You are currently viewing 6th Tamil Guide Term 2 Lesson 1.3

6th Tamil Guide Term 2 Lesson 1.3

6th Tamil Guide Term 2 Lesson 1.3

TN 6th Standard Tamil Book Back Answers Term 2 – Lesson 1.3 கல்விக்கண் திறந்தவர் Solution Samacheer kalvi

6th Tamil Guide. 6th Std Tamil Term 2 Lesson 1.3 கல்விக்கண் திறந்தவர் Book Back Question and answers download pdf. 6th all subject book back questions and answers. 6th Tamil Samacheer kalvi Text Book s Download pdf.

6th Tamil Guide Term 2 – Lesson 1.3 கண்ணெனத் தகும் – கல்விக்கண் திறந்தவர்

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________.

  1. ஆடு மேய்க்க ஆள் இல்லை
  2. ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
  3. வழி தெரியவில்லை
  4. பேருந்து வசதியில்லை

விடை : ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

2. “பசியின்றி” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. பசி + இன்றி
  2. பசி+யின்றி
  3. பசு + இன்றி
  4. பசு + யின்றி

விடை : பசி + இன்றி

3. “காடு+ஆறு” என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________

  1. காட்டாறு
  2. காடாறு
  3. காட்டுஆறு
  4. காடுஆறு

விடை : காட்டாறு

4. “படிப்பறிவு” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______

  1. படி + அறிவு
  2. படிப்பு + அறிவு
  3. படி + அறிவு
  4. படிப்பு + வறிவு

விடை : படிப்பு + அறிவு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் _______________ அறிமுகப்படுத்தினார்விடை : சீரூடைத் திட்டத்தை
  2. காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் ____________________விடை : தந்தை பெரியார்

III. சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. வகுப்பு

விடை : அருண் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான்

2. உயர்கல்வி

விடை : உயர்கல்வி பயில ராமு சென்னைக்கு சென்றான்.

3. சீருடை

விடை : பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றி பயில பள்ளிக்கு சீருடையில் தான் வரவேண்டும்.

IV. குறுவினா

1. காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?

  • பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள்,  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவை  காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும்.

2. காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?

  • காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை திறக்க ஆணையிட்டார்.
  • மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுனறைபடுத்தினார்.
  • மாணவர்கள் பசியின்றிப் படிக்க மத்திய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

V. சிறுவினா

காமராசரின் மதிய உணவுத்திட்டம் குறித்து எழுதுக

  • 1955-ம் ஆண்டு மார்ச் 27-ல் சென்னையில் ” சென்னை மாகாண தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு” நடந்தது. அம்மாநாட்டில் காமராசர் கூறியது, “தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும்.
  • பள்ளிக்கூடம் இருக்கிற ஊர்களில் கூட குழந்தைகளும் படிக்கப் போவது இல்லை. ஏழைப்பயன்களுக்கும், பெண்களுக்கும் வயிற்றுபாடு பெரும்பாடாக உள்ளது.
  • ஒரு வேளை கஞ்சி கிடைத்தால் போதும் என்று ஆடு, மாடு மேய்க்கப்போய் தங்கள் எதிர் காலத்தைப் பழகாக்கிக் கொள்கிறார்கள். அவர்களைப் பள்ளிக்கூடங்களுக்கு வரச் செய்வது முக்கியம்.
  • அதற்கு, ஏழைக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும். இதற்கு தொடக்கத்தில் ஒரு கோடி செலவாகும். சில ஆண்டுகளில் மூன்று கோடி, நான்கு கோடி கூடச் செலவாகும்.
  • நம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு இது பெரிய பணம் அல்ல. தேவைப்பட்டால் அதற்காக தனி வரிகூட போடலாம் என்று காமராசர் கூறினார்
  • அதன்படி மதிய உணவுத் திட்டத்தை அமுல்படுத்துவது என்றும் முதலில் எட்டையபுரத்தில் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாரதியார் பிறந்து எட்டையபுரத்தில் 1956-ல் முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது
  • 1956-ல் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தின் மூலம் 29,017 பள்ளிகளில் மதிய உணவு அளிக்கப்பட்டது. 15லட்சம் மாணவர்கள் பயன் அடைந்தார்கள்

கல்விக்கண் திறந்தவர் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. படிப்பறிவு இருந்தால் தான் நாடு …………………………. அடையும்விடை : உயர்வு
  2. ………………………… என தந்தை பெரியாரால் காமராசர் பாரட்டப்பட்டார். விடை : கல்விக்கண் திறந்தவர்
  1. காமராசரின் சிறப்புப்பெயர் ………………………………விடை : கருப்புகாந்தி
  2. காமராசர் உள்நாட்டு விமானநிலையம் ……………………………… அமைந்துள்ளது விடை : சென்னையில்
  1. நடுவணரசு ………………………………-ம் ஆண்டு பாரதரத்னா விருதினை வழங்கியது விடை : 1976
  1. காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய …………………….. தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.விடை : 6000

II. பிரித்தெழுதுக

  1. ஏற்றத்தாழ்வு = ஏற்றம் + தாழ்வு
  2. பெருந்தலைவர் = பெருமை + தலைவர்
  3. அரசுடமை = அரசு + உடமை

III. குறுவினா

1. காமராசரின் சிறப்பு பெயர்கள் யாவை?

  1. படிக்காதமேதை
  2. பெருந்தலைவர்
  3. கர்மவீரர்
  4. கருப்புக்காந்தி
  5. ஏழைப்பங்காளர்
  6. தலைவர்களை உருவாக்குபவர்

2. காமராசர் பள்ளிகளில் சீருடைத்திட்டத்தினை கொண்டு வந்த நோக்கம் என்ன?

  • பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக காமராசர் பள்ளியில் சீருடைத்திட்டத்தினை கொண்டு வந்தார்.

3. காமராசரின் கல்விப்பணிகள் யாதெனக்கூறு?

  • காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய 6000 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அவற்றை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
  • மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக்கல்விக்கான சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றி படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • பள்ளிகளில் குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி கல்வி கற்பதற்காக சீருடைத் திட்டத்தினை கொண்டு வந்தார்.
  • பள்ளிகளின் வசதியைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார். தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களை தொடங்கினார். மாணவர்கள்
  • உயர்கல்விப் பெறப் பொறியில் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றை புதிதாக தொடங்கினார்.
  • இவ்வாறு கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். இவையெல்லாம் காமராஜர் ஆற்றிய கல்விப்பணிகள் ஆகும்.

4. காமராசருக்கு தமிழக அரசு செய்த சிறப்புகள் யாவை?

  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது
  • நடுவண் அரசு 1976 பாரத ரத்னா விருது வழங்கியது
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருநகர் இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன
  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டது
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம்10.2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

Leave a Reply