10th Geography Guide Unit 6 Book Answer
Unit 6. தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள்
10th Social Science – Geography Tamil Medium Book Back & Additional Question – Answers
10th social Science – Geography Unit 6. தமிழ்நாடு – இயற்கைப் பிரிவுகள் Book Back & Additional Question – Answers
10th Geography Guide Unit 6 Tamil Medium
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ………. முதல் ……………….. வரை உள்ளது.
அ) 8°4’வ முதல் 13°35’வ வரை
ஆ) 8°5’தெ முதல் 13°35’தெ வரை
இ) 8°0’வ முதல் 13°05’வ வரை
ஈ) 8°0’தெ முதல் 13°05’தெ வரை
விடை: அ) 8°4’வ முதல் 13°35’வ வரை
2.தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் …………………….. முதல் ………………… வரை உள்ளது.
அ) 76°18’கி முதல் 80°20’கி வரை
ஆ) 76°18’மே முதல் 80°20’மே வரை
இ) 10°20’கி முதல் 86°18’கி வரை
ஈ) 10°20’மே முதல் 86°18’மே வரை
விடை: அ) 76°18’கி முதல் 80°20’கி வரை
3.தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் …………….. ஆகும்.
அ) ஆனைமுடி
ஆ) தொட்டபெட்டா
இ) மகேந்திரகிரி
ஈ) சேர்வராயன்
விடை: ஆ) தொட்டபெட்டா
4.கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?
அ) பாலக்காடு
ஆ) செங்கோட்டை
இ) போர்காட்
ஈ) அச்சன்கோவில்
விடை: இ) போர்காட்
5.கீழ்க்க ண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?
அ) பெரியார்
ஆ) காவிரி
இ) சித்தார்
ஈ) பவானி
விடை: அ) பெரியார்
6.தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?
அ) இராமநாதபுரம்
ஆ) நாகப்பட்டினம்
இ) கடலூர்
ஈ) தேனி
விடை: இ கடலூர்
7.பின்னடையும் பருவக்காற்று ……………… லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.
அ) அரபிக்கடல்
ஆ) வங்கக் கடல்
இ) இந்தியப் பெருங்கடல்
ஈ) தைமுர்க்கடல்
விடை: ஆ வங்கக் கடல்
8.கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம் ………………..
அ) தேனி
ஆ) மதுரை
இ) தஞ்சாவூர்
ஈ) இராமநாதபுரம்
விடை: அ) தேனி
9.தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் ………………
அ) தர்மபுரி
ஆ) வேலூர்
இ) திண்டுக்கல்
ஈ) ஈரோடு
விடை: அ) தர்மபுரி
10th Geography Guide Unit 6 Tamil Medium
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி ……………. ஆகும்.
விடை:கோயம்புத்தூர் பீடபூமி
2.கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் …………….. ஆகும்.
விடை:சோலைக்கரடு
3.ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் ……………. மற்றும் ……………. ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
விடை:கொள்ளிடம், காவிரி
4.………………. தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.
விடை:நீலகிரி வரையாடு
III. பொருத்துக .
- 1. குளிர்காலம் – முன் பருவ மழை
- 2. கோடைக்காலம் – ஜூன் முதல் செப்டம்பர் வரை
- 3. தென்மேற்கு பருவக்காற்று – மார்ச் முதல் மே வரை
- 4. வடகிழக்கு பருவக்காற்று – டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
- 5. மாஞ்சாரல் அக்டோபர் முதல் நவம்பர் வரை
விடை ; 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-உ, 5-அ
10th Geography Guide Unit 6 Tamil Medium
IV. கூற்று வகை வினா.
1.கூற்று : தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிக மழையைப் பெறுவதில்லை
காரணம் : இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை: அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1.தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக.
- கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே கேரளாவும், வடக்கே ஆந்திர பிரதேசமும், வடமேற்கே கர்நாடகாவும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன.
- மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ச்சந்தி தமிழ்நாட்டையும், இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன.
2.‘தேரீ” – என்றால் என்ன?
- இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் ‘தேரி’ என்று அழைக்கப்படுகிறது.
3.கடற்கரைச் சமவெளி எவ்வாறு உருவாகிறது?
- ஆறுகளின் படிவு, கடல் அலைகளின் அரிப்பு மற்றும் படிதல் ஆகியவற்றால் கடற்கரை சமவெளி உருவாகிறது.
4.தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.
- பாம்பன், முயல்தீவு, குருசடை, நல்லதண்ணி தீவு, பள்ளி வாசல், ஸ்ரீரங்கம், உப்புதண்ணித் தீவு, தீவுத்திடல், காட்டுப்பள்ளித் தீவு, குவிப்பில் தீவு மற்றும் விவேகானந்தர் நினைவுப் பாறை ஆகியன தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள் ஆகும்.
5.தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக.
- காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமந்தி ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.
6.பேரிடர் அபாய நேர்வு – வரையறு.
- உயிர்களுக்கும், உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிவுதான் பேரிடர் எனப்படுகிறது.
- ஐக்கிய நாடுகள் சபையின் அபாய நேர்வு குறைப்பு அமைப்பின், கூற்றுப்படி அபாய குறைப்பு என்பது பேரிடருக்கான காரணங்களை முறையாக கண்டறிந்து பேரிடரின் போது அதன் தாக்கங்களைக் குறைப்பதாகும்.
7.புயலின்போது வானிலை மையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது?
- மீனவர்கள் கூடுதலான மின்சாதனங்களுடன் (பேட்டரிகள்) ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.
- இக்காலங்களில் கடலுக்குச் செல்வதை தவிர்த்து, படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
VI. வேறுபடுத்துக.
1.தாமிரபரணி மற்றும் காவிரி
தாமிரபரணி
- தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது.
- திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.
- காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமநதி ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.
காவிரி
- காவிரி ஆறு தலைக்காவேரியில் கூர்க் மாவட்டத்திலுள்ள கர்நாடகாவில் என்னும் உற்பத்தியாகிறது
- இது சேலம், ஈரோடு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் வழியாக பாய்கிறது
- பவானி, அமராவதி மற்றும் நொய்யல் ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.
10th Geography Guide Unit 6 Tamil Medium
VII. கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.
1.கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.
- வங்காள விரிகுடாவிலிருந்து பிரியும் ஆறுகளால் பல இடங்களில் பிரிக்கப்படுகிறது. மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் இதைப் பிரிப்பதால் இவை தொடர்ச்சியற்றவை.
2.தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த மழையைப் பெறுகிறது.
- அரபிக் கடலிலிருந்து வீசும் காற்றின் மழைமறைவுப் பகுதியில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் குறைந்த மழையைப் பெறுகிறது.
3.கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்.
- வெள்ளம், சூறாவளி போன்ற பல பாதிப்புகளுக்கு கடலூர் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே கடலூர் பல்வழி பேரழிவு மண்டலம் எனப்படுகிறது.
VIII. பத்தி அளவில் விடையளிக்கவும்.
1.தமிழ்நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்.
- தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது.
- ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
- இதன் உயரம் கிழக்கிலிருந்து மேற்காக உயர்ந்து செல்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 150 மீட்டர் முதல் 600 மீட்டர் உயரம் வரை வேறுபட்டு காணப்படுகிறது.
- தமிழ்நாட்டின் வட மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பாரமஹால் பீடபூமியானது மைசூர் பீடபூமியின் ஒரு பகுதியாகும்.
- இதன் உயரம் சுமார் 350 மீட்டர் முதல் 710 மீட்டர் வரை காணப்படுகிறது. இந்தப் பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.
- கோயம்புத்தூர் பீடபூமி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இதன் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபடுகிறது.
- இப்பீடபூமி சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
- மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூரிலிருந்து இருந்து பிரிக்கிறது.
- மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீட பூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன.
- நீலகிரி பகுதிகளில் பல மலையிடை பீடபூமிகள் காணப்படுகின்றன. சிகூர் பீடபூமி அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- மதுரை பீடபூமி, மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது. இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது.
- வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலப் பகுதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.
2.காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
- காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி 850 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.
- தமிழ்நாட்டில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக உள்ளது.
- ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
- பவானி ஆறு இதன் துணையாறாக வலதுகரையில் காவிரியுடன் இணைகிறது.
- பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது,
- கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணைகின்றன.
- இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், இது அகன்ற காவிரி என அழைக்கப்படுகிறது.
- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.
- இவ்விரு கிளைகள் இணைந்து “ஸ்ரீரங்கம் தீவை” உருவாக்குகின்றன. கிராண்ட் அணைகட் என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
- காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு ‘தென்னிந்தியாவின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
- பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது.
3.தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்.
குளிர்காலம்:
- ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்துக்கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
- இக்காலத்தில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன.)
- ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது.
- தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது. இருந்தபோதிலும் மழைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°க்கும் குறைவாக உள்ளது.
- நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0°C ஆகவும் பதிவாகிறது.
கோடைக்காலம்:
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்துக்கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.
- பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகம், கடக ரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது.
- பொதுவாக வெப்பநிலையானது 30°C லிருந்து 40°C வரை வேறுபடுகிறது. இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன்பருவ மழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.
4.தமிழ்நாட்டில் உள்ள மண் வகைகளின், பரவல் பற்றி விளக்குக.
தமிழ்நாட்டின் மண் வகைகள்:
- தமிழ்நாட்டில் காணப்படும் மண்களை அதன் தன்மைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம். அவை
- வண்டல் மண்,
- கரிசல் மண்,
- செம்மண்,
- சரளை மற்றும்
- உவர் மண்.
வண்டல் மண்:
- வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றன. தமிழ்நாட்டின் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது.
- சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், நைட்ரஜன் மற்றும் பாஸ்போரிக் அமிலம் ஆகிய தாதுக்களைக் கொண்டுள்ளதால் வண்டல் மண் ஒரு வளம் மிகுந்த மண்ணாகும்.
- இம்மண்ணில் நைட்ரஜன் மற்றும் இலைமக்குகள் குறைவாக உள்ளன. இது நுண்துளைகள் மற்றும் களிமண் கலந்த மண் ஆகும். நெல், கரும்பு, வாழை மற்றும் மஞ்சள் போன்ற பயிர்கள் இம்மண்ணில் பயிரிடப்படுகின்றன.
- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது.
கரிசல் மண்:
- தீப்பாறகைள் சிதைவடைவதன் மூலம் கரிசல் மண் உருவாகிறது.
- இது ரெகூர் மண் என்றும் அழைக்கப்படுகிறது.
- இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் பருத்தி மண் என்றும் அழைக்கப்படுகறிது.
- கோயம்புத்தூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கரிசல் மண் பெருமளவில் காணப்படுகிறது.
செம்மண்:
- தமிழ்நாட்டில் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு செம்மண் பரவியுள்ளது.
- இவை குறிப்பாக மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
- செம்மண் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.
சரளை மண் :
- சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது.
- இவை வளமற்ற மண்ணாகும்.
- காஞ்சிபுரம் திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண் காணப்படுகிறது.
உவர் மண்:
- தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது.
- சுனாமியினால் ஏற்பட்ட சுனாமி அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் படிய வைத்துள்ளன.
- இதனால் கடற்கரையில் சில பகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை .
5.புயலுக்கு முன்னரும் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை எழுதுக.
- வதந்திகளை நம்பாமல் அமைதியாகவும் பதற்றமடையாமலும் இருத்தல், அலைபேசிகள் மின்னூட்டம் செய்யப்பட்டதை உறுதி செய்து குறுஞ்செய்திகளை பெறுதல்.
- வானொலி மற்றும் காணொளி பெட்டிகள் மூலம் அவ்வப்போதைய வானிலை நிலைமைகளைக் கேட்டு தெரிந்து கொள்ளல்.
- முக்கிய மற்றும் விலைமதிப்புள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா கொள்கலன்களில் பாதுகாப்பாக வைத்திருத்தல், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அவசரகால மூட்டைத்தொகுப்பை தயார் நிலையில் வைத்திருத்தல், குடியிருப்பு பாதுகாப்பாக இருப்பதையும் சரி செய்வதையும் உறுதி செய்தல், கூர்மையானப் பொருட்கள் வெளிப்பகுதிகளில் இல்லாமல், கால்நடைகள் செல்ல மற்றும் கால்நடை பாதுகாப்பிற்காக அவற்றை அவிழ்த்து விடுதல் வேண்டும்.
- மீனவர்கள் கூடுதலான மின்சாதானங்களுடன் கூடிய பேட்டரிகள் ஒரு வானொலிப்பெட்டியை வைத்திருத்தல் வேண்டும்.
- இக்காலங்களில் கடலுக்குப் செல்வதை தவிர்த்து படகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
10th Geography Guide Unit 6 Tamil Medium
Additional Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் …………….. மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
அ) 13
ஆ) 23
இ) 31
ஈ) 27
விடை: அ) 13
2.மேற்குதொடர்ச்சி மலை …………….. சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உடையது.
அ) 1500
ஆ) 2500
இ) 5200
ஈ) 250
விடை: ஆ) 2500
3.……………… உயரமான சிகரம் அதனைத் தொடர்ந்து மற்றொரு சிகரம் முக்குருத்தி.
அ) தொட்டபெட்டா
ஆ) பகாசுரா
இ) வேம்படி சோலை
ஈ) கோட்டை மலை
விடை: அ) தொட்டபெட்டா
4.……………… மலை ஏலமலைக் குன்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
அ) பொதிகை
ஆ) ஏலக்காய்
இ) பழனி
ஈ) நீலகிரி
விடை: ஆ) ஏலக்காய்
5.……………. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
அ) கொடைக்கானல்
ஆ) ஏற்காடு
இ) மேல்பட்டு
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) ஏற்காடு
6.……………… குறிப்பிடத்தக்க வேளாண் பருவ விளைபொருளாக உள்ளது.
அ) மாம்பழம்
ஆ) ஆப்பிள்
இ) பலாப்பழம்
ஈ) அன்னாச்சி
விடை: இ பலாப்பழம்
7.……………. சமவெளி தமிழ்நாட்டிலுள்ள வளமான சமவெளிகளுள் ஒன்றாகும்.
அ) காவிரி
ஆ) பவானி
இ) நொய்யல்
ஈ) அமராவதி
விடை: அ) காவிரி
8.பாலாறு ……………..வின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.
அ) தமிழ்நாடு
ஆ) கர்நாடகா
இ) கேரளா
ஈ) ஆந்திரா
விடை: ஆ) கர்நாடகா
9.………………. இந்து சமய மக்களால் புனித நதியாகக் கருதப்படுகிறது.
அ) பெண்ணையாறு
ஆ) வைகை
இ) தாமிரபரணி
ஈ) போலார்
விடை: அ) பெண்ணையாறு
10.மத்திய மற்றும் வடமேற்கு தமிழகம் ……………… செ.மீ வரை மழையைப் பெறுகின்றன.
அ) 20-60
ஆ) 50-100
இ) 60-90
ஈ) 100-150
விடை: ஆ) 50-100
11.தேசிய வளக்கொள்கை செயல்படுத்தப்பட்ட ஆண்டு …………………
அ) 1999
ஆ) 1888
இ) 1989
ஈ) 1988
விடை: ஈ) 1988
12.வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் உள்ள மரங்கள் …………… மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை.
அ) 25
ஆ) 30
இ) 63
ஈ) 90
விடை: ஆ) 30
கோடிட்ட இட ங்களை நிரபுக.
1.……………… மற்றும் …………….. தமிழ்நாட்டையும் இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இலங்கையையும் பிரிக்கின்றன.
விடை:மன்னார் வளைகுடா, பாக் நீர்ச்சந்தி
2.மேற்கு தொடர்ச்சி மலையின் உயரம் …….. வரை ஆகும்.
விடை:2000 மீட்டர் – 3000 மீட்டர்
3.ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகள் …………….. மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன.
விடை:ஆனைமலை
4.மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சி ……….. மற்றும் ………. குன்றுகள் ஆகும்.
விடை:வருசநாடு, ஆண்டிப்பட்டி
5.கல்வராயன் மலை தொடரின் உயரம் …………….. வரை காணப்படுகிறது.
விடை:600 மீ முதல் 1220 மீ
6.கல்வராயன் என்ற சொல் ……………… என்ற சொல்லிருந்து பெறப்பட்டது.
விடை:கரலர்
7.…………….. கொல்லிமலையில் அமைந்துள்ள முக்கியமான புனிதத் தலமாகும்.
விடை:அரப்பளிஸ்வரர் கோவில்
8.காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள வலைப்பின்னல் அமைப்பு …………… என அழைக்கப்படுகிறது.
விடை:தென்னிந்தியாவின் தோட்டம்
9.சூரியனின் செங்குத்துக் கதிர்கள் …………….. மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
விடை:பூமத்திய ரேகைக்கும்
10.வால்பாறைக்கு அருகிலுள்ள சின்னக்கல்லார் இந்தியாவின் …………….. அதிக மழை பெறும் பகுதியாக உள்ளது.
விடை:மூன்றாவது
10th Geography Guide Unit 6 Tamil Medium
கூற்று வகை வினா.
1.கூற்று : குளிர்க்காலத்தில் சூரியனின் சாய்வுக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் இடையே விழுகிறது.
காரணம் : குளிர்கால வெப்பநிலையானது 30°C/ – 40°C வரை மாறுபடுகிறது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை: ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
2.கூற்று : தமிழ்நாடு ஒரு வெப்ப மண்டலத்திலுள்ள மாநிலம்.
காரணம் : கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக காட்டுத் தீ ஏற்படுகிறது.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு.
விடை: அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
சுருக்கமாக விடையளிக்கவும்.
1.தமிழ்நாட்டின் கடைக்கோடிப் பகுதிகள் யாவை?
- கிழக்கில் கோடியக்கரையும்
- மேற்கில் ஆனைமலையும்
- வடக்கில் பழவேற்காடு ஏரியும்
- தெற்கில் குமரிமுனையும் அமைந்துள்ளன.
2.தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பின் சிறப்பு அம்சங்கள் யாவை?
- தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது.
- இப்பகுதி கிரெட்டேசியஸ் காலத்தில் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியிலிருந்து உருவான ஒரு பகுதியாகும். தமிழ்நாடானது நிலத்தோற்றத்தின் அடிப்படையில் மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சிமலை, கடற்கரைச் சமவெளிகள் மற்றும் நாட்டுச் சமவெளிகள் என ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
3.தமிழ்நாட்டில் கடற்கரையின் வகைகளைக் குறிப்பிடுக.
- வங்காள விரிகுடாக் கடலையொட்டிய சோழமண்டலக் கடற்கரை பல அழகான மற்றும் சிறப்புவாய்ந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது.
- தமிழ்நாட்டில் தங்க மணல் கடற்கரை பகுதியில் பனை மரங்களும், சவுக்குத் தோப்புகளும் பரவலாகக் காணப்படுகின்றன.
- சென்னையின் மெரினா மற்றும் எலியட் கடற்கரைகளும் கோவளம் (காஞ்சிபுரம்) மற்றும் வெள்ளி கடற்கரை (கடலூர்) ஆகியவை புகழ்பெற்ற தமிழக கடற்கரையாகும்.
4. இயற்கைப் பேரிடர் என்றால் என்ன?
- உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இயற்கையினால் ஏற்படும் பேரழிதான் பேரிடர் எனப்படுகிறது.
6.நிலச்சரிவு வரையறு.
- மலைகள் அல்லது குன்றுகள் ஒரு பகுதியோ அல்லது பாறைகளோ சரிந்து வீழ்தல் நிலச்சரிவு எனப்படுகிறது.
- கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் நிலச்சரிவுக்கு உள்ளாகும் மற்ற பகுதிகளாகும்.
7.நீர் சேகரிப்பதற்கான சில வழிமுறைகள் யாவை?
- நீர் மாசுபடுதலைத் தடுத்தல், நீர் மறுசுழற்சி, சிக்கனமான நிலத்தடி நீர் பயன்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, மரபுவழி நீர்வளங்களைப் புதுப்பித்தல், காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், பயிரிடும் முறைகளை மாற்றுதல், வெள்ளப்பெருக்கு மேலாண்மை, புவி வெப்ப நீர் பயன்பாடு ஆகியன நீர்வளத்தை பாதுகாக்கும் சில வழிமுறைகள் ஆகும்.
கீழ்க்கண்டவற்றிற்க்கு காரணம் கூறுக.
1.கடல் பாதுகாப்பு மேலாண்மையில் சதுப்பு நிலத் தாவரங்கள் முக்கிய பங்கு வக்கிறது.
- சதுப்பு நிலத் தாவரங்கள் புயலின் பாதிப்பிலிருந்து கடற்கரைப் பகுதிகளையும், பவளப்பாறைகள், புல்வெளிகளை வேரின் மூலம் பாதுகாக்கிறது.
2.வெப்பமண்டல முட்புதர்க்காடுகள் குறைந்த மழையைத் தருகின்றன.
- வெப்பமண்டல முட்புதர்க்காடுகள் 400 மீட்டர் உயரத்திற்கு மேலுள்ளதால் குறைந்த மழையைத் தருகின்றன.
பத்தி அளவில் விடையளிக்கவும்.
1.தமிழகத்தில் உள்ள காடுகள் ஏதேனும் மூன்றினைப் பற்றி விவரி?
காடுகளின் வகைகள் :
- வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்
- மிதவெப்பமண்டல மலைக்காடுகள்
- வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள்
- வெப்பமண்டல பசுமை மாறாக் காடுகள்
- இவ்வகைக்காடுகள் அதிக மழைபெறும் பகுதிகளில் காணப்படுகின்றன.
- இவை அடர்ந்த மற்றும் மரக்கிளை அடுக்குகள் கொண்டதாக காணப்படுகின்றன.
- திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவுகளில் இவை காணப்படுகிறது.
- இலவங்க மரம், மலபார், கருங்காலி மரம், பனாசமரம், ஜாவாபிளம், ஜமுன், பலா மருது, அயனி, கிராப் மிர்ட்டல் போன்றவை இக்காடுகளில் காணப்படும் முக்கிய மர வகைகளாகும்.
- அரை பசுமைமாறாக் வகைக் காடுகளானது உப அயனமண்டலக் காலநிலை நிலவும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
- சேர்வராயன் மலை, கொல்லி மலை, பச்சை மலை ஆகியன இவ்வகை காடுகள் காணப்படும் முக்கிய பகுதிகள் ஆகும்.
- இந்திய மகோகனி, குரங்கு, தேக்கு, உல்லி காசியா, பலா மற்றும் மா மரங்கள் ஆகியன இப்பகுதியில் காணப்படும் முக்கிய மரங்களாகும்.
- மித வெப்பமண்டல மாறாக் காடுகள்:
- இவ்வகை காடுகள் ஆனைமலை, நீலகிரி மற்றும் பழனி மலைகளில் சுமார் 1,000 மீட்டர் உயரமான பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் காணப்படுகின்றன.
- இவ்வகை காடுகள் சோலாஸ் அழைக்கப்படுகிறது. இவ்வகை காடுகளில் மரங்கள் பொதுவாக குறைந்த உயரத்துடன் பசுமையாகக் காணப்படுகின்றன.
- பொதுவாக நீலகிரி, சாம்பா, வெள்ளைலிட்சா, ரோஸ் ஆப்பிள் போன்ற மரங்கள் இக்காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.
- வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள்:
- இவ்வகைக்காடுகள் பசுமைமாறாக் காடுகள் மற்றும் அரை பசுமைமாறாக் காடுகளின் விளிம்புப் பகுதிகளில் காணப்படுகின்றன.
- இக்காடுகளில் உள்ள மரங்கள் கோடை பருவங்களில் தங்களது இலைகளை உதிர்த்து விடுகின்றன.
- இக்காடுகளில் உள்ள மரங்கள் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன.
- பருத்திப் பட்டு மரம், இலவம், கடம்பா, டாகத், தேக்கு, வாகை, வெக்காளி மரம் மற்றும் சிரஸ் போன்றவை இங்கு காணப்படும் முக்கிய மர வகைகளாகும். மூங்கில்களும், இக்காடுகளில் காணப்படுகிறது.
- இக்காடுகளில் காணப்படும் சில மரவகைகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.