You are currently viewing 9th Social Science Civics Guide Lesson 6

9th Social Science Civics Guide Lesson 6

9th Social Science Civics Guide Lesson 6

9th Std Social Science | Civics Guide  Lesson 6 சாலை பாதுகாப்பு | Tamil Medium

9th Standard Social Science Civics Lesson 6 சாலை பாதுகாப்பு Book Back Answers. 9th Social Guide Geography Unit 6 சாலை பாதுகாப்பு Book Back Answers English Medium. 9 all Subject Book Answers. Class 9 Social Science All Unit Book in Answers TM & EM.

9th Social Science (History) Lesson -1 Book Back Answers

9th Social Science Civics Guide Lesson 6 சாலை பாதுகாப்பு

விடையளி

1. சாலை விபத்துக்கான பல்வேறு காரணிகள் யாவை?

ஓட்டுனர் :

அதிவேகம், கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்குதல், சாலைவிதிகளை மீறல், போக்குவரத்துக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளத் தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துவது.

பாதசாரிகள் :

கவனக்குறைவு, கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது.

பயணிகள் :

கரம் சிரம் புறம் நீட்டுவது, ஓட்டுநரிடம் பேசுவது, தவறான வழியில் வாகனத்தில் ஏறுவது இறங்குவது, படியில் பயணம் செய்வது, ஓடுகிற வண்டியில் ஏறுவது.

வாகனங்கள் :

வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது, டயர் வெடிப்பது, குறைவான வெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது.

சாலையின் நிலை :

குழிகள், சேதமடைந்த சாலை, ஊரக சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள அரிக்கப்பட்ட சாலை, சட்டத்துக்குப் புறம்பான வேகத்தடைகள்.

வானிலை :

மூடுபனி, பனி, கன மழை, புயல், ஆலங்கட்டி மழை.

2. விபத்தைத் தடுக்கும் முறைகள் பற்றி கூறுக

  1. சாலை விபத்தைப் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு.
  2. சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப் படுத்துதல்.
  3. தொழில்நுட்பம்: வாகன வடிவமைப்பு மற்றும் சாலை கட்டமைப்பு.

3. குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பை உறுதிசெய்யும் விதிகள் யாவை?

  1. சாலை பாதுகாப்புக் குறிகளைத் தெரிந்துகொள்.
  2. நில்! கவனி! செல்!
  3. கவனி – கேள்!
  4. சாலையில் ஓடாதீர்!
  5. எப்போதும் சாலையோரத்தைப் பயன்படுத்துவீர்!
  6. வாகனத்தின் வெளியே கையை நீட்டாதீர்!
  7. வளைவில் சாலையைக் கடக்காதீர்!
  8. அவசரப்படாதீர்!

4. இருக்கைப் பட்டை பயன் என்ன?

இருக்கைப் பட்டை பயன்படுத்துவதன் மூலம் சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பை 51% தடுக்கலாம்

5. சாலை விபத்தில் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணங்கள் எவை?

  1. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது (40%), அதிவேகம் (24%) வாகன எண்ணிக்கை அதிகரிப்பு (16%) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் (15%) மற்றும் தலைக்கவசம் மற்றும் இருக்கைப் பட்டையை குறைவாகப் பயன்படுத்துவது (5%).
  2. ஓட்டுநருக்கு ஏற்படும் கவனச்சிதைவு.
  3. சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது.
  4. தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது

6. சாலை விபத்து என்பது என்ன?

  • சாலை விபத்து என்பது திறந்தவெளி சாலையில் ஒரு வாகன விபத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் காயமடைவதையோ அல்லது இறப்பதையோ குறிக்கும்.
  • கொலை, தற்கொலை மற்றும் இயற்கை பேரிடர் போன்றவை சாலை விபத்தில் அடங்காது.

தலைக்கவசம் அணிவதன் நன்மைகள் யாவை?

தலைக்கவசம் அணிவதால் விபத்து ஏற்படும் பட்சத்தில் தலையில் காயம்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

7. சாலை சமிக்கையில் எந்தநிறம் நில் என்பதை உணர்த்துகிறது?

சாலை சமிக்கையில்  சிவப்பு நிறம் நில் என்பதை உணர்த்துகிறது

8. சாலை பாதுகாப்பு விதியை கூறுக

  • சாலையின் இடதுபுறம் வாகனத்தை செலுத்த வேண்டும்.
  • U-திருப்பம் இல்லாத இடங்களி வாகனத்தை திருப்பக் கூடாது.
  • குறுக்குசாலையில் வாகனத்தின் வேகத்தை குறைக்கவும்.

Leave a Reply