You are currently viewing 9th Tamil Guide Unit 7.4

9th Tamil Guide Unit 7.4

9th Tamil Guide Unit 7.4

9th Tamil 7th Lesson Samacheer Kalvi Guide | TNPSC | TET | Book Back & Additional Question and Answers

9th Standard Tamil Nadu Start Board Syllabus Unit 7.4 மதுரைக்காஞ்சி. Ninth Standard Tamil 7th Lesson Book Back and Additional Question and Answers. TN 9th All Unit Book Back and additional Answers for TNPSC, TNTET Exams. 9th Tamil Full Guide இயல் 1 to 9 Full Answers. Samacheer Kalvi 9th Tamil Book Solutions Guide Download Free PDF. 9th Tamil Full guide Book back Question and answer New syllabus ( TN TET, TNPSC ), Our https://www.studentsguide360.com/ website Update 9th Tamil New syllabus book back Questions and answer. 9th Tamil Free Online Test. Class 9 Full Study Materials.

  • 9th Tamil Guide Unit 7 – Full Guide – Click Here

9th Tamil Guide Unit 7

9th Tamil Samacheer Kalviuide Guide 7th Lesson – Unit 7.4 மதுரைக்காஞ்சி

7.4. மதுரைக்காஞ்சி

I. சொல்லும் பொருளும்
  • புரிசை – மதில்
  • அணங்கு – தெய்வம்
  • சில்காற்று – தென்றல்
  • புழை – சாளரம்
  • மாகால் – பெருங்காற்று
  • முந்நீர் – கடல்
  • பணை – முரசு
  • கயம் – நீர்நிலை
  • ஓவு – ஓவியம்
  • நியமம் – அங்காடி.
I. இலக்கணக்குறிப்பு
  • ஓங்கிய – பெயரெச்சம்
  • நிலைஇய – சொல்லிசை அளபெடை
  • குழாஅத்து – செய்யுளிசை அளபெடை
  • வாயில் – இலக்கணப் போலி.
  • மா கால் – உரிச்சொல் தொடர்
  • முழங்கிசை – வினைத் தொகை
  • இமிழிசை – வினைத் தொகை
  • நெடுநிலை – பண்புத் தொகை
  • முந்நீர் – பண்புத் தொகை
  • மகிழ்ந்தோர் – வினையாலணையும் பெயர்

II. பகுபத உறுப்பிலக்கணம்

1. ஆழ்ந்த = ஆழ் + த்(ந்) + த் + அ
ஆழ் – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
2. ஓங்கிய = ஓங்கு + இ(ன்) + ய் + அ
ஓங்கு – பகுதி;
இ(ன்) – இறந்தகால இடைநிலை
ய் – உடம்படுமெய்
அ – பெயரெச்ச விகுதி
3. மகிழ்ந்தோர் – மகிழ் + த்(ந்) + த் + ஓர்
மகிழ் – பகுதி;
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை;
ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

III. குறு வினா

மதுரைக்காஞ்சி –  பெயர்க்காரணத்தை குறிப்பிடுக
காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள். மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.

IV. சிறு வினா

“மாகால் எடுத்த முந்நீர்போல” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
  • இடம் : இத்தாெடர், மதுரைக் காஞ்சியில் இடம் பெற்றுள்ளது.
  • விளக்கம் : மதுரை நகரில் பல்வேறு ஒலிகள் எழுகின்றன. விழாவைப் பற்றி முரசறடிவாேர் முரசறைகின்றனர். அந்த முழக்கம் பெருங்காற்றுப் புகுந்த கடல் ஒலிபாேல் இருக்கிறது என்பது இத்ததாெடரின் கருத்து (மாகால் – பெருங்காற்று, முந்நீர் – கடல்)

மதுரைக்காஞ்சி – கூடல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. காஞ்சி என்றால் _____________ என்பது பொருள்.
விடை : நிலையாமை
2. மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத் தலைவன் _____________ 
விடை : தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
3. மதுரைக்காஞ்சியைப் பாடியவர் _____________
விடை : மாங்குடி மருதனார்
4. _____________ திருநெல்வேலி மாவட்ட மாங்குடி ஊரில் பிறந்தவர்.
விடை : மாங்குடி மருதனார்
5. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் _____________ பாடல்களைப் பாடியுள்ளார்.
விடை : 13
6. _____________ நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.
விடை : பத்துப்பாட்டு
7. மதுரைக்காஞ்சி _____________ அடிகளைக் கொண்டது.
விடை : 782
8. மதுரை மாநகரில் _____________ உள்ளது.
விடை : ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி
9. _____________ சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இடம் ஆகும்.
விடை : மதுரை

II. குறு வினா

1. காஞ்சி என்பதன் பொருள் யாது?
  • காஞ்சி என்பதன் பொருள் நிலையாமை ஆகும்.
2. எவை ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன?
  • பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.
3. எதனைக் கேட்ட மகள்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர்?
  • இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மை போல எழுவதினைக் கேட்ட மகள்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர்.
4. மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருப்பதை மதுரைக்காஞ்சியின் மூலம் எப்படி அறியலாம்?
  • “பொறிமயிர் வாரணம் …
  • கூட்டுறை வயமாப் புலியொடு குழும” (மதுரைக்காஞ்சி 673 – 677 அடிகள்) என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை
  • மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம்.
5. மதுரை பற்றி மதுரைக்காஞ்சியல் எத்தனை அடிகளில் சிறபித்துக் கூறுகின்றது?
  • மதுரைக்காஞ்சி 782 அடிகளைக் கொண்டது.
  • அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.
6. மதுரைக்காஞ்சியின் வேறு பெயர் யாது? அதன் பாட்டுத் தலைவன் யார்?
  • வேறு பெயர் – ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’
  • பாட்டுடைத் தலைவன் –  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
7. மாங்குடி மருதனார் குறிப்பு வரைக
  • மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
  • திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • எட்டுத்தொகையில் பதின்மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.

III. சிறு வினா

1. மதுரைக்காஞ்சி – குறிப்பு வரைக
  • பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.
  • காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
  • மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.
  • இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன . இதைப் ‘பெருகுவள மதுரைக்காஞ்சி’ என்பர்.
  • இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
2. மதுரையின் சிறப்பினை மதுரைக்காஞ்சியின் மூலம் மாங்குடி மருதனார் எவ்வாறு விவரிக்கிறார்
  • மதுரை மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது.
  • பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மதில் வானளவு உயர்ந்துள்ளது.
  • பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது. அவ்வாயில் நெய்பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளை உடையது.
  • மேகங்கள் உலாவும் மலைபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன.
  • இடைவிடாது ஓடுகின்ற வையை ஆற்றைப்போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.
  • மண்டபம், கூடம், அடுக்களை எனப் பல்வேறு பிரிவுகளைக்கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல் காற்று இசைக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன.
  • ஆறு போன்ற அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன.
  • விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது.
  • இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும் தன்மை போல எழுகிறது. அதனைக் கேட்ட மகள்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர்.
  • பெரிய தெருக்களில் இருக்கும் நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.

Leave a Reply