10th Social science Guide Economics Unit 5

10th Social science Guide Economics Unit 5

10th Social Science – Economics Guide Unit 5 Book Answer

Unit 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

10th Social Science – Economics Tamil Medium Book Back & Additional Question – Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide Economics – Samacheer Kalvi Tamil Medium Full Guide. SSLC Economics Unit 5 Answers. 10th Social Science Civics  5th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide Unit 5. தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science – Economics Unit 5. தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back & Additional Question – Answers

10th Social science Guide Economics Unit 5

 I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ……………………..

அ) தூத்துக்குடி
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) மதுரை

விடை: இ) சென்னை

2.குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ………………

அ) சேலம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) தருமபுரி

விடை: ஆ) கோயம்புத்தூர்

3.……………….. என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.

அ) வேளாண்மை
ஆ) தொழில்
இ) இரயில்வே
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

விடை: ஆ) தொழில்

4.திருப்பூர் ………………. தொழிலுக்கு பெயர்பெற்றது.

அ) தோல் பதனிடுதல்
ஆ) பூட்டு தயாரித்தல்
இ) பின்னலாடை தயாரித்தல்
ஈ) வேளாண் பதப்படுத்துதல்

விடை: இ பின்னலாடை தயாரித்தல்

 5.…………….. இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.

அ) ஓசூர்
ஆ) திண்டுக்கல்
இ) கோவில்பட்டி
ஈ) திருநெல்வேலி

விடை: அ) ஓசூர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் …………………. மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது.

விடை: வேலூர்

2.சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ……………ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

விடை: ஏப்ரல் 2000

3.………. என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.

விடை: தொழில் முனைவோர்

III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.

 1.பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?

அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) ஆம்பூர்
ஈ) வாணியம்பாடி

விடை: ஆ) தர்மபுரி

2.பின்வருவனவற்றில் எது தொழில் துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?

அ) TIDCO
ஆ) SIDCO
இ) MEPG
ஈ) SIPCOT

விடை: இ MEPG

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக .

  • 1. தொழில்முனைவோர் – ஏற்றுமதி செயலாக்க மண்டலம்
  • 2. MEPZ – கோயம்புத்தூர்
  • 3. இந்திய ஒழுங்குமுறை – அமைப்பாளர் தொழிற்சாலை
  • 4. TNPL – அரவங்காடு
  • 5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கரூர்
விடை 1-இ , 2-அ, 3-ஈ, 4-உ, 5- ஆ

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

1.விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?

  • நிலத்தின் உற்பத்தித்திறன் குறைந்து வருவதால் விவசாயத் துறையில் தொழிலாளர் ஊதியம் குறைவாக உள்ளது.
  • நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் விவசாயத் துறையில் நில உற்பத்தித்திறன் அதிகரிக்க முடியாது.

2.தொழில் துறை தொகுப்பு என்றால் என்ன?

  • தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.

3.தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?

  • தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
  • ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
  • கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

4.தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.

  • தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT)
  • தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.
  • தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)
  • சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.
  • தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது (TANSI)
  • சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

5.தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?

  • வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது.
  • இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது.
  • உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது. பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவதால் குறைகிறது.

6.தொழில்முனைவோர் என்பவர் யாவர்?

  • ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
  • இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தலைமைக்குத் தேவையான பண்புகளும் இருக்கும்.

7.தொழில்முனைவு என்றால் என்ன?

  • தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் qமுனைவு எனப்படும்.
  • இவை ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

1.வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?

  • வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு:
  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்.
  • துறை சார்ந்த சிறப்பு கவனம்.
  • நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்.
  • புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.
  • நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்.
  • பல்வேறு திறமையான தொழிலாளர்கள்.
  • சுய உதவி குழுக்கள் செயல்படுதல்.
  • வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.

2.தமிழ்நாட்டின் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக.

  • இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது.
  • காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.
  • நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது.
  • ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.
  • திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.
  • இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.
  • இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது.
  • மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.
  • வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.
  • பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.
  • நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன.

3.தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.

கல்வி:

  • திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.
  • நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

உள்கட்டமைப்பு:

  • மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.
  • மின்சார விநியோகம் மட்டுமல்லாது தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.
  • குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது.

தொழில்துறை ஊக்குவிப்பு:

  • சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்த பகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

4.தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.

தொழில் முனைவோரின் பங்கு:
  • நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கியமானதாகும்.
  • தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறார்கள்.
  • இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தி மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.
  • குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தை செயல்பட வைக்கிறார்கள்.
  • தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
  • தொழில் முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர். இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.

10th Social science Guide Economics Unit 5

Additional Questions and Answers ( TNPSC, TN TET, TRB )

சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.தொழில்துறைத் தொகுப்பு ……………. வளர்ந்தது.

அ) 1915
ஆ) 1930
இ) 1920
ஈ) 1945

விடை: இ 1920

 2.…………….. தொழில் தொகுப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.

அ) டெக்ஸ்டைல்ஸ்
ஆ) பில்டிங்
இ) கைத்தறி நெசவுத் தொழில்
ஈ) ஏதுமில்லை

விடை: இ) கைத்தறி நெசவுத் தொழில்

 3.தோல் உற்பத்தி நடைபெறுமிடம் …………… ஆகும்.

அ) கோயம்புத்தூர்
ஆ) வேலூர்
இ) திருச்சி
ஈ) நாமக்கல்

விடை: ஆ) வேலூர்

4.திருச்சிராப்பள்ளியில் உள்ள BHEL நிறுவனம் ………….. தயாரிக்கிறது.

அ) தொட்டிகள்
ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்
இ) ரயில் பெட்டிகள்
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்

5.…………………. சேலம் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது.

அ) 1920
ஆ) 1973
இ) 1937
ஈ) 1945

விடை: ஆ) 1973

6.1990ல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ………….. தொழில்மயமாதலின் இறுதி கட்டம்.

அ) முன் காலகட்டம்
ஆ) பிந்தைய காலகட்டம்
இ) நவீன காலகட்டம்
ஈ) எதுவுமில்லை

விடை: ஆ) பிந்தைய காலகட்டம்

7.தொழிற்சாலைகளை அதிகளவு கொண்ட மாநிலம் ……………….. ஆகும்.

அ) கேரளா
ஆ) கர்நாடகா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரப் பிரதேசம்

விடை: இ தமிழ்நாடு

8.ஈரோடு (ம) சேலம் பகுதியில் அதிகளவு மின்தறி அலகுகள் இருப்பதால் ……………… பரவலாக உள்ளது.

அ) தீப்பெட்டி
ஆ) கட்டுமானம்
இ) மின்விசைத்தறித்தொழில்
ஈ) நெசவுத் தொழில்

விடை: இ மின்விசைத் தறித்தொழில்

9.பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்திட்ட பங்கினை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினை ……………. கொண்டுள்ளது.

அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருப்பூர்
ஈ) தஞ்சை

விடை: இ திருப்பூர்

10.……………… அரைக்கோளத்திலுள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் எனப்படுகின்றது.

அ) கிழக்கு
ஆ) மேற்கு
இ) வடக்கு
ஈ) தெற்கு

விடை: ஈ) தெற்கு

11.வீட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையம் …………….. ஆகும்.

அ) ஈரோடு
ஆ) சேலம்
இ) கரூர்
ஈ) எதுவுமில்லை

விடை: இ கரூர்

12.வேலூர் ……………… ஏற்றுமதியின் சிறந்து விளங்குகிறது.

அ) வீட்டுப்பொருள்
ஆ) விசைத்தறி
இ) தோல்
ஈ) எதுவுமில்லை

விடை: இ தோல்

13.……………. போக்குவரத்திற்கு சிறந்தது.

அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) அ) (ம) ஆ)
ஈ) எதுவுமில்லை

விடை: அ) தமிழ்நாடு

14.TIDCO ………………. தொடங்கப்பட்டது.

அ) 1949
ஆ) 1971
இ) 1965
ஈ) 1956

விடை: இ 1965

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.…………….. என்பது புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைக்கும் புத்தாக்கம் புனைபைவர் ஆவார்.

விடை:தொழில் முனைவோர்

2.……………… ஒன்றை உருவாக்குவதற்கும் பெரிதுபடுத்துவதற்கான திறனாகும்.

விடை:தொழில் முனைவு

3.ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ……………. தொடங்கப்பட்டது.

விடை:ஜனவரி 16, 2016

4.…………….. என்பது சென்னையில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.

விடை:MEPZ

5.MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த ……………. GST சாலையில் அமைந்துள்ளது.

விடை:தாம்பரம்

6.திறமை வாய்ந்த மனிதவளங்கள் ………… தேவைப்படுகின்றன.

விடை:தொழிற்சாலைக்கு

7.…………….. தொழிற்சாலையும், வேலைவாய்ப்பையும் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விடை:தோல் உற்பத்தி

8.50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு ………………. முக்கிய மையமாகத் திகழ்கிறது.

விடை:கரூர்

9.மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையும் நிறைவேற்றுமிடம் ……………… எனப்படும்.

விடை:தொழிற்சாலை

10.வருமானம் அதிகரிப்பு ………….. தேவைக்கு வழி வகுக்கிறது.

விடை:பண்டங்கள் (ம) பணிகளின்

தவறான ஒன்றினை தேர்வு செய்க.

1.…………… தீப்பெட்டி தொழிற்சாலைக்கு பெயர் பெற்ற இடமாகும்.

அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) சிவகாசி
ஈ) திருப்பூர்

விடை: இ சிவகாசி

2.…………. உள்நாட்டுப் போக்குவரத்துக்கு சிறந்த மாநிலமாகும்.

அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப்பிரதேசம்
இ) கேரளா
ஈ) கர்நாடகா

விடை: அ) தமிழ்நாடு

கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

1.மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் – வரையறு.

  • மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.
  • மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்துள்ளது.

2.தொழிற்சாலை வரையறு.

  • பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது.

3.தொழிற்சாலைகளின் வகைகள் யாவை?

  • பயனர்கள்
  • பயன்Question படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை
  • நிறுவன உரிமையாளர்கள்
  • அளவு

4.தொழில்மயமாதல் வரையறு.

  • நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.

5.ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் வரையறு.

  • ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும்.
  • இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

1.தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகளை விவரி.

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்:
  • 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.
தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்:
  • 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்:
  • நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – வரையறுக்கப்பட்டது:
  • புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது.
தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது:
  • சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

2.தமிழ்நாட்டின் முக்கிய தானியங்கி தொகுப்புகள் பற்றி விவரிக்க.

  • சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுகிறது.
  • சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது.
  • சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன.
  • பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட்
  • நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன.
  • எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது.
  • பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
  • கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.

Leave a Reply