You are currently viewing 6th Tamil Guide Term 2 Lesson 2.3

6th Tamil Guide Term 2 Lesson 2.3

6th Tamil Guide Term 2 Lesson 2.3

TN 6th Standard Tamil Book Back Answers Term 2 – Lesson 2.3 தமிழர் பெருவிழா Solution Guide

6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 2.3 தமிழர் பெருவிழா Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide Term 2 – Lesson 2.3 பாடறிந்து ஒழுகுதல் – தமிழர் பெருவிழா Book Back Answers

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கதிர் முற்றியதும் ________ செய்வர்.

  1. அறுவடை
  2. உரமிடுதல்
  3. நடவு
  4. களையெடுத்தல்

விடை : அறுவடை

2. விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர்.

  1. செடி
  2. கொடி
  3. தோரணம்
  4. அலங்கார வளைவு

விடை : தோரணம்

3. “பொங்கல் + அன்று” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. பொங்கலன்று
  2. பொங்கல்அன்று
  3. பொங்கலென்று
  4. பொங்கஅன்று

விடை : பொங்கலன்று

4. “போகிப்பண்டிகை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. போகி + பண்டிகை
  2. போ+பண்டிகை
  3. போகு + பண்டிகை
  4. போகிப்+பண்டிகை

விடை : போகி + பண்டிகை

5. பழயன கழிதலும் ________ புகுதலும்.

  1. புதியன
  2. புதுமை
  3. புதிய
  4. புதுமையான

விடை : புதியன

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும் பட்டுப் போன மரத்தைக் காண்பது ________ தரும்.

  1. அயர்வு
  2. கனவு
  3. துன்பம்
  4. சோர்வு

விடை : துன்பம்

II. சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. பொங்கல்

விடை : பொங்கல் விழாவில் விளைச்சலுக்கு காரணமான கதிரவனை வணங்கி மகிழ்வர்

2. செல்வம்

விடை : உழவர்களின் செல்வமாக மாட்டினை கருதினர்,

3. பண்பாடு

விடை : தமிழர் பண்பாடு பாரம்பரியமிக்கது

III. குறு வினா

1. பாேகிப் பண்டிகை எதற்காகக் காெண்டாடப்படுகிறது?

  • “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ஆன்றாேர் மாெழி. வீட்டில் உள்ள பயனற்ற பாெருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் பாேகித் திருநாள்.
  • இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.
  • ஆகவே வீட்டைத் தூய்மை செய்வதற்காக கொண்டாடப்படுகிறது.

2. உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்?

  • மாடுகள் உழவர்களின் செல்வமாக விளங்குவதினாலும், உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் இருப்பதனாலும் உழவர்கள் மாடுகளுக்கு நன்று செலுத்துகின்றனர்.

IV. சிறு வினா

1. காணும் பாெங்கலை மக்கள் எவ்வாறு காெண்டாடுகின்றனர்?

  • மாட்டுப் பாெங்கலுக்கு அடுத்த நாள் காணும் பாெங்கல் ஆகும்.
  • மக்கள் இந்நாளில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர் விடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்;
  • குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பாெழுதைக் கழிப்பர்;
  • மேலும் பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர்;
  • விளையாட்டுப் பாேட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.

தமிழர் பெருவிழா – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. இயற்கையோடு இணைந்து வாழ்வது ______________ ஆகும்

விடை : தமிழரின் வாழ்க்கை முறை

  1. பொங்கல் விழா _______________ என போற்றப்படுகிறது

விடை : தமிழர் திருநாள்

  1. பொங்கல் என்பதற்கு ______________ வருவது என்று பொருள்விடை : பொங்கிப் பெருகி
  2. _____________ நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பாெங்கல் விழா.விடை : கதிரவனுக்கு
  3. மார்கழி மாதத்தின் கடைசி நாள் ______________விடை : பாேகிப் பண்டிகை.
  4. தை முதல் நாளில் தாெடங்கும் ஆண்டு ______________விடை : திருவள்ளுவர் ஆண்டு
  5. திருவள்ளுவர் _____________ -ல் பிறந்தார்.விடை : பாெ.ஆ.மு. 31
  6. மாடுகள் உழவர்களின் _______________ விளங்குகிறது.விடை : செல்வமாக

II. குறு வினா

5. பொங்கல் விழாவின் வேறு பெயர்கள் யாவை?

  • தமிழர் திருநாள்
  • அறுவடைத்திருவிழா
  • உழவர் திருநாள்

2. பொங்கல் விழாவினை உழவர் திருநாள் என கூறக் காரணம் யாது?

  • உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர். எனவே, இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர்.

3. “மஞ்சுவிரட்டு” என்பது யாது?

  • மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும்.

4. “மஞ்சுவிரட்டு” விளையாட்டின் வேறு பெயர்கள் எவை?

  • மாடு பிடித்தல்
  • ஜல்லிக்கட்டு
  • ஏறுதழுவுதல்

5. எவற்றைப் போற்றும் விழாவகாகப் பொங்கல் விழா விளங்குகிறது?

  • இயற்கை, உழைப்பு, நன்றியுணர்வு, பண்பாடு ஆகியவற்றை போற்றும் விழாவாக பொங்கல் விழா விளங்குகிறது

6. போகிப்பண்டிகை பற்றி ஆன்றோர் கூறிய மொழி யாது?

  • “ பழையன கழிதலும் புதியன புகுதலும்” (நன்னூல் நூற்பா-462) என்பது போகிப்பண்டிகை பற்றி ஆன்றோர் கூறிய மொழி.

7. இந்திரவிழா எதன் நோக்கில் கொண்டாடப்பட்டது?

  • வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் இந்திரவிழா கொண்டாடப்படுகிது. தற்போது இந்திர விழாவினை போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது

8. திருவள்ளுவர் ஆண்டு எப்படி கணக்கிடப்படுகிறது?

  • திருவள்ளுவர் பொ.ஆ.மு. 31இல் பிறந்தார்.  திருவள்ளுவராண்டை கணக்கிட  நடைமுறை ஆண்டுடன் 31-ஐக் கூட்ட வேண்டும்

எகா : 2020 + 31 = 2051

9. அறுவடைத் திருநாள் மற்ற மாநிலங்களில்  எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

மகரசங்கராந்தி  ஆந்திர, கர்நாடகா, மகாராட்டிரா, உத்திரப்பிரதேசம்
லோரி     பஞ்சாப்
உத்தராயன்             குஜராத், இராஜஸ்தான்

Leave a Reply