You are currently viewing 8th Tamil Guide Unit 5.1

8th Tamil Guide Unit 5.1

8th Tamil Guide Unit 5.1

 8th Tamil 5th Lesson Unit 5.1 Book Back Answers Additional Question & Answers 

8th Standard Tamil Samacheer Kalvi Guide 5th Lesson Unit 5.1 திருக்கேதாரம் Book Answers. 8th Text Books Download PDF. 8th Standard Tamil Samacheer kalvi Guide Full Term Guide. 8th Tamil Lesson 5 Full Answer key Book Back and additional question and answer.8th Standard Tamil Samacheer Kalvi Guide, 8th Tamil Answer key Notes, 8th Tamil book Answers. 8th Tamil Lesson 1 to 9 Full Answer Key.

  • 8th Tamil Guide 5th Lesson ( Unit 5.1 to 5.6 ) Full Answer key
8th Tamil Guide Unit 5

 

8th Tamil Samacheer Kalvi Guide Unit 5.1. திருக்கேதாரம்

பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக் கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே.

 – சுந்தரர்

8th tamil guide unit 5 5.1. திருக்கேதாரம்


சொல்லும் பொருளும்

  • பண் – இசை
  • கனகச்சுனை – பொன் வண்ண நீர்நிலை
  • மதவேழங்கள் – மத யானைகள்
  • முரலும் – முழங்கும்
  • பழவெய் – முதிர்ந்த மூங்கில்

பாடலின் பொருள்

பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும். நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.
 

நூல் வெளி

8th Tamil Unit 5 Book Back Answers Additional Question & Answers TN Students Guide

 

சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர். இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்படுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும். இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார். இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
 
தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும். பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. கொட்டிலிருந்து வந்த _____ கரும்பைத் தின்றன.

  1. முகில்கள்
  2. முழவுகள்
  3. வேழங்கள்
  4. வேய்கள்

விடை : வேழங்கள்

2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

  1. கனகச் + சுனை
  2. கனக + சுனை
  3. கனகம் + சுனை
  4. கனம் + சுனை

விடை : கனகம் + சுனை

3. முழவு + அதிர என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது _____.

  1. முழவுதிர
  2. முழவுதிரை
  3. முழவதிர
  4. முழவுஅதிர

விடை : முழவதிர

குறு வினா

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

  • புல்லாங்குழல் மற்றும் முழுவு ஆகியவற்றைத் தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுகின்றார்

சிறு வினா

திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

  • பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.
  • கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.
  • நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும்.
  • இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்.

திருக்கேதாரம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடத்தை நிரப்புக

  • 1. நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர் _____________
    விடை : சுந்தரர்
  • 2. தேவாரத்தைத் தொகுத்தவர் _____________
    விடை : நம்பியாண்டார் நம்பி
  • 3. பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் _____________
    விடை : சுந்தரர்
  • 4. _____________ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர் சுந்தரர்
    விடை : திருக்கேதாரம்
  • 5. பதிகம் என்பது _____________ பாடல்களை கொண்டது
    விடை : பத்து
  • 6. _____________ பொன் வண்ண நிறமாக இருந்ததாகச் சுந்தரர் குறிப்பிடுகிறார்
    விடை : நீர் நிலைகள்
  • 7. _____________ வைரங்களைப் போல இருந்ததாகத் திருகேதாரம் குறிப்பிடுகிறது
    விடை : நீர் திவலைகள்

II. சிறு வினா

1. தேவாரத்தை பாடியவர்கள் யார்?

  • திருஞானசம்பந்தர்
  • திருநாவுக்கரசர்
  • சுந்தரர்

2. பதிகம் எத்தனை பாடல்களை கொண்டது?

  • பதிகம் பத்து பாடல்களை கொண்டது

3. தேவாரம் பெயர்க்காரணம் கூறுக.

  • தே + ஆரம் = இறைவனுக்கு சூடப்படும் மாலை
  • தே + ஆரம் = இனிய இசை பொருந்திய பாடல்

4. கண்ணுக்குக் குளிர்ச்சி தருபவை என்று சுந்தரர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

  • பொன் வண்ண நீர்நிலைகள் கண்ணுக்குக் இனிய குளிர்ச்சி தருபவை என்று சுந்தரர் எவற்றைக் குறிப்பிடுகிறார் 

5. நீர் நிலைகள் மற்றும் நீர்த் திவலைகள் ஆகியவற்றிற்குக் கூறப்பட்ட உவமை யாது?

  • நீர் நிலைகள் – பொன் வண்ணம்
  • நீர் திவலைகள் – வைரம்

6. மத யானைகளின் செயல்களாக் சுந்தரர் குறிப்பிடுவன யாவை?

  • நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மத யானைகள் மணிகளை வாரி வாரி வீசும் என்று சுந்தரர் குறிப்பிடுகிறார்.

7. உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது எது?

  • உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை

8. இசைக் கருவிகளின் ஓசையோடு பாடல் இணையும் போது அது எவற்றிற்கு விருந்தாகிறது?

  • இசைக் கருவிகளின் ஓசையோடு பாடல் இணையும் போது அது செவிக்கு மட்டுமன்றி, சிந்தைக்கும் விருந்தாகிறது

9. சுந்தரர் குறிப்பு வரைக

  • சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
  • நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.

 

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.‘நம்பியாரூரர், தம்பிரான் தோழர்’ என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டவர்

அ) சுந்தரர்
ஆ) திருநாவுக்கரசர்
இ) மாணிக்கவாசகர்
ஈ) திருஞானசம்பந்தரர்
Answer:
அ) சுந்தரர்

2.தேவாரத்தைத் தொகுத்தவர் ……………………

அ) நம்பியாண்டார் நம்பி
ஆ) திருநாவுக்கரசர்
இ) சுந்தரர்
ஈ) திருஞானசம்பந்தர்
Answer:
அ) நம்பியாண்டார் நம்பி

3.பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை இயற்றியவர் ……………………..

அ) திருஞானசம்பந்தர்
ஆ) சுந்த ரர்
இ) சேக்கிழார்
ஈ) நம்பியாண்டார் நம்பி
Answer:
ஆ) சுந்தரர்

4.‘திருக்கேதாரம்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பேழை பாடலை இயற்றியவர்

அ) நம்பியாண்டார் நம்பி
ஆ) சேக்கிழார்
இ) சுந்தரர்
ஈ) திருநாவுக்கரசர்
Answer:
இ) சுந்தரர்

5.பதிகம் என்பது ……………………. பாடல்களைக் கொண்டது.

அ) ஆறு
ஆ) நூறு
இ) பத்து
ஈ) இருபது
Answer:
இ) பத்து

6.பொன் வண்ண நிறமாக இருந்தவையாகச் சுந்தரர் குறிப்பிடுவன …………………….

அ) நீர்த்திவலைகள்
ஆ) நீர்நிலைகள்
இ) மணல்
ஈ) புல்லாங்குழல்
Answer:
ஆ) நீர்நிலைகள்

7.வைரங்களைப் போல இருந்தவையாகத் திருக்கேதாரம் குறிப்பிடுவன …………………

அ) புல்லாங்குழல்
ஆ) முழவு
இ) நீர்த்திவலைகள்
ஈ) நீர்நிலைகள்
Answer:
இ) நீர்த்திவலைகள்

 

சிறுவினா

1.சுந்தரர் குறிப்பு வரைக.

  • தேவாரம் பாடிய மூவரில் ஒருவர்.
  • சிறப்பு பெயர் : நம்பியாரூரர், தம்பிரான் தோழர்.
  • படைப்புகள் : பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறை.

Leave a Reply