : ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா

5. கீழ்க்கண்டவற்றில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று.

  1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
  2. அடர்ந்த காடுகள் மரங்ககளயும், யானைகளையும் வழங்கின.
  3. கடலின் மீதான ஆதிக்கம்
  4. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
  5. 1,2 மற்றும் 3 மட்டும்
  6. 3 மற்றும் 4 மட்டும்
  7. 1,2 மற்றும் 4 மட்டும்
  8. இவையனைத்தும்

விடை : 3 மற்றும் 4 மட்டும்.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. ________________ மகத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.விடை : ராஜகிரகம்
  2. முத்ராட்சசத்தை எழுதியவர் ________________விடை: விசாகதத்தர்
  3. ________________ பிந்துசாரரின் மகனாவார்.விடை: அசோகர்
  4. மெளரியப் பேரரசை தோற்றுவித்தவர் ________________விடை: சந்திரகுப்த மௌரியர்
  5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக ________________ பணியமர்த்தப்பட்டனர்.விடை : தர்ம மகாமாத்திரர்கள்

IV. சரியா ? தவறா ?

  1. தேவனாம்பிர்இயா எனும் பட்டம் சந்திரகுப்த மெளரியருக்கு வழங்கப்பட்டதுவிடை : தவறு
  2. அசோகர் கலிங்கப்பாேரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்விடை : தவறு
  3. கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்விடை : சரி
  4. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப்பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்விடை : தவறு
  5. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனவிடை : சரி

V. பொருத்துக

  1. கணா – அர்த்தசாஸ்திரம்
  2. மெகஸ்தனிஸ் – மதச் சுற்றுப்பயணம்
  3. சாணக்கியா – மக்கள்
  4. தர்ம யாத்திரை – இண்டிகா

விடை : 1 – இ, 2 – ஈ, 3-அ, 4-

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்:

1. மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகனளக் குறிப்பிடவும்.

  1. மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா
  2. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

2. ஸ்தூபி என்றால் என்ன?

  • ஸ்தூபியானது செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டுள்ள அரைக்காேள வடிவமுடைய குவிமாடம் பாேன்ற அமைப்பாகும். புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

3. மகத அரச வம்சங்களின் பெயர்கனளக் குறிப்பிடுக.

  • ஹரியங்கா வம்சம்
  • சிசுநாக வம்சம்
  • நந்த வம்சம்
  • மெளரிய வம்சம்

4. மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?

  • நிலங்களே அரசுக்கு வருவாயை ஈட்டித்தந்தது.
  • மொத்த விளைச்சலில் 1/6 பங்கு (பாகா) நிலவாரியாக வசூல் செய்யப்பட்டது.
  • காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள்
  • அரசுக்கு கூடுதல் வருவாயாக அமைந்தன.

5. நகரங்களின் நிர்வாகத்தில் ‘நகரிகா’ வுக்கு உதவியவர் யார்?

  • நகர நிர்வாகம் ‘நகரிகா’ என்னும் அதிகாரியின் கீழிருந்தது, அவருக்கு ஸ்தானிகா, காேபா எனும் அதிகாரிகள் உதவி செய்தனர்.

6. அசாேகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப்பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?

  • அசாேகருடைய இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறை கல்வெட்டுகள் மூவேந்தர்களான பாண்டியர், சாேழர், கேரளபுத்திரர் ஆகியாேரையும் சத்யபுத்திரர்களையும் குறிப்பிடுகின்றன.

7. மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக?

  • மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்.

VII. கீழ்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

1. பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசாேகர் என்ன செய்தார்?

  • அசாேகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்த்தைப் பரப்புவதற்காக இல்ங்கைகக்கு அனுப்பி வைத்தார்.
  • தர்மத்தின் காெள்கைகளைப் பரப்புவதற்காக மேற்கு ஆசியா, எகிப்து, கிழக்கு ஐராேப்பா ஆகிய பகுதிகளுக்கு சமயப்பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.
  • அசாேகர் தர்ம- மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.
  • பேரரசு முழுவதிலும் பௌத்த மதத்தைப் பரப்புவதே அவர்களுடைய பணியாகும்.
  • அசாேகர் தனது தலைநகரான பாடலிபுத்திரத்தில் மூன்றாம் பௌத்த மாநாட்டைக் கூட்டினார்.

2. மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.

  • மகதம் கங்கைச் சமவெளியின் கீப்பகுதியில் அமைந்து இருந்தது. வளம் மிகுந் இந்தச் சமவெவளி வேளாண் விளைச்சலடி அதிகரித்தது. இது அரசுக்கு நிலையான, கணிசமான வருமானத்தை அளித்தது.
  • அடர்ந்த காடுகள் கட்டுமானங்களுக்குத் தேவையான ரகங்களையும் படைகளுக்குத் தேவையான யானைகளையும் வழங்கின.
  • அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் காெள்ளவும் அவர்களுக்கு உதவியது.

Leave a Reply