8th Tamil Guide Unit 8.5
8th Samacheer kalvi guide Unit 8.5 Book Back Answers.
8th Standard Tamil 8th Lesson Book Back and additional Questions and answers. 8th Tamil TN Samacheer kalvi guide. 8th Tamil இயல் 8.5 யாப்பு இலக்கணம் Book Back Answers. 8th Tamil All Units Boon Back answers. We Update 8th Tamil Guide Book Answers used for TET, TNPSC, SI, TRB, TN 8th Students can use this material.
- 8th Tamil Samacheer Kalvi Guide – Unit 8.1 to 8.6 Full Answers
8.5. யாப்பு இலக்கணம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. அசை _____ வகைப்படும்.
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
விடை : இரண்டு
2. விடும் என்பது_____ சீர்.
- நேரசை
- நிரையசை
- மூவசை
- நாலசை
விடை : நிரையசை
3. அடி _____ வகைப்படும்.
- இரண்டு
- நான்கு
- எட்டு
- ஐந்து
விடை : ஐந்து
4. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _____.
- எதுகை
- இயைபு
- அந்தாதி
- மோனை
விடை : மோனை
II. பொருத்துக.
- வெண்பா – துள்ளல் ஓசை
- ஆசிரியப்பா – செப்பலோசை
- கலிப்பா – தூங்கலோசை
- வஞ்சிப்பா – அகவலோசை
விடை :- 1 – ஆ, 2 – ஈ, 3 – அ, 4 – இ
III. சிறு வினா
1. இருவகை அசைகளையும் விளக்குக.
நேரசை:-
- குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.
(எ.கா.) ந, நம், நா, நாம்.
நிரையசை:-
- இரண்டு குறில் எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.
(எ.கா.) கட, கடல், கடா, கடாம்
2. தளை என்பது யாது?
- சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.
3. அந்தாதி என்றால் என்ன?
- ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை ஆகும்
4. பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பா நான்கு வகைப்படும். அவை
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா.
யாப்பு இலக்கணம் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் _______________
விடை : யாப்பு இலக்கணம்
2. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______________
விடை : மோனை
3. இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______________
விடை : எதுகை
4. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது _______________
விடை : இயைபு
5. ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது _______________
விடை : சீர்
II. சிறு வினா
1. அடி என்றால் என்ன?
- இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி ஆகும்
2. தொடை என்றால் என்ன?
- செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும்.
III. குறு வினா
1. யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு. அவை
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
2. எழுத்துகளின் வகைகளை கூறு?
- குறில் – உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
- நெடில் – உயிர்நெடில், உயிர்மெய் நெடில்
- ஒற்று – மெய்யெழுத்து, ஆய்த எழுத்து
3. சீர்களின் வகைகளை கூறு?
- ஓரசைச்சீர்
- ஈரசைச்சீர்
- மூவசைச்சீர்
- நாலசைச்சீர்
4. பா வகைகள் – விளக்கம் தருக
வெண்பா:-
- வெண்பா செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.
ஆசிரியப்பா:-
- ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.
கலிப்பா:-
- கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது.
வஞ்சிப்பா:-
- வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.
மொழியை ஆள்வோம்!
I. இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக.
1. முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.
விடை : முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.
2. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.
விடை : மழை நன்கு பெய்ததால் விளையாட முடியவில்லை.
3. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும்.
விடை : எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.
4. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.
விடை : திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
5. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.
விடை : அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று பின்பற்ற வேண்டும்.
6. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.
விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
II. பின்வரும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
விபத்தில்லா வாகனப் பயணம்
சாலைவிதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
- ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
- சந்திப்புச் சாலைகள், பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள் ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில் இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல வேண்டும்.
- சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
- தீயணைப்பு வாகனம், அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழி விட வேண்டும்.
- எல்லா ஓட்டுநர்களும் தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
- மலைச்சாலைகள், மிகவும் சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.
வினாக்கள்
1. விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?
- சாலை விதிகளுக்கு உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து வாகனங்களை இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
2. கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?
- தீயணைப்பு வாகனம்
- அவசர சிகிச்சை ஊர்தி
3. சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?
- சாலைச்சந்திப்பில் நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
4. மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?
- கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர வேண்டும்.
5. வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.
- வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில் செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக் கடந்து செல்லப் போதிய இடம் விட வேண்டும்.
மொழியோடு விளையாடு
படத்தைப் பார்த்து எழுதுக
படத்தைப் பார்த்து எழுதுக | ||
---|---|---|
ஓரெழுத்துச் சொல் | ஆ | பூ |
இரண்டு எழுத்துச் சொல் | பால் | வாழை |
மூன்று எழுத்துச் சொல் | கன்று | பழம் |
நான்கு எழுத்துச் சொல் | புல்வெளி | வாழை இலை |
ஐந்து எழுத்துச் சொல் | தாய்ப்பசு | கன்றுகள் |
நிற்க அதற்குத் தக…
கலைச்சொல் அறிவோம்.
- தொண்டு – Charity
- நேர்மை – Integrity
- ஞானி – Saint
- பகுத்தறிவு – Rational
- தத்துவம் – Philosophy
- சீர்திருத்தம் – Reform
கூடுதல் வினாக்கள்
நிரப்புக
1. மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் …………………
2. செய்யுளுக்கு உரிய உறுப்புகள் …………..
3. யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகள் ……………..
4. எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது …………..
5. அசை ……………. வகைப்படும்.
6. ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது ………….
7. சீர்கள் ………………… வகைப்படும்.
8. சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவது …………….. எனப்படும்.
9. தளை ………… வகைப்படும்.
10. தொடை …………. வகைப்படும்.
11. முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ……………….
12. இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது ……………..
13. இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது ……………..
14. பா ……………… வகைப்படும்.
15. வெண்பா ……………….. உடையது.
16. ஆசிரியப்பா ………………. உடையது.
17. கலிப்பா …………… ஓசை உடையது.
18. வஞ்சிப்பா ……………… ஓசை உடையது.
19. கலித்தொகை …………….. ஆனது.
20. அடி …………….. வகைப்படும்.
Answer:
1. யாப்பு இலக்கணம்
2. ஆறு
3. மூன்று
4. அசை
5. இரண்டு
6. சீர்
7. நான்கு
8. தளை
9. ஏழு
10. எட்டு
11. மோனை
12. எதுகை
13. இயைபு
14. நான்கு
15. செப்பல் ஓசை
16. அகவல் ஓசை
17. துள்ளல்
18. தூங்கல்
19. கலிப்பாவால்
20. ஐந்து
விடையளி :
1.செய்யுள் உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
- யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு. அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பனவாகும்.
2.யாப்பிற்குரிய எழுத்துகள் யாவை?
- யாப்பிற்குரிய எழுத்துகள் மூன்று. அவை
- குறில் – உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
- நெடில் – உயிர்நெடில், உயிர்மெய் நெடில்
- ஒற்று – மெய்யெழுத்து, ஆய்த எழுத்து.
3.சீர் எத்தனை வகைப்படும்?
- அவை யாவை? சீர் நான்கு வகைப்படும். அவை ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர்.
4.தொடை என்பது யாது?
- செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும்.
5.தொடை எத்தனை வகைப்படும்? முதன்மையான தொடைகள் யாவை?
- தொடை எட்டு வகைப்படும். முதன்மையான தொடைகள் மோனை, எதுகை, இயைபு, அந்தாதித் தொடை