You are currently viewing 12th Botany Lesson 3 Additional 5 Marks

12th Botany Lesson 3 Additional 5 Marks

12th Botany Lesson 3 Additional 5 Marks

12th Botany Lesson 3 Additional 5 Marks. TN 12th Standard Unit 7 Lesson 3 Additional 5 Marks Questions with Answer key Tamil Medium. TN Samacheer kalvi Guide +2 Bio Botany Tamil Medium Full Answer key. 12th Standard Botany 3rd Chapter Full Answer key Additional 3 Mark Question and Answers. Students Guide 360.

12th Botany Lesson 3. குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Additional 5 Marks

12th Botany Lesson 3 Additional 5 Marks

12th Botany Lesson 3 Additional 5 Marks

XIII. ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1. சைலின் லேட்டிபோலியா (மெலாண்ட்ரியம் ஆஸ்பம்) தாவரத்தில் காணப்படும் பால் நிர்ணயத்தை விளக்கு.

  • C.E.ஆலன் (1917) இல் தாவரங்களில் பால் நிர்ணயத்தை முதலில் கண்டறிந்தார்.
  • இதைத் தீர்மானிப்பது, மரபணு,சுற்றுச்சூழல், ஹார்மோன்கள்
  • சைலின் லேட்டிபோலியாவின் பால் நிர்ணயம் 3 தனிப்பட்ட பகுதிகளினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • Y குரோமோசோம் – ஆண் பாலினம்
  • X குரோமோசோம் – பெண் பாலினம்
  • X மற்றும் Y குரோமோசோம்களில் வேறுபட்ட துண்டுகள் (i, ii, iii, iv, v) காணப்படுகின்றன.

2. பப்பாளி (காரிகா பப்பாயா) காணப்படும் பால் நிர்ணயத்தை விவரி.

காரிகா பப்பாயா = 2n = 36

ஆண் தாவரம்

பெண் தாவரம்

17 இணை உடல் குரோமோசோம்கள் X, Y பால் குரோமோசோம்கள் Y குரோமோசோம்-ஆண் இன உறுப்பு வளர்ச்சிக்கான மரபணுக்களையும் கொண்டுள்ளது.

17 இணை உடல் குரோமோசோம்கள் X, X பால் குரோமோசோம்கள் X குரோமோசோம் - பெண் இன உறுப்பு வளர்ச்சிக்கான மரபணுக்களையும் கொண்டுள்ளது.

  • பால் குரோமோசோம்கள் X – Y இவை உடல் குரோமோசோம்களிலிருந்து உருவானவை – இவை உடல் குரோமோசோம்களைப் போலவே காணப்படுகின்றன.

பப்பாளி (காரிகா பப்பாயா) காணப்படும் பால் நிர்ணயத்தை விவரி.

3. எஸ்பீரோகார்பஸில் பால் நிர்ணயத்தை விளக்குக.

  • முதல் முறை பால் நிர்ணயம் விளக்கப்பட்ட பிரையோ ஃபைட்டா தாவரம்
  • கேமீட்டோபைட் தாவரம், ஒரு மடிய தன்மை, மாற்றுப்புற அமைப்புடையது (ஆண், பெண், கேமிட்டகத் தாவரங்கள்)
  • ஸ்போரோபைட் தாவரம் – இருமடியத் தன்மையுடையது
  • ஆண் மற்றும் பெண் கேமீட்டகத் தாவரங்கள் – 8 குரோமோசோம்களைக் கொண்ட ஒரு மடிய உயிர்
  • ஆண், பெண் கேமிட்டத் தாவரங்களில் 7 குரோமோசோம்கள் ஒரே மாதிரியானவை.

பெண் கேமீட்டகத் தாவரம்

ஆண் கேமீட்டக தாவரம்

7 உடல் குரோமோசோம்கள் & X- குரோமோசோம் (பெரியது)

7 உடல் குரோமோசோம்கள் & X-குரோமோசோம் (சிறியது)

ஸ்போரோபைட்டில் XY இரண்டும் காணப்படுகிறது.

  • X – உடைய மியோஸ்போர்கள் – பெண் கேமீட்டகத் தாவரத்தை உருவாக்குகிறது
  • Y – உடைய மியோஸ்போர்கள் – ஆண் கேமீட்டகத் தாவரத்தை உருவாக்குகிறது

5. மரபணு அமைவிடங்கள் A/a மற்றும் D/d இவை மிக நெருக்கமாக அமைந்திருப்பதால் அவற்றிடையே மறுசேர்க்கை காணப்பட வாய்ப்பில்லை

  • Aadd – ஒரு daDD பண்புகலப்பில் F2 வில் என்ன புறத்தோற்றம் என்ன விகிதத்தில் காணப்படும்
  • பெற்றோர் இன ஆக்கம் Ad/ Ad x aD/aD
  • மரபணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால் அவை உருவாக்கிய கேமீட்டுகள்
  • Ad & aD (பெற்றோர் பண்புடையவை -புதிய மறுசேர்க்கை காணப்படவில்லை)
  • F1 அனைத்தும் Ad/aD ஆக இருந்தது.
  • F1 உருவாக்கிய கேமிட்கள் Ad (50% aD = 50%) F2 விகிதம் – Ad/Ad(14) Ad/aD (1/2) aD/ aD (14)

6. திடீர் மாற்றத்தின் வகைகளை அட்டவணைப்படுத்துக

6. திடீர் மாற்றத்தின் வகைகளை அட்டவணைப்படுத்துக

வேறுபட்ட பதிலீடு: (Transversion)

  • ஒரு பியூரினுக்கு பதிலாக மற்றொரு பைரிமிடின் (அ) ஒரு பைரிமிடினுக்குப் பதிலாக மற்றொரு பியூரின்

ஒத்த (அ) அமைதியான சடுதி மாற்றம்:

  • ஒரு அமினோ அமிலத்திற்கான ஒரு மரபுக்குறியனை (codon) அதே அமினோ அமிலத்திற்கான வேறொரு மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதி மாற்றம்

ஒத்திலா (அ) தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்:

  • ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியன் வேறொரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதிமாற்றம்.

7. புள்ளி சடுதிமாற்றம் வரையறு – அதன் வகைகள் யாவை?

வரையரை :

  • DNA வின் ஒரு காரம் (அ) கார இணைகளை மாற்றும் சடுதிமாற்றம் – புள்ளி சடுதிமாற்றம் எனப் படும்.

வகைகள் :

இன்டெல் சடுதிமாற்றம்

  • கார இணை சேர்த்தல் (அ) நீக்குதல் கூட்டாக இந்நிகழ்வுகள் அனைத்தும் இன்டெல் சடுதி மாற்றம் எனப்படுகிறது.

பதிலீடு: பதிலீடு இருவகைப்படும்

  • ஒத்த பதிலீடு
  • வேறுபட்ட பதிலீடு

ஒத்த பதிலீடு: (Transition)

  • பியூரின் நியூக்ளியோடைடுக்குப் பதிலாக வேறொரு பியூரின் (அ) ஒரு பைரிமிடினுக்கும் பதிலாக வேறொரு பைடிமிடின் சேர்க்கப்படுதல் –

பொருளுணர்த்தாத சடுதிமாற்றம்:

  • ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியன் முடிவு (அ) நிறுத்துக் குறியனாக மாற்றமடையும் சடுதிமாறறம்.

கட்ட நகர்வு சடுதி மாற்றம் :

  • ஒரு DNA வில் ஒரு கார இணை சேர்த்தல் (அ) நீக்குதலால் மரபுச் செய்தி பெயர்வு கட்டமைப்பு களை மாற்றுவதால் இயல்பான புரத அமைப்பு மற்றும் செயல்பாடு இழக்கப்படுகிறது.

8. இடம் பெயர்தல் குரோமோசோம் பிறட்சி, குறுக்கேற்றத்திலிருந்து எவ்வாறு வேறுபட்டது என்பதை விளக்குக.

குறுக்கேற்றம்

இடம் பெயர்தல்

மியாசிசின் புரோநிலை I இல், ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமாடிட்களுக்கு இடையே சமமான துண்டுகள் பரஸ்பரப்பரிமாற்றம் செய்யப் படுகிறது. இதற்கு குறுக்கேற்றம் என்று பெயர்.

ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களின் குரோமாடிட்களுக்கு இடையே துண்டுகள் பரிமாறிக் கொள்ளப் படுவதற்கு 'இடம் பெயர்தல்' என்று பெயர்.

இது பாலினப் பெருக்க மடையும் பெரும்பாலான உயிரினங்களிடையே காணப்படும் - இயல்பான நிகழ்வு

இது ஒரு வகை குரோமோசோம் பிறட்சி ஆகும்.

இதனால் உருவாக்கப் படும் மறுகூட்டிணைவு பரிணாம முக்கியத் துவம் வாய்ந்தது.

இதனால் அரிதாகவே மறுகூட்டிணைவு உருவாக்கப்படுகிறது

12th Botany Lesson 3 Additional 5 Marks

9. இரட்டிப்பாதல் (அ) மீளுறுவாதல் பற்றி விவரி.

  • ஒரே வரிசையிலான மரபணுக்கள் ஒரு குரோமோ சோமில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இடம் பெறுவதற்கு இரட்டிப்படைதல் என்று பெயர். பிரிட்ஜஸ் – டுரோசோஃபிலாவில் முதலில் கண்டறிந்தார்.
  • எ.கா. மக்காச்சோளம் மற்றும் பட்டாணி வகைகள் :

1. தொடர்ந்திணைந்த இரட்டிப்பாதல் :

  • (Tandem duplication) இரட்டிப்பான பகுதி குரோமோசோம்களின் இயல்பான பகுதிக்குப் பின் அதே வரிசையில் அமைவதாகும்.

2. தலைகீழ் தொடரிணைந்த இரட்டிப்பாதல் : (Reverse tandem duplication)

  • இரட்டிப்பான பகுதி அதன் இயல்பான பகுதிக்குப் பின் மரபணு தொடர்வரிசை தலைகீழாக அமைவ தாகும்.

3. இடம் மாறிய இரட்டிப்பாதல் : (Displaced duplication)

  • இரட்டிப்படைந்த பகுதி அதன் இயல்பான பகுதிக்கு சற்று தொலைவில் அதே வரிசையில் அமைவதாகும்.

10.குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் யாவை?

குரோமோசோம் அமைப்பு பிறழ்ச்சி

  1. நீக்கம் (அ) குறைபாடு
  2. இரட்டிப்படைதல் (அ) மீளுறுவாதல்

1. நீக்கம் (அ) குறைபாடு

  • குரோமோசோமின் ஒரு பகுதி இழப்பு நீக்கம்
  • – நுனி நீக்கம்
  • – இடைப்பட்ட நீக்கம் என இரு வகைப்படும்.
  • வேதிப்பொருட்கள் மற்றும் கதிர்வீச்சால் ஏற்படுகிறது.
  • பாலிடீன் மற்றும் பாக்டீன் குரோமோசோமில் இவ்விரு நீக்கங்களும் காணப்படுகிறது. அதிகப் படியான நீக்கங்கள் இறப்பு விளைவதற்கு வழி வகுக்கும்.

11. இடம் பெயர்தல் – விளக்கு

  • ஒத்திசைவு அல்லாத குரோமோசோம்களுக் கிடையே நடைபெறும் துண்டுகள் பரிமாற்றம் – இடம்பெயர்தல் எனப்படும். இது குறுக்கேற்றம் எனும் இயல்பான நிகழ்வுக்கு எதிரான குரோமோசோம் அமைப்பு பிறழ்ச்சி

வகைகள்:

எளிய இடம் பெயர்தல்

நகர்வு இடம் பெயர்தல்

பரிமாற்ற இடம் பெயர்தல்

1. எளிய இடம் பெயர்தல்:

  • ஒரு குரோமோசோமில் பிளவு ஏற்படுகிறது பிளவு பட்ட துண்டு ஒத்திசைவு அல்லாத குரோமோ சோமின் ஒரு முனையில் இணைகிறது.

2.நகர்வு இடம் பெயர்தல் :

  • இது முந்தியதைப் போன்றது ஆனால் இடைச் செருகல் நடைபெறுகிறது.

3. பரிமாற்ற இடம் பெயர்தல்:

  • பரஸ்பர துண்டுகள் பரிமாற்ற ஒத்திசைவு அல்லாத ரோமோசோம்களுக்கிடையே -என்பதால் இதனை முறையற்ற குறுக்கேற்றம் எனலாம்.

ஒத்த பண்பிணைவு இடம் பெயர்தல்

  • இடம் பெயர்தலில் இரண்டு இணைகளின் இரண்டு குரோமோசோம்களும் பங்கு கொள் கின்றன.

மாற்றுப் பண்பிணைவு இடம் பெயர்தல்

  • ஒவ்வொரு இணை ஒத்திசைவு குரோமோசோம் களின் ஒரே ஒரு குரோமோசோம் மட்டும் இதில் பங்கு கொள்கிறது. மற்ற ஒரு குரோமோசோம் இயல்பான நிலையில் உள்ளது. சிற்றின உருவாக் தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

12. இரு ஒடுங்கு தன்மையுள்ள ஆட்டோசோம் மரபணுக்கள் a மற்றும் b உடைய வேறுபட்ட காரணி நிலை – ஒரு இரு இணை ஒடுங்கு பெற்றோரோடு சோதனைக் கலப்பு செய்யப்படுகிறது. அவற்றிற்கான புறத்தோற்ற விகிதத்தை பின்வரும் சூழலில் கண்டறி.

  • அ) a மற்றும் b வெவ்வேறு ஆட்டோசோம்களில் காணப்படுகிறது.
  • ஆ)a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் பிணைந்து காணப்பட்டாலும் அவை குறுக்கேற்றம் நிகழ ஏதவாக உள்ளது.
  • இ) a மற்றும் b ஒரே ஆட்டோசோமில் நெருங்கி பிணைந்து காணப்படுவதால் – அவற்றிற்கிடையே குறுக்கேற்றம் நடக்கும் வாய்ப்பு இல்லை. இதைப் புரிந்து கொள்ள பிணைப்பு, குறுக்கேற்றம் மற்றும் சார்பின்றி ஒதுங்குதல் காணப்படுகிறது.

(a) F2 ஜீன் ஆக்க மற்றும் புறத்தோற்ற விகிதம்

AaBb : Aabb : aaBb : aabb

1    :      1       :    1    :     1

b) குறுக்கேற்றம் நடந்தாலும் அதே முடிவுகளே கிடைக்கின்றன.

F2 ஜீன் ஆக்க மற்றும் புறத்தோற்ற விகிதம்

AaBb : Aabb : aaBb : aabb

1          :       1    :      1     :        1

c) a மற்றும் b பிணைப்பு – குறுக்கேற்றம் இன்றி நடைபெறும் போது – வேறுபட்ட காரணி நிலை பெற்றோர் AB/ab – (அ) Ab/aB- (டிரான்ஸ்) மறுசேர்க்கை கேமீட்கள் உருவாகவில்லை குறுக்கேற்றம் நடைபெறவில்லை.அது Ab & aB (50% ஒவ்வொன்றும்) சோதனைக் கலப்பு – Ab/ab & aB/ab

Leave a Reply