11th Tamil Guide Unit 5

11th Tamil Guide Unit 5.3

11th Tamil Guide Unit 5.3

இயல் 5.3 அகநானூறு

Book Back | Additional Question and Answers

11th Tamil Samacheer kalvi guide Lesson 5. Unit 5.3 Book Back and Additional Question Answers.  இயல் 5.3 அகநானூறு. +1 Tamil All Lesson Book Answers. HSC First Year Tamil All Subject Guide for Tamil Nadu State Board Syllabus. Samacheer Kalvi Guide. 11th Tamil Guide, 11th Tamil Unit 5 Full Book Back Answers. 11th Tamil இயல் 1 to 8. பதினோராம் வகுப்பு தமிழ் இயல் 1 to 8 விடை குறிப்புகள். 11th All Subject Book Answers, 11th Tamil Free Online Test, TN 11th Tamil Book Back and Additional Question with Answers. Samacher Kalve Guide have 11th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Tamil Nadu Samacher Kalve. 11th All Important Study Materials. 11th Books Solutions. https://www.studentsguide360.com/
TN State Board New Syllabus Samacher Kalvee 11th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject. TNPSC, TNTET Materials. 11th Tamil Guide Unit 5 Full Answer Key

11th Tamil Guide Unit 5 Book Back and Additional Question – Answers இயல் 5.3 அகநானூறு

11th Tamil Guide Unit 5.1

பலவுள் தெரிக

 
1.சொல்லவந்த கரத்தை உள்ளுறை’ வழியாக உரைப்பது …………….. பாடல்களின் சிறப்பு.
அ) கலித்தொகை
ஆ) பரிபாடல்
இ) அகநானூறு
ஈ) புறநானூறு
Answer:
இ, அகநானூறு
 
2.‘அகநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை……………..
அ) 400
ஆ) 145
இ) 300
ஈ) 140
Answer:
ஆ) 145
 
3.அகநானூறு’,…………….. பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அ) இரண்டு
ஆ) ஐந்து
இ) மூன்று
ஈ) ஒரே நூல்
Answer:
இ) மூன்று
 
4.அகநானூற்றின் வேறு பெயர் ……………..
அ) அகப்பொருள்
ஆ) குறுந்தொகை
இ) பெருந்திணை
ஈ) நெடுந்தொகை
Answer:
ஈ) நெடுந்தொகை
 
5.தினைப்புனம் காப்பவள், ……………..எனக் குறிக்கப் பெற்றுள்ளாள்.
அ) தலைவி
ஆ) தோழி
இ) குறமகள்
ஈ) செவிலித்தாய்
Answer:
இ) குறமகள்
 
6.சிறைப்புறமாக நின்ற தலைவனுக்குக் குறியிடம் (தலைவி உள்ள இடம்) சொன்னது ……………..
அ) செவிலி
ஆ) நற்றாய்
இ) தோழி
ஈ) எவரும் இல்லை
Answer:
இ) தோழி
 
7.சிறைப்புறம் நின்ற தலைவனுக்குத் தோழி கூறியதில் எப்பொருள் வெளிப்படுகிறது?
அ) உள்ளுறைப் பொருள்
ஆ) கருப்பொருள்
இ) உரிப்பொருள்
ஈ) இறைச்சிப்பொருள்
Answer:
ஈ) இறைச்சிப்பொருள்

குறுவினா

1.நெருங்கின, இரங்கி – உறுப்பிலக்கணம் தருக.
Answer:
நெருங்கின – நெருங்கு + இன் + அ
நெருங்கு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி.
இரங்கி – இரங்கு + இ
இரங்கு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.
கூடுதல் வினாக்கள்
2.அகநானூற்றின் பிரிவுகள் யாவை?
Answer:
அகநானூற்றின் பிரிவுகள் மூன்று.
அவை : களிற்றியானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை.
 
3.அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பு யாது?
Answer:
சொல்லவந்த கருத்தை, ‘உள்ளுறை’ வழியாக உரைப்பது, அகநானூற்றுப் பாடல்களின் சிறப்பாகும்.
 
4.‘உள்ளுறை’யைக் கவிஞர் எவ்வாறு கூறுவர்?
Answer:
உள்ளுறை பொதிந்த பாடலைப் பாடும் கவிஞர், சொல்லின் பயன்பாடு குறையாமல் கூறுவர்.
அவ்வாறு கூறும்போது, மரபின் நாகரிகம் குறைவுபடாது கூறவும் வேண்டும்.
அன்பை மறைக்கவும் வேண்டும்; பயன்பாடு கருதி வெளிப்படுத்தவும் வேண்டும்.
 
5.தோழியின் பொறுப்பு யாது?
Answer:
தலைவியைத் தலைவன் சந்திக்க வேண்டிய குறியிடத்துக் குறிப்பைப் பொதிந்து வெளியிடுவது தோழியின் பொறுப்பாகும்.
 
6.அகத்திணைகள் எத்தனை? அவை யாவை?
Answer:
அகத்திணைகள் ஐந்து.
அவை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலைத்திணைகள்.
 
7.சிறுபொழுதுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
சிறுபொழுதுகள் ஆறு.
அவை : காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை என்பன.
 
8.பெரும்பொழுதுகள் எத்தனை? அவை யாவை?
Answer:
பெரும்பொழுதுகள் ஆறு. அவை : கார், கூதிர், முன், பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன.
 
9.கருப்பொருள்கள் யாவை?
Answer:
தெய்வம், மக்கள், புள் (பறவை), விலங்கு, தார், நார், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் என்பன, கருப்பொருள்கள் ஆகும்.

சிறுவினா

 
1மேகத்திடம் கூறுவதுபோலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சிப் பொருள் யாது?
Answer:
மேகத்திடம் கூறுவதுபோலத் தோழி தலைவனுக்குக் குறியிடம் சொல்கிறாள்.
வேங்கைமலர் அணிந்து இன்விை, தோழியருடன் தழலை, தட்டை என்னும் கருவிகளைக்கொண்டு,
ஒலியெழுப்பிப் பறவைகளை ஓட்டிக்கொண்டு தினைப்புனம் காக்கின்றாள்.
அங்கே மழை பொழிவாயாக என்று மேகத்திடம் கூறுவதுபோல், தோழி குறிப்பால் உணர்த்துகிறாள்.
இதில் உணர்த்தப்படும் இறைச்சிப் பொருளாவது, தலைவி தினைப்புனம் காக்கும் இடத்துக்குத் தலைவன் சென்று சந்திக்கலாம் என்பதாகும்.

 

கூடுதல் வினாக்கள்

 
2.அகநானூறு – குறிப்பெழுதுக.
Answer:
அதம்+ நான்கு + நூறு = அகநானூறு. அகப்பொருள் குறித்து 145 புலவர்கள் பாடிய, நானூறு பாக்களைக் கொண்ட தொகுப்பு. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
இதனை அகம், நெடுந்தொகை எனவும் கூறுவர். இது களிற்றியானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது.
 
3.குறிஞ்சித்திணை – விளக்குக.
Answer:
‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ என்னும் உரிப்பொருளைக் கொண்ட அகப்பாடல், குறிஞ்சித் திணைக்குரியது. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும்.
‘யாமம்’ என்னும் சிறுபொழுதையும், குளிர்காலம், முன்பனிக்காலம்’ என்னும் பெரும்பொழுதுகளையும், தெய்வம், உணவு, ஊர், தொழில் முதலான கருப்பொருள்களையும் கொண்டமைவது, குறிஞ்சித் திணையாகும்.
 
4.‘இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது’ துறை – விளக்குக.
Answer:
இரவில் சிறைப்புறமாக வந்து நின்ற தலைவனுக்குத் தலைவியின் தோழி, இவ்வாறு இரவில் தலைவியைச் சந்திப்பது முறையன்று.
விரைவில் மணந்துகொள்க என்பதைக் குறிப்பினால் உணர்த்தி, அறிவுறுத்துவதாகும். இங்குத் தோழி மேகத்திடம் கூறுவதுபோல், தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.
 
5.மேகத்தை நோக்கித் தோழி கூறிய செய்தி யாது? அதனால் அறிவுறுத்தப்பட்டது யாது?
Answer:
“பெருங்கடலின் நீரை முகந்து எடுத்துச்செல்லும் மேகக்கூட்டமே! வானம் இருளும்படி நீ உலாவுகிறாய்! போர் முரசுபோல் முழங்குகிறாய்! போர்க்களத்தில், ஆற்றல்மிக்க போர்வீரர்கள் சுழற்றும் வாள்போல் மின்னுகின்றாய்!
நாள்தோறும் இடி முழக்கமும் மின்னலுமாகப் பயனின்றி வெற்று ஆரவாரம் செய்வாயா? அன்றி மழை பொழிவாயா?” எனத் தோழி வினவினாள்.
அதாவது, தலைவன் நாள்தோறும் வந்து, ஊர்மக்கள் அறிந்து பழிச்சொல் தூற்றுமாறு செயல்படுவ தனினும் விரைவாகத் தலைவியை மணந்து கொள்வது, நலம் எனக் குறிப்பாக அறிவுறுத்துகிறாள்.
 
6.தலைவியின் நிலை குறித்துத் தோழி கூறும் செய்தி யாது?
Asnwer:
தன் தோழியர் கூட்டத்தோடு, தலைவி மெல்ல மெல்ல நடந்து, தினை எப்புனம் சென்றுள்ளாள். அவள் அங்குத் தினை உண்ணவரும் பறவைகளைத் தழலை, தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு ஒலியெழுப்பி ஓட்டிக்
கொண்டிருப்பாள். கொழுந்து இலைகளைத் தழை ஆடையாக அணிந்து, தினைப்பனம் காக்கும் பகுதியில், மழையே நீ பொழிவாயாக” எனத் தோழி கூறி – தன் தலைவியின் இருப்பிட நிலையைத் தலைவனுக்கு உணர்த்தினாள். அதாவது, தலைவி தினைப்புனம் காக்கும் இடத்திற்குத் தலைவன் செல்லலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்.

 

கூடுதல் வினா

 
1)சிறைப்புறத்தானாகிய தலைவனுக்கு மேகத்திடம் கூறுவதுபோல் தோழி சொல்லியன யாவை?
Answer:
மேகக்கூட்டத்தின் ஆரவாரம் :
பெருங்கடல் நீரை முகந்து செல்லும் மேகக் கூட்டமே! வானம் இருளுமாறு நீ உலவுகிறாய்! போர்முரசுபோல் முழங்குகிறாய்! முறைமை தெரிந்து அறநெத்தி பிழையாத திறமையுடன் ஆளும் அரசனின் போர்க்களத்தில் ஆற்றல்மிக்க வீரர்கள் சுழற்றும் வாள்போல மின்னுகிறாய்!
தலைவனுக்கு அறிவுறுத்தல்
நாள்தோறும் இடிமுழக்கமும் பன்னலுமாகப் பயனின்றி வெறும் ஆரவாரம் செய்கின்றாயா, அன்றி மழை பொழிவாயா எனச் சிறைப்பறத்தரனாகிய தலைவன் கேட்குமாறு தோழி கூறினாள். அதாவது, தலைவன் நாள்தோறும் வருவதை வர்மக்கள் அறிந்து பழிச்சொல் பேசுமாறு செயல்படுவதாயினும், விரைவாகத் தலைவியை மணந்துகொள்வது நலம் எனக் குறிப்பாக அறிவுறுத்துகிறாள்.
தலைவி தெயல்
மலர்ந்த வேங்கை மலர்களைத் தொகுத்துக் கட்டி அணிந்து கொண்டிருக்கும் தோழியர் கூட்டத்தோடு, தலைவி மெல் தடந்து, தினைப்புனம் சென்றுள்ளாள். அவள் அங்குத் தினை உண்ணவரும் பறவைகளைத் தழலை தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு, ஒலியெழுப்பி ஓட்டிக் கொண்டிருப்பாள்.
இனைப்புனத்தில் மழை பொழிக :
செழுந்தீ போன்ற அசோகின் கொழுந்து இலைகளைத் தழைஆடையாக அணிந்து, தினைப்புனம் காக்கும் பகுதியில், மழையே நீ பொழிவாயாக எனத் தோழி கூறித் தன் தலைவியின் இருப்பிட நிலையைத் தலைவன் அறியுமாறு உணர்த்தினாள். அதாவது, தலைவி தினைப்புனம் காக்கும் இடத்திற்குத் தலைவன் செல்லலாம் என்பதைக் குறிப்பால் உணர்த்தினாள்.

 

இலக்கணக் குறிப்பு

 
பெருங்கடல், அருஞ்சமத்து – பண்புத்தொகைகள்
முகந்த, எதிர்ந்த, மலர்ந்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
இரங்கி, சுழித்து – வினையெச்சங்கள்
பிழையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
அறிமன்னர், உயர் விசும்பு, எறிவாள் – வினைத்தொகைகள்
வளைஇ, அசைஇ – சொல்லிசை அளபெடைகள்
வாழிய – வியங்கோள் வினைமுற்று
அறன் (அறம்), திறன் (திறம்) – ஈற்றுப்போலிகள்

 

உறுப்பிலக்கணம்

 
1. இரங்கி – இரங்கு + இ
இரங்கு – பகுதி, இ – வினையெச்ச விகுதி.
2. கழித்து – கழி + த் + த் + உ
கழி – பகுதி, த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி.
3. மலர்ந்த – மலர் + த் (ந்) + த் + அ
மலர் – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
அ – பெயரெச்ச விகுதி.
4. பொலிந்த – பொலி + த் (ந்) + த் + அ
பொலி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடை நிலை,
அ – பெயரெச்ச விகுதி.
5. வாழிய – வாழ் + இய
வாழ் – பகுதி, இய – வியங்கோள் வினைமுற்று விகுதி.
6. புரிந்து – புரி + த் (ந்) + த் + உ
புரி – பகுதி, த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம், த் – இறந்தகால இடைநிலை,
உ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

 
1. பெருங்கடல் – பெருமை + கடல்
“ஈறுபோதல்” (பெரு + கடல்), “இனமிகல்” பெருங்கடல்)
2. ஆயமொடு – ஆயம் + ஒடு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (ஆயமொடு)
3. மின்னுடைக் கருவி – மின்னுடை + கருவி
“இயல்பினும் விதியினும் நிலை உயிர்முன் கசதப மிகும்” (மின்னுடைக் கருவி)

ஐந்திணை முதற்பொருளும் உரிப்பொருளும்
1. ‘குறிஞ்சித்திணை’
முதற்பொருள்
நிலம் : மலையும் மலை சார்ந்த இடமும்.
சிறுபொழுது : யாமம்
பெரும்பொழுது : கூதிர், முன்பனி.
கருப்பொருள்
தெய்வம் : முருகன்
மக்கள் : குறவர், குறத்தியர், கானவர்.
பறவை : கிளி, மயில்.
விலங்கு : புலி, கரடி, யானை, சிங்கம்
ஊர் : சிறுகுடி
நீர். : சுனைநீர், அருவி
மலர் : காந்தள், குறிஞ்சி, வேங்கை.
மரம் : அகில், சந்தனம், வேங்கை .
உணவு : தினை, மலைநெல், மூங்கிலரிசி.)
பறை : வெறியாட்டுப்பறை, தெரண்டகப்பறை.
பண் : குறிஞ்சிப்பண்
யாழ் : குறிஞ்சியாழ்
தொழில் : தேனெடுத்தல் காலங்ககழ்தல், வெறியாடல், நெல் விதைத்தல்.
உரிப்பொருள் : புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.
2. ‘முல்லைத்திணை’
முதற்பொருள்
நிலம் : காடும் காடுசார்ந்த இடமும்
சிறுபொழுது : மாலை
பெரும்பொறது) : கார்காலம்
கருப்பொருள்
தெய்வம் : திருமால்
மக்கள் : ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர்.
பறவை : கானக்கோழி
விலங்கு : முயல், மான்.
ஊர் : பாடி, சேரி.
நீர் : குறுஞ்சுனை, கானாறு
மலர் : முல்லை, குல்லை , பிடவம், தோன்றி.
மரம் : கொன்றை, குருந்தம், காயா.
உணவு : வரகு, சாமை, முதிரை.
பறை : ஏறுகோட்பறை
பண் : முல்லைப்பண் (சாதாரி)
யாழ் : முல்லையாழ்
தொழில் : வரகு விதைத்தல், களை பறித்தல், ஆநிரை மேய்த்தல், குழலூதல், காளை தழுவல்.
உரிப்பொருள் : இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
3.‘மருதத்திணை
முதற்பொருள்
நிலம் : வயலும் வயல்சார்ந்த இடமும்
சிறுபொழுது : காலை
பெரும்பொழுது : ஆறு பெரும்பொழுதுகளும்
கருப்பொருள்
தெய்வம் : வேந்தன்
மக்கள் : ஊரன், மகிழ்நன், கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைச்சார்.
பறவை : நாரை, குருகு, அன்னம், தாரா.
விலங்கு : எருமை, நீர்நாய்.
ஊர் : பேரூர், மூதூர்.
நீர் : ஆற்றுநீர், குளத்துநீர்.
மலர் : நெய்தல், தாமரை, கழுநீர்
மரம் : மருதம், வஞ்சி, காஞ்சி.
உணவு : செந்நெல், வெண்ணெல்.
பறை : நெல்லரிகிணை, மணமுழவு.
பண் : மருதப்பண்
யாழ் : மருதயாழ்
தொழில் : விழாச் செய்தல், வயலில் களைகட்டம் நெல்லரிதல்.
உரிப்பொருள் : ஊடலும் ஊடல் நிமித்தமும்,
 
4.‘நெய்தல்திணை’
முதற்பொருள்
நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்.
சிறுபொழுது : எற்பாடு
பெரும்பொழுது : ஆறு பெரும்பாழுதுகளும்
கருப்பொருள்
தெய்வம் : வானைல்
மக்கள் : பரதர பரத்தியர், நுளையர், நுளைச்சியர்.
பறவை : நீர்க்காக்கை
விலங்கு : பட்டினம், பாக்கம்.
நீர் : உவர்நீர்க்கேணி, உவர்க்கழி.
மலர் : தாழை, நெய்தல், புன்னை
மரம் : புன்னை , தாழை.
உணவு : மீனையும் உப்பையும் விற்றுப் பெறும் பொருள்.
பறை : மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை.
பண் : நெய்தல்பண் (செவ்வழி)
யாழ் : விளரியாழ்
தொழில் : மீன் பிடித்தல், உப்பு விற்றல்.
உரிப்பொருள் : இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.
5. பாலைத்திணை
முதற்பொருள்
நிலம் : சுரமும் சுரம் சார்ந்த இடமும்.
சிறுபொழுது : நண்பகல்
பெரும்பொழுது : வேனில், பின்பனி.
கருப்பொருள்
தெய்வம் – துர்க்கை
மக்கள் : காளை, விடலை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.
பறவை : கழுகு, பருந்து, புறா.
விலங்கு : செந்நாய், வலிமை இழந்த புலி.
ஊர் : குறும்பு
நீர் : நீர்வற்றிய சுனை
மலர் : பாதிரிப்பூ, மராம்பூ, குரா.
மலர் : பாலை, இலுப்பை, ஓமை.
உணவு : வழிப்பறி செய்த பொருள்.
பறை : போர்ப்பறை,
பண் : பாலைப்பண்
யாழ் : பாலையாழ்
தொழில் : நிரைகவர்தல், சூறையாடல், வழிப்பறி செய்தல்.
உரிப்பொருள் : பிரிதலும் பிரிதல் நிமித்தமும் ஆகும்.

Leave a Reply