12th Botany Lesson 4 Additional Question and Answers

12th Botany Lesson 4 Additional 2 Marks

12th Botany Lesson 4 Additional 2 Marks

12th Bio Botany Unit 8, Lesson 4 Additional  2 Marks – Tamil Medium

TN 12th Botany Lesson 4 Additional 2 Marks Question and Answers. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் Full Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.

12th Botany Lesson 4 Additional 2 Marks

VII. இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1.மரபுப் பொறியியலின் கருவிகள் எவை?

  • நொதிகள் – இது இருவகைப்படும்.

1) ரெஸ்டிரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்
2) DNA லிகேஸ்

  • கடத்திகள்
  • ஒம்புயுரிகள்

2. PCR என்றால் என்ன? 

  • PCR பாலிமெரேஸ் சங்கிலி வினை என்பது மில்லியன் எண்ணிக்கையில் DNA ஒரு பகுதியை நகலெடுக்கும் சாதாரணமான ஆய்வக முறையாகும்.

3. எக்சோநியூக்ளியேஸ் மற்றும் எண்டோநியூக்ளியேஸ் நொதி வேறுபடுத்துக.

எக்சோநியுக்ளியேஸ்

  • 1.DNA மூலக்கூறின் ஒரு முனையில் இருந்து நியூக்ளியோடைடுகளை நீக்குகிறது.
    2.எ.கா.Bal.31, மிக்சோநியூக்ளியேஸ் III

எண்டோநியுக்ளியேஸ்

  • DNA மூலக்கூறின் உட்புறமுள்ள ஃபாஸ்போடை எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
  • எ.கா. Hind II, EcoRI, Pvul, Bam H1, Taq 1

4. பாக்டீரியாவில் காணப்படும் ரெஸ்டிரிக்ஷன் நொதியினால் (அ) தடைகட்டு நொதியினால்
பாக்டீரியாவிற்கு என்ன பயன்? பல பாக்டீரியங்களில் காணப்படும் இந்த நொதி. பாக்டீரியங்களின் பாதுகாப்பு அமைப்பின் பகுதி யாக செயல்படுகின்றன. இவற்றிற்கு தடைகட்டு மாற்றுருவாக்க தொகுதி என்றும் பெயர். இது பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்களின் DNA (அ) RNAவை வெட்டி அவற்றைச் செயலிழக்கச் செய்கிறது.

5.எவ்வாறு DNA லிகேஸ் DNA துண்டுகளை இணைக்கிறது?

DNA லிகேஸ் இரட்டை இழை DNAவின் (ds-DNA) சர்க்கரை மற்றும் பாஸ்பேட் மூலக்கூறுகளை அதன் 5′ PO4 மற்றும் 3-OH-முனைகளில் இணைக்கிறது. இது ATP சார்ந்த வினையாகும்.

6. Ori என்பது எதைக் குறிக்கிறது?

  • 1. இந்தத் தொடர் வரிசை பெருக்கமடைதலின் தோற்றம் எனப்படுகிறது.
  • 2. இந்தத் தொடர் வரிசையிலிருந்து தான் இரட்டிப்பாதல் தொடங்கப்படுகிறது.
  • 3. இந்தத் தொடர்வரிசையுடன் ஒரு துண்டு DNA இணைக்கப்பட்டால் ஒம்புயிரி செல்லுக்குள் அதனைப் பெருக்கமடையச் செய்ய முடியும்.

7. தேர்ந்தெடுக்கும் அடையாளக் குறியின் பணி யாது?
தேர்ந்தெடுக்கும் அடையாளக்குறி, இது மரபணு மாற்றம் அடையாத செல்களை அடையாளம் கண்டறிந்து அவற்றை நீக்குவதிலும் மரபணு மாற்றமடைந்த செல்களின் வளர்ச்சியை தேர்ந் தெடுத்து அனுமதிக்கிறது.

8. நடமாடும் மரபணுக்கள் (அ) டிரான்ஸ்போசான் (அ) இடமாற்றிக் கூறுகள் என்றால் என்ன?
இது இலக்கு அமைவிடத்தோடு எந்த ஒரு தொடர் வரிசைத் தொடர்பையும் பெற்றிராமல் மரபணு தொகையத்தில் தம்மை செருகிக் கொள்ளத்தக்க DNA தொடர் வரிசையாகும். எனவே இவ்விட மாற்றிக் கூறுகள் நடக்கும் மரபணுக்களை எனப்படுகின்றன.
9. BAC தாங்கு கடத்தியை YAC தாங்குக் கடத்தியிடம் இருந்து வேறுபடுத்துக.

BAC தாங்கு கடத்தி

YAC தாங்கு கடத்தி

 1.குறுகிய தூரம் கடக்கும்.
2.மிகப்பெரிய அளவிலான DNA நகலாக்கம் செய்ய உருவாக்கப்பட்டது.
3.மிக பயனுள்ள நகலாக்க கடத்தி
4.300KB வரையிலான DNA செருகிகளை
5.நகலாக்க செய்யக் கூடியது. நிலையானவை பயன்படுத்த எளிமையானவை

ஈஸ்ட் குரோமோசோம் போன்றே செயல்படுகிறது.
வட்ட மற்றும் கோடு வடிவம் என இரு வடிவங்களில் காணப்படுகிறது.
கோடு வடிவ ஈஸ்ட் செயற்கை குரோமோசோம்கள் ஈஸ்ட் செல்லிலும் பெருக்கமடைகின்றன.

 

10. பிளாஸ்மிட் DNA மற்றும் குரோமோசோம் DNA வேறுபடுத்துக.

பிளாஸ்மிட் DNA

குரோமோசோம் DNA

 1.குரோமோசோம் சாராதது.
2.வட்ட வடிவமானது
3.(ds) இரட்டை இழையாலானது
4.ஹிஸ்டோன் சாராதது
5.ஒரு ஏற்ற ஒம்புயிரியில் தன்னிச்சையாக
6.இரட்டிப்படையும் மரபுப்பொருளாக செயல்படாது
7.இண்ட்ரான்கள் கிடையாது

1. குரோமோசோம் DNA.
2. நீள (அ) வட்டவடிவமானது
3. SS (அ) ds
4. ஹிஸ்டோன் புரதம் சார்ந்து காணப்படும்.
5. மரபணுத் தொகையமாக  இரட்டிப்படையும்.
6. மரபுப்பொருளாக செயல்படும்.
7. இவற்றில் இண்ட்ரான் மற்றும் எக்ஸான் காணப்படும்

11.ஈகோலை ஏன் உயிரி தொழில் நுட்பவியலில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மரபணுவாக பயன் படுத்தப்படுகிறது? காரணம் தருக. 

  • ஈகோலையின் மரபணு அமைப்பு விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
  • பல்வேறு வகை தாங்கிக் கடத்திகளை ஏற்கும் பாதுகாப்புமிக்கது.
  • இதனை எளிதில் கையாளவும், வளர்க்கவும் முடியும்.
  • உகந்த வளர்ப்பு நிலையில் இதன் செல்கள் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இரண்டாக பகுப்படைகின்றன.

12.பையோலிஸ்டிக் (அ) மரபணு துப்பாக்கி (அ) நுண் எறிதல் துப்பாக்கி (அ) வெடிப்பு துப்பாக்கி முறை என்றால் என்ன? மரபணு இடமாற்றத்தில் அதன் செய்முறை பயன் யாது?

  • இலக்கு செல்கள் (அ) திசுக்கள் மீது துகள் துப்பாக்கி (அ) வெடிப்புத்துப்பாக்கி முறையின் மூலம் அதிக விசையுடன் செலுத்தலாகும்.
  • பின்பு தாக்கப்பட்ட செல்கள் (அ) திசுக்கள் தேர்வு
  • செய்யப்பட்ட ஊடகத்தில் வளர்க்கப்படுகின்றன. இதனால் மரபணு மாற்றமடைந்த செல்களி லிருந்து தாவரங்களை மீளுருவாக்கம் செய்ய முடியும்.

13. அக்ரோபாக்டீரியம் டியூமிபேசியன்ஸ் ஒரு இயற்கை மரபணுப் பொறியாளராக செயல்படுகிறது. இக் கூற்றிற்கு சாதகமான காரணங்கள் தருக

  • இந்த பாக்டீரியம் (Ti) பிளாஸ்மிட் (கழலை உண்டாக்கும்) மற்றும் பெரிய பரிமாற்ற DNAவின் (T-DNA) ஒரு பகுதியையும் கொண்டுள்ளது.
  • இதன் T-DNA தொற்றுதலுக்குள்ளாகும் தாவர செல்களின் மரபணு தொகையத்திற்குள் இயல்பாகவே இடம்மாற்றம் ஆகக்கூடிய திறன் இருப்பதால் இதனை தாவரங்களின் இயற்கை மரபணு பொறியாளர் என கருதப்படுகிறது.

 

14. மரபணு வெளியேற்றம் என்றால் என்ன? அதற்கு பயன்படும் இரண்டு வகை இலக்குகள் தாங்கி கடத்திகள் யாவை?

நகலாக்கம் செய்யப்பட வேண்டிய (அ) சடுதி மாற்றம் செய்யப்பட வேண்டிய இலக்கு DNA க்களை (அயல் DNA, பயணி DNA, தேவைப் படும் DNA வெளியில் உருவாகும் DNA போன்ற வற்றைக் கொண்டுள்ள மரபணு இலக்குகளான உட்கருக்களை மரபணு இலக்கு சோதனைகள் வெளியேற்றுவதற்கு மரபணு வெளியேற்றம் (gene knock out) என்று பெயர். இரண்டு வகை இலக்கு தாங்கிக் கடத்திகள் பயன் படுத்தப்படுகின்றன.

  • i)உள் செருகுதல் தாங்கிக் கடத்திகள்
  • ii) பதிலீடு (அ) மாற்றீடு தாங்கிக் கடத்திகள்
15.மரபணு தொகைய செயல்திட்டங்கள் என்றால் என்ன? 
  • மரபணுத் தொகைய செயல்திட்டத்தில் மொத்த தாவரத்தின் மரபணுத் தொகையமும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.
  • இதில் தொடர் வரிசையாக்கமும் மற்ற தாவரங் களோடு உள்ள தொடர் வரிசையாக்க ஒப்பு மையும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. (எ.கா.) கிளாமிடோமோனஸ், அராபிடாப்சிஸ் தாலியானா, அரிசி மற்றும் மக்காச்சோளம்.
16. பயோ-போர்டிஃபிகேஷன் என்றால் என்ன? 
உயிரி தொழில்நுட்பத்தின் இப்பிரிவின் மூலம் மரபணு மாற்றத்தினால், ஊட்டமுடைய புரதம், கார்ஃபோஹைடிரேட், வைட்டமின்கள் இவை தாவரங்களில் அதிகரிக்கச் செய்வதற்கு பயோஃ போர்டிஃபிகேஷன் என்று பெயர்.,
17. களைக்கொல்லி எதிர்ப்புத் தாவரங்களின் அனுகூல மானப் பண்புகள் யாவை? 
  • களைகள் குறைவு – விளைச்சல் அதிகரிக்கிறது.
  • களைக்கொல்லி தெளிப்பு குறைவு – பயிர் செலவு குறைவு.
  • தாவரங்களுக்கும், களைகளுக்கும் இடையே யான போட்டி குறைகிறது ஆரோக்கியமான தாவர வளர்ச்சி
  • குறைவான நச்சுக்கள் பாதிப்பு மண்ணில் குறைவு மற்றும் செயல்திறன் குறைவு.
  • மண்ணின் தன்மை, நுண்ணுயிரிகள் பாதுகாக்கப் படுகிறது.

 

18. அ) பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் பாக்டீரியா எவ்வாறு அதன் உடலிலுள்ள Bt. நச்சிலிருந்து பாதுகாக்கப்படுகிறது?
ஆ) அது தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை எவ்வாறு தாக்கி அழிக்கிறது?

அ) Bt. நச்சு (cry நச்சு) பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் பாக்டீரியத்தின் உடலில் நச்சுப் புரதத்தின் முன்னோடி வடிவத்தில் காணப்படுகிறது. எனவே இதனால் பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் பாக்டீரியம் பாதிக்கப்படுவதில்லை.
ஆ) ஆனால் பருத்தி, கத்திரி போன்ற தாவரங்களைத் தாக்கி உண்ணும்போது cry நச்சு பூச்சியின் வயிற்றினுள் சென்று கரைகிறது. குடலின் சுரப்புகளில் காணப்படும் காரத்தன்மை யில் அது செயல்படத் துவங்குகிறது. குடலின்
எபீதீலிய செல்களில் துளை ஏற்பட்டு சில அவசியமான ஊட்டப் பொருட்களின் உள்ளெடுப் பைத் தடை செய்கிறது. எபிதீலிய செல்களைத் தொடர்ந்து பூச்சி இறக்கிறது.

19. உயிரி எரிபொருள் என்றால் என்ன ? விவரி.

  • பாசி எரிபொருள் தொல்லுயிர் எச்ச திரவ எரி – பொருளுக்கு (பெட்ரோலியம்) மாற்றாக உள்ளது.
  • பாசி எரிபொருட்கள் பொதுவாக பயன்படுத்தப்படும் மூலங்களான மக்காச்சோளம், கரும்பு போன்றவற்றிலிருந்து பெறப்படும் ஆற்றலுக்கு ஒரு மாற்றாக உள்ளது.
  • ஆற்றல் நெருக்கடி, உணவு நெருக்கடிக்கு பதில் தருவதாக இதுவும் காணப்படுகிறது.
  • உயிரி டீசல, உயிரி எரிபொருட்களின் உற்பத்திக்கு வேளாண்மைக்கு பயன்படாத நிலம் பயன்படுகிறது. (எ.கா) போட்ரியோகாக்கஸ் பிரானிஜ.

20. ஆல்காவிலிருந்து உயிரிய ஹைட்ரஜன் எவ்வாறு பெறப்படுகிறது? 

  • இதில் ஒளி உயிரிய முறை நீர் பிளத்தல் எனும்
  • செயல்முறை விளங்குகிறது. கிளாமிடோமோனஸ் ரீன்ஹார்டிஐ ஒளிச்சேர்க்கை ஆக்சிஜனை வெளியேற்றுகிறது.
  • கந்தகம் கொடுக்கப்படாத போது

எலக்ட்ரான்கள்——> ஃபெர்ரடாக்சி ——>ஹைட்ரஜன் வாயு+ ஹைட்ரோஜினேஸ் நொதிகள்

21. Cry மற்றும் Cry III Ab இவற்றை வேறுபடுத்துக. 
  • ஊசல என்பது Bt. நச்சுக்கான
  • மரபணு புரதத்தின் குறியீட்டின் முதல் எழுத்தைக் கொண்டு Cry III Ab என அழைக்கப்படுகிறது.

 

22. உயிரி வழித் திருத்தத்தின் வரம்புகள் யாவை?

  • உயிரி வழித்திருத்த முறையில் உயிரிய சிதைவிற் குள்ளாகும் மாசுறுத்திகளை மட்டுமே மாற்ற இயலும்.
  • மாசுறுத்தப்பட்ட இடங்களில் உள்ள சூழ்நிலை களுக்கு ஏற்ப மட்டுமே உயிரி வழித் திருத்த செயல்முறைகளைக் குறிப்பாக செய்ய முடியும்.
  •  மாசுறுத்தப்பட்ட இடத்தில் பெரிய அளவிலான முன் சோதனைகள் செய்த பின்னரே பின்பற்ற வேண்டும்.
  • உயிரி வழித்திருத்தம் செயலுக்காக மரபணுப் பொறியியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு மரபணு மாற்றமடைந்த நுண்ணுயிரிகளை உருவாக்க (அ) நுண்ணுயிரிக் கூட்டமைப்புகளை உருவாக்க மிகவும் அதிக திறன் வேண்டியிருத்தல்.

 

23. சலிக்கை செய்தல் வரையறு. 

  • பொருத்தமான ஓம்புயிரி செல்லில் rDNA வை செலுத்திய உடன் r DNA மூலக்கூறைப் பெற்ற செல்களை அடையாளம் கண்டறிவது மிகவும் அவசியமாகும்.
  • இவ்வாறு அடையாளம் காண்பதே சலிக்கை செய்தல் எனப்படுகிறது.
24.தாவரங்களில் காணப்படும் மரபணு மாற்ற முறைகள் யாவை? 
(i) நேரடி (அ) தாங்கிக் கடத்தி அற்ற மரபணு மாற்றம்

(ii) மறைமுக (அ) தாங்கிக் கடத்தி விதி மரபணு மாற்றம் இவ்வாறு அடையாளம் காண்பதே சலிக்கை செய்தல்

25. மின்னாற் பிரிப்பின் நெறிமுறைகளை PTA – 5 எழுதுக.
மின்சாரம் (DC) செலுத்தும் போது மூலக்கூறுகள் அவற்றின் மின்சுமையைப் பொறுத்து இடம் பெயர்கின்றன. வெவ்வேறு மூலக்கூறுகளின் மின்சுமைகள் வெவ்வெறானவை.
+ve மின்னூட்டம் பெற்ற நேர்மின் அயனிகள் ஆனது (-ve) எதிர்மின் நோக்கி நகர்கிறது.
-ve மின்னூட்டம் பெற்ற எதிர்மின் அயனிகள் ஆனது (+ve) நேர்மின்வாய் நோக்கி நகர்கிறது.
26. சைமோலாஜி வரையறு
நொதிகள் மற்றும் அவற்றின் நடைமுறை பயன் பாடுகளைப் பற்றி படிப்பது சைமோலாஜி என்று பெயர்.
27. ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்களுக்கு பெயரிடும் முறை யாது? ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியேஸ்கள்
  • தகுந்த வழிமுறைகள் மூலம் பெயரிடப்படு கின்றன. நொதியின் முதல் எழுத்து பேரினப் பெயரையும், அடுத்த இரண்டு எழுத்துக்கள் சிற்றினத்தையும் அடுத்து வருவது உயிரினத்தின் இனக்கூறினையும், இறுதியாக ரோமானிய எண் அந்தக் கண்டுபிடிப்பின் தொடர்வரிசையையும் குறிப்பிடுகிறது.
  • எ.கா: ECORI என்பதில் E-எஸ்ச்சரிசியா, CO – கோலை, R- RY 13 இனக்கூறினையும், 1 கண்டு பிடிக்கப்பட்ட முதல் எண்டோ நியூக்ளியேஸையும் குறிக்கிறது.

 

28. தனிசெல் புரத உற்பத்தியில் உள்ள நுண்ணுயிரிகள் எவை?

பாக்டீரியங்கள் :- மெத்தைலோபில்லஸ் மெத்தைலோட்ரோபஸ் செல்லுலோமோனாஸ் அல்கலிஜீன்ஸ்
பூஞ்சைகள்: அகாரிகஸ் கேம்பஸ்டிரிஸ் சாக்கரோமைசட்ஸ் செர்வீசியே (ஈஸ்ட்) கேண்டிடா யூட்டிலிஸ்
பாசிகள் : ஸ்பைருலினா, குளோரெல்லா, கிளாமிடோமோனஸ்

Leave a Reply